ஞாயிறு, 28 மார்ச், 2010

கொலைக்கான காரணமும், கொலை நடந்த விவரங்களும்.

 
(எச்சரிக்கை: 18 வயதுக்கு உட்பட்டவர்களும், பெண்களும், திடமனது இல்லாத ஆண்களும் தயவு செய்து இந்த பதிவைப்படிக்கவேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.)

இன்றைக்கு பேப்பரில் கொலைச்செய்திகள் சர்வ சாதாரணமாயப் போய்விட்டன. குறிப்பாக கள்ளக்காதல் விவகாரத்தினால் நடக்கும் கொலைகள். மூன்று பேர் இருப்பார்கள். இரண்டு ஆண், ஒரு பெண் அல்லது இரண்டு பெண், ஒரு ஆண். இதில் இரண்டு பேர் சேர்ந்து மூன்றாவது ஆளைப்போட்டுத் தள்ளுவார்கள். இந்த மாதிரி செய்திகள் சராசரியாக தினம் இரண்டு வருகின்றன. அதை நாம் கண்டுகொள்வதே இல்லை. அது மாமூல் செய்தியாகப்போய்விட்டது. அப்படிப்பட்ட செய்தி வராவிட்டால்தான் ஏன் வரவில்லை என்று யோசிப்போம்.

ஆளவந்தார் கேஸிலும் இதே கதைதான். என்ன, அன்றைக்கு இப்படிப்பட்ட கேஸ்கள் அபூர்வம். ஒரு அழகான பெண் (30 வயசு) தினமும் ஜெம் அண்ட் கோ வழியாக அங்குள்ள ஏதோ ஒரு ஆபீஸுக்கு வேலைக்கு போய்வந்து கொண்டிருந்தது. நம் கதாநாயகர் பார்த்துக்கொண்டே இருந்தார். எப்படியோ அறிமுகம் ஏற்படுத்திக்கொண்டார். இந்த மாதிரி கேஸ்களின் வழக்கம்போல், அறிமுகம் முற்றிப்போய் லாட்ஜில் ரூம் போடுமளவிற்கு வளர்ந்து விட்டது. பிறகு லாட்ஜ் செலவை மிச்சப்படுத்துவதற்காக அந்தப்பெண்ணின் வீட்டையே பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

அவள் புருஷனுக்கு ( சாரி, முதலிலேயே சொல்ல மறந்துவிட்டேன்-அவளுக்கு கல்யாணமாகிவிட்டது) அடிக்கடி டூர் போகும் வேலை. அதனால் எல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருந்தது. ஆனால் இந்த அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு ஒரே பொறாமை. ஒரு நாள் அந்த ஆள் வீட்டில் தனியாக இருக்கும்போது போட்டுக்கொடுத்து விட்டார்கள்.

அன்று அந்தப்பெண் வேலையிலிருந்து வந்தவுடன், இந்தமாதிரி சந்தர்ப்பங்களில் நடக்கும் வழக்கமான வாதப்பிரதிவாதங்கள், அடிதடிகள் எல்லாம் முடிந்து ஒரு அமைதி நிலைமைக்கு வந்தவுடன் இருவரும் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டினர். அதன்படி அடுத்த நாள் பகலில் நம் கதாநாயகனை வீட்டுக்கு வரச்சொல்லி கதாநாயகி அழைப்பு விடுக்கவேண்டும். அவன் வந்தவுடன் மற்ற விஷயங்களை நம் வில்லன் (வில்லன் யார், அந்தப்பெண்ணின் புருஷன்தான்) கவனித்துக்கொள்வார். இப்படியாக முடிவு ஆகியது.

காலையில் வழக்கம்போல் கதாநாயகி வேலைக்குப்போவது போல் சென்று கதாநாயகனுக்கு அழைப்பு கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்துவிட்டாள். கதாநாயகனும் சொன்ன நேரத்தில் வந்துவிட்டார். கதவு சாத்தப்பட்டது. கதாநாயகனும் குஷியானார். அப்போது வில்லன் சீனில் பிரவேசித்தார். கதாநாயகனுக்கு எப்படியிருந்திருக்கும் என்பதை உங்கள் யூகத்திற்கு விட்டுவிடுகிறேன்.

பிறகு நடந்ததை அதிகமாக விவரிக்க வேண்டிதில்லை. புருஷனும் மனைவியும் சேர்ந்து ஆளவந்தாரை பரலோகத்திற்கு அனுப்பி வைத்தார்கள். இதுவரை நடந்தது சாதாரணமாக நடப்பதுதான். அதற்கப்புறம் நடந்தவைதான் கிளைமேக்ஸ். அப்போது பகல் 12 மணி. 

 

இனி இந்த பாடியை என்ன செய்வது? வில்லன் திட்டம் தீட்டினார். சைனாபஜாருக்குப்போய் ஒரு பெரிய டிரங்க் பெட்டி வாங்கினார். ஒரு ரிக்சாவில் ஏற்றி வீட்டுக்கு கொண்டு வந்தார். அப்போதெல்லாம் ஆள் இழுக்கும் கை ரிக்சாக்கள்தான் இருந்தன. பெட்டியை வீட்டில் இறக்கி வைத்துவிட்டு, பக்கத்தில் இருந்த ஒரு கடையில் ஒரு பெரிய வெட்டுக்கத்தி இரவல் வாங்கி வந்தார். பிறகு கதவைச்சாத்தி லாக் செய்துவிட்டு, போட்டிருந்த சட்டை பேண்ட் எல்லாம் கழற்றி வைத்துவிட்டு, பாடியை கவனித்தார்(?). முதலில் தலையைத் தனியாக வெட்டி ஒரு நியூஸ் பேப்பரில் சுற்றி வைத்தார். பிறகு கை, கால்களைத் தனித்தனியாக வெட்டி, டிரங்க் பாக்ஸில் சுற்றிலும் கதாநாயகனின் துணிகளைப்போட்டு நடுவில் முண்டத்தையும் கைகால்களையும் பேக் செய்தார். பெட்டியை நன்றாக மூடி பூட்டுப்போட்டார். இரண்டு பேருமாகச் சேர்ந்து பெட்டியை முன் வராந்தாவில் கொண்டுவந்து வைத்தனர். பிறகு தலையை இன்னும் கொஞ்சம் பேப்பரில் சுற்றி தனியாக வைத்தார். மறக்காமல் இரவல் வாங்கிய கத்தியை திருப்பிக்கொடுத்தார்.
 
பிறகு வில்லனும் கதாநாயகியும் சேர்ந்து வீட்டை முழுவதும் கழுவிவிட்டார்கள். பிறகு வில்லன் குளித்தார். இதற்குள் மணி ஆறு ஆகிவிட்டது. வெளியில் போய் எக்மோர் ஸ்டேஷன் போவதற்கு என்று ஒரு ரிக்சா பேசி அழைத்துவந்தார். அந்த ஆளையே பெட்டியை எடுத்து ரிக்சாவில் வைக்கச்சொல்லி, தானும் ஏறிக்கொண்டு எக்மோர் சென்றார்கள். அங்கு ரிக்சாக்காரருக்கு வாடகை கொடுத்துவிட்டு, ஒரு போர்ட்டரைப்பிடித்தார். பெட்டியை கொண்டுபோய்  போட்மெயிலில் ஒரு கம்பார்ட்மென்டில் வைக்கச்சொல்லி, கூலி கொடுத்து போர்ட்டரை அனுப்பி விட்டார். சிறிது நேரம் அங்கே உட்கார்ந்துவிட்டு, பிறகு கிளம்பி வீடுவந்து சேர்ந்தார்.உடனே அந்த தலைப்பார்சலை எடுத்துக்கொண்டு இன்னொரு ரிக்சா பிடித்து சாந்தோம் பீச்சுக்கு சென்றார். ரிக்சாவை அனுப்பிவிட்டு, கடல் நீருக்குள் சிறிது தூரம் சென்று அந்தப்பார்சலை கடலுக்குள் வீசிவிட்டு வீட்டுக்குத்திரும்பினார். மணி 10. உடனே அவசியமான துணிமணிகளை எடுத்துக்கொண்டு, வீட்டைப் பூட்டிவிட்டு, பிராட்வே பஸ் ஸ்டேண்ட் சென்று பெங்களூருக்கு பஸ் ஏறிவிட்டார்கள்.

கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ளுங்கள். அடுத்த பதிவில் முடித்து விடுகிறேன்.....
21 கருத்துகள்:

 1. nanum alavandhar case-nna ennanu therinjukkanumnu ninaichen.thanks sir.

  nayagi, villanoda per sollalaiye neenga.

  பதிலளிநீக்கு
 2. Vels said:

  nanum alavandhar case-nna ennanu therinjukkanumnu ninaichen.thanks sir.

  nayagi, villanoda per sollalaiye neenga.

  அவர்கள் பெயரை நான் மறந்துவிட்டேன். கூகிளில் தேடி எடுத்திருக்கலாம். அவர்களின் உறவினர்கள் இன்னும் இருக்கலாம். அவர்கள் மனதை ஏன் வருந்தச்செய்ய வேண்டும்? மேலும் கதைக்கு அந்தப் பெயர்கள் அவ்வளவு அவசியமில்லை அல்லவா?

  பதிலளிநீக்கு
 3. இன்னும் காத்திருப்பில்....

  பணிவுடன்,
  பழமைபேசி.

  பதிலளிநீக்கு
 4. பழமைபேசி சொன்னது:

  //இன்னும் காத்திருப்பில்....
  பணிவுடன்,
  பழமைபேசி.//

  முடிச்சிடலாமென்றுதான் எழுத ஆரம்பித்தேன். இதுவரை எழுதினதில் எனக்கே மனதில் ஒரு தகில் உண்டாகிவிட்டது. ஆஹா, இங்கு ஒரு இடைவெளி விட்டால்தான் மக்கள் தாங்குவார்கள் என்று தோன்றியது. அதனால்தான் தொடரும் போட்டேன்.

  எழுதி முடித்தபிறகு எனக்கே வெகு நேரம் தூக்கம் வரவில்லை.

  பதிலளிநீக்கு
 5. பயங்கரமாக இருக்குங்கய்யா ஆளவந்தார் கேஸ்.

  அப்படியோ!

  பதிலளிநீக்கு
 6. அடேங்கப்பா!!!!
  ஒரு மர்ம நாவல் படிச்ச மாதிரி
  இருக்கு.
  ம்ம்ம்.....தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 7. முகுந்த் அம்மா சொன்னது:

  //பயங்கரமாக இருக்குங்கய்யா ஆளவந்தார் கேஸ்.
  அப்படியோ!//

  இந்தப்பதிவை நான் எழுதிமுடிக்கும்போது இரவு 10 மணி. எனக்கே கொஞ்சம் பயமாகப்போய் விட்டது. அதனால்தான் பதிவின் ஆரம்பத்தில் ஒரு எச்சரிக்கை அறிவிப்பு போட்டேன்.

  என்னை மன்னிக்கவேண்டும். வேண்டுமென்று திகிலைப் புகுத்தவில்லை. என் நினைவில் இருந்த்த உண்மைகளைத்தான் பதிவிட்டேன். இந்த சம்பவங்கள் நடந்தபோது எங்கள் மனநிலை எப்படியிருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

  பதிலளிநீக்கு
 8. சைவகொத்துப்பரோட்டா சொன்னது:

  //அடேங்கப்பா!!!!
  ஒரு மர்ம நாவல் படிச்ச மாதிரி
  இருக்கு.
  ம்ம்ம்.....தொடருங்கள்.//

  Fact is stranger than fiction என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அது இந்த கேஸைப்பொருத்த வரை 100% உண்மை.

  அடுத்த பதிவில் முடித்து விடுகிறேன்.

  பதிலளிநீக்கு
 9. நல்ல விருவிருப்பு...

  நல்ல எழுத்து நடை..

  உங்களுக்கு இல்லாத அனுபவமா?

  உங்கள் பதிவில் ஓட்டு பட்டை இல்லை..

  பதிலளிநீக்கு
 10. இந்த காலத்து பிள்ளைகளிடம் ஒரு வேண்டுகோள் மூத்தவர்களிடம்
  சற்று புத்தியுடன் நடந்து கொள்ளுங்கள் !
  " இவர்களுக்கு என்ன தெரியும் "
  என்ற வீண் கர்வம் வேண்டாம்,
  Because we already have experienced what you people are get in involved in the so called "modern world " !
  O K ??

  பதிலளிநீக்கு
 11. Malar said:

  //நல்ல விருவிருப்பு...

  நல்ல எழுத்து நடை..

  உங்களுக்கு இல்லாத அனுபவமா?

  உங்கள் பதிவில் ஓட்டு பட்டை இல்லை..//

  நன்றி மலர்,
  எந்த ஓட்டுப்பட்டையைச் சொல்லுகிறீர்கள் என்று தெரிவில்லை. இந்த விஷயங்களில் நான் கொஞ்சம் ட்யூப்லைட்.

  பதிலளிநீக்கு
 12. கக்கு-மாணிக்கம் சொன்னது:

  //இந்த காலத்து பிள்ளைகளிடம் ஒரு வேண்டுகோள் மூத்தவர்களிடம்
  சற்று புத்தியுடன் நடந்து கொள்ளுங்கள் !
  " இவர்களுக்கு என்ன தெரியும் "
  என்ற வீண் கர்வம் வேண்டாம்,//

  தலைமுறை இடைவெளி இருக்கத்தான் செய்யும். மூத்தவர்கள்தான் அனுசரித்துப்போகவேண்டும். நான் அவ்வாறு செய்வதால் என் மகள்களிடத்திலும் பேரன்களிடத்திலும் எனக்கு எந்த முரண்பாடும் ஏற்படுவதில்லை.

  பதிலளிநீக்கு
 13. கொலை வெறியுடன் எழுதி இருக்கீங்க .
  மிகவும் அருமை .
  பகிர்வுக்கு நன்றி !

  பதிலளிநீக்கு
 14. //இந்த காலத்து பிள்ளைகளிடம் ஒரு வேண்டுகோள் மூத்தவர்களிடம்
  சற்று புத்தியுடன் நடந்து கொள்ளுங்கள் !
  " இவர்களுக்கு என்ன தெரியும் "
  என்ற வீண் கர்வம் வேண்டாம்,//


  ஆஹா . இது இப்ப உள்ள இந்த காலத்து பிள்ளைகளுக்கு பிடிக்காத வாசகம் .

  ம்ம் அடிக்கிற மணியை அடித்து வைப்போம் .

  பதிலளிநீக்கு
 15. தமிழிஸ்லில் ஒட்டு போடும் பட்டை..அதை உங்கள் பதிவின் கீழ் இனைத்தால் தான் உங்கள் பதிவை படிப்பவர்கள் எல்லோரும் ஒட்டு போடால் பதிவு தமிழிஸின் முதல் பகத்தை பிடித்து இன்னும் பலரை சென்று அடையும்.உங்கள் பதிவும் பிரபலமாகும்.லிங்க் இதோ

  http://blog.tamilish.com/pakkam/5

  ஏதாவது தெரிந்த பதிவை எடுத்து பாருங்கள் தெரியும்...


  நீங்களே டியுப் லைட் என்றால் நான் எம்மாத்றம் உங்கள் வயதுக்கு என்னால் வணங்கதான் முடியும் ....

  என் அப்பாவுக்கும் கிட்ட தட்ட உங்கள் வயது ஆச்சு...

  பதிலளிநீக்கு
 16. பனித்துளி சங்கர்,
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 17. மலர்,
  முயற்சி செய்கிறேன்.
  ட்யூப் லைட் = சோம்பேறி

  பதிலளிநீக்கு
 18. மலர்,
  ஒரு சிறிய தொந்திரவு கொடுக்க நினைக்கிறேன். உன்னுடைய பளாக்கில் இருந்து "தமிழிஷ்" ஓட்டுப்பட்டையின் HTML code ஐ காபி செய்து என்னுடைய ஈமெயிலுக்கு அனுப்ப முடியுமா?

  நீங்கள் கொடுத்த லிங்க்கில் இருக்கும் கோடைத்தான் சைடு பாரில் போட்டு வைத்திருக்கிறேன். என்னுடைய டெம்ப்ளேட் புது மாதிரியாக இருக்கிறது. அதில் விளையாட பயமாய் இருக்கிறது.

  email:

  பதிலளிநீக்கு