செவ்வாய், 2 மார்ச், 2010

சாமியார்களின் லீலைகளும் ஏமாறும் மனிதர்களும்

சாமியார்கள் எல்லோரும் நல்லவர்களே. ஆனால் அவர்களும் மனிதர்கள்தான். சாதாரண மனிதர்களுக்கு உண்டான அனைத்து ஆசாபாசங்களும் அவர்களுக்கும் இருப்பது இயற்கை. ஆனால் நாம்தான் அவர்களுக்கு அமானுஷ்யமான சக்திகள் இருப்பதாகவும், அவர்கள் உலக ஆசாபாசங்கள் அற்றவர்கள் என்றும், அவர்கள் உலகநடைமுறையிலிருந்து வேறுபட்டவர்கள் என்றும் நம்பி அவர்கள் விரிக்கும் வலையில் விழுகிறோம். தவறு யாருடையது? விளக்கு வெளிச்சத்திற்கு மயங்கி விட்டில் பூச்சி விழுந்து மடிவது விளக்கின் குற்றமா? யோசியுங்கள் !

21 கருத்துகள்:

 1. அதானே,

  அந்த சாமி தான் என்ன செய்தேன் சொன்னாரே, இதையும் முதல்லேயே சொல்லி இருந்தா என்னவாம்?

  பதிலளிநீக்கு
 2. //சாமியார்கள் எல்லோரும் நல்லவர்களே//

  சீசீ தூ தூதூ

  பதிலளிநீக்கு
 3. நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம் அத்தனை ஆசா பாசங்களும் உள்ளவர் ஏன் தன்னை முற்றும் துறந்தவராய் காட்டிக் கொள்ள வேண்டும். ஆக இவ்வாறு சொல்லி அறியாமையில் இருக்கும் மக்களை ஏமாற்றுபவர் நல்லவரா? இதிலென்ன சாமியார்கள் எல்லோரும் நல்லவர்கள் என்ற நற்சான்றிதழ்.
  இவனை எல்லாம் நடு ரோட்டில ஓட விட்டு அடிக்கனும்.

  பதிலளிநீக்கு
 4. //சாமியார்கள் எல்லோரும் நல்லவர்களே.//

  உங்களையும் சாமியார் லிஸ்டில் சேர்த்துட வேண்டியது தான்!

  பதிலளிநீக்கு
 5. //சாமியார்கள் எல்லோரும் நல்லவர்களே.//

  //அவர்கள் விரிக்கும் வலையில்//

  மேலே சுட்டிய இரண்டும் நீங்கள் எழுதியவைதான்.

  சாமியார்களுக்கு ஆசாபாசாங்கள் இருக்கும்தான். அதற்காக வலை விரிக்கவேண்டுமா?

  அப்படி வலைவிரிப்போர் எப்படி நல்லவர்களாவார்கள்?

  ஆசாபாசாங்கள் இருந்தால் வேறு மதத்தில் இருக்கலாம். அங்கு celebacy கட்டாயமல்ல.

  ஏன் இந்துமத்ததில் இருந்து காவியுடையும் ருத்த்ராச்ச மாலையும்?

  பதிலளிநீக்கு
 6. ஐயா!
  இந்த செய்திக்கும் படத்துக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?
  எழுத்தாளர் சாருநிவேதிதா -இந்தப் படத்திலுள்ள
  சாமியாரைப் பற்றி ஆகா ஓகோ என எழுதுகிறார்.
  நான் எந்தச் சாமியையும் நம்புபவனல்ல.
  ஆனால் சாமிமாரை நம்பி மோசமானவர்களைப் பார்க்கப் பரிதாபமாகத் தான் இருக்கிறது.
  ஆனால் உங்களைப் போன்ற கற்ற பலர் கூட இச்சாமிமாருக்கு விளம்பரம் செய்வது வேதனை.
  உங்கள் தெளிவு எனக்கு மிகப் பிடித்த்து.
  இந்த சாமிமார் பற்றிய தாங்கள் அறிந்த தில்லு முல்லுகளை வெகுஜனப் பத்திரிகைக்கும் எழுதுங்கள்.
  அந்த தகமை உங்களுக்கு உண்டு.

  பதிலளிநீக்கு
 7. திரு. வால் பையன் அவர்களுக்கு,
  நான் ரிடையர் ஆவதற்கு முன்பிருந்தே சாமியாராகலாமென்ற எண்ணம் உண்டு. இன்னமும் இருக்கிறது. ஒரே ஒரு சங்கடம்தான். வீட்டில் ஒரு மனைவியும் இரண்டு பேரன்களும் இருக்கிறார்கள். அவர்களை வைத்துக்கொண்டு நித்யானந்தர் மாதிரி எப்படி ?? ஹிஹிஹி...

  பதிலளிநீக்கு
 8. அய்யா,
  திருடர்,கொலைகாரர், இருள் சுப்பர் , 108, கதவைத்திற , கலியுக அவதார் மாயஜால பாப் , அப்புறம் நீங்கள், நான் , அவர் , இவர் எல்லாரும் நல்ல‌வர்களே.

  இப்படி, நல்லவர்களாகிய நாம் விரிக்கும் வலையில் (வலைவிரித்தல் / மயங்கும் விட்டில் பூச்சி என்றாலே அது எதற்கு என்று Retired Scientist ஆன உங்களுக்குத் தெரியாதா என்ன?) யாராவது விழுந்தால் தவறு யாருடையது? விளக்கு வெளிச்சத்திற்கு மயங்கி விட்டில் பூச்சி விழுந்து மடிவது விளக்கின் குற்றமா?

  இல்லவே இல்லை.

  இல்லவே இல்லை.
  Thank you sir

  பதிலளிநீக்கு
 9. திரு.யோகன் பாரிஸ் அவர்களுக்கு,
  நீங்கள் 2-3-2010 அன்று இரவு 8.30,9.00 மணி (இந்திய நேரம்)க்கு ஒளிபரப்பான சன் நியூஸ் தொலைக்காட்சியைப்பார்த்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அந்த ஒளிபரப்பில் இந்த சாமியாரின் லீலைகளை ஒளிபரப்பினார்கள். அதைப்பார்த்தவுடன் என் மனதில் தோன்றிய எண்ணங்களை பதிந்தேன். மற்றபடி இந்த சாமியாரை நான் சந்தித்தது இல்லை.
  அந்த ஒளிபரப்பைப் பார்த்தபின் என் பதிவைப்படித்தீர்களானால் என் எழுத்தின் நக்கலை ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் மறு கருத்தினை எதிர்பார்க்கும் அன்பன்.

  பதிலளிநீக்கு
 10. திரு. ஜோ.அமலன் அவர்களுக்கு,
  உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி. 2-3-2010 இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பான சன் நியூஸ் தொலைக்காட்சியைப்பார்த்தீர்களா என்று என்னால் யூகிக்க முடியவில்லை. பார்த்திருந்தீர்களென்றால் என் பதிவின் இரக்கரடக்கல் புரிந்திருக்கும். இந்த பதிவை நான் செய்தி ஒளிபரப்பான சில நிமிடங்களிலேயே போட்டுவிட்டதனால் இந்தப்பதிவுக்கும் நாட்டு நடப்புக்கும் உள்ள தொடர்பு விளங்காமல் போயிற்று. மன்னிக்கவும்.

  பதிலளிநீக்கு
 11. ஐயா!
  என்னிடம் எந்த தமிழ்த் தொலைக்காட்சியும் இல்லை. அதனால் தங்கள் நக்கலை ரசிக்க முடியவில்லை. எனினும் யூனியர் விகடனார்
  ஏதாவது கூறுவார். எதிர் பார்க்கிறேன்.
  கட்டாயம் சாரு நிவேதிதா எதிர்வினையாற்றுவார்.
  பார்ப்போம்.
  இந்த பகுதி யூரியூப்பில் யாராவது இட்டால் சுட்டி
  தரவும்.
  எனக்குத் திரு...தேவையில்லை. அன்புடன் நீங்கள் என்னை யோகன் என விழிக்கவும்.
  வயதால்,அறிவால்,ஆற்றலால் அடியேன் சிறியேன்.

  பதிலளிநீக்கு
 12. காவேரி கணேஷ் மற்றும் தர்ஷன் அவர்களுக்கு,

  உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.
  நானும் கடந்த ஒரு வருடமாக பதிவு எழுதிக்கொண்டு வருகிறேன். என்னைச்சீந்துவார் யாரும் இல்லை. ஏனென்றால் என் பழைய பதிவுகள் எல்லாம் ப்யூர் வெஜிடேரியன் வகை. இப்போதுதான் முதல் முறையாக இந்த மாதிரி ஓர் பதிவு போட்டிருக்கிறேன். அதுவும் ரொம்ப ஜாக்கிரதையாக, வஞ்சப்புகழ்ச்சியாக எழுதியிருக்கிறேன்.

  எனக்கு என்ன ஆச்சரியமும், சந்தோஷமும் என்றால் பதிவு போட்ட 6 மணி நேரத்தில் 6 கருத்துக்கள். என் பழைய பதிவுகளுக்கு (50க்கும் மேல்) மொத்தமாகவே இது வரை வந்த கருத்துக்கள் 6 ஐத்தாண்டவில்லை.

  இதிலிருந்து நான் பிரபலமாவதற்கு என்ன வழி என்று கற்றுக்கொண்டேன்.

  பதிலளிநீக்கு
 13. //இதிலிருந்து நான் பிரபலமாவதற்கு என்ன வழி என்று கற்றுக்கொண்டேன்//
  ஐயா!
  எனவே இந்தச் சாமியாரிடம் சென்று நன்றி தெரிவிக்கவும்.
  நன்றி மறப்பது நன்றன்று.

  பதிலளிநீக்கு
 14. பதிவொலக அண்ணமார்களுக்கு மசக்கவுண்டன் வண்க்கமுங்க.
  ஏனுங்க சாமியாருங்கதான் விடியவிடிய தூங்காம சாமி கும்படறாங்கன்னா நீங்கல்லாம் எதுக்குங்க ராப்பூராவும் முளிச்சுகிட்டு பதிவு, வெனை, பின்வெனை,எதிர்வெனைன்னு கஷ்டப்படறீங்க? கஷ்டப்பட்டாலும் ஏதாச்சும் பிரயோசனம் இருக்கணுமுங்கோ? ஏனுங்க நாஞ்சொல்ரது கரீட்தானுங்க?

  பதிலளிநீக்கு
 15. யோகன் பாரிஸ் அவர்களுக்கு,
  கீழே கண்ட சுட்டியை சுட்டவும்.

  http://tavusarpandi.blogspot.com/2010/03/blog-post.html

  பதிலளிநீக்கு
 16. யோகன் அவர்களுக்கு,
  நீங்கள் சொன்னீர்களே என்று சாமியாருக்கு நன்றி சொல்லப்புறப்படறப்போ, பாருங்க சன் நியூஸ்ல "நித்யானந்த சாமியார் ஊரை விட்டு ஓடினார்"னு நியூஸ் போடறானுங்க. நான் கொஞ்சம் லேட் செய்துவிட்டேன். இனி சாமியாரை எங்க போய் தேடறது என்று மிடிவு செய்து வீட்டிலேயே இருந்து விட்டேன்.

  பதிலளிநீக்கு
 17. ers க்கு,
  நீங்க ரொம்ப லேட்டுங்க. அவங்க எல்லாம் பாத்து கமென்ட் எல்லாம் போட்டாச்சு.

  பதிலளிநீக்கு
 18. neengaL solvathu mutrilum uNmai...saamiyaargaLai patri nanRaaga therinthum namathu makkaL En maRupadi maRupadi avargaLin kaalilEye sendru vizhugiRaargaL endru thaan theriyavillai....

  பதிலளிநீக்கு
 19. //எனக்கு என்ன ஆச்சரியமும், சந்தோஷமும் என்றால் பதிவு போட்ட 6 மணி நேரத்தில் 6 கருத்துக்கள். என் பழைய பதிவுகளுக்கு (50க்கும் மேல்) மொத்தமாகவே இது வரை வந்த கருத்துக்கள் 6 ஐத்தாண்டவில்லை.

  இதிலிருந்து நான் பிரபலமாவதற்கு என்ன வழி என்று கற்றுக்கொண்டேன்.//

  இப்பொழுதுதான் வழி என்ன எனத் தெரிந்துகொண்டேன். ஆனால் என்னால் பிரபலமாக இயலாது!!!! வேண்டாம் சாமி!!

  பதிலளிநீக்கு
 20. as all aware the "Samiyars" are all human beings: but they have more talents in all respect: You take and follow the good and forget about his personal and sexual

  பதிலளிநீக்கு