திங்கள், 19 நவம்பர், 2012

பின்னூட்டம் போட இடைஞ்சல்கள்

ஒரு பதிவப் படிச்சா நல்லா இருந்தா, பின்னூட்டம் போடலாமுன்னு விரும்புகிறோம்.

முக்கால்வாசி பதிவுகளில் இது ஒரு பிரச்சினை இல்லை. பின்னூட்டம் போட்டமா, பப்ளிஷ் பட்டனை அமுக்கினமா, வெளியில வந்தமான்னு இருக்குது. இந்த மாதிரி பதிவுகளுக்குப் பின்னூட்டம் போடுவது ஒரு சுகமான அனுபவம். அந்தப் பதிவர் கமென்ட் மாடரேஷன் வச்சிருந்தா வச்சுக்கட்டும். பின்னூட்டம் போடுவதில் அது ஒரு பிரச்சினை இல்லை.

சில பதிவுகளில் IAS  பரீட்சை மாதிரி இந்தப் படத்திலுள்ள எழுத்துகளை இந்தக் கட்டத்தினுள் எழுது என்று வைத்திருக்கிறார்கள். இது ஏன் என்று என்னுடைய களிமண் மூளைக்குப் புரியவில்லை. தங்களுடைய பதிவிற்குப் பின்னூட்டம் வேண்டாமென்று நினைக்கிறார்களா என்று தெரியவில்லை.

அப்புறம் இந்த வேர்டுபிரஸ் பதிவுகளுக்குள் போனால் பின்னூட்டம் போடுவதற்கு உங்கள் ஏழு தலைமுறை ஜாதகத்தைக் கேட்கிறது. அந்த அளவு பொறுமை எனக்கு இல்லை. என்னால் முடியவில்லை.

ஊதுகிற சங்கை ஊதிவிட்டேன். விடிகிற அப்போ விடியட்டும்.

34 கருத்துகள்:

  1. //சில பதிவுகளில் IAS பரீட்சை மாதிரி இந்தப் படத்திலுள்ள எழுத்துகளை இந்தக் கட்டத்தினுள் எழுது என்று வைத்திருக்கிறார்கள். இது ஏன் என்று என்னுடைய களிமண் மூளைக்குப் புரியவில்லை. தங்களுடைய பதிவிற்குப் பின்னூட்டம் வேண்டாமென்று நினைக்கிறார்களா என்று தெரியவில்லை.

    அப்புறம் இந்த வேர்டுபிரஸ் பதிவுகளுக்குள் போனால் பின்னூட்டம் போடுவதற்கு உங்கள் ஏழு தலைமுறை ஜாதகத்தைக் கேட்கிறது. அந்த அளவு பொறுமை எனக்கு இல்லை. என்னால் முடியவில்லை.//

    உண்மையை அருமையாகக் கூறியுள்ளீர்கள்.
    சிலரைத் திட்டி அசிங்கமான பின்னூட்டம் வருவதால்
    இந்த வடிகட்டிகள் எனக் கூறுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  2. நான் ஊத நினைத்த சங்கு
    நீங்கள் ஊதிவிட்டீர்கள்
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. ஆமாம்... ஆமாம்.... உண்மை....உண்மை... சில இடங்களில் வார்த்தை சரிபார்க்கும் சோதனை வேண்டாமே நீக்கி விடுங்கள் என்று சொல்லிப் பார்ப்பது உண்டு. அப்புறம் படிப்பதோடு சரி.. பின்னூட்ட சோதனைப் பக்கம் செல்வதில்லை! வர்ட்ப்ரஸ் பதிவுகள் பக்கம் பற்றி நீங்கள் சொவதும் மிகச்சரி!

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் அய்யா,
    நான் புதிய பதிவர் எனது கருத்தும் அது தான்.
    .
    http://boopathy2012.blogspot.in/

    பதிலளிநீக்கு
  5. // பின்னூட்டம் போட்டமா, பப்ளிஷ் பட்டனை அமுக்கினமா, வெளியில வந்தமான்னு இருக்குது. இந்த மாதிரி பதிவுகளுக்குப் பின்னூட்டம் போடுவது ஒரு சுகமான அனுபவம். //

    நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. கருத்துரை பெட்டியில் (Comment Box) சிலர் ( தான் ஒரு உஷார் பேர்வழி என்பது போல) ஏதேதோ தடைகள் வைக்கிறார்கள். அந்த பதிவுகள் பக்கம் கருத்துரை போடும் அளவுக்கு எனக்கு பொறுமை கிடையாது. எனவே தாவல் (Skip) செய்துவிடுவேன்.

    பதிலளிநீக்கு
  6. பின்னூட்டத்தில் அசிங்கம் செய்பவர்களை கட்டுப்படுத்த மட்டுமே. மேலும் தூங்கி எழுந்து பார்த்தால் நமது வலைபூவிலே நம்மையே கேளிக்கையாக்கி வைப்போரை கட்டுப்படுத்த மட்டுமே. மற்றபடி பின்னூடம் இடுவோரின் தகவல்களை திரட்டி விற்பதற்கு இல்லை என்றது என் கருத்து.

    பதிலளிநீக்கு
  7. எனக்கும் இதுபோன்ற கசப்பான அனுபவங்கள் ஏராளம்

    நல்லதொரு பகிர்வு !

    தொடர வாழ்த்துகள்...

    டிஸ்கி :
    இந்தப் பதிவுக்கு பின்னூட்டம் இட்டது எனக்கு ஈசியாக இருந்து :)

    பதிலளிநீக்கு
  8. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    சின்ன வேண்டுகோள் : Comment Approval (Comment Moderation) வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த Word verification-யை எடுத்து விடுங்கள்... வயதானவர்கள் கருத்திட சிரமப்படுவார்கள்... பல பேர் விரும்புவதும் இல்லை... வாசகர்கள் வருவதும் குறைந்து விடும்... (Word verification image-இரண்டு அல்லது மூன்று முறை முயற்சித்து பிறகு தான் கருத்துரை Publish செய்ய முடிந்தது...)

    (Settings--->Posts and Comments--->Show Word Verification---> select 'No')
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    இது போல் பல தளங்களில் தெரிவித்தும் விட்டேன்... சிலர் மாறுவதாக இல்லை...

    நல்லதொரு செய்தியை ஊதின சங்கிற்கு நன்றி...
    tm5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் புரியும் வண்ணம் விளக்க தந்த தனபாலன் சாருக்கும்,பதிவை போட்ட கந்த சாமி ஐயாவிற்கும் நன்றி.

      நீக்கு
  9. பதிவை படித்தோமா அடுத்த பதிவுக்கு சென்றோமா என்று இருந்தால் போதும்.
    இவ்வளவுக்கும் நான் திறந்துதான் வைத்துள்ளேன். எந்த ஒரு தடையும் இல்லை. எனக்கு அதிக பின்னூட்டங்கள் அதிகம் வருவதில்லை. பின்னூட்டம் பற்றி கவலை இல்லை. ஆனால் அதிகம் பேர் வருகிறார்கள் என்று மட்டும் தெரியும்.
    படிக்கும் பதிவினை பற்றி கருது எழுத முனைந்து ஏதாவது கட்டுபாடுகள் இருந்தால் அப்படியே போட்டு விட்டு ஓடிப்போய்விடலாமே! இதற்காக வருத்தப்படுவானேன்?

    பதிலளிநீக்கு
  10. தங்களின் தொடர் வருகைகளுக்கு நன்றி. மின்வெட்டின் காரணமாக மற்றும் வேலை காரணங்களால் உங்கள் பின்னூட்டத்தை வெளியிட இரண்டு நாட்கள் ஆகிவிட்டது.

    பதிலளிநீக்கு
  11. புதிய பதிவர்கள் தான் இப்படி இருக்கிறார்கள் comment moderation -default setting ஆகா இருப்பதால் அவர்களுக்கு மாற்றத் தெரியாமல் அப்படியே விட்டுள்ளார்கள். wordpress-ல் தவறு பதிவர்களது அல்ல என்பதால், wordpress காரர்கள் தான் ஏதாவது செய்யணும்.

    பதிலளிநீக்கு
  12. //பதிவை படித்தோமா அடுத்த பதிவுக்கு சென்றோமா என்று இருந்தால் போதும்.//

    பதிவுகளில் உள்ள மிக அருமையான விடயமே இந்தப் பின்னூட்டமே!
    ஒரு அன்பர் தன் பதிவில் நீர்யானை படத்தைப் போட்டுவிட்டு காண்டா மிருகமெனக் குறிப்பிட்டிருந்தார்.
    அவருக்கு பின்னூட்டமூலம் அதைத் தெரியப்படுத்தினேன். அவர் அதற்கு நன்றியும் கூறினார்.
    இப்படி கருத்துப் பரிமாற்றத்துக்கு உதவும்.
    சாரு போல் எல்லோரும் , சேலைத் தூக்கி
    ஏதோ செய்து விட்டு ஓடியது போல் என எழுதிவிட்டு பின்னூட்டத்தை தூக்கி விட்டு இருந்தால் தகுமா?
    அதனால் பின்னூட்டவசதியை வடியுடன் வைக்கவும். பதிவுகள் சுவையாகும்.
    பலசமயம் பதிவைவிட பின்னூட்டம் வலுவானதாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  13. wordpress காரர்கள் தலத்தில் பதிவிட ஆசையாக இருந்தாலும்...நான் செய்வதில்லை. ஏன்? செய்யமுடிவதில்லை...

    அந்த நேரத்தில் இமயமைலையை மூன்று தரம் ஏறி இறங்கிடலாம்...!

    பதிலளிநீக்கு
  14. ///Word verification is required to prove that you are a human and not a computer program.
    If it is not required then we can disable this in blogger.///கிருஷ்ணா (Krishna) அவர்கள் சொல்லியிருக்கும் இந்த காரணம் தான் உண்மை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்னூட்டம் அதிகம் வேண்டுமென்றுதானே அனைவரும் விரும்புகிறார்கள். அந்தப் பின்னூட்டம் ரோபோ போட்டால் என்ன, மனிதன் போட்டால் என்ன?

      வேறு எதற்கோ உண்டான கட்டுப்பாடு அது. பதிவுகளுக்குத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

      நீக்கு

  15. VERIFICATION என்ற ஒன்று ஆரம்பகாலத்தில் என் பதிவுகளில் இருந்தது. நண்பர்கள் சிலர் அதை எடுக்குமாறு வேண்டினர். நீங்கள் ரோபோவா என்றும் கேள்வி இருந்தது. என்னவோ செய்து அதை நீக்கி விட்டேன். இப்போது எந்த பிரச்சனையும் இல்லாமல் பின்னூட்டம் இடலாம். இருந்தும் எந்த முன்னேற்றமும் இல்லை....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகிறவர்களை வரவேற்பதுதான் நம் வேலையே தவிர வராதவர்களைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

      நீக்கு
  16. ஹா ஹா ஹா...சரியாக சொன்னீர்கள்....நண்பர்கள் நம் பதிவுக்கு பின்னூட்டம் போடுவதே பெரிது..அதிலும் இந்த தொந்தரவுகள் இருந்தால் சிக்கல்தான்....

    பதிலளிநீக்கு
  17. அன்புள்ள கந்தசாமி அவர்களுக்கு,
    உங்களது இந்தப் பதிவைப் படித்தபின் இத்தனை பேர்கள் என் வலைபதிவைப் படித்துவிட்டு பின்னூட்டம் போடாமல் வந்துவிட்டார்களோ என்று தோன்றுகிறது!(நான் வேர்ட்ப்ரஸ் - ஸில் எழுதுகிறேன்.)
    நீங்கள் சொல்வது போல வேர்ட்ப்ரஸ் - ஸில் பின்னூட்டம் போடுவது கடினமாக இருக்கிறது என்று பலரும் சொல்லுகிறார்கள்.

    ஆனால் நம் திண்டுக்கல் அண்ணாச்சி எல்லா பதிவுகளிலும் பின்னூட்டம் 'மின்னல்' வேகத்தில் போடுகிறாரே! எப்படி என்று கொஞ்சம் சொல்லிக் கொடுக்கலாமே!

    இப்போது ப்ளாக்ஸ்பாட்டிலும் எழுதுகிறேன். இணைப்பு இதோ:

    http://thiruvarangaththilirunthu.blogspot.in/2012/11/blog-post_17.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் புது பிளாக்கைப் பார்த்தேன். பல வருடம் ஆசாரியர் தொழிலில் இருந்ததால் குறைகள்தான் முதலில் கண்ணுக்குத் தெரிகின்றன. இதற்காக என்னை மன்னிக்கவேண்டும். இரண்டு குறிப்புகள் கொடுத்திருக்கிறேன்.மிடுந்தால் செய்யவும்.

      திண்டுக்கல் அண்ணாச்சியையும் கேட்டுக்கொள்கிறேன். அம்மாவின் பதிவை மேம்படுத்த முடிந்த உதவிகளைச் செய்யவும்.

      நீக்கு
  18. நல்ல பகிர்வு என்னை போன்றோர்களுக்கு முன்பு டிஸ்கஸ் அமைப்பினை பயன்படுத்தி வந்தேன் தற்பொழுது டிஸ்கஸை நீக்கிவிட்டு மீண்டும் பிளாக்கர் கருத்துரை அமைப்புக்கே திரும்பிவிட்டேன்... இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு