திங்கள், 9 ஜனவரி, 2012

நிறைவேற முடியாத இரண்டு கனவுகள்.



சிறு வயதிலிருந்தே புது இடங்களுக்கு டூர் போக எனக்கு மிகுந்த ஆசை இருந்து வந்திருக்கிறது. அப்போது வசதி இல்லை. பின்பு படித்து முடித்து வேலைக்கு சேர்ந்த பின், பல இடங்களைப் பார்த்தும் ஆகிவிட்டது. இருந்தாலும் ஊர் சுற்றும் ஆசை இன்னும் இருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன் மனைவியுடன் மலேசியா, சிங்கப்பூர் போய் வந்து ஒரு நாலைந்து பதிவுகள் தேத்தினேன்.

அப்போது சில சங்கடங்களை அனுபவித்தேன். அந்த அனுபவத்தினால்தான் இந்த இரண்டு கனவுகளும் (நிறைவேற வாய்ப்பு 100 % இல்லாத, இரண்டு ஆசைகள்) தோன்றின.

ஆசை ஒன்று
இரண்டு செட் காவி டிரெஸ். ஒன்று போட்டுக்கொள்ள. இரண்டாவது மாற்றிக்கொள்ள. தலையை மொட்டை அடித்து, அதற்கு ஒரு காவித்துணியை பித்துக்குளி முருகதாஸ் ஸ்டைலில் கட்டிக் கொள்ளவேண்டியது. தோளில் ஒரு ஜோல்னாப்பை. அதற்குள் மாற்று டிரெஸ். ஒரு போர்வை. வேறு பணம் காசு, ஒன்றும் எடுத்துக்கொள்ளக் கூடாது. பயணங்கள் முழுவதும் ஓசி. சாப்பாடும் ஓசி. திண்ணை கண்ட இடத்தில் தூக்கம். தண்ணி கண்ட இடத்தில் நித்திய கடமைகள்.
இப்படி ஒரு ஆறு மாதம் இந்தியா முழுவதும் சுற்றி வரவேண்டியது. இந்த ஆசை எந்த ஜன்மத்திலாவது நிறைவேறும் என்று நம்பிக்கொண்டிருக்கிறேன்.

இரண்டாவது ஆசை
இதிலும் முதல் ஆசை போலவே கையில் காசு, பணம் ஒன்றும் எடுத்துக் கொள்ளக்கூடாது. ஒரு வித்தியாசம். ஒரு உதவியாளர் எல்லா வேலைகளையும் பார்த்துக்கொள்ளுவார். டூர் ஏற்பாடுகள் அனைத்தும் பக்காவாக முதலிலேயே ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும். வீட்டு வாசலில் டாக்சி வந்து நின்றவுடன் ஐயா ஏறிக்கொள்வார். ஐயா ஒரு சாமானையும் கையில் தொடமாட்டார். எல்லாம் உதவியாளர் பார்த்துக்கொள்வார். ரயிலோ, பிளேனோ, உதவியாளர் பின்தொடர பயணம் நடக்கும்.

சேரவேண்டிய இடத்தில் வாகனவசதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். ஓட்டலுக்குப் போய் தினசரி கடமைகளை முடித்துவிட்டு, அன்று போடவேண்டிய டிரஸ்களை உதவியாளர் எடுத்துக் கொடுக்க, வெளிவேலைகள் தொடங்கும். இப்படியாக பார்க்க வேண்டிய இடங்களைப் பார்த்து முடித்து விட்டு, அடுத்த ஊர் போகவேண்டியது.
இந்த மாதிரி டூர் போக அம்பானி அளவு சொத்து இருந்தால் போதும் என்று கருதுகிறேன். அடுத்த ஜன்மத்திலாவது அந்த பாக்கியத்தை அருளுமாறு பரம்பொருளை வேண்டிக்கொள்கிறேன்



15 கருத்துகள்:

  1. புத்தாண்டு சபதமா....? இவை இரண்டும் நடக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

    பதிலளிநீக்கு
  2. இரண்டுமே நல்ல ஆசைகள் தான்.... :)))

    நிறைவேற எல்லாம் வல்லவன் அருள் புரியட்டும்....

    பதிலளிநீக்கு
  3. அருமையாகச் சொல்லிப் போகிறீர்கள்
    முதல் ஆசை நிறைவேற மனத் தைரியம் மட்டும்
    இருந்தால் போதும்
    நான் பதினைந்த நாட்கள் அப்படி இருந்திருக்கிறேன்
    புத்தங்கள் தராத படிப்பினைகளை அது தந்தது
    நீங்கள் சொல்வது போல் இர்ண்டாவது ஆசைதான்
    கொஞ்சம் கடினம்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 2

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் ஐயா,
    இரண்டு ஆசைகளும் நிறைவேற வாழ்த்துக்கள்.
    முதலாவது ஆசை. துறவறம் பற்றியது.
    இரண்டாவது ஆசையினை நினைக்கையில் ஏதோ ஒரு படத்தில் பெரியவரை அழைத்துச் சென்று உபசாரம் செய்யும் காட்சிகள் தான் நினைவிற்கு வந்தது.

    கனவுகள், எண்ணங்கள் யாவும் வண்ணங்களாகும்!

    வாழ்த்துக்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
  5. ரெண்டாவது கனவு நிறைவேற வாழ்த்துக்கள் :-)

    பதிலளிநீக்கு
  6. இரண்டுமே நடக்கட்டும்....
    அதையும் பதிவா போடுவிங்கள்ள ஐயா...

    பதிலளிநீக்கு
  7. //வெங்கட் நாகராஜ் said...
    இரண்டுமே நல்ல ஆசைகள் தான்.... :)))

    நிறைவேற எல்லாம் வல்லவன் அருள் புரியட்டும்...//

    டில்லி வருவேன். நீங்கதான் ஹோஸ்ட்?!!!!!

    பதிலளிநீக்கு
  8. //தமிழ்வாசி பிரகாஷ் said...
    இரண்டுமே நடக்கட்டும்....
    அதையும் பதிவா போடுவிங்கள்ள ஐயா...//

    கட்டாயம் போடுவேன். பதிவுலகம்தான் நம்ம வாழ்க்கைன்னு ஆயிடுச்சு. அப்புறம் வேற என்ன செய்யமுடியும்?

    பதிலளிநீக்கு
  9. இரண்டு ஆசைகளுமே இரு துருவங்கள். ஒன்று முற்றும் துறக்க. இரண்டாவது எல்லாவற்றையும் அனுபவிக்க. வித்தியாசமான ஆசை. இரண்டுமே உங்கள் கையில்.!

    பதிலளிநீக்கு
  10. //டில்லி வருவேன். நீங்கதான் ஹோஸ்ட்?!!!!!// வாங்க... :) ஹோஸ்டிட்டா போச்சு!

    பதிலளிநீக்கு
  11. ப்....பூ ...இவ்ளவு தானா .... இதற்கொன்றும் நீங்க அம்பானியா ஆக வேண்டியதில்லையே. இந்த பிறவியிலேயே இவைகளை நீங்கள் நிறைவேற்றி கொள்ளலாம்.
    ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து கொண்டு எம்.எல் .ஏ . இல்லாட்டி எம்.பி. ஆயிடுங்க .
    அவ்ளவுதான்.
    எனகென்னவோ உங்களுக்கு காங்கிரசில் சீட்டு கிடைக்கலாம் போல தோன்றுகிறது .
    //முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். //

    அது சரி.......எங்க அண்ணியார் மீது உங்களுக்கு ஏன் இந்த கோபம் சாமீ???

    பதிலளிநீக்கு
  12. அய்யா , முதலில் தாங்கள் நீடுடி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். டைம், money , energy , வாழ்வின் முன்று பருவத்தில் வெவ்வேறாய் அமைந்து விடுகிறது. இளமை பருவத்தில் நேரமும் energy -யும் கைகொடுக்கும் அளவுக்கு பணம் இருப்பதில்லை. சம்பாதிக்கும் பொது காலம் கை கொடுப்பதில்லை. முதுமையில் நேரமும் , பணமும் கை கொடுக்கும் ஆனால் energy .....?

    ஒரு முறை முடிந்தால் bucketlist என்ற திரைபடத்தை பார்க்கவும்.

    லண்டன்-கு வர முடிந்தால் ஹோஸ்ட் ஆக இருக்க நான் ரெடி.

    பதிலளிநீக்கு
  13. //HariV is not a aruvujeevi said...
    அய்யா , முதலில் தாங்கள் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். டைம், money , energy , வாழ்வின் மூன்று பருவத்தில் வெவ்வேறாய் அமைந்து விடுகிறது. இளமை பருவத்தில் நேரமும் energy -யும் கைகொடுக்கும் அளவுக்கு பணம் இருப்பதில்லை. சம்பாதிக்கும் போது காலம் கை கொடுப்பதில்லை. முதுமையில் நேரமும் , பணமும் கை கொடுக்கும் ஆனால் energy .....?// மிகவும் சரியாகச்சொல்லியுள்ளீர்கள். எனக்கு இப்போது நேரமும் பணமும் இருக்கிறது. ஆனால் energy இல்லை. என்ன செய்யமுடியும்?

    ஒரு முறை முடிந்தால் bucketlist என்ற திரைபடத்தை பார்க்கவும்.

    லண்டன்-கு வர முடிந்தால் ஹோஸ்ட் ஆக இருக்க நான் ரெடி.// கடவுள் சித்தமிருந்தால் நடக்கட்டும். உங்கள் அன்புக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  14. முதலில் இரண்டாவது ஆசை ஐ கஷ்டப்பட்டு நிறைவ்ற்றுங்கள் ,முதல் ஆசை தன்னால் நிறைவேறி விடும்

    பதிலளிநீக்கு