வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

வெள்ளரிக்காய் , தக்காளி , சேலட் – எப்படி செய்வது? தெரியுமா?நண்பர் முகமது அலி, முட்டைப் பொரியல் செய்வது பற்றிப் பதிவு போட்டிருந்தார். அவர் மட்டும்தான் சமையல் பதிவு போடுவதா? நாமும் ஏன் போடக்கூடாது என்று சிந்தித்ததின் விளைவுதான் இந்தப் பதிவு.

முதலில் சேலட் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். இது ஒரு ஆங்கில நாட்டு பேஷன். நம் நாட்டில் சமையல் செய்ய சோம்பல்படும் இல்லத்தரசிகளுக்கான ஒரு வரப்பிரசாதமாய் இறக்குமதி செய்யப்பட்ட சமையல் முறை.

இதைச் சமையல் என்று சொல்வதே ஒரு “நகைமுரண்”. நகைமுரண் அப்படீன்னா என்னன்னு கேக்கறீங்களா? இதுவும் ஆங்கில நாட்டு இறக்குமதியே. அங்கே “comedy of error” என்று தீங்கு விளைவிக்காத, சிரிப்பு வரவழைக்கும் தவறுகளைக் குறிப்பிடுவார்கள். நமது அருமை தமிழ் ஆர்வலர்கள் இதைத் தமிழ்ப்படுத்தியது ஒரு நகைமுரண்.

சேலட் செய்வதற்கு சமையலறை வேண்டியதில்லை. ஒரு கத்தியும் ஒரு பேசினும் மட்டும் போதும். வெள்ளரிக்காய் சேலட் செய்யத்தேவையான பொருட்கள்.

  1.   வெள்ளரிக்காய்         – 2
  2.   ஆப்பிள் தக்காளி        - 4
  3.   பச்சை மிளகாய்         - 4
  4.   பெரிய வெங்காயம்     - 2
  5.   டேபிள் சால்ட்          - தேவையான அளவு
  6.   மிளகுத்தூள்            - தேவையான அளவு
  7.   ஆலிவ் ஆயில்          - ஒரு டேபிள்ஸ்பூன்

8. ரெடி மேட் பிளாஸ்திரிகள் - தேவையான நெம்பர்கள் (கையில் காயம் ஆகும்போது உபயோகிக்க)
   

செய்முறை:
1, 2, 3 ஐட்டங்களை தண்ணீரில் நன்றாகக் கழுவிக்கொள்ளுங்கள். இயற்கை ஆர்வலர்கள் இந்த ஸ்டெப்பை விட்டுவிடவும்.
பெரிய வெங்காயத்தை தோலுரிக்கவும். (தவறான பொருள் கொள்ளவேண்டாம்)

இந்த நான்கு ஐட்டங்களையும் பொடிப்பொடியாக நறுக்கி பேசினில் போடவும். தேவையான அளவு டேபிள் சால்ட்டையும் மிளகுத்தூளையும் சேர்த்து கலக்கவும். ஆலிவ் ஆயிலை மேலே ஊற்றிப் பரிமாறவும். உடனே சாப்பிடவேண்டும். இல்லாவிட்டால் நீர் கோர்த்து ருசி போய்விடும்.

இந்த ஆலிவ் ஆயிலை எதற்கு ஊற்றவேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் யூட்யூப்பில் எல்லா ரெசிபிக்களிலும் போட்டிருக்கிறார்கள். அதனால் நானும் போட்டேன். ஆலிவ் ஆயிலுக்கான வியாபார உத்தியாக இருக்கலாம். ஆலிவ் ஆயில் மிகவும் சலீசு. கிலோ ஆயிரம் ரூபாய் மட்டுமே.

இந்த சேலடை சாப்பிடுவதால் உண்டாகும் பயன்கள்.

1. நீண்ட ஆயுள்.
2.  பிரமசாரிகளுக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கும்.
3.  கல்யாணமானவர்களுக்கு சீக்கிரமே குழந்தை பிறக்கும்.
4.  குழந்தைகள் பெற்றோர்கள் சொன்னபடி கேட்பார்கள்.
5.  மொத்தத்தில் நீங்கள் பூலோக சொர்க்கத்தில் வாழ்வீர்கள்.

செய்து சாப்பிட்டுப் பார்த்துவிட்டுப் பின்னூட்டத்தில் உங்கள் கருத்துகளைத் தெரிவிக்கவும்.

31 கருத்துகள்:

 1. கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருக்கும்.உங்களின் பதிவும் அருமை

  பதிலளிநீக்கு
 2. அருமை .. நிச்சயம் வெள்ளையர்கள் இதனை தினமும் செய்து சாப்பிடுகின்றார்கள். அதிகம் காய்கறிகளை அதுவும் பச்சையாக உண்கின்றார்கள். ஆனால் இது முக்கியமாக நமக்கு அதுவும் வெப்ப மண்டலத்தில் வாழும் தமிழர்களுக்கு நிச்சயம் தேவையான ஒன்று, தினசரி உணவில் சலாட்களை சேர்த்துக் கொள்வது சாலச் சிறந்தது ... ! பகிர்ந்தமைக்கு நன்றிகள் ஐயா !

  பதிலளிநீக்கு
 3. தினமும் இது போல் நகைமுரண்கள் தொடர்ந்தால், சாப்பிடா விட்டாலும்... மனம் விட்டு சிரிப்பதால் மேற்கூறிய பயன்களும் அடையலாம்...

  பதிலளிநீக்கு
 4. http://viyaasan.blogspot.in/2013/02/27.html
  dear tamils please visit this site

  பதிலளிநீக்கு
 5. http://viyaasan.blogspot.in/2013/02/27.html
  dear tamils please visit this site

  பதிலளிநீக்கு
 6. ‘அறு’சுவை நேரம், சமையல் நேரம் போன்ற தொ(ல்)லைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குகொள்ள இதுமுன்னோட்டமா?

  ஆலிவ் எண்ணையை உபயோகித்தால் இதய நோய் வரும் வாய்ப்பு குறைவாம். அதனால்தான் அதை உபயோகிக்கிறார்கள் என நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 7. இந்த சேலடை சாப்பிடுவதால் உண்டாகும் பயன்கள். திகைக்கவைக்கிறது ஐயா...

  பதிலளிநீக்கு
 8. நகைமுரண் என்றால் ஆங்கிலத்தில் ஐரணி ஆகும். இது ஒரு இலக்கிய அணி (அலங்காரம்). காமெடி ஆஃப் எரர்ஸ் அல்ல!

  அதுசரி, மிளகுத்தூள், உப்பு இரண்டையும் சேர்த்து ஒன்றாகக் கலக்கி தனியே வைத்துவிட்டேன்... இப்ப அதை என்ன செய்யறதுன்னு பதிவுல சொல்லவே இல்லையே :-))

  சரவணன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயையோ, மறந்துட்டனே, என்ன பண்ணுங்க, அதை எடுத்து கொஞ்சம் இடது கண்ணில் வையுங்க. ஒண்ணும் ஆகலீன்னா, வலது கண்ணிலும் வையுங்க. ரெண்டு கண்ணிலும் ஒண்ணா வச்சீங்கன்னா நான் பொறுப்பில்லை.

   நீக்கு
 9. பதில்கள்
  1. இந்த சேலடைச் சாப்பிட்டா ஆள் அப்படியே தகதன்னு மின்னுவாரு. பொண்ணைப் பெத்தவன் ஓடி வந்து பொண்ணைக் கொடுப்பான். மத்ததெல்லாம் அப்புறம் தானே நடக்கும்.

   நீக்கு
 10. Kalyanam Akuma..? Epdi nu sonninkana enakku romba useful irukkum..?????

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த சேலடை ஒரு வருஷம் சாப்பிட்டா ஆள் அப்படியே தகதன்னு மின்னுவீங்க. பொண்ணைப் பெத்தவன் தானா ஓடி வந்து பொண்ணைக் கொடுப்பான். மத்ததெல்லாம் அப்புறம் தானே நடக்கும்.

   நீக்கு
 11. என் பக்கத்து வீட்டு அம்மணி தினமும் தன் மாமியாரோடு உரக்க சண்டையிடுகிறார்.இதனால் டிவி சீரியலில் வரும் சண்டை புரியாமல் போகிறது. இந்த சாலட்டை நான் தினமும் சாப்பிடுவதால், இந்த நிலை மாறுமா?

  தயவு செய்து விளக்கவும்.
  உங்கள் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கும்,

  யமுனா மற்றும் குடும்பத்தினர்,
  சிதம்பரம்,
  கடலூர் மாவட்டம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கட்டாயம் மாறும். நீங்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். டிவி யில் சத்தத்தை ம்யூட் செய்துவிடவும். இப்போது டிவியில் படமும் பக்கத்து வீட்டிலிருந்து சத்தமும் கேட்கும். சரியாப் போயிடும்.

   டிவியிலும் மாமியார் மருமகள் சண்டைதானே நடக்கிறது.

   நீக்கு
 12. அதுசரி, மிளகுத்தூள், உப்பு இரண்டையும் சேர்த்து ஒன்றாகக் கலக்கி தனியே வைத்துவிட்டேன்... இப்ப அதை என்ன செய்யறதுன்னு பதிவுல சொல்லவே இல்லையே :-))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயையோ, மறந்துட்டனே, என்ன பண்ணுங்க, அதை எடுத்து கொஞ்சம் இடது கண்ணில் வையுங்க. ஒண்ணும் ஆகலீன்னா, வலது கண்ணிலும் வையுங்க. ரெண்டு கண்ணிலும் ஒண்ணா வச்சீங்கன்னா விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை.

   நீக்கு
 13. இந்தப் பதிவை என் துணைவியாரும் படிக்க நேர்ந்தது.

  பச்சை மிளகாய், வெள்ளரிக்காய் முதலியன உடனே வாங்கி வரும்படி உத்தரவு பிறப்பித்தார்.

  திட்டிக்கொண்டே வேகாத வெயிலில் கடைவீதி போய் வாங்கி வந்தேன்.

  உங்கள் வழிகாட்டுதலின்படி, அவர் செய்து படைத்த சேலட்டைச் சாப்பிட்டதும் மன எரிச்சல் போன இடம் தெரியவில்லை!

  பூலோகம் சொர்க்கமாக மாறுமோ இல்லையோ, எங்கள் வீடு சொர்க்கலோகமாய்த் தெரிகிறது.

  என் இல்லக் கிழ[வி]த்தி உங்களுக்கு நன்றி சொல்லச் சொன்னார்.

  நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி, பரமசிவம்.

   எத்தனை வயசானாலும் இல்லாளை கிழவி என்று சொல்வது தவறு.

   நீக்கு
 14. இதைச் சாப்பிட , ஐயா கொடுத்துவைக்க வேண்டும். புல்லரிக்குது ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சக்திவேல். உங்கள் பின்னூட்டத்தைப் படித்தவுடன் எனக்கும் "புல்" லரிக்கிறது.

   நீக்கு
 15. சமைக்காமல் பச்சையாக சாப்பிட இருக்கும் காய்கறிகளை வெட்டுவதற்கு முன் பொட்டாஷியம் பெர்மாங்கனேட் கரைசலில் கழுவிக்கொள்வது நல்லது! எத்தனை சதவீதக் கரைசல்னு டீடெய்ல்ஸ் சார் கீழே 'பதிலளி' பகுதியில் குடுப்பாரு, படிச்சுக்கங்க மக்களே!
  சரவணன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Zero % பொட்டசியம் பெர்மாங்கனேட் கரைசல் மிகவும் நல்லது. இது கிடைக்காதவர்கள் பின்னூட்டத்தில் தெரிவித்தால் கம்பெனி சப்ளை செய்யும். லிட்டர் 15 ரூபாய் மட்டுமே. உங்கள் வீட்டின் அருகிலுள்ள எல்லா சூபர் மார்க்கெட்களிலும் ஸ்டாக் வைத்துள்ளோம்.

   நீக்கு
 16. ஐயா... நீங்கள் சொன்னபடியே சாப்பிட்டேன். மூன்று நாட்களாக தொல்லை செய்து கொண்டிருந்த இடது கால் கட்டை விரல் வலி படிப் படியாக நகர்ந்து தற்சமயம் சுண்டுவிரலில் நிற்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது அப்படியே வெளியில் போய்விடும். தொடர்ந்து சாப்பிட்டு வரவும்.

   நீக்கு
 17. ஆனால் நிஜமாக தினம் காலை ஆலிவ் ஆயில் சேர்க்காமல் கேரட், முள்ளங்கி, கோஸ், வாழைத் தண்டு ஏதாவது ஒன்றை நறுக்கி, அரை உப்புப் போட்டு, மிளகுத் தூள் தூவி-தூவாமல்- தேவைக்குத் தக்கபடி - ஸ்நாக்ஸ் மாதிரி சாப்பிடுகிறேன்! அப்புறம் ஓட்ஸ் மோர் போட்டு கெட்டியாகக் கஞ்சி!இதுதான் காலை ஆகாரம்!

  பதிலளிநீக்கு
 18. வண்ணக்கம் அய்யா,


  நல்ல பதிவு நல்ல குறும்பு

  பதிலளிநீக்கு
 19. சலட் செய்து அதன் பயனும் நன்றாக தந்துள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு