வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

குடும்பப் பழக்கங்களில் நவீனம்

காலத்தின் கோலத்தினால் பல பழக்கவழக்கங்கள் மாறிக்கொண்டு வருகின்றன. உறவுகளின் நெருக்கம் குறைந்துகொண்டு வருகிறது. இது காலத்தின் கட்டாயம்.

வீட்டிற்கு உறவினர் வருவதையே தொல்லையாக பலர் நினைக்கிறார்கள். காரணங்கள் பல. இன்றைய போட்டி உலகத்திலே, பல சிக்கல்கள் தோன்றியிருக்கின்றன. குழந்தைகளின் படிப்பு, அவர்களை நல்ல மேற்படிப்பு படிக்கவைக்க பெற்றோர்கள் படும் அவஸ்தை, விலைவாசிகளைச் சமாளிக்கப் படும்பாடு, ஆகியவை உறவுகளை ஒதுக்கி வைக்கச் செய்கிறது.

அடுத்த தலைமுறையினருக்கு இந்த உறவு முறைகளே தெரியாமல் போகலாம். விடுமுறையில் உறவினர் வீடுகளுக்குப் போய் சில நாட்கள் இருக்கும் பழக்கம் ஏறக்குறைய மறந்தே போய்விட்டது. இவைகளை நினைத்து பயன் ஏதும் இல்லை.

வீட்டுக்கு யாராவது வந்தால் வரவேற்பது எப்படி என்று இளைய தலைமுறையினருக்கு சொல்லிக் கொடுப்பார் யாரும் இல்லை. சில நாட்களுக்கு முன் என் உறவினர் வீட்டுக்குப் போயிருந்தேன். அந்த வீட்டுப் பெண்ணுக்கு கல்யாணம் பேசி முடித்திருக்கிறார்கள். நான் அந்தப் பெண் எங்கே என்று கேட்டேன். மேலேயுள்ள அவள் ரூமில் இருக்கிறாள் என்று பெண்ணின் தாயார் சொன்னாள். அரை மணி நேரம் கழித்து நான் திரும்பும் வரையிலும் அந்தப் பெண் கீழே வரவுமில்லை, அந்தப் பெண்ணின் தாயார் அவளைக் கூப்பிடவுமில்லை.

இந்தப் பெண் கணவன் வீட்டுக்குப் போனபின்பும்  இப்படித்தானே இருப்பாள்? இதை நான் சுட்டிக் காட்டினால் கிழவனுக்கு வேறு வேலை என்ன? சும்மா இருக்க முடியாதா? என்று நினைப்பார்கள். நான் என் பெண்ணிடம் கேட்டேன். இந்த மாதிரிப்பெண்கள் கணவன் வீட்டுக்குப் போய் என்ன வேலை செய்வார்கள் என்று. அதற்கு என் பெண் சொன்ன பதில் என்னைத் தூக்கிவாரிப்போட்டது. அவள் எதற்கு வேலை செய்யவேண்டும்? அங்கு வேலைக்காரர்கள் இருப்பார்களல்லவா, அவர்கள் வேலை செய்துவிட்டுப் போகிறார்கள் என்றாள்.

நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். நமக்கு இனிமேல் இந்த உலகில் வாழ அருகதையில்லை என்று. ஆனால் என் குறையை யார் நிவர்த்திப்பார்கள்?

28 கருத்துகள்:

 1. காலம் மட்டுமா மாறுது நீங்கள் குறிப்பிட்டதுபோல் பழக்க வழக்கங்களும் மாறிக்கொண்டே இருக்கிறது.நாம் மனதை மாற்றினாலே போதும்

  பதிலளிநீக்கு
 2. காலத்துக்கு காலம் அனைத்தும் மாறிவிடும், அதை தடுக்கவே முடியாது. உறவுகள் என்பது இன்று பெயரளவில் தான் உள்ளது. அவர்களுக்குள் நிகழும் கடும் சமூக பொருளாதார போட்டியில் உறவுகள் சிதைந்துள்ளன. இன்று உறவுகளின் இடத்தை நண்பர்களே நிரப்பி வருகின்றார்கள். காலத்துக்கு ஏற்ப பழக்கங்கள் மாறினாலும் மனிதம் சார்ந்து, கருணை, கண்ணியம், அன்பு மற்றும் பகுத்தறிவுகளோடு பழக்கங்களை மாற்றினால், அல்லது புதிய பழக்கங்களை ஏற்படுத்தினால் நிச்சயம் நன்மை தரும். நன்றிகள். அண்மையக் காலமாக உங்கள் பதிவுகளில் புதுமையும், பொலிவும், மாற்றுச் சிந்தனையும் தெரிகின்றது. வாழ்த்துக்கள் ஐயா !

  பதிலளிநீக்கு
 3. நாகரீக வாழ்க்கையின் அடிப்படைகளாக நான் கருதுவது Live for yourself, Live for today. இது தான் நடந்து கொண்டிருக்கிறது. சில வருடங்கள் கழித்து , இப்போதுள்ள இளைஞ்சர்களுக்கு வயதானவுடன், இந்த நிலை மாறும் என நம்புகிறேன்.

  பதிலளிநீக்கு
 4. சுருக்கமாக ஆயினும் உறவுகளின் இன்றைய அருமை
  யதார்த்த நிலையச் சொல்லிப் போனவிதம் அருமை
  சிந்திக்கத் தூண்டும் அருமையான பதிவு தந்தமைக்கு
  மனமார்ந்த நன்றி

  பதிலளிநீக்கு
 5. ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்
  வழுவல கால வகையினானே’
  என்கிறது நன்னூல்.எனவே காலத்தை அனுசரித்து போகவேண்டியதுதான்.

  பதிலளிநீக்கு
 6. தனிக்குடித்தனம் (திருமணம் நடந்து சில வருடங்களில்) எப்போது ஆரம்பித்ததோ, அப்போதே நல்ல பல பழக்க வழக்கங்கள் போய் விட்டன...

  பதிலளிநீக்கு
 7. உறவினர்களை வாங்க என்று வரவேற்பதையே நாம் இப்போது செய்வதில்லை என்பதே நிதர்சனமான உண்மை...

  பதிலளிநீக்கு
 8. அந்தக் காலத்தில் நிறைய குழந்தைகள். உறவுகளும் அதிகம். அதனால் எல்லோரைப்பற்றியும் எல்லோருக்கும் தெரியும். இப்போது ஒரே குழந்தை. செல்லம் அதிகம். மற்றவர்களைப் பார்த்துக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு குறைவு.

  பெற்றோர்களும் தங்களுடன் குழந்தைகளை எங்கும் அழைத்து செல்வதில்லை. ஒண்டியாகவே இருந்து ஜனங்களுடன் பழகவே தெரிவதில்லை. போதாக்குறைக்கு அலைபேசி, கணணி! மனிதர்கள் எதற்கு என்று தோன்றும் போலிருக்கு!

  பதிலளிநீக்கு
 9. இன்றைக்கு காலம் இருக்கும் இருப்பில் எதையாவது எதிர்பார்த்தோமெ ன்றால் நமக்கு ஏமாற்றம் தான்! ஆகவே மனசுக்குள்ளே "கண்டும் காணாமல் போய்க்கினே இரு" என்று சொல்லிக் கொண்டு போய்க்கினே இருந்தால் தான் பிழைக்க முடியும் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏறக்குறைய அப்படித்தான் இருக்கிறேன். இருந்தாலும் அப்பப்போ மனசு பிரள்கிறது.

   நீக்கு
 10. Hi, I would like to subscribe for this webpage to obtain newest updates,
  so where can i do it please assist.
  Here is my page : how to get rid of cellulite

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே,
   பதிவின் மேல் இடது பக்கம் கூகுள் + பாலோயர்ஸ் என்று இருக்கிறது. அதில் கிளிக் செய்தால் இந்த தளத்தில் இணையலாம்.
   ப.கந்தசாமி

   நீக்கு

 11. இதையெல்லாம் GENERATION GAP என்று சொல்கிறார்கள். எதிர்பார்ப்பின் முடிவு ஏமாற்றம் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரொம்ப கரெக்ட். என்ன ஒரு சிரமம் என்றால் இந்த Generation Gap ஐ அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

   நீக்கு
 12. உண்மைதான்! விருந்தும் உபசரிப்புக்களும் குறைந்துவிட்டன! நன்றி!

  பதிலளிநீக்கு
 13. நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். நமக்கு இனிமேல் இந்த உலகில் வாழ அருகதையில்லை என்று. ஆனால் என் குறையை யார் நிவர்த்திப்பார்கள்?//

  ஏண்ணே ஏன்? என்ன குறை உங்களுக்கு? வந்து தங்கனுமா? சொல்லுங்க லீவுல வந்துர்றேன் :)

  பதிலளிநீக்கு
 14. பழக்க வழக்கங்கள் மாறிக்கொண்டே போகின்றன. முன்பு கூட்டுவாழ்க்கை.

  இப்போது தனித்தனி வாழ்க்கையால் வந்த கோலம்தான்.

  பதிலளிநீக்கு
 15. ஐயா திரு பழனி.கந்தசாமி அவர்களின் அருமையான பதிவு. தயவு செய்து படித்துப் பாருங்கள்.
  நன்றி & வணக்கம் ஐயா.
  எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 16. >> நான் அந்தப் பெண் எங்கே என்று கேட்டேன். மேலேயுள்ள அவள் ரூமில் இருக்கிறாள் என்று பெண்ணின் தாயார் சொன்னாள். அரை மணி நேரம் கழித்து நான் திரும்பும் வரையிலும் அந்தப் பெண் கீழே வரவுமில்லை, அந்தப் பெண்ணின் தாயார் அவளைக் கூப்பிடவுமில்லை.


  ஐயா புல்லரிக்குது. நான் இதெல்லாம் புலம்பெயர்ந்த வாழ்க்கையில்தான் என்று எண்ணி மனதில் புகைந்து கொண்டிருந்தேன். அப்ப இது எங்கு போனாலும் இருக்கும்போல. ஒரு அல்ப சந்தோஷம். மொத்தத்தில் காலம் மாறிவிட்டது. (ஐயா, நானும் இறந்தகாலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவன்தான். அது இறந்தகாலம் தான். திரும்பி வரப்போவதில்லை.

  பதிலளிநீக்கு
 17. உங்கள் உணர்வுபூர்வ ஆதங்கம் நியாமானது.தந்தை வழி தொழில்முறை மாறியதுவும்,பெண்கள் வேலைக்கு போகும் நிர்பந்தமும் மற்றும் அதிக பொருள் தேடல் அவசரமும் இன்னும் நிறைய தொலைக்க காத்து இருப்பதுதான் எதிர்கால உண்மை.

  பதிலளிநீக்கு
 18. எதிர்பார்ப்பு எங்கே இருக்கிறதோ அங்கே
  ஏமாற்றம் ஏற்படுவது தவிர்க்கமுடிததது ,,

  எதையும் எதிர்பார்க்காமல் கிடைத்தால் லாபம் ..
  கிடைக்காவிட்டால் நஷ்ட்டமில்லை என அனுசரித்துப்போனால்
  மனச்சுமையாவது குறையுமே ஐயா ...

  பதிலளிநீக்கு
 19. Those days every child was brought up by the whole village, not by its family alone. So it was part of the society. But now a child is brought up by its parents alone. The parents too, have no time to spare. The child become self centered. What one expect from such society? Either we have to join the crowd or live as "thamarai yelaiyil thanneer pola".

  பதிலளிநீக்கு
 20. உறவுகள் சந்தித்துக் கொள்வதே இது மாதிரி விசேஷங்களில் மட்டும்தான். அங்கும் கூட எல்லா உறவுகளும் எல்லா மற்ற உறவுகளோடும் பேசி விடுவதில்லை. இளைய தலைமுறை என்றில்லை, வேறு சில காரணங்களும் இருக்கின்றன. முக்கியமாக அந்தஸ்து!

  பதிலளிநீக்கு