திங்கள், 5 டிசம்பர், 2011

நல்ல பதிவர் யார்?


நண்பர் அப்துல் பஸ்ஜித் அவர்கள் பிளாக்

ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-8]

 Abdul Basith 

இந்தப் பதிவில் நண்பர் அப்துல் பஸ்ஜித் அவர்கள் பதிவு ஆரம்பிப்பது எப்படி என்று ஒரு தொடர் எழுதி வருகிறார். ஆனால் பிரபல பதிவர் ஆவது எப்படி என்று ஒரு செய்தியையும் கொடுக்கவில்லை. அதற்காகத்தான் இந்தப் பதிவு.

1.   தினம் ஒரு பதிவு போடவேண்டும். அதற்கு மேலும் போடவேண்டுமென்றால் சி.பி.செந்தில்குமாரிடம் (ஈரோடு) பர்மிஷன் வாங்க வேண்டும். அதற்கான காப்பிரைட் உரிமையை அவர்தான் வைத்திருக்கிறார்.

2.   பதிவுகளை சனி, ஞாயிறு, மற்றும் விடுமுறை நாட்களில் போடாதீர்கள். யாரும் படிக்க வர மாட்டார்கள். இதில் ஒரு பெரிய தொழில் நுணுக்கம் இருக்கிறது. அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் என்னைத் தனியே தொடர்பு கொள்ளவும்.

3.   பதிவு போட்டவுடன் அதை எல்லா திரட்டிகளிலும் இணைக்கவேண்டும்.

4.   தெரிந்தவர்கள், நண்பர்கள், எதிரிகள், முன்பின் தெரியாதவர்கள் அனைவருக்கும் ஈமெயில், ட்விட்டர், முகப்புத்தகம் மூலமாக பதிவு போட்ட செய்தியை அனுப்பவேண்டும்.

5.   ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை பிளாக்கை ஓபன் செய்து கீழ்க்கண்டவைகளை பரிசோதிக்க வேண்டும்.
a.   பின்னூட்டங்கள்.
b.   ஹிட் கவுன்ட்டர்
c.   பின்பற்றுவோர்
d.   ஓட்டு நிலவரம்
e.   தமிழ்மணம் மற்றும் அலெக்ஸா ரேட்டிங்க்.

6.   எல்லாப் பின்னூட்டங்களுக்கும் பதில் போடவேண்டும்.

7.   பின்னூட்டம் போட்ட பதிவர்களின் பதிவுகளுக்குப் போய், அங்கு பின்னூட்டம் மற்றும் ஓட்டுகள் போடவேண்டும்.

8.   அந்தப் பதிவுகளில் பின்பற்றுவோர் ஆக சேரவேண்டும்.

9.   மற்ற நேரங்களில், புதிய பதிவுகளைப் பார்த்து பின்னூட்டம் போடவேண்டும்.

10. தங்கள் பதிவுகளிலேயே திரட்டிகளுக்கு ஒரு ஓட்டுப்போட வசதி உண்டு. அதைத் தவறாமல் போடவும்.

11. அதிக பின்னூட்டங்கள் வராவிடில் நண்பர்களுடன் சிண்டிகேட் ஏற்படுத்தி பின்னூட்டங்களை அதிகப் படுத்தவும். இதற்கான வழிமுறைகளை தெரிந்து கொள்ள, அதிக பின்னூட்டங்கள் (நூற்றுக்கு மேல்) வரும் பதிவரைத் தொடர்பு கொள்ளவும்.

12. தொடர் பதிவுகளை ஆரம்பித்து அப்பாவிப் பதிவர்களைக் கோர்த்து விடவும்.

13. தொழில் நுட்ப பதிவுகளைத் தவறாமல் பார்த்து அடிக்கடி பதிவை மேம்படுத்திக் கொள்ளவும்.

14. முடிந்தால் யாரையாவது அடிக்கடி வம்புக்கு இழுக்கவும். வம்பு சமாளிக்க முடியாமல் போனால் உடனே ஒரு மன்னிப்புப் பதிவு போட்டுவிட வேண்டும். (காசா, பணமா?)

நீங்கள் முதல் பதிவு போட்டவுடனேயே பிரபலமாக மனமார்ந்த வாழ்த்துக்கள்.


43 கருத்துகள்:

  1. //Powder Star - Dr. ஐடியாமணி said.//

    ஊர்லதான் இருக்கீங்களா, மணி? யாரோ சொன்னாங்க, நீங்க ஊரைவிட்டுப் போய்ட்டதா ?

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் ! நல்லாத்தான் சொன்னீங்க நீங்க! இன்னும் ஒன்று! நமக்கு இருக்கின்ற எல்லா வேலைகளையும் மறந்துவிட வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. அண்ணா, வணக்கம். ”நல்ல பதிவர் யார்?” அப்படின்னு தலைப்பை வெச்சிட்டு, பிரபலப் பதிவர் ஆவுறதுக்கு வழி சொல்றீங்க... அந்த நல்ல பதிவர் நீங்கதானே??

    பதிலளிநீக்கு
  4. என்னைப்போன்ற புதியவர்களுக்கு பயனுள்ள ஆலோசனை அய்யா!//இதில் ஒரு பெரிய தொழில் நுணுக்கம் இருக்கிறது. அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் என்னைத் தனியே தொடர்பு கொள்ளவும்.//இதற்க்கு விதிவிலக்கு இல்லையா அய்யா. அடுத்த பதிவாக அந்த தொழில் நுணுக்கத்தை தெரிவித்தால், அனைத்து பதிவர்களுக்கும் பயன்படுமே! நன்றி அய்யா!

    பதிலளிநீக்கு
  5. ஹா.ஹா.ஹா.ஹா.புதிய பதிவர்களுக்கு அருமையான ஜடியாக்கள் பாஸ்

    பதிலளிநீக்கு
  6. //வே.சுப்ரமணியன். said...
    என்னைப்போன்ற புதியவர்களுக்கு பயனுள்ள ஆலோசனை அய்யா!//இதில் ஒரு பெரிய தொழில் நுணுக்கம் இருக்கிறது. அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் என்னைத் தனியே தொடர்பு கொள்ளவும்.//இதற்க்கு விதிவிலக்கு இல்லையா அய்யா. அடுத்த பதிவாக அந்த தொழில் நுணுக்கத்தை தெரிவித்தால், அனைத்து பதிவர்களுக்கும் பயன்படுமே! நன்றி அய்யா!//

    அய்யோ, அது பெரிய சிதம்பர ரகசியம், சுப்பிரமணியன். சிதம்பர ரகசியம்னா என்னான்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா அதை வெளியில் சொல்லப்படாது.

    இங்க பதிவில அத நான் போட்டேன்னு வச்சுக்குங்க, என்னை எல்லா பதிவர்களும் சேர்ந்து உண்டு இல்லைன்னு ஆக்கிடுவாங்க. போகப்போக நீங்களே தெரிஞ்சுக்குவீங்க.

    பதிலளிநீக்கு
  7. //பழமைபேசி said...
    அண்ணா, வணக்கம். ”நல்ல பதிவர் யார்?” அப்படின்னு தலைப்பை வெச்சிட்டு, பிரபலப் பதிவர் ஆவுறதுக்கு வழி சொல்றீங்க... அந்த நல்ல பதிவர் நீங்கதானே??//

    நல்லவங்கதானே பிரபலமா ஆகமுடியும் தம்பி.

    பதிலளிநீக்கு
  8. //போகப்போக நீங்களே தெரிஞ்சுக்குவீங்க.//
    வாழ்த்திற்கு நன்றி அய்யா!

    பதிலளிநீக்கு
  9. எப்படின்னே இப்படி...நீங்க ஒரு ப்ராப்ள ச்சே பிரபல பதிவருங்கரத கன்பார்ம் பண்ணிட்டீங்க ஹிஹி!

    பதிலளிநீக்கு
  10. ஹா..ஹா..ஹா.. பதிவர்களுக்கு பயனுள்ள தகவல்கள். புதிய பதிவர்கள் அவசியம் படிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  11. அட இம்புட்டு தில்லாங்க்கடி பண்ணனுமா?
    இருங்க ஒரு டைரியில நோட் பண்ணிகிறேன்

    பதிலளிநீக்கு
  12. ஹ்ா ஹா அப்ப டாக்டர் பிரபல மானது இப்படி ்தானா?

    பதிலளிநீக்கு
  13. //Jaleela Kamal said...
    ஹ்ா ஹா அப்ப டாக்டர் பிரபல மானது இப்படி ்தானா?//

    நான் எப்போ பிரபலமானனுங்க? எனக்கு அந்த சாமர்த்தியம் எல்லாம் இல்லைங்க.

    பதிவு போட்ட ஒரு மணி நேரத்துல நூறு கமென்ட் வந்தாத்தான் பிரபலம்னு சொல்லலாமுங்க. எனக்கு பத்து கமென்ட் வந்தா கொள்ளைங்க.

    பதிலளிநீக்கு
  14. ஹா.. ஹா.... சூப்பரா அறிவுரையும் யோசனையும் சொல்லி இருக்கீங்க. அப்படியே கீழே இருக்கற மாதிரி கமெண்ட்ல பதிவின் லிங்க்ம் இணைக்கனும்னு சொல்லுங்க.

    வாசிக்க:
    நடிகை அஞ்சலி பய(ங்கர) டேட்டா - ரசிகனின் காமெடி கும்மி

    பதிலளிநீக்கு
  15. பதிவர்களுக்கு பயனுள்ள தகவல்கள்....

    பதிலளிநீக்கு
  16. அய்யா எல்லாரும் பிரபலமாகிவிட்டா...படிக்கறதுக்கு யாரும் இருக்கமாட்டாங்க..சிபி பதிவு போடுவதற்க்கு என்று உகாண்டாவில இருந்து ஒரு மிசின் வாங்கியிருக்காருங்க...நானும் வாங்கலான்னு கேட்கிறேன் அட்ரஸ் தரமாட்டிங்கறாரு...நீங்களே சொல்லுங்க நியாமா?

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் ஐயா,

    ஐடியாக்கள் அனைத்தும் சூப்பர். ஆனால் எல்லா ஐடியாக்களையும் பின்பற்றி எழுதினாலும் பதிவாக எழுத விடயப் பரப்பு வேண்டுமே?

    ஹி...ஹி...
    அதனையும் நீங்களே கொடுத்தா சூப்பரா இருக்கும்!

    அவ்வ்வ்வ்

    பல பதிவர்களின் டவுசரை உருவியிருக்கிறீங்க.

    ரசித்தேன் ஐயா.

    பதிலளிநீக்கு
  18. நல்ல ஐடியாக்கள்தான். ஆனால் அவற்றை செயல்படுத்தத் தான் தெரிய மாட்டேங்குது. தமிழ் மணத்தில் இணைக்கவே தாவு தீர்ந்து விட்டது. இந்த ஓட்டு சமாச்சாரம் என்ன என்று விளங்க மாட்டேங்குது. தெரியாத பட்டியல் நிறைய உண்டு. அப்படியெல்லாம் பிரபலமாவதில் என்ன லாபம்.?

    பதிலளிநீக்கு
  19. நண்பர் அப்துல் பஸ்ஜித் அவர்கள் பிளாக்
    ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-8]

    அருமையான கருத்துக்களம்..

    எத்தனை பகுதிகள் வேண்டுமானாலும் வெளிடத்தக்க கருத்துச்சுரங்கம்..

    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  20. இதில் ஒரு பெரிய தொழில் நுணுக்கம் இருக்கிறது. அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் என்னைத் தனியே தொடர்பு கொள்ளவும். //
    இந்த தொழில் நுணுக்கம் எல்லோரும் அறிந்த சிதம்பர ரகசியம் தானே?

    பதிலளிநீக்கு
  21. ஐயா சில பதிவர்கள் தமிழுக்கு தாங்கள் மட்டும் தான் தொண்டு ஆற்றுவது போல் காட்டி கொள்கின்றனரே?

    பதிலளிநீக்கு
  22. //G.M Balasubramaniam said...
    நல்ல ஐடியாக்கள்தான். ஆனால் அவற்றை செயல்படுத்தத் தான் தெரிய மாட்டேங்குது. தமிழ் மணத்தில் இணைக்கவே தாவு தீர்ந்து விட்டது. இந்த ஓட்டு சமாச்சாரம் என்ன என்று விளங்க மாட்டேங்குது. தெரியாத பட்டியல் நிறைய உண்டு. அப்படியெல்லாம் பிரபலமாவதில் என்ன லாபம்.?//

    1.ரூபாய், அணா, பைசா கணக்கில் இந்த பிளாக் சமாசாரம் காலணாவுக்கு பிரயோஜனம் கிடையாது.
    2.திரட்டிகளில் பதிவை இணைப்பது என்பது கொஞ்சம் விவகாரமான சமாச்சாரம்தான். இதைப்பற்றி நிறைய பதிவுகள் வந்து விட்டன. அவற்றைப் பார்த்து ஆவன செய்யவும்.
    3.திரட்டிகளில் அதிக ஓட்டு விழுந்தால் அந்த திரட்டிகளில் முதல் பக்கத்தில் தோன்றும். அதிக வாசகர்கள் படிக்க உதவும். இதுதான் எல்லாவற்றையும் விட விவகாரமான சமாச்சாரம். இதற்கு முயலுவதை விட பொது தேர்தலில் நின்று மந்திரியாகி விடலாம்.
    4.எப்படியோ நம்மைப் போன்றவர்களுக்கு ஒரு பொழுது போக்கு. கீதையில் கண்ணன் கூறியதை நினைவில் கொள்ளுங்கள். கடமையைச் செய், பலனை என்னிடம் விட்டுவிடு. இது பதிவுலகிற்கு மிகப் பொருத்தம்.

    பதிலளிநீக்கு
  23. //J.P Josephine Baba said...
    ஐயா சில பதிவர்கள் தமிழுக்கு தாங்கள் மட்டும் தான் தொண்டு ஆற்றுவது போல் காட்டி கொள்கின்றனரே?//

    மனுசன்னா எதாச்சும் கொள்கை வச்சுக்கணும் இல்லைன்னா கொள்கை இருக்கிற மாதிரியாச்சும் காட்டிக்கணும். அதுதான் எதை வேண்டுமானாலும் பினாத்த ஒரு லைசன்ஸ். இதையெல்லாம் ரொம்ப சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளக்கூடாது.

    பதிலளிநீக்கு
  24. //நிரூபன் said...
    வணக்கம் ஐயா,

    ஐடியாக்கள் அனைத்தும் சூப்பர். ஆனால் எல்லா ஐடியாக்களையும் பின்பற்றி எழுதினாலும் பதிவாக எழுத விடயப் பரப்பு வேண்டுமே?//

    அதுக்கு ஒரு ஆபீஸ் திறந்துட்டாப் போச்சு. உங்கூர்ல நல்ல எடம் கிடைச்சா சொல்லுங்க. அங்கனயே வந்துடறேன்.

    பதிலளிநீக்கு
  25. பகிர்ந்து கொள்ள தேவைப்படும் சமாச்சாரங்கள் உங்களிடம் நிறைய உண்டு. ஏனிந்த வேலை?

    பதிலளிநீக்கு
  26. நல்லா சொல்லியிருக்கீங்க அய்யா. அதுவும், இது பைசா பேராத விஷயம் என்பது ரொம்ப முக்கியம். அந்த அளவே இதற்க்கு முக்கியத்துவம் கொடுத்தால் எந்த தொல்லையும் இல்லை!

    பதிலளிநீக்கு
  27. ஆஹா ஆஹா - இபடி எல்லாம் வழி இருக்குதா -ம்ம்ம் = வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  28. //ஜோதிஜி திருப்பூர் said...
    பகிர்ந்து கொள்ள தேவைப்படும் சமாச்சாரங்கள் உங்களிடம் நிறைய உண்டு. ஏனிந்த வேலை?//

    நீங்க சொல்றது கரெக்ட்தான் ஜோதிஜி. ஆனா ஒரு பதிவு போட்டா நாலு பேர் வந்தாத்தான் அந்த பதிவுக்கு அழகு.

    அடுத்து நீங்க நெனைக்கற மாதிரி டெக்னிகலா ஒரு பதிவு போடறேன் பாருங்க, ஒருத்தரும் சீண்ட மாட்டாங்க பாருங்க.

    பதிலளிநீக்கு
  29. ம்ம்... நீங்க மேலும், மேலும் பிரபலமாகாமல் ஓயமாட்டீங்க போல :)

    பதிலளிநீக்கு
  30. //Rathi said...
    ம்ம்... நீங்க மேலும், மேலும் பிரபலமாகாமல் ஓயமாட்டீங்க போல :)//

    சிபி மாதிரி நெம்பர் 1 பதிவர் ஆகாம உடறதில்லைங்க.சும்மா சாதாரண பதிவரா இருந்து என்ன பிரயோஜனம் சொல்லுங்க?!!!!!!

    பதிலளிநீக்கு
  31. வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். இன்று தான் தங்களின் தளத்திற்கு வருகிறேன். பதிவுலகில் இவ்வளவு விஷயம் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டேன். ஏதோ எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுகிறேன். 16 பதிவுகள் எழுதி உள்ளேன். படித்து விட்டு கருத்து சொல்லவும். கடைசியாக எழுதிய பதிவு கீழே:

    "இரண்டாம் பகுதி - அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?"

    பதிலளிநீக்கு
  32. சார் எல்லாரும் செய்வதை தான் சொல்லிருக்கீங்க

    பதிலளிநீக்கு
  33. ஹா ஹா ஹா! :) வலைதளத்தை மேய்ப்பதென்பது ஒரு முழுநேர வேலை என்பது பதிவெழுத வந்தபின்தான் தெரிகிறது! :(

    பதிலளிநீக்கு