திங்கள், 8 மார்ச், 2010

கோள்களும் மனிதனின் வாழ்க்கையும்.கேள்வி: அன்பு அண்ணா, வாழ்வு முன்னே நிர்ணயிக்கப்பட்டதா ?

பதில்:- இரண்டாம் பாகம்.

மனிதனின் வாழ்க்கை கோள்களின் நிலையைப்பொருத்து அமையும் என்று பார்த்தோமல்லவா. அப்படியானால் ஒருவனின் முழு எதிர்காலத்தையும் ஜோசியர்கள் முழுவதுமாக கணித்து சொல்லமுடியாதா? முக்காலத்தையும் துல்லியமாக கணித்து எங்களால் சொல்ல முடியும் என்றுதான் பெரும்பாலான ஜோசியர்கள் சொல்லிக்கொள்கிறார்கள்.


அப்படி ஜோசியர்கள் சொல்வது மறுக்க முடியாத உண்மையாக இருந்தால், இந்த உலகில் உள்ள அனைவரும் தங்களுடைய எல்லாக்காரியங்களையும் ஜோசியர்களைக் கலந்தாலோசிக்காமல் செய்யமாட்டார்கள் அல்லவா? ஆனால் தற்போது நடைமுறையில் என்ன நடக்கிறது என்று பார்த்தால்,

1. எல்லோரும் ஜோசியரிடம் போவதில்லை.

2. அப்படி ஜோசியரிடம் போனவர்களின் அனுபவமும் ஜோசியர்களின் வாக்கு முழுவதும் நடந்ததாக கூறவில்லை.


இந்த நிலைக்கு ஜோசியர்கள் பல சமாதானங்கள் கூறுவார்கள். ஜோசியம் நம்புபவர்களுக்குத்தான் பலிக்கும், அவருடைய ஜாதகம் தவறு, அந்த ஜோசியன் அரைகுறையாக படித்தவன் இப்படியெல்லாம் கூறி மக்களை குழப்புவார்கள்.


பொதுவாகவே ஜோசியர்கள் எல்லோரும் நல்ல மனோதத்துவ வல்லுநர்களாக இருப்பார்கள். வந்த ஆட்களின் சில நிமிடப்பேச்சிலேயே அவர்கள் எதற்காக வந்திருக்கிறார்கள், எந்த மாதிரியான பலன்களை எதிர்பார்க்கிறார்கள் என்பதை யூகித்து விடுவார்கள். அதற்குத்தகுந்த மாதிரியான டெக்னிகல் வார்த்தைகளை உபயாகப்படுத்தி வந்தவர்களை ஒருமாதிரியாக பிரெய்ன்வாஷ் பண்ணி முடிந்தமட்டும் வசூல் செய்துவிட்டு அனுப்பி வடுவார்.


அவர் சொன்னமாதிரி நடந்தால் ஜோசியர் கெட்டிக்காரர் என்ற பெயர் வந்துவிடும். இப்படி நாலு பேர் சொன்னால் அந்த ஜோசியருக்கு இன்னும் பத்து வருஷத்துக்கு தொழில் கவலை விட்டது.


ஆனால் ஜோசியர் சொன்னமாதிரி கோள்களின் நிலையைப்பொருத்து மனிதனின் வாழ்வு அமைந்துவிடும் என்றால் மனிதன் எந்த முயற்சியையும் எடுக்காமலேயே அவன வாழ்க்கை நடக்க வேண்டுமல்லவா? ஆனால் அப்படி நடப்பதில்லையே? அதற்கு என்ன காரணம்?


இங்குதான் நம் ஆன்மீகம் காரணம் காட்டுகிறது. என்னதான் ஒருவனுடைய கிரக பலன்கள் சாதகமாக இருந்தாலும், ஒவ்வொருவனுக்கும் கர்மவினை என்று ஒன்று இருக்கிறது, அது கிரகபலனை மாற்றக்கூடிய சக்தி படைத்தது, இந்த இரண்டும் ஒரே மாதிரியான பலனைக் கொடுக்கக்கூடிய நிலை இருந்தால்தான் ஜோசியர் சொன்னது முழுவதுமாக நடக்கும். இரண்டும் வெவ்வேறு பலன்களைக்கொடுக்கும் நிலையில் இருந்தால், எது அதிக சக்தியுடன் இருக்கிறதோ, அந்தப் பலன்தான் நடக்கும். இது ஆன்மீகவாதிகளின் விளக்கம். கர்மவினையைப்பற்றி தெரிந்து கொள்ள பகவத்கீதையைப் படிக்கவும்.


அப்படியானால் நம் முயற்சி எதற்கு என்ற கேள்வி எழும். வாழும் மனிதன் ஒவ்வொருவனும் வாழ்வதற்கான முயற்சிகளை செய்துதான் ஆகவேண்டும். அந்த முயற்சிக்குத்தகுந்த பலன்களை நம் கர்ம வினைகளும் கோள்களின் இருப்பும் நமக்குத்தருகின்றன. முயற்சி செய்யாவிடில் மனிதன் அழிந்து விடுவான்.

இன்னும் வரும்..

6 கருத்துகள்:

 1. ஜோதிடத்தை சரியாக அறிந்தவர்கள் தற்போது மிகவும் குறைவு,பணமே அவர்களின் குறி,நமது கர்ம வினைகளுக்கு ஏற்பவே எல்லோரும் இந்தப் பூமியில் பிறக்கிறோம்,கட்டாயம் அனுபவிக்க வேண்டியவைகளை அனுபவித்தே ஆகவேண்டும்.பாரதப் போரின்போது சகாதேவன்,கிருஷ்ணரிடம் போர் எப்படி முடியும் என்று கூறவில்லையா?

  பதிலளிநீக்கு
 2. மிக்க சரி, உருத்திரா அவர்களே. என்னுடைய அடுத்த பதிவில் ஜோசியம் எப்படி வீணாகிறது என்று எழுதப்போகிறேன்.

  பதிலளிநீக்கு
 3. நல்ல பதிவு.

  //பொதுவாகவே ஜோசியர்கள் எல்லோரும் நல்ல மனோதத்துவ வல்லுநர்களாக இருப்பார்கள்//

  உண்மை. பரிகாரம் சொல்கிறேன் பேர்வழி என்று நம்மை ஒரு வழி செய்து விடுவார்கள்.

  பதிலளிநீக்கு
 4. ஐயா!சிறந்த சோதிடர் அதற்குக் கூலிவாங்கார்.ஆனால் இன்று சோதிடம் தொழில்.அதனால் கண்டது நிண்டதெல்லாம், கையைப் பிடித்துப் பார்க்கிறது.பிறக்கேக்கையே முடம் பேய்க்கு பார்த்துச் சரிவாருமாய்யா?நான்- நாளென் செயும் வினைதான் என்செயும்என- வேலன் திருவடியைக், கோவிலைத் தேடி நான் போகாமல் குமரா உனை நான் குப்பிட வேண்டுமென வாழ்கிறேன்.வாழ்க்கையில் நிறையப் பட்டும், மறந்தும் சோதிடப்பக்கம் தலைவைத்துப் படுக்கவில்லை.அதனால் எனக்கு ஒரு பெருமிதம் உண்டு.தலைக் கனம் என்றுகூடச் சொல்லலாம்.

  பதிலளிநீக்கு
 5. யோகன்,
  எல்லா தொழிலுக்கும் தொழில் தர்மம் என்று ஒன்று உண்டு. ஆனால் இந்த ஜோசியர்கறுக்கு எந்த தர்ம்மும் கிடையாது. இவர்கள் இன்று தமிழ்நாட்டில் செய்யும் அக்கிரமங்கள் எல்லை மீறிப்போய்விட்டன.

  உதாரணத்துக்கு- தமிழ்நாட்டில் கல்யாணங்கள் ஜாதகப்பொருத்தம் பார்க்காமல் செய்ய மாட்டார்கள் என்பது உங்களுக்கு தெரியும். எத்தனை ஜாதகங்கள் கொண்டு போனாலும் அது சொத்தை, இது சொத்தை என்று சொல்லி இந்த ஜோசியர்கள் கல்யாணம் நடக்கவிடாமல் செய்துவிடுகிறார்கள்.

  இன்று தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான ஆணும் பெண்ணும் 30,35 வயதைத்தாண்டி கல்யாணம் ஆகாமல் இருக்கிறார்கள்.

  இந்தக் கொடுமைக்கு என்று தீர்வு வரும் என்று தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
 6. முகுந்த் அம்மா அவர்களுக்கு, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  நான் இது வரை ஜோசியம் பார்க்க போனதில்லை.

  ஆண்டவன் நமக்கு விதித்தபடி நடக்கும். ஜோசியத்தினால் அதை பாற்ற முடியாது என்பதில் அசையாத நம்பிக்கையுடன் வாழ்கிறேன்.

  பதிலளிநீக்கு