ஞாயிறு, 1 ஜனவரி, 2012

நான் பதிவுலகில் சாதித்தது என்ன?


அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.



இது என்னுடைய 300 வது பதிவு.

மூன்று வருடத்தில் இதைப் பெரிய சாதனை என்று சொல்லிக் கொள்ள ஒன்றுமில்லை. ஒரு வருடத்திலேயே இதைவிட அதிக பதிவுகள் போட்ட பதிவர்கள் இருக்கிறார்கள். தான் பதிவராக இருப்பதால் தனக்கு பல நண்பர்கள் கிடைத்தார்கள் என்று பல பதிவர்கள் எழுதியிருக்கிறார்கள். எனக்கும் அப்படி ஓரிரண்டு நண்பர்களும், பல அறிமுகங்களும் கிடைத்துள்ளன. பதிவுலகத்திலுள்ள சில பேருக்கு என் பதிவு பரிச்சயமாகி இருக்கிறது. இதைத் தவிர நான் பதிவுகள் எழுதி என்ன சாதித்தேன் என்று இந்தப் புதுவருடத்தன்று யோசித்தால், ஒன்றுமில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

ஆனால் பல பதிவர்கள், பதிவு போடுவதால் தனி மனித, சமூக, அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லுகிறார்கள். தங்களுக்கும் தனிப்பட்ட முறையில் பல உதவிகள் கிட்டியுள்ளதாகவும் கூறுகிறார்கள். இது அவரவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.

இன்னும் ஒரு விஷயம். பதிவுலகில் எல்லோரும் ஆசைப்படுவது என்னவென்றால் தங்கள் பதிவுகளுக்கு நிறைய பின்னூட்டம் வரவேண்டும், நிறைய ஹிட்ஸ் வரவேண்டும். தமிழ்மணம் திரட்டியில் நல்ல ரேங்க் வரவேண்டும். இந்த ஆசைகளில் தவறு ஒன்றும் கிடையாது. நானும் இந்த ஆசையில் சிக்குண்டவன்தான். ஆனால் இந்தப் புது வருட தினத்தன்று  யோசித்தால் இந்த ஆசைக்காக நான் இழந்தது, இழந்துகொண்டிருப்பது மிகவும் அதிகம். இது தவிர்க்கப்பட வேண்டியது என்று உணர்கிறேன்.

பதிவுலகம் ஒரு மாயா உலகம். நிஜ உலகத்தில் பெயர் வாங்கினாலும் ஏதோ அர்த்தம் இருக்கிறது. மாயா லோகத்தில் பெயர் வாங்கி என்ன செய்யப் போகிறோம். நிஜ உலகில் எனக்குத் தெரிந்தவர்களில், நான் பதிவு எழுதுவதைத் தெரிந்தவர்களை, ஒரு கை விரல்களை மட்டும் விட்டு எண்ணி விடலாம். இப்படிப்பட்ட ஒரு மாயைக்காக நான் எவ்வளவு சமரசங்கள் செய்திருக்கிறேன் என்று பார்த்தால், நான் தேவைக்கதிகமாக விலை கொடுத்துக் கொண்டிருப்பதாக உணர்கிறேன். இந்த விலை கொடுப்பது அவசியமா என்றும் சிந்திக்கிறேன்.

புது வருடத்தில் உங்களுக்கு ஒரு கதை சொல்லலாம் என்று ஆசைப் படுகிறேன். பழைய, எல்லோருக்கும் தெரிந்த கதைதான்.

வால் அறுந்த நரியின் கதையை எல்லோரும் கேட்டிருக்கிறோம். எங்கோ ஒரு இயந்திர பொறியில் சிக்கி ஒரு நரியின் வால் அறுந்து போய்விட்டது. இது ஒரு பெரிய அவமானம். ஆனால் நரிகள் இயற்கையாகவே புத்திசாலிகளல்லவா? அதனால் அந்த நரி யோசித்து ஒரு திட்டம் போட்டது. மற்ற நரிகள் வரும் வழியில் போய் நின்றுகொண்டது. நரிகள் வருவது தெரிந்தால் உடனே வானத்தைப் பார்த்து நின்று கொள்ளும். வானத்தில் எதையோ பார்த்து பரவசமடைவதைப் போல் பாசாங்கு செய்து கொண்டிருக்கும்.

சக நரிகள் பக்கத்தில் வந்து என்ன செய்கிறாய் என்று கேட்டால் வாலறுந்த நரி, ஏதோ மயக்கத்திலிருந்து விழித்த மாதிரி பாவனை செய்து “என்ன, ஏதாவது கேட்டீர்களா” என்று கேட்கும். அப்போது மற்ற நரிகள் “ஆமாம், ஏதோ ஆகாயத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாயே, அதுதான் என்னவென்று கேட்டோம்” என்று சொல்லின. அதற்கு வாலறுந்த நரி சொல்லியது: “எனக்கு வால் அறுந்த பிறகு ஆகாயத்தில் கடவுள் தெரிகிறார்” என்றது. இப்படியே பல நாடகள் ஆகின. மற்ற நரிகள் இந்த வாலறுந்த நரி சொல்வது உண்மையாக இருக்கலாமோ என்று நினைக்கத் தொடங்கின. இரண்டொரு நரிகள் வாலை அறுத்துக்கொண்டன. பிறகு அவைகள் வானைப் பார்த்தால் ஒன்றும் தெரியவில்லை.

அப்போதுதான் அவைகளுக்கு மண்டையில் உறைத்தது. ஞானம் பிறந்தது. ஆஹா, இந்த வாலறுந்த நரி நம்மை ஏமாற்றிவிட்டது பார் என்று கோபமடைந்தன. தாம் ஏமாந்துவிட்டோம் என்று தெரிந்தது. ஆனால் இதை வெளியில் சொன்னால் மானம் போகும். ஆகவே நாங்களும் கடவுளைக் கண்டோம் என்று சொல்லுவோம் என்று நினைத்து, புதிதாக வாலறுத்துக்கொண்ட நரிகளும் கடவுளைக் கண்டோம் என்று சொல்ல ஆரம்பித்தன. இவ்வாறாக அந்தக் காட்டிலுள்ள அனைத்து நரிகளும் வாலறுத்துக் கொண்டன.

பதிவுலகத்திற்கும் இந்தக் கதைக்கும் சம்பந்தமிருப்பதாக நீங்கள் நினைத்துக் கொண்டால், அது உங்கள் பொறுப்பு என்று திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புது வருடப் பிறப்பன்று ஏதாவது புது வருடத் தீர்மானங்கள் போடாவிட்டால் நன்றாக இருக்காது. அதற்காக இரண்டு தீர்மானங்கள்.

    1.   பதிவர்கள் தங்கள் பதிவுகளைப் பற்றி ஈ.மெயில் அனுப்பினால் அந்தப் பதிவுகள் புறக்கணிக்கப்படும்.

    2.   பின்னூட்டங்களில் தங்கள் பதிவுகளின் சுட்டிகள் இருந்தால் அவை பிரசுரிக்கப்பட மாட்டாது.

                 வணக்கம், நன்றி.


45 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஐயா,

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!

    என்னது..பதிவர்கள் பதிவெழுதி நாட்டு அரசியலையே மாற்றிப்புட்டாங்களோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    பதிலளிநீக்கு
  2. ஐயா, வாலறுந்த நரி கதை சூப்பர், உண்மையில் ஆத்ம திருப்திக்காகத் தான் எழுதுகின்றோம். ஹிட்ஸை வைத்து பலர் அண்ணா நகரில் அப்பார்மெண்ட் வாங்க போட்டி போடுவதனைத் தான் கண் கூடாகப் பார்த்திருக்கிறேன்.

    பதிவுகளின் லிங், தனிமெயிலில் பதிவுகள் வந்தால் பிரசுரிக்கப்படமாட்டாது சூப்பர் ஐடியா, ஆனால் சிலர் தாம் பதிவினைப் படிக்காது பின்னூட்டம் ஊடாக லிங் கொடுப்பது சரியே என்று நிரூபிக்க நினைக்கிறார்கள்! ஹே..ஹே....

    பதிலளிநீக்கு
  3. //நிரூபன் said...
    ஐயா, வாலறுந்த நரி கதை சூப்பர், உண்மையில் ஆத்ம திருப்திக்காகத் தான் எழுதுகின்றோம். ஹிட்ஸை வைத்து பலர் அண்ணா நகரில் அப்பார்மெண்ட் வாங்க போட்டி போடுவதனைத் தான் கண் கூடாகப் பார்த்திருக்கிறேன்.//

    புது வருட வாழ்த்துக்கள்.

    நன்றிகள் பல நிரூபன். நீங்களும் என் மாதிரிதான் போலிருக்குது. காலங்கார்த்தால விடியறதுக்கு முன்னாடி எழுந்திருச்சு கம்ப்யூட்டர் முன்னாடி உக்காந்திருவீங்க போல.

    பதிலளிநீக்கு
  4. //நிரூபன் said...
    ஹிட்ஸை வைத்து பலர் அண்ணா நகரில் அப்பார்மெண்ட் வாங்க போட்டி போடுவதனைத் தான் கண் கூடாகப் பார்த்திருக்கிறேன்.//

    நான் கோவையில ரேஸ் கோர்ஸ்ல அபார்மென்ட் வாங்கியாச்சு. (கனாவுல)

    பதிலளிநீக்கு
  5. சிறந்த பதிவு. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    நான் வேலை நேரத்திலேயே கம்பெனி வேலை இல்லாத போது பதிவுகளை எழுதி விடுவதுண்டு. எனவே என்னை கணிணி அதிகமாக ஆக்கிரமிக்க விடுவதில்லை.

    பதிலளிநீக்கு
  6. வளமும் நலமும் பெற 2012 புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  7. நல்ல வேளை இதுவரை வாலை அறுத்துக் கொள்ளவில்லை
    அருமையான கதை அருமையான பதிவு
    அருமையான புத்தாண்டு முடிவும் கூட
    பகிர்வுக்கு நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
    த.ம 3

    பதிலளிநீக்கு
  8. புரியிற மாதிரி இருக்கு. ஆனா, புரிய மாட்டேங்குது! புது வருடத்திலாவது புரிந்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. வணக்கம்!

    //பதிவுலகம் ஒரு மாயா உலகம். நிஜ உலகத்தில் பெயர் வாங்கினாலும் ஏதோ அர்த்தம் இருக்கிறது. மாயா லோகத்தில் பெயர் வாங்கி என்ன செய்யப் போகிறோம்.//

    மாயா லோகத்தில் இருந்தாலும், சொந்த பெயரில் உண்மையை எழுதும் உங்களைப் போன்றவர்களுக்கு நிச்சயம் அங்கீகாரம் உண்டு.படிக்காமல் எந்த பின்னூட்டமும் நான் இடுவதில்லை.எனது உளங் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. //அமைதி அப்பா said...

    புரியிற மாதிரி இருக்கு. ஆனா, புரிய மாட்டேங்குது! புது வருடத்திலாவது புரிந்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.//

    Thanks for the new year Greetings.

    Nothing to worry about understanding my intentions, Sir. I felt that I have become more obsessed/concerned with comments, visitors, etc. to my blog. This post is to remind me that "blog" is not such a big thing to be obsessed with.There are many more things in the real world that needs my attention.

    Sorry for giving the reply in English. I have installed linux in my PC and working from it. I could not install Tamil fonts yet in Linux.

    பதிலளிநீக்கு
  11. வணக்கங்க அண்ணா :))

    மாயாலோகத்துல இருக்கிற நேரத்தை குறைச்சாலே இதுக்கெல்லாம் விடிவு வரும். ஆனா அனுபவத்தில இரண்டு அல்லது மூன்று வருடம் ஆனாத்தான் இது புரியுது:)

    எது எப்படி இருந்தாலும் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்வதில் மகிழ்கிறேன்

    பதிலளிநீக்கு
  12. என் அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
  13. உங்கள் வழி தனி வழி . வாழ்த்துகள்
    In the name of Allah The most Gracious The most Merciful!
    Indeed all the praises are due to Allah, we praise him and we seek his assistance and forgiveness, and we seek refuge in Allah.
    Every mistake is from me, and any Truth is from Allah, The Enduring One, He is the Enduring One, I know nothing save that which He hath taught me.
    S.E.A.Mohamed Ali (Jinnah)

    பதிலளிநீக்கு
  14. அன்பு கந்தசாமி ஐயா, தங்கள் பதிவுகளை விடாமல் தொடர்ந்து படித்து வருபவன் நான். முகப்பு வார்த்தைகளில் மாற்றம் காண்கிறேன். நான் வலைப்பூவை ஒரு wailing wall என்றுதான் கருதுகிறென். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. //Nothing to worry about understanding my intentions,//

    மிகவுவும் தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். அதில் ஒன்றும் சந்தேகமில்லை.

    பதிவுலகம் பற்றி எல்லாம் புரிந்தும். இன்னும் அந்த சிக்கலில்(மாயையில்) இருந்து நான் மீளவில்லை அல்லது மீள முடியவில்லை என்பதே என்னுடைய பதில். அதைத்தான் அப்படிக் குறிப்பிட்டேன்.

    புத்தாண்டு அன்று பிறரை குழப்பிய பாவத்திற்கு ஆளாகி விட்டேன்! எது எப்படியோ தங்களின் விளக்கம் நன்று. என்னுடைய பின்னூட்டத்தை சீரியஸாக எடுக்கொள்ள வேண்டாம்.

    மீண்டும் அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  16. //மென்பொருள் பிரபு said...
    Tamil fonts are already there. you should install ibus from package manager.//

    நன்றி, பிரபு. முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  17. //அமைதி அப்பா said...
    //Nothing to worry about understanding my intentions,//

    மிகவுவும் தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். அதில் ஒன்றும் சந்தேகமில்லை.

    பதிவுலகம் பற்றி எல்லாம் புரிந்தும். இன்னும் அந்த சிக்கலில்(மாயையில்) இருந்து நான் மீளவில்லை அல்லது மீள முடியவில்லை என்பதே என்னுடைய பதில். அதைத்தான் அப்படிக் குறிப்பிட்டேன்.

    புத்தாண்டு அன்று பிறரை குழப்பிய பாவத்திற்கு ஆளாகி விட்டேன்! எது எப்படியோ தங்களின் விளக்கம் நன்று. என்னுடைய பின்னூட்டத்தை சீரியஸாக எடுக்கொள்ள வேண்டாம்.

    மீண்டும் அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துகள்!//

    குழப்பத்திலிருந்துதான் தெளிவு பிறக்கும் நண்பரே.

    பதிலளிநீக்கு
  18. ஆயிரம் தான் இருந்தாலும் பெரியவர்கள் பெரியவர்கள்தான்.
    அதில் எவருக்கும் சந்தேகமே வேண்டாம்.
    பதிவுலகை இவ்வளவு எளிமையாக, உண்மையாக இனி எந்த கொம்பனாலும் விளக்க முடியாது.
    இது ஒரு மாய உலகம் தான் என்பதில் ஆரம்பத்திலிருந்தே ஒரு தெளிவு இருக்கிறது.
    இங்கு வாலை அறுத்துக்கொண்ட நரிகள் ஏராளம்.

    ஆனால் ரொம்ப பேருக்கு இதை சகிக்க இயலாது. அதுதான் தொல்லையே.

    பதிலளிநீக்கு
  19. மனதில் பட்டதை சொல்லியிருக்கிறீர். பொதுவாகப் பார்த்தால் ஒன்றுமில்லை என்றுதான் தோன்றும். ஆனால், 'ஊருன் கேணி' போன்று நமது எழுத்துத் திறமை கொஞ்சம் கொஞ்சமாய் மெருகூட்டப் படுகிறது, அதனால், பதிவு எழுதுவதை நல்ல ஒரு வாய்ப்பாகத்தான் நாம் நினைக்க வேண்டும்.

    வால் அறுந்த நரி கதை பதிவுலகத்திற்கு மட்டுமல்ல, பொது உலகிற்கும் பொருந்தும்.

    300 பதிவெழுதிய தங்களுக்கு எனது வாழ்த்துகள்,

    பதிலளிநீக்கு
  20. அய்யா 300வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!உங்களுடைய தீர்மானம் வரவேற்க தக்கது,

    கண்ணீர் அஞ்சலி பதிவில் சென்று அருமை,மிக்க மகிழ்ச்சி!இன்று என் வலையில் இன்பமாக இருப்பது எப்படி? என்று கருத்திடுகிறார்கள்....அதனால்தான் இந்த முடிவு என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  21. இந்த புதுவருடத்தில் நான் படித்த மிக அருமையான பதிவு. இப்படி ஒரு மாயையில் பலர் சிக்கி இருக்கிறார்கள். உங்களின் பதிவு அவர்களின் கண்களை திறக்கட்டும்.

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  22. என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். 300வது பதிவுக்கு என் வாழ்த்துகள் சார்.

    பதிலளிநீக்கு
  23. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    300 பதிவிற்கு வாழ்த்துகள்.மேலும் தொடர்ந்து எழுத வேண்டுகிறோம்.

    அருமையான கதை.

    எல்லா புது வருட தீர்மானம் போலவே தானே இந்த தீர்மானமும்.

    பதிலளிநீக்கு
  24. புத்தாண்டு வாழ்த்துகள். நான் என் ஆத்ம திருதிக்காக எழுதுகிறேன். பின்னூட்டங்கள், ரேங்க் இதெல்லாம் அத்கம் எதிர்பார்ப்பதில்லை. நன்றாக எழுதும் பட்சத்தில் அதெல்லாம் தானாகவே வரும்.

    பதிலளிநீக்கு
  25. @வணக்கம் ஐயா.இப்போ என்ன பண்ணலாம்?எழுதலாமா?/வேண்டாமா?
    ஒன்றுமே புரியவில்லையே!
    நானும் பலவேளைகளில் இப்படியெல்லாம் யோசித்திருக்கிறேன்தான்.ஆனால்,முடிவெடுக்கத்தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  26. //சுவடுகள் said...
    @வணக்கம் ஐயா.இப்போ என்ன பண்ணலாம்?எழுதலாமா?/வேண்டாமா?
    ஒன்றுமே புரியவில்லையே!
    நானும் பலவேளைகளில் இப்படியெல்லாம் யோசித்திருக்கிறேன்தான்.ஆனால்,முடிவெடுக்கத்தெரியவில்லை.//

    குழம்பாதீங்க. நீங்க எதுக்காக எழுதறீங்க அப்படீங்கறதில தெளிவா இருங்க. கமென்ட்ஸ். ஹிட்ஸ் எல்லாம் அதிகமா வேணும்னு நெனச்சு எழுதினாத்தான் குழப்பம் வரும். அதையெல்லாம் எதிர் பார்க்காம எழுதினா ஒழு குழப்பமும் வராது.

    பதிலளிநீக்கு
  27. //என். உலகநாதன் said...
    புத்தாண்டு வாழ்த்துகள். நான் என் ஆத்ம திருதிக்காக எழுதுகிறேன். பின்னூட்டங்கள், ரேங்க் இதெல்லாம் அத்கம் எதிர்பார்ப்பதில்லை. நன்றாக எழுதும் பட்சத்தில் அதெல்லாம் தானாகவே வரும்.//

    கரெக்டுங்க உலகநாதன்.

    பதிலளிநீக்கு
  28. நல்ல பதிவு.
    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  29. தங்கள் 300 வது பதிவுக்கு முதலில் வாழ்த்துக்கள் ஐயா..

    கதை நன்றாக இருந்தது.

    தொடரட்டும் தங்கள் சாதனை..

    பதிலளிநீக்கு
  30. தங்களுக்கு இனிய புத்தாண்டு மற்றும் 300 ஆவது பதிவிற்கும் நல்வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    பதிலளிநீக்கு
  31. முதலில் முன்னூறுக்கு இனிய பாராட்டுகள். ஆங்கிலப் புத்தாண்டுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

    பதிலளிநீக்கு
  32. //பதிவுலகில் எல்லோரும் ஆசைப்படுவது என்னவென்றால் தங்கள் பதிவுகளுக்கு நிறைய பின்னூட்டம் வரவேண்டும், நிறைய ஹிட்ஸ் வரவேண்டும். தமிழ்மணம் திரட்டியில் நல்ல ரேங்க் வரவேண்டும். இந்த ஆசைகளில் தவறு ஒன்றும் கிடையாது. நானும் இந்த ஆசையில் சிக்குண்டவன்தான். ஆனால் இந்தப் புது வருட தினத்தன்று யோசித்தால் இந்த ஆசைக்காக நான் இழந்தது, இழந்துகொண்டிருப்பது மிகவும் அதிகம். இது தவிர்க்கப்பட வேண்டியது என்று உணர்கிறேன்.//

    முதல் பதிவை விட இப்பது உங்கள் எழுத்துக்களில் மாற்றம் இருப்பதை நல்ல மெருகு இருப்பதை நீங்கள் உணர்ந்து இருபீர்கள் இதனாம் கிடைக்கும் மன சந்தோசம் நாங்கள் அடைந்ததல்லவா? தெரிந்த எதனை பேருக்கு தெரியும் என்பதை விட எங்கள் எழுத்துக்களாம் சமுதாயத்தில் எதாவது ஒருவர் நல்ல வழியில் சென்றாறேயானால் அது அடைந்ததல்லவா? அடைந்தது நிறையவே ................ இது உங்கள் அவையடக்கமாக இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  33. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  34. உங்களுக்கும் அந்த அவஸ்தை இருக்கோ ஹா..ஹா..
    இரெண்டு தீர்மானமும் ஏ 1 :-)).

    பதிலளிநீக்கு
  35. முதலில்:
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்.

    இரண்டாவது
    தங்கள் 300 வது பதிவுக்கு பாராட்டுகள்

    மூன்றாவது:
    டாக்டரய்யாவின் புத்தாண்டு சபதம் சூப்பர்..கதை வெகு அருமை.. ம் தொடரட்டும் அசத்தல் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
  36. //கக்கு - மாணிக்கம் said...

    ஆயிரம் தான் இருந்தாலும் பெரியவர்கள் பெரியவர்கள்தான்.
    அதில் எவருக்கும் சந்தேகமே வேண்டாம்.
    பதிவுலகை இவ்வளவு எளிமையாக, உண்மையாக இனி எந்த கொம்பனாலும் விளக்க முடியாது.
    இது ஒரு மாய உலகம் தான் என்பதில் ஆரம்பத்திலிருந்தே ஒரு தெளிவு இருக்கிறது.
    இங்கு வாலை அறுத்துக்கொண்ட நரிகள் ஏராளம்.

    ஆனால் ரொம்ப பேருக்கு இதை சகிக்க இயலாது. அதுதான் தொல்லையே.//

    Welcome, Manickam.

    பதிலளிநீக்கு
  37. அன்புடன் மலிக்காவுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  38. //ஜெய்லானி said...
    உங்களுக்கும் அந்த அவஸ்தை இருக்கோ ஹா..ஹா..
    இரெண்டு தீர்மானமும் ஏ 1 :-)).//

    என்ன செய்யறதுங்க? வேற வழி தெரியல!

    பதிலளிநீக்கு
  39. .மிகவும் சிறப்பான உருப்படியான பாராட்டவேண்டிய போற்ற வேண்டிய பதிவு பாராட்டுகள் வணக்கம்.

    பதிலளிநீக்கு
  40. //மாலதி said...

    .மிகவும் சிறப்பான உருப்படியான பாராட்டவேண்டிய போற்ற வேண்டிய பதிவு பாராட்டுகள் வணக்கம்.//

    மிக்க நன்றி, மாலதி.

    பதிலளிநீக்கு