சனி, 28 ஆகஸ்ட், 2010

அமெரிக்கப் பிரஜைகள் ?


பதிவர் கண்ணகியின் சொல்லத்தான் நினைக்கிறேன் பதிவில் சொன்ன ஒரு கருத்து.
//நாம தண்ணி கொண்டுவந்து கொடுத்தாக்கூட வேண்டாங்க்என்கிறார்கள்....சுடுதண்ணீர்தான்என்று சொன்னபிறகு தயக்கத்துடன் குடிக்கிறார்கள்...//
உண்மை.
இது உள்ளூர்க்காரர்கள் பண்ணும் அழும்பு. நம்மூர்க்காரங்களே அமெரிக்காவுல போயி கொஞ்ச வருஷம் இருந்து விட்டு நம்மூருக்கு வந்தாங்கன்னா அவங்க பண்ற அழும்பு இருக்கிறதே அது ரொம்ப அக்கிரமுங்க.
என்னுடைய கதையைக்கேளுங்கள்.
என் நண்பரின் மகள், அமெரிக்காவில் செட்டில் ஆனவள், தன்னுடைய மகளுடனும், அப்பா, அம்மாவுடனும் என் வீட்டிற்கு வந்திருந்தார்கள். அவர்கள் வருகிறார்களென்று தெரிந்தவுடனேயே கை கால்களையெல்லாம் டெட்டால் போட்டுக்கழுவி விட்டு வெந்நீர் கொதிக்கவைத்து ஆறவைத்து அதைத்தனியாகவும், அதில் ஜூஸ் தனியாகவும் கலக்கி வைத்திருந்தோம்.
வீட்டிற்கு வந்தவர்கள் என்ன சொல்லியும் அந்த தண்ணீரையோ, ஜூஸையோ குடிக்கவில்லை.
இரண்டு மாதம் கழித்து நாங்கள் ஒரு பெரிய ஓட்டலில் "கெட்டுகெதர்" வைத்திருக்கிறோம், நீங்கள் அவசியம் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்கள். நாங்கள் ஏதோ ஒரு நொண்டிச்சாக்கு சொல்லிப் போகவில்லை. என்னுடைய தன்மானம் என்னைப்போக விடாமல் தடுத்தது.
ஆனால் எல்லோரும் அப்படியில்லை. போன வாரம் இன்னொரு நண்பரின் அமெரிக்க குடியுரிமை வாங்கிய மகள், மாப்பிள்ளை, பேத்தி ஆகியோர் இங்குள்ள என் நண்பரின் வீட்டுக்கு ஒரு வார விடுமுறையில் வந்திருந்தார்கள். நான் அவர்களை என் வீட்டுக்கு சாப்பிட அழைத்திருந்தேன். எந்தவித பந்தாவும் இல்லாமல் வீட்டுக்கு வந்து இரண்டு மணிநேரம் இருந்து நாங்கள் கொடுத்த கேசரி, இட்லி (முருங்கைக்காய் சாம்பார் - அந்தப்பேத்திக்கு பிடிக்கும் என்று தெரிந்து அதை வைத்திருந்தோம்), தயிர் சேமியா ஆகியவற்றை எந்த பிகுவும் பண்ணாமல் சாப்பிட்டுவிட்டுச் சென்றார்கள். மனதுக்கு மிகவும் திருப்தியாக இருந்தது.
அந்தப் பெண்ணும் மாப்பிள்ளையும் ஒரு “கெட்டுகெதர்” பார்ட்டிக்கு அழைத்திருந்தார்கள். சந்தோஷமாகப்போய் வந்தோம். படங்களைப் பாருங்கள்.



74 கருத்துகள்:

  1. மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்.

    பதிலளிநீக்கு
  2. அப்படி இல்லீங்க. அமெரிக்காவுல இருந்துட்டு வந்தவுடனே தண்ணிய குடிச்சா உடல் உபாதைகள் ஏற்படறது உண்மைதாங்க. ?(வவுத்தால போறது சகஜம்) அதுவும் ரெண்டு மூனு நாளைக்குத்தான் அப்புறம் உடல் நம்ம ஊர் தண்ணிக்கு பழகிக்கும். இதுல அதிகம் பாதிக்கப்படுறது இங்கே குழந்தைங்கதான். பெரியவங்களுக்கு பெருசா ஒன்னும் ஆவாது. சில பேரு பயத்தினாலையே கடைசி வரைக்கும் அலப்பற விட்டுட்டு இருப்பாங்க. என்ன மாதிரி மக்கள் எல்லாம் இறங்கின வுடனே ஓல்ட் மாங்க் தேடுவாங்க. எல்லா விரல்களும் ஒன்னு போல இல்லீங்களே

    பதிலளிநீக்கு
  3. ///நம்மூர்க்காரங்களே அமெரிக்காவுல போயி கொஞ்ச வருஷம் இருந்து விட்டு நம்மூருக்கு வந்தாங்கன்னா அவங்க பண்ற அழும்பு இருக்கிறதே அது ரொம்ப அக்கிரமுங்க.//

    உண்மை!

    மூன்று மாதம் அமெரிக்கா சென்று வந்தவன் தான் இதுமாதிரி அழும்பு பண்ணுவார்கள்.

    தமிழும் மறந்து விடும். அவன் பேசும் ஆங்கிலம் அமெரிக்காவிலும் எவனுக்கும் புரியாது. இந்தியாவிலும் எவனுக்கும் புரியாது.

    அமெரிக்காவில் முப்பது வருடத்திற்கு மேல் வசித்தாலும் அவர்கள் பேசும் எழுதும் தமிழ் அறிவு அரை குறைகளுக்கு கிடையாது.

    அவர்கள் வாயில் தமிழ் என்றும் வராது! எல்லாம் டமில் or Taamil தான்.

    நிறை குடம் தழும்பாது!

    பதிலளிநீக்கு
  4. Ila@இளா சொன்னது:

    //அப்படி இல்லீங்க. அமெரிக்காவுல இருந்துட்டு வந்தவுடனே தண்ணிய குடிச்சா உடல் உபாதைகள் ஏற்படறது உண்மைதாங்க. ?(வவுத்தால போறது சகஜம்) அதுவும் ரெண்டு மூனு நாளைக்குத்தான் அப்புறம் உடல் நம்ம ஊர் தண்ணிக்கு பழகிக்கும். இதுல அதிகம் பாதிக்கப்படுறது இங்கே குழந்தைங்கதான். பெரியவங்களுக்கு பெருசா ஒன்னும் ஆவாது. சில பேரு பயத்தினாலையே கடைசி வரைக்கும் அலப்பற விட்டுட்டு இருப்பாங்க. என்ன மாதிரி மக்கள் எல்லாம் இறங்கின வுடனே ஓல்ட் மாங்க் தேடுவாங்க. எல்லா விரல்களும் ஒன்னு போல இல்லீங்களே//

    நீங்க சொல்றது உண்மைதானுங்க. அதுக்காகத்தான் இந்த மாதிரி வர்ரவங்களுக்காக ஸ்பெசலா தண்ணியக்கொதிக்க வச்சு ஆற வச்சுத் தனியா கொடுக்கிறமுங்க. அப்பறமும் சந்தேகம்னா ஊட்டுக்கு எதுக்கு வர்றீங்க.

    நான் சர்வீசுல இருக்கும்போது எத்தனையோ வெளி நாட்டுக்காரங்களை வீட்டுக்கு கூப்பிட்டு விருந்து வைத்திருக்கிறேன். ஒருவரும் இந்த மாதிரி பிகு பண்ணினதில்லை.

    நீங்க சொன்ன மாதிரி ஒவ்வொரு விரலும் ஒவ்வொரு மாதிரிதான்.

    ஒல்டு மாங்க்குன்னா என்னங்க? சாமியாருங்களா?

    பதிலளிநீக்கு
  5. கலாநேசன் சொன்னது:

    //மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்.//

    கரெக்ட்டுங்க. ஆனா, நம்ம ஊடு தேடி வந்து நம்மளை மதிக்காம போனா என்ன பண்றதுங்க? அந்த வயித்தெரிச்சல்ல போட்டதுதான் இந்தப்பதிவு.

    பதிலளிநீக்கு
  6. சைவக்கொத்து பரோட்டா சொன்னது:

    //சம்பந்தபட்டோர்க்கு புரிந்தால் சரி.//

    எங்க ரொம்ப நாளா ஆளையே காணோம். வாங்க, வாங்க. நீங்க சொல்றது சரிங்க.

    பதிலளிநீக்கு
  7. நண்டு@நொரண்டு-ஈரோடு சொன்னது:

    //ம்...
    பாருங்க உலகத்தை .
    என்ன சொல்ல ...//

    என்ன பண்றதுங்க, இந்த ஒலகத்துலதான நாம குப்பை கொட்ட வேண்டியிருக்குது?

    பதிலளிநீக்கு
  8. ஆட்டையாம்பட்டி அம்பி சொன்னது:

    ///நம்மூர்க்காரங்களே அமெரிக்காவுல போயி கொஞ்ச வருஷம் இருந்து விட்டு நம்மூருக்கு வந்தாங்கன்னா அவங்க பண்ற அழும்பு இருக்கிறதே அது ரொம்ப அக்கிரமுங்க.//

    உண்மை!

    மூன்று மாதம் அமெரிக்கா சென்று வந்தவன் தான் இதுமாதிரி அழும்பு பண்ணுவார்கள்.

    தமிழும் மறந்து விடும். அவன் பேசும் ஆங்கிலம் அமெரிக்காவிலும் எவனுக்கும் புரியாது. இந்தியாவிலும் எவனுக்கும் புரியாது.

    அமெரிக்காவில் முப்பது வருடத்திற்கு மேல் வசித்தாலும் அவர்கள் பேசும் எழுதும் தமிழ் அறிவு அரை குறைகளுக்கு கிடையாது.

    அவர்கள் வாயில் தமிழ் என்றும் வராது! எல்லாம் டமில் or Taamil தான்.

    நிறை குடம் தழும்பாது!//

    நல்லாப் போட்டீங்க ஒரு போடு. நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  9. அய்யா,

    இளா அவர்கள் சொன்னது போல இங்கிருந்து அங்கே வந்த ஒரு சில நாட்களில் உடல் உபாதைகளில் சிரம படுவது எல்லாருக்கும் நடக்கிறது. அதுவும் குழந்தைகள் அதிகம் சிரம படுகிறார்கள்.

    இங்கிருந்து கிளம்பும் முன்னரே, பல டாக்டர்கள் பயமுறுத்தியும் விடுகிறார்கள்.

    சில நாட்களில் பெரியவர்களுக்கு பழகி கொண்டாலும் சிறு குழந்தைகளுக்கு சரியாவதில்லை. அதனாலேயே, பலர் கவனமாக இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  10. ஐயா! நல்ல பதிவு!

    மனித மனங்களை பற்றி அருமையா சொல்லி இருக்கிங்க! என்ன செய்யலாம் சொல்லுங்க?

    தொட்டால் சிணுங்கிகள்! டெட்டால் போட்டு கழிவினாலும் குணத்தை மாத்திகாதவங்க!

    நீங்க அவங்க விழாவை தவிர்த்ததே நல்லது தான்!

    பதிலளிநீக்கு
  11. அது சரி. குழந்தைகள் நலம் முக்கியம். மிக முக்கியம். அதில் இரண்டு கருத்து கிடையாது.

    ஆனால் மூன்று மாதம் அமெரிக்கா சென்று வந்தவன் வாயில் ஏன் தமிழ் வரமாட்டேன் என்கிறது? எல்லாம் டமில் or Taamil தான்...

    ஏன் அப்படி! அதற்கு பதில் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  12. ஐயா நான் நெனச்சதத்தான் இளாவும் சொல்லியிருக்கார்..

    //அப்படி இல்லீங்க. அமெரிக்காவுல இருந்துட்டு வந்தவுடனே தண்ணிய குடிச்சா உடல் உபாதைகள் ஏற்படறது உண்மைதாங்க. ?(வவுத்தால போறது சகஜம்) அதுவும் ரெண்டு மூனு நாளைக்குத்தான் அப்புறம் உடல் நம்ம ஊர் தண்ணிக்கு பழகிக்கும். இதுல அதிகம் பாதிக்கப்படுறது இங்கே குழந்தைங்கதான். பெரியவங்களுக்கு பெருசா ஒன்னும் ஆவாது. சில பேரு பயத்தினாலையே கடைசி வரைக்கும் அலப்பற விட்டுட்டு இருப்பாங்க. என்ன மாதிரி மக்கள் எல்லாம் இறங்கின வுடனே ஓல்ட் மாங்க் தேடுவாங்க. எல்லா விரல்களும் ஒன்னு போல இல்லீங்களே//

    நானும் அப்படித்தான் - ஒரே ஒரு மாற்றம், எனக்கு ஜானெக்‌ஷா வேணும்.

    இவ்ளோ சொல்றீங்களே, நானும் இளாவும் தினமும் பேசுவோம், நாங்க பேசும் போது ஆங்கிலக் கலப்பு மிக மிக குறைவு. இந்தியாவில் இருக்கும் பலபேருக்கு போன் பண்ணா அவ்ளோதான் - Hey buddy,how r u? whats up man, cool என்று ஒரே பீட்டரா இருக்கும். அதுக்கு என்ன சொல்றீங்க..

    தயவு செய்து Generalization வேண்டாமே..

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    பதிலளிநீக்கு
  13. ஐயா நான் நெனச்சதத்தான் இளாவும் சொல்லியிருக்கார்..

    //அப்படி இல்லீங்க. அமெரிக்காவுல இருந்துட்டு வந்தவுடனே தண்ணிய குடிச்சா உடல் உபாதைகள் ஏற்படறது உண்மைதாங்க. ?(வவுத்தால போறது சகஜம்) அதுவும் ரெண்டு மூனு நாளைக்குத்தான் அப்புறம் உடல் நம்ம ஊர் தண்ணிக்கு பழகிக்கும். இதுல அதிகம் பாதிக்கப்படுறது இங்கே குழந்தைங்கதான். பெரியவங்களுக்கு பெருசா ஒன்னும் ஆவாது. சில பேரு பயத்தினாலையே கடைசி வரைக்கும் அலப்பற விட்டுட்டு இருப்பாங்க. என்ன மாதிரி மக்கள் எல்லாம் இறங்கின வுடனே ஓல்ட் மாங்க் தேடுவாங்க. எல்லா விரல்களும் ஒன்னு போல இல்லீங்களே//

    நானும் அப்படித்தான் - ஒரே ஒரு மாற்றம், எனக்கு ஜானெக்‌ஷா வேணும்.

    இவ்ளோ சொல்றீங்களே, நானும் இளாவும் தினமும் பேசுவோம், நாங்க பேசும் போது ஆங்கிலக் கலப்பு மிக மிக குறைவு. இந்தியாவில் இருக்கும் பலபேருக்கு போன் பண்ணா அவ்ளோதான் - Hey buddy,how r u? whats up man, cool என்று ஒரே பீட்டரா இருக்கும். அதுக்கு என்ன சொல்றீங்க..

    தயவு செய்து Generalization வேண்டாமே..

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    பதிலளிநீக்கு
  14. பாஸ்டன் ஸ்ரீராம் சொன்னது:

    //தயவு செய்து Generalization வேண்டாமே..//

    என்னுடைய பதிவில் இரண்டு வகை இந்திய-அமெரிக்க பிரஜைகளைப் பற்றி கூறி இருக்கிறேன். இருவருமே practising doctors. ஒருவர் நம்முடன் ஒன்றி போகிறார். இன்னொருவர் அப்படி ஒன்றவில்லை.

    இப்படிப்பட்டவர்களைப் பற்றி இங்குள்ளவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அவர்கள் தெரிந்து கொள்வதற்காக என்னுடைய கோணத்திலிருந்து சொன்னேன். அவ்வளவுதான்.

    பதிலளிநீக்கு
  15. ///நம்மூர்க்காரங்களே அமெரிக்காவுல போயி கொஞ்ச வருஷம் இருந்து விட்டு நம்மூருக்கு வந்தாங்கன்னா அவங்க பண்ற அழும்பு இருக்கிறதே அது ரொம்ப அக்கிரமுங்க.//

    சரியான பதிவு ,

    பதிலளிநீக்கு
  16. நான்கைந்து வருடங்களுக்கு ஒரு முறை ஊருக்கு எதற்குப் போகிறோம்! அறிந்தவர்களைச் சந்திக்கத் தானே! அவர்களோடு சந்தோஷமாக சில நாட்களாவது செலவளிக்கலாம் என்று தானே!

    வேண்டுமென்றே இப்படி நடந்திருக்க மாட்டார்கள். அவரவர் இடத்தில் இருந்தாற்தான் சிரமம் புரியும்.

    நான் குடும்பத்தோடு முதல் முறை நாடு திரும்பியபோது நீங்கள் குறிப்பிட்ட இரண்டாவது உதாரணமாக இருப்பதாக அங்கு பலரும் பாராட்டினர். சந்தோஷமாகத் தான் இருந்தது, அதற்கான பலனை நாங்கள் அனுபவிக்க ஆரம்பிக்கும் வரை. ;)

    சுலபமல்ல இது.

    அடுத்த தடவை போகும் போதும் இதே போல் நிலமைதான் இருக்கும். ஒன்றில், சிரித்துக் கொண்டு அனுபவிக்க வேண்டும். அல்லாவிடில், சரியில்லாதவர்கள் என்று பெயர் வாங்க வேண்டும். இதற்குப் பயந்து ஊருக்குப் போகாமல் இருக்க முடியுமா என்ன!

    முடிந்த வரை நல்லவர்களாகவும் தவிர்க்க இயலாத போது சரியில்லாதவர்களாகவும் மாறி மாறி இருக்க வேண்டியதுதான். ;))

    பதிலளிநீக்கு
  17. அய்யா நீங்க சொல்வது சரி தான். வெளி நாட்டுக்குப் போக வேணாம். தில்லி வந்துள்ள நம்ம ஆளுங்களே சில சமயம் கழித்து சுத்தமாக மாறி விடுகின்றனர்.

    பதிலளிநீக்கு
  18. அமெரிக்கா ரிடர்ன் த‌மிழர் க‌தை த‌னிக் க‌தைன்னா.
    சௌதியில் இருக்கும் த‌மிழ் முஸ்லீம் சில‌ர் செய்யும் அட்ட‌காச‌ம் தாங்காது.
    (இருப‌து வ‌ருட‌ங்க‌ளுக்கு முன், இப்போது பா.ரா மாதிரி ஆட்க‌ள் தான் சொல்ல‌னும்)
    குடும்ப‌த்த‌ விட்டு பிரிஞ்சு,(பேச‌க்கூட‌ முடியாது.அப்ப‌ லேண்டு லைன் வாங்க‌ ப‌த்து வ‌ருச‌ம் காத்துக் கிட‌க்க‌ணும்,கை போனெல்லாம் கேள்விப்ப‌டாத‌ கால‌ம்)வாடுற‌மே, க‌ட‌வுளே துணையா இருப்பான்னு,சாமி ப‌ட‌த்தை ப‌ர்ஸ் அல்ல‌து பீரோவில‌ வைச்சிருந்தா,முத்தாவ் வ‌ந்து பாத்தா,இக்காம‌வை புடுங்கிட்டு ஜெயில்ல‌ போட்டுருவான்னு ப‌ய‌முறுத்துவாங்க‌ பாருங்க‌!! அப்புற‌ம் அவுங்க‌ ப‌க்தியும் தொழுகையும், உள்ளூர்கார‌னையே மிஞ்சிடுவாங்க‌. க‌டைசியில‌, ஈராக்,குவைத்தை ஆக்கிர‌மிச்சு
    யுஎஸ் ஆர்மி, அராம்கோவை ஆக்கிர‌மிக்க‌ அங்க‌,எங்க‌ பாத்தாலும் பைபிளும், சிலுவையும்,மாதாவுமா நெறைஞ்ச‌து த‌னிக் க‌தை.
    (NOSTALGIA and NEVER mean to HURT anybody`s sentiments)

    பதிலளிநீக்கு
  19. நல்ல பதிவு,

    நீங்கள் அவர்கள் கோணத்தில் இருந்து பாருங்கள். முன்று வாரம் விடுமுறையில் வருவார்கள், அந்த நேரத்தில் தண்ணீர் வெளியில் குடிப்பதால் உடல் நலம் கேட்டு டாக்டரிடம் அல்லது ஆஸ்பத்ரியில் அவர்கள் நேரத்தை கழிக்க வேண்டும். உங்களை பார்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக உங்கள் வீட்டுக்கு வரும் ஒருவரின் நிலையில் இருந்து நீங்கள் சிந்தித்தால் என்ன தவறு.

    பதிலளிநீக்கு
  20. NN said:

    //நல்ல பதிவு,
    நீங்கள் அவர்கள் கோணத்தில் இருந்து பாருங்கள். மூன்று வாரம் விடுமுறையில் வருவார்கள், அந்த நேரத்தில் தண்ணீர் வெளியில் குடிப்பதால் உடல் நலம் கெட்டு டாக்டரிடம் அல்லது ஆஸ்பத்திரியில் அவர்கள் நேரத்தை கழிக்க வேண்டும். உங்களை பார்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக உங்கள் வீட்டுக்கு வரும் ஒருவரின் நிலையில் இருந்து நீங்கள் சிந்தித்தால் என்ன தவறு.//

    தவறு என்று பார்த்தால் அவரவர்கள் நிலை அவரவர்களுக்கு சரியென்றுதான் படும். என் ஆதங்கமெல்லாம் அவர்களின் நிலை உணர்ந்து அதற்குத்தேவையான முன் ஜாக்கிரதை எடுத்து தயார் செய்தவைகளைக் கூட தொடவில்லை என்றால் என்ன கலாசாரம்? அப்புறம் அவர்கள் என்னை எதற்காகப் பார்க்க வருகிறார்கள். நான் என்ன கண்காட்சிப்பொருளா என்னை வேடிக்கை பார்க்க? அமெரிக்காவிலேயே இருந்து விடவேண்டியதுதானே?

    பதிலளிநீக்கு
  21. தமிழ் நாட்டில் தமிழில் பேசினால் அறிவு இல்லாதவன் என்ற நினைப்பு...அதனால் தான் அங்கு எல்லோரும் பீட்டர் விடுகிறார்கள்.

    பீட்டர் விடுவது எனபது Peter என்ற ஆங்கிலப் பெயரை தழுவி வந்தது.

    MR. Radha நடித்த ஒரு மிகப் பழைய படம் நான் சுமார் ஒரு 30 வருடங்களுக்கு முன்பு பார்த்தேன். அப்போது MR. Radha, "இது அமெரிக்கா நாய் சோறு கீறு போட்டு கெடுத்துடாதே." என்பார். அப்போ அது ஒரு ஜோக்காக மட்டும் பட்டுது. திருவாரூர் தங்கராசு தெரிந்து எழுதினாரோ இல்லையோ. நாய்க்கு நாம் சாப்பிடும் சோற்றில் உள்ள அளவு உப்பு ஆகாது. அமெரிக்காவில் நாய் வைத்திருப்பவர்களுக்கு அது தெரியும்.

    அப்பொழுது நாங்கள் எல்லோரும் சிரித்தோம். இந்தியா நாய்க்கும் பீட்டர் என்ற செல்லப்பெயர் உண்டு! ஏன்?

    இந்தியா நாய்க்கு பீட்டர் எனபது காரணப்பெயர். எப்படி?

    பீ + Eater = பீ Eater = பீட்டர் !

    அரைகுறை ஆங்கிலத்தில் பேசும் "டமிலர்களுக்கு" அதாவது பீட்டர் விடுபவர்களுக்கு இந்த பீட்டரின் காரணப் பெயரை சொல்லுங்கள். அடங்கினாலும் அடங்குவார்கள்!!

    Pseudos! போலிகள்!

    பதிலளிநீக்கு
  22. ஆட்டையாம்பட்டி அம்பி,

    நீங்க சொல்றது கரெக்ட்டுங்க, ஆனா நெஜவாழ்க்கையில அப்படிச்சொல்லீட்டமுன்னு வையுங்க, நம்மளை நாய் கொதர்ற மாதிரி கொதறீடுவாங்க. அப்புறம் தொப்புளைச்சுத்தி 14 ஊசி போடோணும்? :)-

    பதிலளிநீக்கு
  23. இளா மற்றும் பாஸ்டன் ஸ்ரீராம் இருவரின் கருத்துக்களோடு ஒத்துபோகிறேன்......

    இந்தியா வந்திறங்கிய முதல்நாள் சாப்பிட்ட சாப்பாட்டின் காரம் ஒததுக்கொள்ளாமல் ஒரு நாள் ஹோஸ்பிட்டல்ல இருந்தேன்,,,,,,,

    ஆனால் நீங்கள் வருத்தப்பட்டுள்ள மாதிரி நடந்து கொள்கிறவர்களும் இருக்கிறார்கள்............

    //
    ஒல்டு மாங்க்குன்னா என்னங்க? சாமியாருங்களா
    //
    என்னங்க இதுகூட தெரியாதா???? ஒல்டு மாங்க்குன்னா பழய பீங்கான்னு அர்த்தம்....

    பதிலளிநீக்கு
  24. இதுல மத்தவங்க எப்படின்னு எனக்கு தெரியாது.. என் அனுபவம் நா எப்ப ஊருக்கு போனாலும் முதல் மூனு நாள் வெளியே எங்குமே போவதில்லை

    ஊரின் கிளைமேட் சளி பிடிக்கும் உடனே..!! பிறகு இங்கே மிளகாய் உபயோகம் குறைவு..ஆனால் ஊரில் அதிகமா இருக்கும் எதை சாப்பிட்டாலும் வயிறு தாங்காது..

    முதல் மூன்று நாடகளுக்கு பிறகு ஓக்கே.. இதான் உண்மை..

    பதிலளிநீக்கு
  25. //முன் ஜாக்கிரதை எடுத்து தயார் செய்தவைகளைக் கூட தொடவில்லை என்றால் // அன்று சென்று முடிக்க வேண்டும் என்று ஏற்கனவே எத்தனை வீடுகள் சந்தித்து எத்தனை உணவுப் பண்டம் வயிற்றுக்குள் போய் நிறைந்து இருந்ததோ!! ;)

    //என்ன கலாசாரம்?// இதற்கும் 'கலாச்சாரத்துக்கும்' தொடர்பு எதுவும் இல்லை.

    //அப்புறம் அவர்கள் என்னை எதற்காகப் பார்க்க வருகிறார்கள்.// உங்கள் மேல் உள்ள பிரியத்தில் தான். அவர்களுக்கும் தெரியும் இப்படி மற்றவர்கள் எண்ண இடமிருக்கிறது என்பது.
    //நான் என்ன கண்காட்சிப்பொருளா என்னை வேடிக்கை பார்க்க?// நிச்சயம் வேடிக்கைப் பொருள் அல்ல. உங்கள் மன வருத்தம் புரிகிறது. ஆனால் வந்தவர்கள் வந்து பார்க்காமற் போயிருந்தால் உங்களுக்கு ஏமாற்றமாக, மனவருத்தமாக இராதா!! அப்போது வேறு ஓர் தலைப்பில் இடுகை எழுதும் எண்ணம் வந்திருக்கும். ;)

    //அமெரிக்காவிலேயே இருந்து விடவேண்டியதுதானே?// அது இயலாது. அவர்களுக்கும் உறவுகளும் அவசியங்களும் இருக்கிறது. சிரமங்களும் இருக்கிறது. ஏதோ ஒரு காரணத்துக்காக நாடு விட்டு நாடு வந்து விடுகிறோம். பிறகு... வருவதை எல்லாம் எதிர்கொள்ளத்தான் வேண்டும். ஒரு சம்பளமில்லா விடுமுறை, முழுக்குடும்பத்துக்கும் விமான சீட்டு, விசா + + + ஒரு முறை தாய்நாடு போய்வர எத்தனையோ இருக்கிறதே நடுவே. எத்தனை சிரமங்கள் இருந்தாலும்... எம் மக்களும் அங்கேதானே இருக்கிறார்கள்.

    என்னைப் பற்றிக் கூட என் நேசங்கள் யாரோ என் தேசத்தில் இப்படிப் பேசிக் கொண்டிருக்கக் கூடும். ;(( என்ன செய்வது!

    நாம் ஊரை விட்டு வெளியே வந்திருக்கக் கூடாது. ;(

    பதிலளிநீக்கு
  26. ஜெய்லானி சொன்னது:

    //இதுல மத்தவங்க எப்படின்னு எனக்கு தெரியாது.. என் அனுபவம் நா எப்ப ஊருக்கு போனாலும் முதல் மூனு நாள் வெளியே எங்குமே போவதில்லை.
    ஊரின் கிளைமேட் சளி பிடிக்கும் உடனே..!! பிறகு இங்கே மிளகாய் உபயோகம் குறைவு..ஆனால் ஊரில் அதிகமா இருக்கும் எதை சாப்பிட்டாலும் வயிறு தாங்காது..
    முதல் மூன்று நாடகளுக்கு பிறகு ஓக்கே.. இதான் உண்மை..//

    உண்மை, ஜெய்லானி. கொஞ்சம் விவரம் தெரியதவங்க உறவினர் வீட்டுக்குப்போனா, அந்த மாதிரி காரம் அதிகமா போட்டுடுவாங்க. ஆனா நம்ம தமிழ் பண்பாடு என்னங்க. வீட்டுக்கு வந்தா எதாச்சும் கொடுத்து உபசரிக்கவேண்டும். அதைபோல் விருந்தாளிகளும் அதை முடிந்த வரையில் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த பண்பு இல்லையென்றால் ஒருவர் வீட்டுக்குப் போவதில் அர்த்தமில்லை.

    இரண்டு பிஸ்கட் சாப்பிட்டு ஒரு கிளாஸ் ஜூஸ் (காய்ச்சி ஆற வைத்த தண்ணீரில் கலக்கியது) சாப்பிட்டால் அந்த அமெரிக்க வயிறு என்னவாகிவிடும்?

    அதைக்கூட சாப்பிடமாட்டேன் என்றால் அது என்னை அவமதிப்பதாகும். அந்த மனப்பாங்கைத்தான் நான் சாடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  27. வழிப்போக்கன் சொன்னது;

    சரியாகப்புரிந்து கொண்டது பற்றி மகிழ்ச்சி.

    இன்னொரு சமாசாரம் நான் வேண்டுமென்றுதான் சொல்லவில்லை. ஆனா இந்த அமெரிக்க பிரஜைகள் பண்ணுகிற அலட்டலைப்பார்த்தால் அதையும் சொல்லிவிடலாமென்று நினைக்கிறேன். ஆனால் பின்னூட்டத்தில் சொன்னால் எல்லோரும் படிக்க வாய்ப்பிருக்காது என்பதால் ஒரு தனிப்பதிவே போடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  28. இமா அவர்களுக்கு, உங்கள் கருத்துகள் உங்கள் பார்வையில் மிகவும் நியாயமானவையே. ஆனால் இங்குள்ளவர்கள் பார்வையிலிருந்தும் யோசிக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  29. Part 1. ..../////இமா said...என்ன கலாசாரம்?// இதற்கும் 'கலாச்சாரத்துக்கும்' தொடர்பு எதுவும் இல்லை.///
    Certainly it is a "Culture." issue for those living abroad. We are "Aculturized." நம்ம மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி சொல்லணும் என்றால்," நாங்கள் இந்த கலாசாரத்திற்கு மாறிவிட்டோம்."
    Tamilians or for that matter Indians have to LEARN to take "NO" for an answer. When we say 'NO" that means it is a "REAL" or FIRM" NO. That is the end of it. it can be brothers sisters, parents or other close friends and relatives. If a child born in America says "NO" for water or coffee it is an "unequivocal" NO. The society teaches them to talk and behave that way. Our influence, as parents, is limited.. ஆனால் தமிழ்நாட்டில் விருந்தாளிகள் பல முறை கேட்டதற்கு பசியில்லை என்று சொல்லிவிட்டு அப்புறம் தான் சாப்பிடுவார்கள். ஆனால் அதற்க்கப்புரம் புல் (full) கட்டு கட்டுவார்கள். அது நம்ம ஊர் கலாசாரம. அதில் தப்பு இல்லை. இல்லாவிடில் சாப்பிடு என்று சொன்னால் உடனே உக்காந்து சாப்பிட்டா. பறக்காவெட்டி! இப்படி... இதுவும் நம்மூர் கலாசாரம.

    இங்கு உயிர் நண்பன் வீட்டிற்க்கு தனியாக வந்தால் குடி கிடையாது. சிலர் ஒன்று அல்லது--தடிமாடு மாதிரி இருந்தால் இரண்டு. அவ்வளவு தான்--Drinks (45 ml) குடி கொடுக்கலாம். மனைவியுடன் வந்தால் குடி உண்டு. அதுவும் மனைவி காரை ஒட்டிக்கொண்டு சென்றால். எனக்கு தெரிந்து எந்த தமிழச்சி மனைவிமார்களும் இங்கு குடிப்பதில்லை. வெள்ளைக்காரிகளும் கார் ஓட்ட வேண்டும் என்ற பட்சத்தில் குடிப்பது இல்லை. இல்லாவிடினும் எனக்கு தெரிந்த வெள்ளைக்கார மனைவிகள் நூற்றுக்கு 80 விழுக்காடு குடிப்பது இல்லை. படித்தவர்களுக்கு அவர்களுடைய அளவு கோல் தெரியும். இந்தியாவில் வெள்ளைக்காரிகளைப் பற்றி ஒரு தவறான் அபிப்ராயம் இருக்கிறது. அது வடிகட்டின பொய்.

    பதிலளிநீக்கு
  30. Part 1. ..../////இமா said...என்ன கலாசாரம்?// இதற்கும் 'கலாச்சாரத்துக்கும்' தொடர்பு எதுவும் இல்லை.///
    Certainly it is a "Culture." issue for those living abroad. We are "Aculturized." நம்ம மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி சொல்லணும் என்றால்," நாங்கள் இந்த கலாசாரத்திற்கு மாறிவிட்டோம்."
    Tamilians or for that matter Indians have to LEARN to take "NO" for an answer. When we say 'NO" that means it is a "REAL" or FIRM" NO. That is the end of it. it can be brothers sisters, parents or other close friends and relatives. If a child born in America says "NO" for water or coffee it is an "unequivocal" NO. The society teaches them to talk and behave that way. Our influence, as parents, is limited.. ஆனால் தமிழ்நாட்டில் விருந்தாளிகள் பல முறை கேட்டதற்கு பசியில்லை என்று சொல்லிவிட்டு அப்புறம் தான் சாப்பிடுவார்கள். ஆனால் அதற்க்கப்புரம் புல் (full) கட்டு கட்டுவார்கள். அது நம்ம ஊர் கலாசாரம. அதில் தப்பு இல்லை. இல்லாவிடில் சாப்பிடு என்று சொன்னால் உடனே உக்காந்து சாப்பிட்டா. பறக்காவெட்டி! இப்படி... இதுவும் நம்மூர் கலாசாரம.

    பதிலளிநீக்கு
  31. Part .2....இங்கு உயிர் நண்பன் வீட்டிற்க்கு தனியாக வந்தால் குடி கிடையாது. சிலர் ஒன்று அல்லது--தடிமாடு மாதிரி இருந்தால் இரண்டு. அவ்வளவு தான்--Drinks (45 ml) குடி கொடுக்கலாம். மனைவியுடன் வந்தால் குடி உண்டு. அதுவும் மனைவி காரை ஒட்டிக்கொண்டு சென்றால். எனக்கு தெரிந்து எந்த தமிழச்சி மனைவிமார்களும் இங்கு குடிப்பதில்லை. வெள்ளைக்காரிகளும் கார் ஓட்ட வேண்டும் என்ற பட்சத்தில் குடிப்பது இல்லை. இல்லாவிடினும் எனக்கு தெரிந்த வெள்ளைக்கார மனைவிகள் நூற்றுக்கு 80 விழுக்காடு குடிப்பது இல்லை. படித்தவர்களுக்கு அவர்களுடைய அளவு கோல் தெரியும். இந்தியாவில் வெள்ளைக்காரிகளைப் பற்றி ஒரு தவறான் அபிப்ராயம் இருக்கிறது. அது வடிகட்டின பொய். ஏன் குடி கொடுத்தால் என்ன? ஒன்னும் இல்லை. நாம் "குடி கொடுத்த குமரனுக்கு" ஒரு விபத்து நடந்தால்... பாதிக்கப்பட்டவன் குடியை நண்பனுக்கு கொடுதத்ர்க்காக நம்ம மேலையும் கேசைப் போடுவார். கஷ்டப்பட்டு சம்பாதிததை எல்லாம் இழப்பதற்கு வாய்ப்பு உண்டு. இழந்தவர்கள் நிறைய இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  32. Part .3....ஆனால் இது மாகாணத்திற்கு மாகாணம் மாறும். இங்கு எல்லாமே ஒவ்வொரு மாகானமே ஒரு நாடு தான். இங்கு மத்திய அரசாங்கம் அந்த ஆமை இந்த ஆமை, இறையான்மை வெள்ளாமை என்று எந்த ஆமையும் சொல்லி அரசாங்கத்தை dismiss பண்ண முடியாது. இது தான் மாநில சுய ஆட்சி!! அவ்வளவு ஏன் கனடாவில் உள்ள Quubec Province கனடாவை விட்டு தனிக் குடித்தனம் போக முயற்சித்து. தேவையான 50 சதவீத வாக்குகள் கிடைக்க வில்லை. கிடைத்து இருந்தால் இன்று அமெரிக்காவுடன் ஐக்கியமாக ஆகஈருக்கலாம். அல்லது தனியாகவே இருந்திர்க்கலாம். யார் கண்டது? கடைசியாக ஒரு உண்மை நிகழ்வு. எனது நண்பன் அவனது மனைவியுடன் இங்கு வந்தான். எனது வேலைப் பளுவால் எனது மகனை அனுப்பி அவர்களை ஏர்போர்டில் இருந்த Pick up செய்ய சொன்னேண். After picking them up from the airport, my son asked them whether they were hungry, and if so, he would take them to an Indian restaurant or to a restaurant of their choice. அவர்கள் தமிழர்கள் அல்லவா? வேண்டாம்பா பசியில்லை என்று சொல்லிவிட்டார்கள். அவர்களை வீட்டில் இறக்கிவிட்டு அவன் கல்லூரிக்கு சென்று விட்டான். சாயங்காலம் வீட்டிற்கு வந்தால் அவர்கள் இருவரும் chips சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள்.

    பதிலளிநீக்கு
  33. Part .4...நான் ஏண்டா மத்தியானம் எதாவது சாப்பிடவேண்டியது தானே என்றேன். ஏன் எனது மகன் உன்னைக் கூட்டிக்கொண்டு போய் சாப்பாடு போடவில்லையா என்றதற்கு அவன், எனது நண்பன், "நான் சொன்னேன் .வேண்டாம்பா பசியில்லை என்று." அவன் அதற்க்கு மேல் ஒரு கேள்வியையும் கேட்கவில்லை. எங்களை வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு அவன் கல்லூரிக்கு சென்றுவிட்டான். அப்போ நான் சொன்னேன். டேய்! நீ வேண்டாம்பா பசியில்லை என்று சொன்னதிற்கு, அவன் உனது தேவைகளுக்கு மதிப்புகொடுத்து (பசிஇல்லாதவனை சாப்பிட சொல்வதை விட கொடுமை எதுவும் கிடையாது) வீட்டில் இறக்கி விட்டான். அதற்க்கு எனது நண்பன் இல்லைடா, ஒரு மரியாதைக்கு "வேண்டாம்பா பசியில்லை" என்று சொன்னேன் அப்படின்னான். உனக்கு உணமையில் பசியில்லை என்று அவன் நினைத்துக்கொக்ன்டு உன்னை சாப்பிடு சாப்பிடு எப்று, தமிழ்நாடு தமிழர்கள் மாதிரி, வற்புறுத்தவில்லை. வற்புறுத்த மாட்டான். அதான் இங்கு வளரும் குழந்தைகள். நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்று: இங்கு வளரும் குழந்தைகள் எண்களை மாதிரி aculturized. தமிழர்கள் நீங்கள் வேண்டாம் பசியில்லை என்று சொன்னால் அதற்க்கு மேல் இன்களை கஷ்டப்ப் படுதமாட்டோம். ஏனென்றால் இங்கு நீங்கள் உனையே பேசுகிறீர்கள் ஆதால எதற்கு பசி இல்லாதவனை சாப்பிடவைத்து கொடுமைப் படுத்த வேண்டும் என்றார் நாள் எண்ணம தான். ஆகவேர் வெளி நாட்டிற்கு வந்தால் சாப்பிடலாமா என்று கேட்டால் பசி இருந்தால் தயவுய் செய்து ஆமாம் பசிக்குது என்று சொல்லுங்கள். உங்கள்ளுக்கு எல்லாம் கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
  34. Part .5...Because, having Aculturized, நீங்கள் உண்மையே பேசுவதாக நினைத்துக் கொண்டு, we take your "NO" as the TRUE answer....so the fault is NOT on us. பசிச்சா பசிக்குது என்று சொல்வதில் என்ன தயக்கம். ஏனிந்த போலி வாழ்கை? இருவருக்கு வெளியில் சாப்பாடு போட்டால் ஆகும் செலவு மிக மிக கம்மி. அதிகமாக ஒரு 20 டாலர்கள் ஆகலாம். அது அடிமட்ட தொழிலாளி "unskilled minimum wage earners" மூனு மணி நேர சம்பளம். இதற்க்கு கீழே எவனுக்கும் சம்பளம் கொடுக்க முடியாது..

    எங்களை நீங்களும் புரிந்து கொள்ளுங்கள்....
    அல்லது;
    புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்....

    நன்றி!

    பதிலளிநீக்கு
  35. ங்கொய்யால,,உன்ங்கள கொண்டுபொயி
    அமெரிக்காலெ வெச்சி ஒரு வாரம் பர்கர தின்னவெச்சி ,,பின்னாடி புடுங்கவிட்டாதான் தெரியும் எங்க கஷ்டந் தெரியும்,,,எதையும் உங்கள் பார்வையிலிருந்து பார்ப்பது ஒரு PHDக்கு அழகல்ல,அப்ப்டி உங்களை போன்று ஒரு அன்புத் தொல்லைக்கு அடிமையாகி மறுக்காமல் சாப்பிட்டு ,,பின் ஒரு வார காலம் டாக்டருக்கு அழுதது ,,(அதுவும் அந்த மருந்தும் எங்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை),
    எங்களுக்குதான்தெரியும்,,இந்தியா
    வில் பிறந்திருந்தால் நம் உடலும் கடைசிவரை இந்தியனாகவே இருக்கும் என்பது நம்மோர்காரர்களின்
    கேனத்தனமான் நினைப்பு,,சிந்தனையை மாற்றுங்கள் சார்,our body and conditions change according to the environment ,, so we has to adjust or chenge to what it supports,,,
    முதலில் ஆரம்பித்த பாமர தமிழ்
    நகைசுவைக்கு,,மன்னிக்கவும்

    பதிலளிநீக்கு
  36. Moule Frite said:

    //ங்கொய்யால,,உன்ங்கள கொண்டுபொயி
    அமெரிக்காலெ வெச்சி ஒரு வாரம் பர்கர தின்னவெச்சி ,,பின்னாடி புடுங்கவிட்டாதான் தெரியும் எங்க கஷ்டந் தெரியும்,,,எதையும் உங்கள் பார்வையிலிருந்து பார்ப்பது ஒரு PHDக்கு அழகல்ல,அப்ப்டி உங்களை போன்று ஒரு அன்புத் தொல்லைக்கு அடிமையாகி மறுக்காமல் சாப்பிட்டு ,,பின் ஒரு வார காலம் டாக்டருக்கு அழுதது ,,(அதுவும் அந்த மருந்தும் எங்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை),
    எங்களுக்குதான்தெரியும்,,இந்தியா
    வில் பிறந்திருந்தால் நம் உடலும் கடைசிவரை இந்தியனாகவே இருக்கும் என்பது நம்மோர்காரர்களின்
    கேனத்தனமான் நினைப்பு,,சிந்தனையை மாற்றுங்கள் சார்,our body and conditions change according to the environment ,, so we has to adjust or chenge to what it supports,,,
    முதலில் ஆரம்பித்த பாமர தமிழ்
    நகைசுவைக்கு,,மன்னிக்கவும் //

    இந்த வெளயாட்டு வேண்டாங்க.

    பதிலளிநீக்கு
  37. ஆரண்யநிவாஸ் ராம்மூர்த்தி சொன்னது:

    //ஆனால் எல்லாரும் அப்ப்டி இல்ல.... //

    ரொம்ப சரிங்க.
    என்னுடைய பதிவில் இரண்டு விருந்தாளிகளைப் பற்றி எழுதியிருக்கிறேன். ஒருவர் என்றும் சாப்பிடவில்லை. இன்னொருவர் எல்லாம் சாப்பிட்டார். சாப்பிட்டவர் ஆஸ்பத்திரிக்குப் போகவில்லை. நன்றாகத்தான் இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  38. When I visit my relatives I ask them tea or coffee instead of water. I cant expect them to boil water for me. If you boil any water for 10 mins it is good to drink (Survivers show). As ILA said I know lot of kids from U.S suffered a lot.
    I have no problem in eating hot foods.

    Santhose

    பதிலளிநீக்கு
  39. With an experience of few short onsite trips and one long onsite work, I'll few thoughts.

    Our body amazingly adjusts to settled environment quickly. Meaning, even in a short 3 month time, body adjusts to local (much cleaner) environment; later when you return back, it gets disturbed by unhygienic water; and reacts quickly. We need to understand this fact. Hence, visitors taking precaution can be appreciated better.

    Vistors either have their own experience or cautioned/influenced by local Indian community (friends/relatives) or through exchanged tales. In either case, "some" take "extreme" precaution.

    I had one personal experience of drinking water in restaurant and had dysentery once. Prior to that and after that, outside of home (self, relatives and friends), always prefer bottled/boiled/filtered water.

    Through experience, relatives are sensitive to provide filter/clean water. Hence no issues.

    And all this koothu is for 2/3 days until body gets adjusted to "our" local environment.

    But....., some visiting people wear this "looking down anything indian" attitude proudly in their sleeve and in my opinion is not appreciated coolly.

    Most of the middle class families nowadays have friends and kids that has traveled onsite and has gone through this rigmarole already, has an awareness and are better prepared.., like you.

    I've also heard complaints from "aathaas/thaathaas" finding fault with this attitude as they take it as insult to them.

    It is just a small difference of perception which would go away over time.

    Spicy food was never an issue to me.

    I was introduced to hot/spicy Andhra/Mexican food during my onsite tenure. I relish it any time any day.

    But, kids born and brought abroad are generally fed on non-spicy cuisine. Hence the concern on adjusting to spicy food.

    பதிலளிநீக்கு
  40. தண்ணீர் பாட்டிலுடன் அழைபவர்கள் தங்கள் சொற்ப விடுமுறை வாந்தி பேதியில் போக வேண்டாம் என்பது வரை சரிதான். அதற்காக கொதிக்க வைத்த தண்ணீரை கூட குடிக்க மாட்டேன் என்று அடம் பிடிப்பது நீங்கள் நினைக்கிற மாதிரி கொஞ்சம் ஓவர் தான்.

    அமெரிக்க என் ஆர் ஐ-க்களில் பலர் அப்படி தான். அவர்களைப் பொறுத்தவரை உலகிலேயே சிறந்த நாடு அமெரிக்கா , அங்கே வாழ்பவரே வாழ்பவர் மற்றவரெல்லாம் வீன்.

    பாஸ்டன் பாலா ஜென்ரலைஸேஷனுக்கு மன்னிக்கவும். நான் பார்த்த பல அமெரிக்க பாஸ்போர்ட் பேர்வழிகள் அப்படி தான்.

    பதிலளிநீக்கு
  41. தண்ணீர் பாட்டிலுடன் அழைபவர்கள் தங்கள் சொற்ப விடுமுறை வாந்தி பேதியில் போக வேண்டாம் என்பது வரை சரிதான். அதற்காக கொதிக்க வைத்த தண்ணீரை கூட குடிக்க மாட்டேன் என்று அடம் பிடிப்பது நீங்கள் நினைக்கிற மாதிரி கொஞ்சம் ஓவர் தான்.

    அமெரிக்க என் ஆர் ஐ-க்களில் பலர் அப்படி தான். அவர்களைப் பொறுத்தவரை உலகிலேயே சிறந்த நாடு அமெரிக்கா , அங்கே வாழ்பவரே வாழ்பவர் மற்றவரெல்லாம் வீன்.

    பாஸ்டன் பாலா ஜென்ரலைஸேஷனுக்கு மன்னிக்கவும். நான் பார்த்த பல அமெரிக்க பாஸ்போர்ட் பேர்வழிகள் அப்படி தான்.

    பதிலளிநீக்கு
  42. இதுக்குத்தான் பிளாக்கு எழுத வாங்க வாங்கன்னு கூப்பிடுறது. :)

    ’ஆட்டையம்பட்டி அம்பி’ உண்மைய உண்மையா உடைச்சு பேசியிருக்காரு. கொஞ்சம் கவனிச்சு பார்க்கணும்.

    பதிலளிநீக்கு
  43. Santhose said:

    //When I visit my relatives I ask them tea or coffee instead of water. I cant expect them to boil water for me. If you boil any water for 10 mins it is good to drink (Survivers show). As ILA said I know lot of kids from U.S suffered a lot.
    I have no problem in eating hot foods.
    Santhose//

    இது சரியான, பக்குவப்பட்ட மனோபாவம். அறியாமையினாலும், பழக்கமில்லாததாலும், இந்தியாவில் இருக்கும் உறவினர்கள் அமெரிக்காவில் இருந்து வருபவர்களுக்கு எது நல்லது என்பது தெரிவதில்லை. உண்மைதான். அதற்குத் தகுந்த மாதிரி நடந்து கொள்ளவேண்டிய வழிகளை அமெரிக்காவிலிருந்து வருபவர்கள் கண்டிப்பாக கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை.

    பதிலளிநீக்கு
  44. ரிஷபன் Meena said:

    //தண்ணீர் பாட்டிலுடன் அலைபவர்கள் தங்கள் சொற்ப விடுமுறை வாந்தி பேதியில் போக வேண்டாம் என்பது வரை சரிதான். அதற்காக கொதிக்க வைத்த தண்ணீரை கூட குடிக்க மாட்டேன் என்று அடம் பிடிப்பது நீங்கள் நினைக்கிற மாதிரி கொஞ்சம் ஓவர் தான்.

    அமெரிக்க என் ஆர் ஐ-க்களில் பலர் அப்படி தான். அவர்களைப் பொறுத்தவரை உலகிலேயே சிறந்த நாடு அமெரிக்கா , அங்கே வாழ்பவரே வாழ்பவர் மற்றவரெல்லாம் வீன்.

    பாஸ்டன் பாலா ஜென்ரலைஸேஷனுக்கு மன்னிக்கவும். நான் பார்த்த பல அமெரிக்க பாஸ்போர்ட் பேர்வழிகள் அப்படி தான்.//

    நன்றாகச் சொன்னீர்கள் மீனா அவர்களே.

    அவர்கள் எல்லாம் எதற்கு இந்தியாவிற்கு வருகிறார்கள் தெரியுமா? உறவினர்கள் மேல் உள்ள பாசத்தினால் அல்ல. நாளைக்கு அவர்களுடைய பையனுக்கு பெண் வேண்டுமல்லவா, அப்போது இந்த உறவினர்களின் தயவு வேண்டுமல்லவா, அதற்காகத்தான். இந்த உள் எண்ணத்தைச் சொல்லவேண்டாம் என்றுதான் இதுவரை இருந்தேன். ஆனால் பலர் என்னை ஒன்றும் தெரியாத இளிச்சவாயன் என்று நினைத்துக்கொண்டு பின்னூட்டமிடுகிறார்கள். அதனல்தான் இதைச்சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    ஆனால் இன்னொன்று-உண்மை எப்போதும் கசப்பானது. சூடானது. அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பங பேரிடம் இல்லை. அதனால்தான் இவ்வளவு காரசாரமான விவாதங்கள்

    பதிலளிநீக்கு
  45. வாங்க தெக்கிட்டான், உங்க கருத்துக்கு நன்றி.

    ஒருவரை பலவிதங்களில் அவமதிக்கலாம். அவர் வீட்டுக்குப் போய்விட்டு அவருடைய உபசரிப்பை நிராகரிப்பது என்பது ஒரு உச்சகட்ட அவமதிப்பு. அவரை நீங்கள் உங்களை விட சுத்தத்தில் மிகத்தாழ்ந்தவர் என்று கருதுகிறீர்கள் என்றுதான் அர்த்தம்.

    அமெரிக்காவில் வேண்டுமானால் இப்படிப்பட்ட நடவடிக்கை ஒத்துக்கொள்ளக்கூடிய நாகரீகமாக இருக்கலாம். ஆனால் தமிழ் நாட்டில் அப்படிப் பட்டவர்களுக்கு மரியாதை இல்லை.

    பதிலளிநீக்கு
  46. ம்ம்ம்...

    //ஒருவரை பலவிதங்களில் அவமதிக்கலாம். அவர் வீட்டுக்குப் போய்விட்டு அவருடைய உபசரிப்பை நிராகரிப்பது என்பது ஒரு உச்சகட்ட அவமதிப்பு.//

    புரிகிறது. நானெல்லாம் இந்த லிஸ்ட்ல வாரது இல்லீங்க. நானெல்லாம் பொறக்கும் போதே பல்லிடுக்கில் சில்வர் ஸ்பூன் வைச்சிட்டு பொறக்கிற வாய்ப்பில்ல அதுனாலே சொந்த பந்தமெல்லாம் இன்னமே சாணம் போட்டு மொழுகிற கண்டிஷன்ல இருக்கிற வீடுகளில்தான் வசிக்கிறாங்க. சோ, அங்கெல்லாம் போன சப்பனம் போட்டு நெஞ்சிக் கறியை இப்படிப் அள்ளிப் போடுங்கன்னு ’கேட்டுச் சாப்பிடுற ஆளுங்க’ ஆனா போலியா நடிக்கிறதில்ல ;) கேட்டு கேட்டு அவிங்களே அடுத்த முறை கூப்பிடாத அளவிற்கு வெட்டுறது.

    அரைகுறைகள் எல்லா இடத்திலும் உண்டுதானே? அப்படி கேசுகளை சந்திக்க நேரிடும் பொழுது இக்னோர் பண்ணிட்டு போயிட்டு இருக்க வேண்டியதுதான். அலைன்மெண்ட் ஒத்துவரலைன்னுட்டு.

    மற்றபடி ஆட்டையம்பட்டி சொன்ன, நேரடிப் பேச்சு பேசி வளருங்கன்னு பிள்ளைகளை ஊக்குவிச்சு வளர்ப்பது அவசியமின்னு நினைக்கிறேன். ஏன்னா, அங்கே பிள்ளைகள் வளரும் பொழுதே ஸ்பிலிட் குணாதியசம் குறைஞ்சு ஆளுங்களுக்கு தகுந்த மாதிரி வேஷம் கட்டமா வளர உதவியா இருக்குமின்ன சொல்லுறது சரி.

    பதிலளிநீக்கு
  47. தெகா சொன்னது:

    //நானெல்லாம் இந்த லிஸ்ட்ல வாரது இல்லீங்க. நானெல்லாம் பொறக்கும் போதே பல்லிடுக்கில் சில்வர் ஸ்பூன் வைச்சிட்டு பொறக்கிற வாய்ப்பில்ல அதுனாலே சொந்த பந்தமெல்லாம் இன்னமே சாணம் போட்டு மொழுகிற கண்டிஷன்ல இருக்கிற வீடுகளில்தான் வசிக்கிறாங்க. சோ, அங்கெல்லாம் போன சப்பனம் போட்டு நெஞ்சிக் கறியை இப்படிப் அள்ளிப் போடுங்கன்னு ’கேட்டுச் சாப்பிடுற ஆளுங்க’ ஆனா போலியா நடிக்கிறதில்ல ;) கேட்டு கேட்டு அவிங்களே அடுத்த முறை கூப்பிடாத அளவிற்கு வெட்டுறது.//

    உங்க கொள்கை ரொம்பப் புடிச்சுதுங்க. நான் 9வது படிக்மிற வரைக்கும் எங்கூட்ல எலெக்ரிசிட்டி கெடையாதுங்க. ஏதோ கிராமம்னு நெனச்சுக்கிடாதீங்க. இன்றைக்கு சென்ட் 25 லட்சம் விலை போகும் கோவை ஆர்.எஸ்.புரமுங்க. இல்லாமையை அனுபவித்ததனால் இன்றைக்கும் பணத்தைக் கண்டு மயங்கவில்லை. அப்படி இருப்பதால்தான் இந்த மாதிரி போலி நபர்களைக்கண்டால் பொறுக்க முடிவதில்லை.

    பதிலளிநீக்கு
  48. அய்யா.. வெளிநாட்டில் இருந்து வருபர்வர்களுக்கு.. கால் தரையில் படாது.. நான் பலபேரிடம் கண்கூடாக பார்த்திருக்கேன்..ஹி..ஹி

    பதிலளிநீக்கு
  49. சார்...நான் ரொம்ப லேட்டா வந்துட்டேன்....நீங்க சொல்வது சரி சார்...சில நபர்கள்தான் அப்படி இருக்கிறார்கள்....அவ்ர்களைத்தானே நீங்கள் சாடினீர்கள்...என் பதிவிலும் இதேதான் சொல்லியிருந்தேன்...இங்கு இருக்கிறவங்களுக்கே சுத்தமான தண்ணீர் கிடைப்பதில்லை...அதனால் காய்ச்சித்தான் குடிக்கிறோம்..அல்லதுமினரல் வாட்டர் வாங்கிக் குடிக்கிறோம்..இப்போது எல்லோருக்குமே நீரினால் வரக்கூடிய நோய்களைப்பற்றி தெரிந்திருக்கிறது.இது எல்லோருக்குமே கிடைக்கிற அனுபவம்தான்...அதனால் எல்லோருமே ஜாக்கிரதையாகத்தான் இருக்கிறோம்..உங்கள் விட்டுக்கு வந்தவர்கள் தங்கள் ஒத்துக்கொள்ளாமையை சொல்லி வேறு ஏதேனும் பழங்கள் கூட சாப்பிட்டுவிட்டு அவர்கள் எடுத்துவந்த தண்ணீரைக்கூட குடித்துக்கொள்ளலாம்..உண்மையாகவே நீங்கள் சொன்னதுபோல் அவ்ர்கள் வந்ததுகூட ஏதோ கடமைக்குவந்து தலைகாட்டியிருப்பார்கள்போல...விடுங்க சார்...நம் அன்பைப் புரிந்துகொள்பவ்ர்கள் நாலுபேர் இல்லமயா போயிடுவாங்க..

    இந்தளவுக்கு நங்கு பார்க்கிறவங்க இந்தியாவிலேயே ஏதும் சாப்பிடாமல் இருந்துவிடுவார்களோ.. அல்லது அவ்ர்கள் வீட்டில்தான் எப்படி சாப்பிட்டார்களோ...அவங்க மட்டும்தான் அமெரிக்காவில இருக்கிறாங்க...அவங்க தாய்புள்ளயெல்லாம் இங்கதானே இருப்பாங்க...அவங்களெல்லாம் என்ன பாடுபட்டாங்களோ...சிலர் அப்படித்தான் ...விடுங்க சார்..

    பதிலளிநீக்கு
  50. நாம் என்ன ஒண்ணும் தெரியாதவர்களாகவா இருக்கிறோம்...யார் யார் எப்படி என்று.சொல்லீட்டுப்போறாங்க விடுங்க...சார்...இல்ல அவங்களுக்குத்தான் தெரியாதா நீங்க எப்படின்னு...

    பதிலளிநீக்கு
  51. பட்டாபட்டி சொன்னது:

    //அய்யா.. வெளிநாட்டில் இருந்து வருபர்வர்களுக்கு.. கால் தரையில் படாது.. நான் பலபேரிடம் கண்கூடாக பார்த்திருக்கேன்..ஹி..ஹி//

    ஆமாங்க, தேவர்களுக்கெல்லாம் கால் தரையில படாதுங்களாமே? அப்ப அமெரிக்கா தேவலோகமுங்களா? நான் போயிருந்தப்ப அங்க இருக்கிற ஜனங்களெல்லாம் தரைல கால் வச்சுத்தான் நடந்திட்டு இருந்தாங்க.

    நாம் போயி 20 வருஷம் ஆயிட்டுதுங்க. இப்பெல்லாம் மாறிப்போச்சோ என்னமோ? (நம்மாளுகளுக்கு மட்டும்)

    நான் போயிருந்தப்ப அங்க நடைமுறை எப்டீன்னா, அந்த ஒரிஜினல் அமெரிக்காக்காரனுங்க நம்மாளுகளை ஊட்டுக்குள்ளயே உடமாட்டான். நம்மாளுங்க இந்த ஆப்பிரிக்காக்காரனை என்னமோ நம்ம ஊரு தலித்துக மாதிரி பாப்பானுங்க. அப்பறம் எப்படீன்னா, நம்மாளுக மட்டும் ஒருத்தர் வீட்டுக்கு ஒருத்தரா (அதுவும் எப்டீங்கறீங்க, மொழிவாரியா, ஜாதிவாரியா, பிரிஞ்சுகிட்டு) போய்க்கிட்டு இந்துட்டு இருப்பானுங்க. இங்க வர்றப்ப மட்டும் அமெரிக்காவுல எல்லோரும் சமம்னு பீலா உடுவானுங்க.

    இப்பவும் அப்படியேதான் இருக்கும்னு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  52. ஐயா, மிகவும் அருமையான பதிவு. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. அயல் நாட்டிற்கு செல்பவர்கள், எதோ நம்மைவிட மேலான நிலையில் இருப்பதாகவே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.


    எனது பதிவிற்கு, தாங்கள் கூறியிருந்த கருத்துக்கும் நன்றி. நீங்கள் மீண்டும் என் வலைப் பக்கத்திற்கு வருவீர்களோ, இல்லையோ என்ற ஐயத்தில், தங்கள் கருத்துக்கு மறுமொழியை இங்கும் கூறியிருக்கிறேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும்.



    ஐயா, தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. உங்களைபோன்ற அனுபவசாலிகளும், பெரியவர்களும் என் பதிவைப் படித்துவிட்டு கருத்து சொல்வது எனக்கு மிக்க மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது.


    நீங்கள் சொல்வது சரிதான். ஒருவனுடைய திறமையை அறிய, அவனுடைய வேலையே அளவுகோலாக இருக்கிறது. ஆனால் அதை மட்டும் வைத்து அளவிட வேண்டாம் என்றுதான் கூறுகிறேன்.சமீபத்தில் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியின்போது, கணினி மென்பொருள் துறையில், ஐந்து, ஆறு இலக்கங்களில் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தவர்கள், வேலை பறிபோனபோது என்ன நிலையில் இருந்தார்கள் என்பதையே சொல்ல வருகிறேன். அந்தத் துறையில், பணிபுரியும் பலருக்கு, வேறு பணிகள் தெரிவதில்லை என்பது பரவலான குற்றச்சாட்டு. அப்படிப்பட்ட நெருக்கடியை சமாளிக்கவே அவனுக்குத் திறமை இருக்கிறதா என்று பார்க்கச் சொல்கிறேன்.


    உத்தியோகம், வேலை மட்டுமல், வாழ்க்கையே நிச்சயமில்லாதது. அதில் ஏற்படும் இடர்ப்பாடுகளை எதிர்கொள்ளும் திறமையும், மன உறுதியும் இருக்கிறதா? என்று ஆராயவே சொன்னேன்.


    தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. இது போல மேலும் கருத்துக்கள் சொல்லி, என் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டுகிறேன்.


    நன்றி.

    பதிலளிநீக்கு
  53. ஐயா, மிகவும் அருமையான பதிவு. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. அயல் நாட்டிற்கு செல்பவர்கள், எதோ நம்மைவிட மேலான நிலையில் இருப்பதாகவே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  54. எனது பதிவிற்கு, தாங்கள் கூறியிருந்த கருத்துக்கும் நன்றி. நீங்கள் மீண்டும் என் வலைப் பக்கத்திற்கு வருவீர்களோ, இல்லையோ என்ற ஐயத்தில், தங்கள் கருத்துக்கு மறுமொழியை இங்கும் கூறியிருக்கிறேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும்.



    ஐயா, தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. உங்களைபோன்ற அனுபவசாலிகளும், பெரியவர்களும் என் பதிவைப் படித்துவிட்டு கருத்து சொல்வது எனக்கு மிக்க மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது.


    நீங்கள் சொல்வது சரிதான். ஒருவனுடைய திறமையை அறிய, அவனுடைய வேலையே அளவுகோலாக இருக்கிறது. ஆனால் அதை மட்டும் வைத்து அளவிட வேண்டாம் என்றுதான் கூறுகிறேன்.சமீபத்தில் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியின்போது, கணினி மென்பொருள் துறையில், ஐந்து, ஆறு இலக்கங்களில் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தவர்கள், வேலை பறிபோனபோது என்ன நிலையில் இருந்தார்கள் என்பதையே சொல்ல வருகிறேன். அந்தத் துறையில், பணிபுரியும் பலருக்கு, வேறு பணிகள் தெரிவதில்லை என்பது பரவலான குற்றச்சாட்டு. அப்படிப்பட்ட நெருக்கடியை சமாளிக்கவே அவனுக்குத் திறமை இருக்கிறதா என்று பார்க்கச் சொல்கிறேன்.


    உத்தியோகம், வேலை மட்டுமல், வாழ்க்கையே நிச்சயமில்லாதது. அதில் ஏற்படும் இடர்ப்பாடுகளை எதிர்கொள்ளும் திறமையும், மன உறுதியும் இருக்கிறதா? என்று ஆராயவே சொன்னேன்.


    தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. இது போல மேலும் கருத்துக்கள் சொல்லி, என் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டுகிறேன்.


    நன்றி.

    பதிலளிநீக்கு
  55. Part 1...
    டாக்டர் கந்தசாமி ஐயா அவர்களுக்கு,

    நீங்கள் சொல்வது தவறு!. இந்தியா மாதிரி இங்கு இரண்டு மாதம் விடுமுறை கிடையாது. 14 நாள் அல்லது 21 நாள் விடுமுறை மட்டுமே! அதற்காகத்தான் நாங்கள் December to January இந்தியா வருவது. ஏன் இப்படி???. இரு வருட விடுமுறையை இப்படித்தான் நாங்கள் எடுக்க வேண்டும். அதிலேயும் ஒருவருக்கு Loss of Pay இருக்கும். இப்படி விடுமுறை எடுத்தால் (இந்தியா வந்தால்) நாங்கள் அமெரிக்காவில் எங்கும் செல்ல முடியாது. ஏன் எங்களது குழந்தைகள் Disney Land பார்க்கக் கூடாதா? இந்தியாவிற்கு நாங்கள் வந்தால் அது முடியாது...குழந்தைகள் பாவம்...

    சரி அதை விடுங்கள்...நாங்கள் வருவது என்னுடைய மற்றும் எனது மனைவியின் பெற்றோர்களைப் பார்ப்பதற்கு மட்டுமே. அவர்களுக்கு எல்லோருக்கும் வயது 64 இல இருந்தது 68 வயது ஆகிறது. இந்த 14 நாட்களில் போக வர இரண்டு இரண்டு என்று நான்கு நாட்கள் போய் விடுகிறது. எனது மூன்று குழந்தைகளுக்கும் எப்போ இந்தியா வந்தாலும் பேதி. அதற்கு பெயர் "Travellers Diarrhea." இது எந்த உருக்கு போனானுல்ம் வரும். இந்தியாவை நான் குற்றம் சொல்ல வில்லை.

    மீதி உள்ள பத்து நாளில் எனது அப்பா அம்மா மாமனார் மாமியார், மற்றும் சகோதரர சகோதரிகள் இப்படி 14 பேர் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்ற உத்திரவு. இது தவிர எனது நண்பர்கள் மற்றும் எனது மனைவியின் நனபிகள். எல்லாம் சேர்த்து 21 பேர்கள். எப்படி இந்த 10 நாளில் 21 பேர்கள் வீட்டிற்கு போகமுடியும். அதுவும் அவர்கள் தமிழ்நாடு பூரா இருக்கிரர்கள். இது தான் எங்கள் வேலையா? இதற்க்கு தான் 15000 dollars (7 லட்சம் ரூபாய்) செலவு செய்ய வேண்டுமா? (Tickets alone costs 10.000 dollars).

    நாங்கள் இந்தியாவிற்கு வருவது எங்களது பெற்றோர்களைப் பார்ப்பதற்கு மட்டுமே. மட்டுமே.....வெறு எதற்கும் இல்லை. இலாவே இல்லை. இதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்....

    பதிலளிநீக்கு
  56. Part 2...
    இருந்தாலும் திருநெல்வேலியில உள்ள ஒரு சொந்தம் (சகோதரி) வீட்டிற்கு செல்ல முடிவு எடுத்தோம். :"என்ன உனது மூன்று பிள்ளைகளுக்கு பிடிக்கும் என்றார். நான் Beef Curry செய்யுங்கள் என்று சொன்னேன். அவ்வளவு தான் அம்மா அவுட். எனக்கு புரியவில்லை நாங்கள் இறங்கியது திருவனதனபுறம. அங்கு எனது நெருங்கிய சொந்தம் (சகோதரன்) வீட்டில் சாப்பிட்டது Beef Curry. .ஏன் அதை தமிழ் நாட்டில் கொடுக்கக் கூடாது? எல்லோரும் எனது நெருங்கிய ரத்த சம்பந்தம் தான். ஒன்று என் சகோதரி; ஒன்று என் சகோதரன். 80 கிலோமீட்டரில் இவ்வளவு வித்யாசமா? இந்தியா ஒரு விசித்திரமான நாடு. மன்னிக்கவும் இது ஒரு நாடே அல்ல.

    உடனே beef சாப்பிட்டால் உலகமே இருண்ட மாத்ரி நினைக்கவேண்டாம். நீங்கள் "காக்கா ஹோட்டலில் "சமூசா" சாப்பிட்டு இருக்கிறீர்களா??? அப்ப நீங்க எல்லோரும் beef சாப்பிட்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம. நான் சூத்திரனாக இருந்தாலும் அமெரிக்கா வந்து உயர் ஜாதி இந்துக்களிடம் கற்றுக்கொண்ட ஒரே நல்ல பாடம். Beef சாப்பிட்டது. அவர்கள் சொன்னார்கள், டேய், நமக்கு கொடுக்கும் காசில் இதுதாண்டா சாப்பிட முடியும். என்று." உண்மை ஒரு Big Mac அடிச்சால் கும்முன்னு இருக்கும். அப்புறம் இந்தியாவ்ரிக்கு போய் beef சாப்பிட்ட பாவத்தை ஒரு பூஜை பண்ணி சரி செய்து விட்டேன்.

    அப்புற்றம் ஒரு உன்னொரு நெருங்கிய சொந்தத்தை, என் அப்பா வழி, அவர் வீட்டுக்கு சென்ற போது சொன்னார் அவரது பையனுக்கும் பெண்ணுக்கும் கல்யாணம் முடித்து விட்டதாக. நான் கேட்டேன் ஏன் எனக்கு தகவல் கொடுக்கவில்லை என்றதற்கு அவர் சர்வ சாதரணமாக, தகவல் கொடுத்தால் நீங்கள் அமெரிக்காவில் இருந்தது வரவா போகிறீர்கள். அதனால் சொல்லவில்லை என்றார். ஒரு 20 ரூபாய் செலவழிக்க இஷடமில்லாத சொந்தத்தின் வீட்டில் நான் ஏன் சாப்பிட வேண்டும் என்று எனக்கு வயிறு சரியில்லை என்று வெளியேறிவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  57. Part 3...
    உங்கள் பின்னூட்டத்தில் மிகப் பெரிய கூத்து . ஏதோ நாங்கள இந்தியாவிற்கு வருவது எங்களுடைய குழந்தைகளுக்கு கல்யாணம் செய்வத்ர்ர்க்கு என்று. எண்களுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கு? அமெரிக்கா என்ன இந்தியாவா? இங்கு யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம். பெற்றோரக்ள ஒன்றும் செய்ய முடியாது. மேலும எங்களுக்கு என்ன தலை எழுத்தா? இந்தியாவில் இருக்கும் மாப்பிள்ளை பையன்களுக்கு Green Card வாங்கிக் குடுப்பத்ர்க்கு. அப்புறம் Green Card வந்தவுடன் எங்கள் பெண்ணை நட்ட்ராற்றில் விடுவதற்கு. எனது பெண்கள் திருமணம் அவர்கள் உரிமை. நான் தலையிட மாட்டேன். அது முடியவும் முடியாது.
    செய்தால் ஜெயில் களி தான். இது இந்தியா அல்ல.

    அப்புறம் இந்தியாவில் உள்ள பெண்களை எனது மகனுக்கு கட்டிக் கொடுக்க பயித்தியமா என்ன? அப்புறம் நாங்கள் எல்லாம் 489-A கேசில் உள்ளே உக்காரனுமா? அவர்கள் திருமணம் அவர்கள் உரிமை. பெற்றோரக்ள தலையடமுடியாது... இது தான உண்மை.

    புரிந்து கொண்டு எழுதுங்கள் அல்லது புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்!

    நாங்கள் இந்தியாவிற்கு வருவது எங்களது பெற்றோர்களைப் பார்ப்பதற்கு மட்டுமே. மட்டுமே.....வெறு எதற்கும் இல்லை. இல்லவே இல்லை. இதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்....

    என்று அன்புடன்,
    ஆட்டையாம்பட்டி அமபி!?

    பதிலளிநீக்கு
  58. ஆட்டையாம்பட்டா அம்பி அவர்களுக்கு.
    உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

    //புரிந்து கொண்டு எழுதுங்கள் அல்லது புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்!
    நாங்கள் இந்தியாவிற்கு வருவது எங்களது பெற்றோர்களைப் பார்ப்பதற்கு மட்டுமே. மட்டுமே.....வேறு எதற்கும் இல்லை. இல்லவே இல்லை. இதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்....//

    இதைப்பற்றி நான் எந்தக் கருத்தும் கூற விரும்பவில்லை. ஒன்று மட்டும் பணிவுடன் கூறிக்கொள்கிறேன். நான் புரிந்துகொண்டுதான் எழுதுகிறேன். உணர்ச்சி வசப்படவேண்டாம்.

    பதிலளிநீக்கு
  59. கண்ணகி சொன்னது:

    //சார்...நான் ரொம்ப லேட்டா வந்துட்டேன்....நீங்க சொல்வது சரி சார்...சில நபர்கள்தான் அப்படி இருக்கிறார்கள்....அவ்ர்களைத்தானே நீங்கள் சாடினீர்கள்...என் பதிவிலும் இதேதான் சொல்லியிருந்தேன்...இங்கு இருக்கிறவங்களுக்கே சுத்தமான தண்ணீர் கிடைப்பதில்லை...அதனால் காய்ச்சித்தான் குடிக்கிறோம்..அல்லதுமினரல் வாட்டர் வாங்கிக் குடிக்கிறோம்..இப்போது எல்லோருக்குமே நீரினால் வரக்கூடிய நோய்களைப்பற்றி தெரிந்திருக்கிறது.இது எல்லோருக்குமே கிடைக்கிற அனுபவம்தான்...அதனால் எல்லோருமே ஜாக்கிரதையாகத்தான் இருக்கிறோம்//

    நீங்க லேட் இல்லைங்க, சரியான நேரத்தில்தான் வந்திருக்கிறீர்கள். மற்றவர்களின் கருத்துகள் எப்படியிருக்கின்றன என்று தெரிந்து கொள்ள முடிந்ததல்லவா?

    ஒன்று பார்த்தீர்களா? எப்போதுமில்லாத அளவிற்கு, என்னுடைய இந்தப் பதிவிற்கு பின்னூட்டங்கள் வந்த கொண்டு இருக்கின்றன. அதில் பெருமளவு உணர்ச்சிகள் பொங்குகின்றன. நான் கொஞ்சம் கவனமில்லாமல் என்னுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தாமல் பதில்கள் போட்டால் இந்தத் தளம் ரணகளம் ஆகியிருக்கும். எப்படியோ எல்லோரும் தங்கள் தங்கள் கருத்துக்களை கூறியதற்கு நன்றி. பல தவறான புரிதல்கள் மாறுவதற்கு அவை உதவின. மீண்டும் எல்லோருக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  60. இந்தப் பதிவு ஒரு அதிருப்தியைத்தான் தருகிறது சார். இமாவின் கருத்துக்களே என் கருத்தும். நான் சென்ற மாதம் ஊர் வந்த போது, சில சமயம் ஒரே நாளில் ஏழெட்டு உறவினர் வீடுகளுக்குச் செல்ல நேரிடும். அப்போதெல்லாம் இப்படித்தான் பல வீடுகளில் மறுக்க வேண்டியிருந்தது.

    உங்கள் வீட்டிற்கு வந்த உறவினரும் அப்படி ஒரு நிலையில் இருந்தாரோ என்னவோ, அல்லது உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு அப்போதுதான் தேறியிருக்கலாம். பல சாத்தியக்கூறுகள் உண்டே!! நீங்களோ கல்யாண சம்பந்தம் வரை போகிறீர்கள்!! உங்கள் வீட்டுத் தண்ணீர் குடிக்க விரும்பாதவர்கள் உங்களிடம் சம்பந்தம் செய்துகொள்ள மட்டும் விரும்புவார்களா என்ன?

    என்ன சார் ஒண்ணுமில்லா விஷயத்திற்குப் போய் இவ்வளவு சீரியஸாகுறீங்க? :-)))

    பதிலளிநீக்கு
  61. ஹுசைனம்மா சொன்னது:

    //இந்தப் பதிவு ஒரு அதிருப்தியைத்தான் தருகிறது சார். இமாவின் கருத்துக்களே என் கருத்தும். நான் சென்ற மாதம் ஊர் வந்த போது, சில சமயம் ஒரே நாளில் ஏழெட்டு உறவினர் வீடுகளுக்குச் செல்ல நேரிடும். அப்போதெல்லாம் இப்படித்தான் பல வீடுகளில் மறுக்க வேண்டியிருந்தது.//

    கருத்துக்கு நன்றி அம்மா.

    பதிலளிநீக்கு
  62. Part 1..///நான் புரிந்துகொண்டுதான் எழுதுகிறேன். உணர்ச்சி வசப்படவேண்டாம்.///
    நாங்கள் உணர்ச்சி வசப்படவில்லை சார்! உண்மையை எழுதினோம். இப்போ எல்லாம ஊருக்கு வந்தால் யாருக்கும் சொல்வதில்லை. எங்களுடைய விலாசம் இருந்தாலும் நல்லது கெட்டது சொல்லாத உறவினர்கள் வீட்டிற்கும் செல்வதில்லை. அதுக்கும் ஏதாவது சொல்வீர்கள். வெளி நாடு போனால் கொம்பு முளைத்துவிட்டதா என்று. மீதி உள்ள 15 நாட்கள் வீட்டில் தான். எனது எந்த சொந்தமும் என்னைப் பார்க்க என் வீட்டுக்கு வரவேண்டாம். நானும் அவர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டாம். விடுமுறையை செலவழிக்க வந்த நான் எதற்கு ஊர் ஊரா சுத்தணும்...வேற வேலை இல்லையா எங்களுக்கு?.நாயை அடிப்பானே அதை சுமப்பானே!!!

    இந்தியாவில் இருப்பவர்கள் நான் கீழே சொல்வதை புரிந்து கொள்ளுங்கள்:
    ஒரு இருபது ரூபாய் செலவழித்து தபால் போடாதவர்கள் வீட்டிற்க்கு செல்வது .முட்டாள் தனம எனது பார்வையில்.
    அப்பா அம்மா மேலும எனது ஆறு உயிர் நண்பர்கள் இவர்கள் வீட்டிற்கு தான் செல்வேன். அப்புறம் எனது இரண்டு நண்பர்களுடன் அவர்களுடைய கிராமத்திற்கு சென்று அவர்களுடை அம்மாக்களை பார்த்து விட்டு அவர்களுடன் ஒரு நாலு நாள் இருந்து விட்டு வருவேன். காடு, கழனி, இளநி, நுங்கு, மாடு (இப்ப எல்லாம ட்ராக்டர் வந்தாச்சு), சாணி, சாணியுடன் கலந்த மண் வாசனை (!) இவையெல்லாம் விட்டு விட்டு ஏண்டா இங்கு வந்தோம் என்று அடிக்கடி வருத்தப்படுகிறோம். அதெல்லாம் உங்களுக்கு எங்கே புரியப் போகிறது...

    பதிலளிநீக்கு
  63. Part 2.....சென்னையில் உள்ள ஒரு சொந்தம், 2006-ல், சினிமாவிற்கு போகலாம் என்று உயிரை எடுத்து போக்கிரி என்ற படத்திற்கு கூட்டிகொண்டு போனார். அது உங்களது பார்வையில் நல்ல படம். என்னால் உக்கார முடியவில்லை. அவர்கள் குடும்பம் நாலு பேர் நான் மொத்தம் ஐந்து பேர். டிக்கெட் விலையை கேட்டதிற்கு அப்புறம் எனக்கு மயக்கம் வந்து விட்டதால் முழு படத்தையும் ஆடாமல் அசையாமல் பார்த்தேன். கார் பார்கிங் செலவு snacks செலவு, இப்படி. அதற்கு அப்புறம் ஒரு சைவ ஹோட்டலில் டிபன். அதற்க்கு ஒரு ஆயிரம் ரூபாய் தண்டம். இது என்ன Five star ஹோட்டலா? குப்பை தோசை 90 ரூபாய். இது பகல் கொள்ளை. டாடா பிர்லா இந்த அளவு பணம் செலவழித்திதாலும் அது குற்றமே. என்னால் இதை தாங்க முடியவில்லை. இந்தியாவில் எல்லோரிடமும் பணம் இருக்கிறது. இங்கு அமெரிக்காவில் எவன் சினிமா தியேட்டருக்கு சென்று சினிமா பார்க்கிறான், சின்னப் பசங்கள் பார்க்கலாம். அல்லது இந்தியாவில் இருந்தது வந்த இளசுகள் பார்க்கலாம். மூன்று மாதம் கழித்தால் DVD இல பார்க்கலாம்.

    ஆனாலும் போக்கிரி படத்தை பார்த்ததிலும் ஒரு நன்மை இருந்தது. ஏனென்றால் அதை லொள்ளு சபாவில் பார்த்த போது அது போக்கிரி படத்தை விட மிக மிக நன்றாக இருந்து. அந்த நடிகருக்கு எனது வாழ்த்துக்கள். அவர் நன்றாக முன்னுக்கு வருவார். என்ன திறமை! அவர் தளபதியாக வராவிட்டாலும் கட்டாயம் ஒரு சேனாதிபதியாக வலம் வருவார். அந்த நடிகருக்கு இப்பவே சேனாதிபதி பட்டம் ரெடி.....அவர் சினிமாவில் நடிக்க வேண்டியது தான் பாக்கி.

    பதிலளிநீக்கு
  64. சினிமா பாக்கவா நாங்கள் அவ்வளவு பணம் செலவழிதுக்கொண்டு வருகிறோம்.இதை நன்கு அறிந்தவர்கள் எனது நண்பர்கள் ஆறு பேர் மட்டுமே. நாங்கள் வருவது சாப்பிட்டு விட்டு நன்றாக தூங்கி விட்டு மீதி இருக்கும் நேரத்தில் எனது பெற்றோர்களுடன் கழிக்கவே வருகிறோம். ஊர்ர ஊரா அலைவதற்கு அல்ல.

    Part 3.....உன்னொரு சொந்தம் எனக்கு போன் செய்தார். ஆனால் அவர் என்னுடைய answering machine - ல் message விடவில்லை. மறுபடியும் இரண்டு முறை போன் செய்தார். ஆனால் நான் போனை எடுத்தவுடனே அவர் போனை துண்டித்து விட்டார். இது நடந்தது 2005-ல். நாங்கள் யார் போன் செய்தாலும் answering machine - ல் message விடவில்லை என்றால் திருப்பி கூப்பிட மாட்டோம். அவர் கேட்டார் ஏன் எனக்கு போன் செய்யவில்லை. நான் உனக்கு missed call கொடுத்தேன் என்றார். இந்த missed call concept எங்களுக்க்கு தெரியாது. என்னுடைய land line -ல் caller ID கிடையாது. அவர் தினமும் தண்ணி அடிக்கிற கேசு. ஒரு நாளைக்கு 250 ரூபாய் தன்னிக்கும் ஒரு காக்கா கடையில் சாப்பிடுவத்ர்க்கும் செலவழிக்கிறார். ஆனால் ஒரு இருபது ரூபாய் செலவழித்து ஒரு message விட மனதில்லை. அப்ப நான் சொன்னேன், நீ எம்மேல கோபமே படக்கூடாது. உனக்கு தேவை என்றால் நீ தான் எனக்கு போன் போடணும். அல்லது message விடனும். மேலும எனக்க்கு இந்த missed call concept எங்களுக்க்கு தெரியாது. என்றேன் . அவர் என்ன சொன்னார் தெரியுமா. உங்களுக்கு எல்லாம் வெளி நாடு போனால் கொம்பு முளைத்துவிட்டது என்ற நினைப்பு,. இப்படி. அவர் ஒரு முட்டாள், எனது பார்வையில்...
    இது ஒரு சாம்பிள் தான். இது மாதிரி ஏரளாமான குறைகள் உங்கள் மீது. எங்களுக்கு உங்கள் மீது ஆயிரம் குறைகள் உள்ளது. நீங்கள் எங்களது குறைகளை எழுதுங்கள. நாங்கள் உங்களது குறைகளை எழுதுகிறோம் .

    என்றும் அன்புடன் ஆட்டையாம்பட்டி அம்பி!?

    பதிலளிநீக்கு
  65. வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவர் பண்பாடு கருதி உங்களை மதித்து உங்கள் வீட்டிற்கு வந்துள்ளார். அவர் வந்தது குறித்து மனமகிழ்வு அடையாமல், அவரது குறுகிய பயணத்திலும் உங்களை வந்து சந்தித்ததைச் சிறப்புறச் சொல்லாமல், நீங்கள் கலக்கி வைத்திருந்த பழரசம் குடிக்காததற்கு வருத்தப்பட்டு பதிவு போடும் (நல்ல வேளை படம் போடாமல் விட்டீரே..) உங்கள் பார்வையோடு ஒத்துப்போக முடியவில்லை. "என் வீட்டிற்கு வந்துள்ளாய். நான் தருவதைத் தின். நான் அளிப்பதைக் குடி. இல்லையேல் உனக்கு கலாச்சாரம் இல்லை. என் பழ ரசம் குடிக்காத பய எதுக்கு இந்தியா வர்றே?" என்பது சற்று நகைப்புரியதாக்குகிறது. இதில் பெண் வேண்டும் என்று தான் இவர்கள் இந்தியாவே வருகிறார்கள் என்று ஒரு வாதம் வேறு. என்னவோ போங்க முனைவர் ஐயா.. உங்கள் மன அலை சுனாமி அடங்கட்டும்.

    பதிலளிநீக்கு
  66. வாஸ்துவம்தாங்க... சிலர் கொஞ்சம் ஓவர் பந்தா தான்... என்ன செய்ய?

    பதிலளிநீக்கு
  67. Tamilboy said:

    //உங்கள் பார்வையோடு ஒத்துப்போக முடியவில்லை.//

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  68. அப்பாவி தங்கமணி சொன்னது:

    //வாஸ்துவம்தாங்க... சிலர் கொஞ்சம் ஓவர் பந்தா தான்... என்ன செய்ய?//

    ஆமாங்க.

    பதிலளிநீக்கு
  69. ஆட்டையாம்பட்டி அம்பிக்கு,
    கருத்துகளுக்கு நன்றி.இதைப்பற்றி எல்லோரும் அவரவர்கள் கருத்தைக்கூறியாய் விட்டது.
    இதைப்பற்றி மேலும் விவாதிப்பதால் எந்த நன்மையும் யாருக்கும் விளையப்போவதில்லை என்று நான் நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  70. //இதைப்பற்றி மேலும் விவாதிப்பதால் ///

    இதில் விவாதம் "கிடையவே" கிடையாது.

    நான் உங்கள் வீட்டிற்கு வந்து நாலு இட்லி சட்னி கொடுங்கள் என்றால் கொடுக்க மாட்டீர்களா. சரி இல்லை என்றால் உலகமே இடிந்து விட்டது என்று நான் இருப்பேனா. அதானால் என்ன சார், வாருங்கள், அருகில் இருக்கும் கடையில் சாப்பிடுவோம் என்று உங்களையும் கூட்டிக்கொண்டு செல்வேன். ஆதலால் உங்கள் வீட்டிற்கு வரும் வெளி நாடு விருந்தாளிகளுக்கு நீங்கள் ஒன்றும் பண்ண வேண்டாம்.

    நல்ல ஜாலியா பேசுவோமே! அப்படி பசித்தால் நாங்கள் கேட்கும் நாலு இட்லியையோ அல்லது தயிர் சாதத்தையோ (ஊறுகா முக்கியம்) கொடுங்களேன்.

    மறுபடியும், நாங்கள் உங்கள் வீட்டிற்கு வருவது சாப்பிட அல்ல. ஜாலியா பேச மட்டுமே...

    விருந்தோம்பல் என்பது விருந்தாளிக்கு கண்டபடி விருநது போட்டு கஷ்டப்படுத்துவது அல்ல!

    என்றும் அன்புடன் ஆட்டையாம்பட்டி அம்பி.

    பின் குறிப்பு: இந்த பதிவு இதோட முடிவுருகிறது.

    பதிலளிநீக்கு
  71. யரலவழள, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. மனிதர்கள் பல வகையாகத்தான் இருக்கிறார்கள். அவர்களோடுதான் நாம் வாழவேண்டியுள்ளது.

    பதிலளிநீக்கு