திங்கள், 26 நவம்பர், 2012

நல்ல கலந்துரையாடல் - எப்படி இருக்கவேண்டும்?


சமீபத்தில் நானும் என்னுடைய இரு நண்பர்களும் என்னுடைய ஒரு உறவினர் வீட்டுக்குப் போயிருந்தோம். இதுதான் முதல் முறையாக அவர் வீட்டுக்குப்பொவது.

நாங்கள் சுமார் அரை மணி நேரம் இருந்தோம். நான் போனவுடன் என் நண்பர்களை அறிமுகப்படுத்தினேன். கொஞ்ச நேரம் கழித்து அவர் மனைவி ஸ்வீட், காரம் கொண்டுவந்து வைத்தார்கள்.

நாங்கள் போனதிலிருந்து விடை பெற்றுக்கொள்ளும் வரை, நாங்கள் அங்கே இருந்த அரை மணி நேரம் முழுவதும் அவர்தான் பேசிக்கொண்டிருந்தார். அவர் பெண்களின் புகுந்த வீட்டுப் பெருமை, தன் உத்தியோக காலத்திய பெருமை ஆகியவைகளைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தாரே தவிர, என்னைப்பற்றியோ, என்னுடன் வந்த நண்பர்களைப் பற்றியோ ஒன்றும் விசாரிக்கவில்லை.

இந்த மாதிரி அநேகம் பேர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு தமிழில் "கழுத்தறுப்பு" என்றும் ஆங்கிலத்தில் "போர்" என்றும் பெயர் வைத்திருக்கிறோம். ஏன் இவர்கள் இப்படி இருக்கிறார்கள் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

16 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வாங்க, தம்பி, ரொம்ப நாளாச்சு பாத்து.
      அப்பறம் உடாம என்ன பண்றது? இப்படி எத்தனயோ பாத்தாச்சு.

      நீக்கு
  2. அவரு நினைதிருப்பாரு டோய், ஆடு தானா கசாப்புக்கு வந்திருக்குன்னு!

    [[இதுதான் முதல் முறையாக அவர் வீட்டுக்குப்பொவது.]]

    பதிலளிநீக்கு
  3. இனிமே என்னைக்குமே அவருடைய வீட்டுக்குப் போகமாட்டீங்க தானே?

    பதிலளிநீக்கு
  4. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்பவர்கள் தான் அப்படி...

    நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரிகிறது... (அதானா...?)
    tm3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதில ஒரு வருத்தமான செய்தி என்னன்னா, அவர் பையனுக்கு 35 வயசாகிறது, இன்னும் கல்யாணம் ஆகல்ல.

      நீக்கு
  5. கலந்துரையாடலுக்கு இலக்கணம்னா எப்படி இருக்கணும்னு போட்டிருபீங்கன்னு நினைச்சு வந்தேன், கடைசியில கழுத்தறுப்பு எப்படி இருக்குங்கிற கதையாப் போச்சு!! எல்லா வித மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். என்ன செய்ய!!

    பதிலளிநீக்கு
  6. இப்படித்தான் நிறைய பேர்கள் இருக்கிறார்கள்....:))

    பதிலளிநீக்கு
  7. வீட்டிலேருந்து ஆபிஸ், ஆபீஸில் இருந்து வீடு என்று மெஷின் வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருந்த அவருக்கு,தனது ஆதங்கத்தையும், சந்தோசத்தையும் வெளிப்படுத்த கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தை எப்படி கை நழுவவிடுவார்.:-)))))))))) ஒருநாள் பேசி தீர்த்திடனும் என்று முடிவு செய்திருப்பார். நீங்க கிடைத்ததும் பயன்படுத்திக்கொண்டார்.

    சந்தோசத்திலியே சந்தோஷம் அற்ப்புதமான சந்தோஷம் எதுன்னா அது இதுதான், அடுத்தவங்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பது, நீங்க அதை செய்து விட்டீர்கள், ஆனால் அவர்கள் உங்களை சங்கடபடுத்திவிட்டார் . என்ன செய்ய இப்படியும் சில இடத்தில் அமைதியாக வந்துவிடவேண்டி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  8. உரையாடல் எப்படி இருக்கக் கூடாது என்பதை தெளிவாக உணர்த்துகிறது உங்கள் பதிவு .

    பதிலளிநீக்கு
  9. இவ்வாறு பேசுபவர்களை Narcissistic Person (தற்பெருமை பேசி) என்று சொல்வார்கள்.இவர்களைக் கண்டால் காத தூரம் ஓடுவதே நல்லது.

    பதிலளிநீக்கு
  10. நல்ல கலந்துரையாடல் - எப்படி இருக்கவேண்டும்?
    பெரியவர் நாலு நல்ல விஷயங்கள் சொல்லியிருப்பார் என்று ஆவலுடன்
    வந்தா ...!! சூப்பர் மொக்க பிளேடு போடுவது எப்படி நு காட்றார் ....
    ஐயா,உறவினர் னு சொல்றீங்க இதுதான் முதல் முறையாக போனேன்னு வேற சொல்றீங்க ...அவரு கடுப்பாயிட்டு இனிமே நீங்க வீட்டு பக்கமே வரக்கூடாது னு முடிவு செஞ்சு அப்படி பேசியிருப்பார்போல ....ஹாஹாஹா

    பதிலளிநீக்கு