செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

நான் முட்டாள் ஆனேன்.

நான் எப்போதும் என் மனதில் உள்ளதை உள்ளபடியே சொல்லிவிடுவேன். இதனால் எவ்வளவோ கஷ்ட நஷ்டங்களை அனுபவித்திருந்தாலும் என்னால் என் குணத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லை.

முன்னொரு காலத்தில் ஒரு நெசவாளி ஒரு மன்னரை ஏமாற்றிய கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். கண்ணுக்குத் தெரியாத அபூர்வ ஆடை நெய்வதில் நான் நிபுணன் என்று சொல்லி அரசனை அம்மணமாக நகர்வலம் போகச்செய்துவிட்டான். எல்லாரும் அரசனைத் துதி பாடிக் கொண்டிருக்கும்போது ஒரு குழந்தைதான் உண்மையைக் கூறியது உங்களுக்குத் தெரியும்.

அந்த மாதிரி இப்போது உலகமே போற்றிக்கொண்டிருக்கும் ஒரு சினிமாவைப் பற்றி என் கருத்தைக் கூற விரும்புகிறேன். நான் இது வரையிலும் சினிமா விமரிசனம் எழுதியதில்லை. இப்பாதும் இதை சினிமா விமரிசனமாக எழுதவில்லை.

சினிமா என்பது மக்களின் பொழுதுபோக்கு சாதனம் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். நான் ஒரு சாதாரண பிரஜை. இந்த சினிமா பத்து கோடி ரூபாய் கேமராவில் எடுக்கப்பட்டிருக்கிறது என்றாலும் சரி, கை விடியோ கேமராவில் எடுக்கப்பட்டிருந்தாலும் சரி, எனக்கு வேண்டியது என்னவென்றால் ஒரு நல்ல பொழுதுபோக்குப் படம்.

லேடெஸ்ட் சினிமா டெக்னாலஜியில் நான் இந்தப் படம் எடுத்திருக்கேன் என்றால் எனக்கென்ன ஆயிற்று? எனக்கு படம் புரிகிறதா என்பதுதான் எனக்கு முக்கியம்.

நான் ராஜா ரவிவர்மாவின் ஓவியங்களைப் பார்த்து ரசித்தவன். பிகாசோ ஓவியங்களின் கசாப்புக்கடை சீன்களை என்னால் ரசிக்க முடிந்ததில்லை. நான் பிற்போக்குவாதியாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலானோர் என்னை மாதிரித்தான் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

பாசமலர், கல்யாணப்பரிசு, தெனாலி, பஞ்ச தந்திரம் போன்ற படங்களை ரசித்துப் பார்த்திருக்கிறேன். அவைகளை எப்போதும் பார்க்கலாம். மிகுந்த பொருட் செலவில் எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் சிவாஜி என்ற படம் தோல்வியைத் தழுவியது தெரியும்.

சினிமா என்றால் பாமர ரசிகனுக்குப் புரியும்படியாக இருந்தால்தான் அது வெற்றியடையும். ரொம்பவும் டெக்னிகலான படம் என்றால் அது இந்தியாவில் விலை போகாது.

விஸவரூபம் படம் பார்த்தேன். எனக்கு ஒன்றும் புரியவில்லை. சத்தம் விதவிதமாக வருகிறது. வெறும் சத்தத்திற்காக ஒரு படம் ஓடுமா என்று எனக்குத் தெரியவில்லை. சைக்கோ என்று அந்தக்காலத்தில் ஒரு படம் வந்தது. அதில் ஒரு காட்சியில் ஒரு சப்தம் கொடுத்திருந்தார்கள். ஒரு நிமிடம் இருதயம் நின்று பிறகு துடித்தது.

இங்கே வெறும் சப்தம் மட்டும்தான் இருக்கிறது. இதற்கு நல்லாப் பூச்சாண்டி காட்டுனாங்கய்யா.

17 கருத்துகள்:

 1. நான் இன்னும் ‘விஸ்வரூபம்’ திரைப்படம் பார்க்கவில்லை. பார்த்த சிலர் உங்களைப் போல்தான் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். எந்த தொழில் நுட்பம் உபயோகப்படுத்தியிருந்தாலும் அது பாமாரனுக்கு புரிந்து அவனை மகிழ்வூட்டினால் மட்டுமே அது சிறந்த திரைப்படம் ஆகும் என்ற உங்கள் கருத்து சரியே. யாரோ சொன்னதுபோல இவ்வளவு எதிர்ப்பு இந்த படத்திற்கு இல்லையென்றால் இதுவும் தோல்விப் பட வரிசையில் சேர்ந்திருக்கும்

  பதிலளிநீக்கு
 2. விஸ்வரூபம் நிறைய பேருக்கு இரண்டாம் முறை பார்த்தால் புரிந்தாலும் புரியலாம்! கமல் ரசிகர்கள் எல்லாருமே கமலைப் போன்ற அறிவுஜீவிகள்தான் என்றால் அவர்களுக்குப் புரியலாம். எனக்குப் படம் புரிந்தது. ஆனால் அதற்கு முக்கிய காரணம்... நான் நிறைய ஹாலிவுட் படங்கள் முன்பே பார்த்ததுண்டு என்பதால் தான்! கமல் ஏன் அமெரிக்கா காரனுக்கு அல்லக்கையானார் என்று காரணம் புரியவில்லை. ஆஃப்கானிஸ்தான் பற்றி அவர் காட்டியுள்ளதில் நிறைய கள்ளத்தனம் உள்ளது....ஆனால் வாழைப்பழத்தில் விஷ ஊசி ஏற்றி கொடுப்பவர் பற்றி என்னத்த சொல்றது!

  - கமல் ரசிகன் அல்ல.

  பதிலளிநீக்கு
 3. இதையும் கொஞ்சம் படிங்கோ...

  http://ithutamil.com/content.aspx?postid=015c9cfd-b455-48ea-972f-9b519fa2ecb8#.URmriKWrmSr

  பதிலளிநீக்கு
 4. உங்கள் வெளிப்படையான கருத்துக்களுக்கு என் பாராட்டுக்கள் சார்.

  பதிலளிநீக்கு
 5. Who bothered about common man enjoying the cinema. The film got a lot of publicity without expense and people like you spent money to see it. It is the money that counts, not the satisfaction of the viewer.

  பதிலளிநீக்கு
 6. //நான் எப்போதும் என் மனதில் உள்ளதை உள்ளபடியே சொல்லிவிடுவேன். இதனால் எவ்வளவோ கஷ்ட நஷ்டங்களை அனுபவித்திருந்தாலும் என்னால் என் குணத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லை.//

  // லேடெஸ்ட் சினிமா டெக்னாலஜியில் நான் இந்தப் படம் எடுத்திருக்கேன் என்றால் எனக்கென்ன ஆயிற்று? எனக்கு படம் புரிகிறதா என்பதுதான் எனக்கு முக்கியம்.//

  //சினிமா என்றால் பாமர ரசிகனுக்குப் புரியும்படியாக இருந்தால்தான் அது வெற்றியடையும். ரொம்பவும் டெக்னிகலான படம் என்றால் அது இந்தியாவில் விலை போகாது.//

  நன்றாகவே அழுத்திச் சொன்னீர்கள்! அய்யா நானும் உங்கள் பக்கம்தான்!

  பதிலளிநீக்கு
 7. நானும் படத்தைப் பார்த்தேன் சார் ஒரு எழவும் புரியல. நிறைய ஹெலிகாப்டர் பறக்குது, டமால், டமால்னு குண்டுபோட்ரானுங்க, துப்பாக்கியால் சுடரானுங்க, வேற ஒன்னும் விளங்கல. இதுக்கு 95 கோடி செலவு, வீட்டை வச்சேன் காட்டை வச்சேன்னு பெரிய பில்டப் வேற. அங்காடித் தெரு மாதிரி செலவு குறைவாக அதே சமயம் நம் மனதுக்கு நிறைவாக எடுத்தா போதும். நமக்கும் சந்தோசம் அவங்களுக்கும் வீடு, காடு பத்திரமா இருக்கும். வெள்ளைக்காரன் வெளங்காம இருக்கிறா மாதிரி படத்தைத்தான் எடுப்பான், உலகத் தரம்னா அதுதான். தமிழ் படத்துக்கு எதுக்கு இவனுங்களை பின்பற்றனும்னுதான் தெரியல. சாதாரணமா விட்டிருந்தா படம் ஓடியிருக்காது சார், போராட்டம் அது இதுன்னு பண்ணி, எல்லா ஆங்கில TV news சேனல்கள், செய்தித் தாட்கள் எல்லாம் ஏதோ இது ஒரு தேசிய பிரச்சினை மாதிரி போட்டு, அப்புறமா படத்த விட்டதால பணத்தை அள்ளு அள்ளுன்னு அல்லிட்டானுங்க............ எப்படியெல்லாம் திட்டம் போட்டு காசை பிடுங்கரானுங்க பாருங்க.................

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தாளு தியேட்டர்காரங்க கிட்ட தகறாரு பண்ணறப்பவே நெனச்சேன், இது பில்டப் தானுன்னு. தசாவதாரம் ரிலீஸ் பண்ணறப்பவும் இதே மாதிரிதான் ஒருத்தனைப் புடிச்சு கேசு போடச்சொல்லி, ஜட்ஜு படத்தப் பாத்து, எல்லாம் நடந்துச்சு.

   அந்த டெக்னிக்ல காசு பாத்துட்டதாலே இந்தத் தடவ முஸ்லிம் அமைப்புகளைப் பிடிச்சு, அரசு தடை பண்ணறாப்பல பண்ணி, என்னா டெக்னிக், என்னா டெக்னிக். உலகத்தில இந்த மாதிரி டெக்னிக்கை ஒரு பயலும் நெனச்சுக்கூட பாத்திருக்கமாட்டான்.

   இதெல்லாம் பண்ணலைன்னா படம் இந்நேரம் பெட்டிக்குள் சுருண்டிருக்கும்.

   நீக்கு

 8. உங்களுக்குப் படம் புரியவில்லை. .பிடிக்கவில்லை. நியாயம்தான். எனக்கு இந்தப் பதிவின் தலைப்பு புரியவில்லை. ஒருவேளை ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு சென்றதைக் கூறுகிறீர்களோ.!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தப் படத்திற்கு பயங்கர பில்டப் கொடுத்தது உங்களுக்குத் தெரியும். கமலின் பல படங்களைப் பார்த்து ஆனந்தப் பட்டிருக்கிறேன். ஆகவே ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் படம் பார்க்கப்போனேன். முட்டாளாகித் திரும்பினேன்.

   நீக்கு
 9. ஜி எம் பி சார் சொல்வது போல ஏக எதிர்பார்ப்புகளோடு போவதே ஒரு காரணமாக இருக்கலாம். மற்றபடி வன்முறைப் படம் என்று அவர்கள் முன்னோட்டம் போலக் கதைச் சொல்லும்போதே தெரிந்தால் ஒதுங்கியிருப்பது நல்லது!

  பதிலளிநீக்கு
 10. நான் பார்க்கவில்லை.
  ஆயினும் காலத்தோடு
  மாற்றங்கள் சகஜம்தானே
  ஐயா.

  பதிலளிநீக்கு
 11. I have only watched the hindi version (that had escaped the TN censor). For a person who enjoys Ravi Varma paintings, "Vishwaroopam" would sure have been a disappointment- no doubt! I agree with you on the account that the movie was not worth the hype. Though, I accept that such themes are rare in Tamil films. For the audience, who have so far enjoyed "Captain" foiling the plans or "Pak. terrorists"- this theme is more real and a change-for-good. But still- I felt Kamal Hassan has made all the efforts to insert too many of his ideologies; ultimately it leaves us with an "ideology over-dose". The start and the stop points in the movie seem unconnected/mismatched. Hence, though being something new to tamil and all the other usual crap the "mutual-appreciation-societies" come up with- for me, the movie was full of many nothings. Dashavatharam was much better.

  பதிலளிநீக்கு
 12. அய்யா ....
  // மண்ணுக்குத் தெரியாத அபூர்வ ஆடை //
  எந்த மண்ணுக்கு தெரியாத ஆடை ?? அவ்அவ்..
  // கண்ணுக்கு தெரியாத அபூர்வ ஆடை // இதுதான் சரி ......பிழை திருத்தவும்
  நானும் உங்க கட்சி தான்...DVD புண்ணியத்தில் சென்ற 26 அன்றே, புரியாத படம் பார்த்து,பொன்னான நேரத்தை வீண் விரயம் செய்து விட்டேன் ......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யகோ, நான் ஒரே நாளில் இரண்டாவது தடவையாக முட்டாள் ஆனேனே!

   நீக்கு
  2. அன்புள்ள நாசர், தவறைச்சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி. இருந்தாலும் தவறை ஒப்புக்கொள்ள மனதில்லாமல் இந்த நொண்டி சமாதானத்தை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். மண் என்றால் மண்ணில் உள்ள மாந்தர் என்றும் பொருள் கொள்ளலாம் அல்லவா? எப்படி, குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை பாருங்கள்!

   நீக்கு