திங்கள், 25 பிப்ரவரி, 2013

கும்ப மேளாவும் உயிரிழப்பும்


மனித நேயம் என்று ஒன்று இருக்கிறது என்று எங்கேயோ படித்த ஞாபகம். அதன் விஸ்வரூப அரங்கேற்றம் அலகாபாத் ரயில் நிலையத்தில் சமீபத்தில் அரங்கேறியது.

இந்திய மக்களின் (இல்லை, மாக்களின்) தேசீய கலாசாரம் என்னவென்றால் கூட்டம் கூடுவது. அரசியல் கூட்டமானாலும் சரி, ஆன்மீகக் கூட்டமானாலும் சரி, லட்சக்கணக்கில் கூடுவது . கூட்டம் கூட்டுபவர்களுக்கு கூட்டத்திற்கு ஆட்களைச் சேர்த்துவதுதான் முக்கிய நோக்கமே தவிர, இத்தை பேர் கூடிகிறார்களே, அவர்களின் பாதுகாப்பு குறித்து தேவையான ஏற்பாடுகள் செய்வோமென்ற சாதாரண பொதுப் புத்தி கூடக் கிடையாது.

விபத்துகள் நடந்து உயிர்ச்சேதம் ஆன பின்பு ஒருவருக்கொருவர் பழி சுமத்துவார்களே தவிர முன்னேற்பாடுகளை ஒருவரும் செய்ய மாட்டார்கள். கும்பமேளா சமயத்தில் லட்சக்கணக்கானவர்கள் ரயில்வே ஸ்டேஷனை நாடுவார்கள் என்பது பாமரனுக்கு கூட விளங்கும். ரயில்வேயின் உயர் அதிகாரிகள் கும்பமேளா சமயத்தில் அலகாபாத்தில் இருந்து, நடப்பவைகளை கவனித்து முன் ஜாக்கிரதை நடவடிக்கைகளை எடுத்திருக்கவேண்டும்.

இதைச் செய்யாமல் அசம்பாவிதம் நடந்த பிறகு நொண்டிச் சமாதானங்கள் சொல்வது நமது அரசு அதிகாரிகளின் வாடிக்கையாகப் போய்விட்டது.

மக்களுக்கும் சரி, ஒழுங்கு, கட்டுப்பாடு, பொறுமை என்ற குணங்கள் அடியோடு அற்றுப் போய்விட்டன. இது சமூகச் சீரழிவின் அடையாளம். இதை மாற்ற இறைவன்தான் நேரில் வரவேண்டும். அவனுக்கு ஏகப்பட்ட வேலைகள் இருப்பதால், தனக்குப் பதிலாக யமதர்மனை அனுப்புகிறான்.

13 கருத்துகள்:

 1. > அவனுக்கு ஏகப்பட்ட வேலைகள் இருப்பதால், தனக்குப் பதிலாக யமதர்மனை அனுப்புகிறான்

  ஹா ஹா, ரசித்தேன்

  பதிலளிநீக்கு
 2. முன்னேற்பாடுகள் செய்வதில் சுணக்கம் காட்டுவதால் விபத்துக்கள் தவிர்க்க இயலாமல் போகிறது.மக்களும் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது நல்லது.

  பதிலளிநீக்கு
 3. இத்தகைய கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவதற்கு முன் அரசாங்கமே பாதுகாப்பு குறித்த முன்னேற்பாடுகளைப்பற்றி கொஞ்சம் யோசிக்க வேண்டும்...

  பதிலளிநீக்கு
 4. கும்பகோணம் மகாமகம் முதல் கும்பமேளா வரை உயிரிழப்புக்கள் மக்களின் அஜாக்கிரதையாலும் அரசு இயந்திரத்தின் அலட்சியப்போக்காலும் ஏற்படுகின்றன.இவர்களை நீதிமன்றங்கள் கூட கட்டுப்படுத்த இயலாது. அதனால்தான் இறைவன் யமதர்மனை அனுப்புகிறான் தண்டனையைத்தர.

  பதிலளிநீக்கு
 5. ரயில்வேயின் உயர் அதிகாரிகள் கும்பமேளா சமயத்தில் அலகாபாத்தில் இருந்து, நடப்பவைகளை கவனித்து முன் ஜாக்கிரதை நடவடிக்கைகளை எடுத்திருக்கவேண்டும்.

  எந்த நிகழ்ச்சியிலாவது முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்துருக்கிறார்களா என்ன .. !
  இப்போது புதிதாக எடுப்பதற்கு ஒரு முன் உதாரணமும் இல்லையே ..!!

  பதிலளிநீக்கு
 6. உண்மைதான்! கவனப்பிசகினால் இந்த மாதிரியான அசம்பாவிதங்கள் ஏற்பட்டுவிடுகின்றன!

  பதிலளிநீக்கு
 7. /பாதுகாப்பு குறித்து தேவையான ஏற்பாடுகள் செய்வோமென்ற சாதாரண பொதுப் புத்தி கூடக் கிடையாது/
  /அசம்பாவிதம் நடந்த பிறகு நொண்டிச் சமாதானங்கள் சொல்வது நமது அரசு அதிகாரிகளின் வாடிக்கையாகப் போய்விட்டது./
  அலஹாபாத் கும்பமேளா ரயில் நிலைய விபத்தில் மக்கள் மாண்டது மிகவும் வருந்த வேண்டிய விஷயமே. ஆனால் அந்த கும்ப விழா எவ்வளவு பிரமாண்டமானது என்பதை உணர்வது மிகவும் கடினம்.எத்தகைய ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்பதையும் பலரும் உணரமாட்டார்கள். பின் வரும் செய்திகுறிப்பு நிலையை அறிய ஏதுவாகும்.
  http://www.nytimes.com/2013/02/11/world/asia/deadly-stampede-at-the-hindu-festival-kumbh-mela.html?_r=0
  ஏற்பாடுகளை ஆய்வு செய்த Harvard university research team கூட தனது அறிக்கையில் அத்தகு ஏற்பாடுகளை வியந்து பாராட்டயுள்ளது.
  எந்த நிலையிலும் உயிரிழப்புகளை நியாயப்படுத்த முடியாதுதான். எப்பாடுபட்டேனும் இழப்புகள் தவிர்க்க வேண்டியவைதான். அதே சமயம் அத்தகைய இழப்புகளை தவிர்க்க/குறைக்க பாடுபட்டவர்களை ஒட்டுமொத்தமாக உதாசீனப்படுத்துவது/இகழ்வது உசிதம் அல்ல.
  தவறுக்கு பொறுப்பானவர்கள் நிச்சயம் தண்டிக்கப் படவேண்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனாலும் இந்த மாதிரி கூட்டங்களில் அசம்பாவிதங்கள் ஏற்பட்டுவிடுகின்றன. இந்தக் குறிப்பிட்ட சம்பவத்தில் ஒரு ரயில் வருகை சம்பந்தமான அறிவிப்பினால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டது என்று பத்திரிக்கைச் செய்திகள் கூறுகின்றன. அது உண்மையானால், அந்த ஸ்டேஷன் பொறுப்பு அதிகாரி, நிலமையைப் புரிந்து கொள்ளாமல் இருந்திருக்கிறார். அவருக்கு சரியான பயிற்சி அல்லது அறிவுரை கொடுக்கப்படாமலிருந்திருக்கலாம். இந்த மாதிரி ஏற்படுவது வழக்கம்தான் என்றாலும் நம் மக்கள் இன்னும் ஒழுங்கு முறைகளைக் கற்கவில்லையே என்பதுதான் என் ஆதங்கம்.

   நீக்கு
 8. மக்களாவது ஒரு ஒழுங்கிற்கு வர வேண்டும். அல்லது அரசாங்கமாவது முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்... இப்போது பேசுவார்கள்... அடுத்த கும்பமேளாவுக்கு கூட மாற்றம் ஏற்படுத்த மாட்டார்கள்

  பதிலளிநீக்கு
 9. இங்கு தவறு நடந்த பின்தான் அதை பற்றி பேசுவார்கள் ....அதற்க்கு முன் கொஞ்சமும் யோசிக்க மாட்டார்கள்

  பதிலளிநீக்கு