புதன், 11 ஜனவரி, 2012

குட்டையர்களே அழகானவர்கள்


மனிதர்களில் எப்படியோ, மரங்களில் குட்டை மரங்கள் எப்போதும் கவனத்தை ஈர்க்கும். இந்த மாதம் 6 ம் தேதி முதல் 8 ம் தேதி வரை கோயமுத்தூர் வேளாண்மைப் பல்கலைக் கழக தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற மலர்க் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த குட்டை மரங்களைப் பாருங்கள்.








































இந்த மாதிரி மரங்களை சித்திரவதை செய்யலாமா? அது 
கொடுமையல்லவா? என்று சிலர் சிந்திக்கக் கூடும்.


அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது.


1. பச்சிளம் பாலகர்களை படிப்பு என்கிற போர்வையில் சித்திரவதை 
நடக்கிறதல்லவா?


2. வயதான பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து அவர்களை 
தனிமைப் படுத்துவது கொடுமையல்லவா?


3. ஒரு பெண்ணை கல்யாணம் கட்டிக் கொண்டு வந்த பிறகு
வரதட்சிணை, சீர் வரிசைகளுக்காக கொடுமைப் படுத்தவில்லையா?


4. நம் உணவிற்காக எத்தனை உயிர்களைக் கதறக் கதறக் 
கொல்லுகிறோம். அது சித்திரவதையல்லவா?


செடி கொடிகளுக்கு ஒரு உணர்வு மட்டுமே இருக்கிறது. அதனால்தான் 
அவைகளை நாம் நம் உணவுக்காக பயிர் செய்து பின்பு அவைகளைக் 
கொன்று உண்ணுகிறோம்.


இது வெறும் வீண் விவாதத்திற்காக சொல்வது என்று நீங்கள்
கருதினாலும் அதை நான் தவறென்று கொள்ளமாட்டேன். உங்கள் 
கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.  





18 கருத்துகள்:

  1. இது வெறும் வீண் விவாதத்திற்காக சொல்வது. அவை பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்பதால் அவற்றை வளர விடாமல் உயிரோடு வைத்துக்கொள்வது.... சித்திரவதையே..

    பதிலளிநீக்கு
  2. நல்ல பதிவு. இது அந்த தாவரங்களுக்கு தரப்படும் சித்திரவதை தான்.
    படத்தொகுப்புகள் அருமை. உங்களது கருத்துகள் அருமை.
    இந்த பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  3. //Rathnavel said...
    நல்ல பதிவு. இது அந்த தாவரங்களுக்கு தரப்படும் சித்திரவதை தான்.
    படத்தொகுப்புகள் அருமை. உங்களது கருத்துகள் அருமை.
    இந்த பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.நன்றி ஐயா.//

    நன்றி, ரத்தினவேல் அவர்களே.

    பதிலளிநீக்கு
  4. //bandhu said...
    இது வெறும் வீண் விவாதத்திற்காக சொல்வது. அவை பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்பதால் அவற்றை வளர விடாமல் உயிரோடு வைத்துக்கொள்வது.... சித்திரவதையே..//

    கருத்துக்கு நன்றி, பந்து அவர்களே.

    பதிலளிநீக்கு
  5. பக்காவா இருக்குங்க உங்க கட்டுரை. நான் பொறுமையாக ஒரு வரி விடாமல் வாசித்தேன். நம்ம கடைப் பக்கமும் கொஞ்சம் வாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வந்தேன்.பார்த்தேன். ரசித்தேன். தேனான உங்கள் பதிவுகள் வளர்க.

      நீக்கு
  6. அருமையான புகைப்படங்கள் ஜயா நல்ல பகிர்வு

    பதிலளிநீக்கு
  7. நமக்குத்தான் அது சித்ரவதயாகத் தெரிகிறது.அதுவே கண்ணாடியில் ஒருமுறை தன்னை பார்த்துக்கொண்டால் இப்படியே இருக்கத்தான் விரும்பும்..குட்டிதான் அழகு..குட்டைதான் அழகு..வயது தெரிவதில்லை..

    பதிலளிநீக்கு
  8. ஸலாம் டாக்டர்.கந்தசாமி,
    என் வாழ்வில் ஒன்றிரண்டு பொன்சை மரங்களை பார்த்ததுண்டு. இத்தனையையும் ஒன்றாய் ஓரிடத்தில் பார்த்தது இல்லை.

    மிக வித்தியாசமான அனுபவம் இந்த காட்சிப்பதிவு. அதிலும், அந்த ஒரு 'மரம்' (...என்று சொல்லலாம் தானே..?) இத்துனூண்டு தொட்டிக்குள் இம்பூட்டு விழுதுகளுடன்... ஆஹா... அருமை..!

    இதை ஒரு கலை என்ற ரீதியில் ரசிக்க வேண்டுமே அன்றி...'சித்ரவதை' என்றெல்லாம் விவாதிக்க விரும்பவில்லை நான்..!

    மிக்க நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  9. இந்த மரங்களைப் பார்க்கும்போது "Child Prodigy" தான் ஞாபகம் வருகிறார்கள். அதாவது, 6 வயதிலேயே கார் ஓட்டத் தெரியும், 8 வயதில் காலேஜ் படிப்பு படிக்கு தகுதி பெற்றிருக்கீறான், 10 வயதில் மைக்ரோசாஃப்ட் பட்டம் பெற்றுவிட்டான் என்றெல்லாம் சொல்வார்களே, அந்தச் சிறுவர்கள்தான் "Child Prodigy"க்கள்.

    சிறுவயதில் அதிக ஐ.க்யூ. உடன் விளங்கும் இவர்கள், வளர்ந்தவுடன் என்ன ஆகிறார்கள் என்றே யாருக்கும் தெரியவில்லை. பாவம், விளையாடிக் கழிக்க வேண்டிய வயதில் விளையாட முடிவதில்லை.

    எனினும், இந்த மரங்கள் பார்க்க மிக அழகு. உடையவர்களுக்குப் பெருமை (மட்டுமே, வேறு பயனில்லை!!). முக்கியமாக, புயல்களால் அழிவில்லை. :-))))))

    பதிலளிநீக்கு
  10. சமீபத்தில் படித்தேன். கேரளாவில் ஒரு வகை மாடுகள்
    ( இப்போது அரிய இனம் என்று கருதப் படுகிறது )குட்டை ஜாதியாம். 90 செண்டிமீட்டர் உயரமே. அது தரும் பாலில் விசேஷ சத்துக்கள் இருக்கிறதாய்க் கூறுகிறார்கள். அவை இயற்கையிலேயே குட்டை ஜாதி.
    எனக்கென்னவோ அழகியல் என்று நினைத்து என்னென்னவோ செய்கிறோம் என்றே தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம்! இயற்கையோடு போட்டியிடும் மனிதனின் மனோபாவத்தினை வெளிச்சம் போடும் படங்கள்.

    பதிலளிநீக்கு
  12. இதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும் .... இங்கே ஒரு ஆரஞ்சு செடி (மரம்) பழங்களுடன் இருந்தது ..விலை கேட்டதும் எனக்கு மயக்கம் வராத குறைதான் .. நம்ம ஊருக்கு 45 ஆயிரம் விலை வருதுங்கோவ் :-)))

    பதிலளிநீக்கு
  13. பார்க்க அழகாகத்தான் இருக்கும்.

    வளர்ப்பது சிரமம்தான். கைகால்எல்லாம் முறிச்சுத்தான் வளர்க்கவேண்டும்.:))

    பதிலளிநீக்கு