புதன், 3 மார்ச், 2010

பதிவுலகத்திற்கு இன்று ஒரு பிளாட்டின நாள்ஆஹா, 3-3-2010 ஆகிய இன்றைய நாள் பதிவுலகத்திற்கு ஒரு பிளாட்டின நாள். (எத்தனை நாட்களுக்குத்தான் பொன் நாள் என்றே சொல்லிக்கொண்டு இருப்பது). நேற்று இரவு 8.30 மணி சன் நியூஸ் ஒளிபரப்பானதிலிருந்து பதிவர்கள் ஒருவரும் தூங்கவே இல்லை. அவரவர்கள் தங்கள் பதிவுகளை போட்டபின் அடுத்த பதிவர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று பார்த்து, அவர்கள் வேண்டியவர்களாயிருந்தால் ஒரு + ஓட்டும், பின்னூட்டமும் போட்டுவிட்டு உடனே நம்முடைய பதிவில் ஏதாவது பின்னூட்டம் வந்திருக்கிறதா என்று செக் பண்ணிவிட்டு, அப்படி ஏதாவது பின்னூட்டம் வந்திருந்தால் அதற்கு எதிர்வினை போட்டுவிட்டு, பிறகு மற்ற பதிவுகளுக்கு ஓடி, இப்படியாக ராத்திரி பூராவும் முழித்திருந்து ஓவர்டைம் வேலை செய்தார்கள்.

கொஞ்ச நாட்களாகவே பதிவுலகம் மிகவும் டல்லாகிப்போய் விட்டது. டோண்டு, போலி டோண்டு விவகாரம் சுவாரஸ்யமாக பல நாட்கள் ஓடிக்கொண்டிருந்தது (டோண்டு ராகவன் மன்னிப்பாராக). அதன் பிறகு ஜ்யோவ்ராம் சுந்தரும் இன்னொருவரும் குஸ்தி பழகி சுந்தர் ஆஸ்பத்திரி போய் வந்ததில் பதிவுலகம் கொஞ்ச நாள் நன்றாக இருந்தது. அப்புறம் நம் ஜோக்கர் பதிவர் அவ்வப்போது வெறும் வாயை மெல்லுவதற்கு அவல் கொடுத்துக்கொண்டிருந்தார். அவரையும் சொஞ்ச நாட்களாக காணவில்லை. பதிவுலகம் ரொம்பவுமே டல்லடித்துக்கிடந்த சமயத்தில் ஆபத்பாந்தவனாக, அநாதரட்சகனாக, அவதார புருஷனாக வந்து கைகொடுத்த நித்திய ஆனந்தனுக்கு பதிவர்கள் எல்லோரும் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம். அவரை நமக்கு அடையாளம் காட்டிய சன்நியூஸ் தொலைக்காட்சி நிறுவனத்தாருக்கும் பதிவர்களின் நன்றி என்றும் உரித்தாகுக.
நிற்க, ஒரு சமயம் ஆனந்தர் நம் சகாயத்திற்கு வராமலிருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். பதிவிடுவதற்கு இது மாதிரி வேறு விஷயம் கிடைக்குமா? எவ்வளவு பதிவுகள், பின்னூட்டங்கள், எதிர்வினைகள் ? ஒவ்வொரு பதிவரும் நாம் இந்த ரேசில் கலந்து கொள்ளாவிட்டால் நம் ஜன்மம் சாபல்யமடையாது என்ற ஒரே நோக்கத்துடன் பதிவுகள் போட்டுவிட்டார்கள். இன்னும் பதிவு போடாதவர்கள் வெளிநாட்டு பதிவர்களும் பெரும்பான்மையான பெண் பதிவர்களும்தான். நான் நேற்றே 8.30 மணி செய்தி வெளியான சில நிமிடங்களில் 8.40க்கு என் பதிவைப்போட்டுவிட்டேன். அநேகமாக நான்தான் பர்ஸ்ட் ஆக இருக்கலாம். சரி, இனி என்ன செய்யலாம் என்று யோசித்தபோதுதான் ஏன் இரண்டாவது ரவுண்ட் ஆரம்பிக்கலாமே என்று தோன்றியது. நமக்கு வழக்கமாக நாலு ரவுண்டு போட்டால்தான் சரிப்படும். இரண்டாவது ரவுண்டு ஆரம்பித்துவிட்டேன். ஜாயின் பண்ணுபவர்கள் ஜாயின் பண்ணலாம்.

10 கருத்துகள்:

 1. Jan month book exhibition saved us, Feb month 100il oruvan and vinnai taandi varuvaaya.

  Now march beginning itself great.

  Petrol hike, Alagappa university students death, MGR university violence all news gone back with Nithayanadha news Tsunami.

  பதிலளிநீக்கு
 2. மொக்கைப் பதிவு மட்டுமல்ல , படத்தோட போட்டு கிளுகிளுப்பை வேற கிளப்பறீங்களே.

  regards
  ram

  www.hayyram.blogspot.com

  பதிலளிநீக்கு
 3. சாமியாருக்கு சக்தி அதிகம். நேற்று இரவு அனைத்து பதிவுகளிலும் பத்துக்கும் மேற்பட்டோட் ஆன்லைன்./ எனக்கு முதன்முறையாக 50பேர். இணையத்தை இத்தனைபேர் உபயோகப் படுத்துவார்களா? என்பதே நேற்றுத்தான் உணர முடிந்தது.

  பதிலளிநீக்கு
 4. Imay has left a new comment on your post "சாமியார்களின் லீலைகளும் ஏமாறும் மனிதர்களும்":

  neengaL solvathu mutrilum uNmai...saamiyaargaLai patri nanRaaga therinthum namathu makkaL En maRupadi maRupadi avargaLin kaalilEye sendru vizhugiRaargaL endru thaan theriyavillai....  Posted by Imay to சாமியின் மனஅலைகள் at 3 March 2010 21:38

  தூக்கக்கலக்கத்துல இந்த கமெண்ட்ட தெரியாமல் டெலீட் செய்துவிட்டேன். அப்புறம் நல்ல காலம் ஈமெயிலில் கிடைத்தது. இப்படி சேர்த்திருக்கிறேன். "ஐமே" அவர்களும், ஆண்டவனும், அவர்தம் ஏஜன்ட் நித்தியானந்தரும் மன்னிப்பார்களாக.

  பதிலளிநீக்கு
 5. SURESH க்கு, இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு பதிவுலகத்திற்கு இதுவரை வந்ததில்லை, இனிமேலும் வரப்போவதுமில்லை. நான் இன்றைக்கு மூணாவது ரவுண்டு போடலாம் என்றிருக்கிறேன். ரவுண்டுன்னா நானும் வாரேன் என்று ராஜ நடராஜன் வேறு பிராமிஸ் பண்ணியிருக்கார்.

  பதிலளிநீக்கு
 6. யாஹுராம்ஜி அவர்களுக்கு,
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்பது நாம் எல்லோரும் நன்கு அறிந்த ஒன்றுதானே. அதிர்ஷ்டம் வாழ்வில் ஒரு முறைதான் கதவைத்தட்டும். ஆனால் இந்த அதிர்ஷ்டம் பாருங்கள், அரை மணிக்கொரு தரம் கதவைத்தட்டுகிறது சன் நியூஸ் டிவி வழியாக. அதிர்ஷ்ட தேவதையை அவமதிக்கலாமா?

  பதிலளிநீக்கு
 7. ராஜ நடராஜன் அவர்களுக்கு,
  உங்களுக்கு இல்லாத ரவுண்டா, பக்கத்துலதான் இருக்கீங்க போல இருக்கு, எப்ப வேணும்னாலும் வாங்க.

  பதிலளிநீக்கு
 8. ஹேராம் அவர்களுக்கு,
  என்னங்க, நம்ம நித்தியானந்த் பதிவுல படம் இல்லாட்டி எப்படீங்க?
  அப்பறம் இது எல்லாம் ஒரு கிளுகிளுப்பாங்க! நீங்க சன்நியூஸை தொடர்ந்து பார்த்துட்டு வாங்க! அதுதாங்க கிளுகிளுப்பு !!!
  With Best Wishes

  பதிலளிநீக்கு
 9. அன்பின் அய்யா

  தாமதமாகப் படிக்கிறேனா - நல்லாருக்கு - ஈவிடுகை ரெண்டாவது ரவுண்டுக்கு அப்புறமா - மொத ரவுண்டுக்கு முன்னாடியா - வாழ்க வாழ்க

  பதிலளிநீக்கு