திங்கள், 18 பிப்ரவரி, 2013

என்னைக் கொள்ளையடியுங்கள் - அழைப்பு விடுக்கும் ஜனங்கள்


என்னைக் கொள்ளையடியுங்கள் என்று சொன்னால் கொள்ளையடிப்பவனுக்கு கசக்குமா என்ன? இதை அன்றாடம் நம் சூப்பர் மார்க்கெட்டுகளும் பலசரக்குக் கடைக்காரர்களும் செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு டிவிக்காரர்களும் கூட்டு சேர்ந்து கொள்ளையடிக்கிறார்கள்.

நமது அன்றாட உணவுப் பழக்கங்களில் நமக்கு வேண்டிய அனைத்துச் சத்துக்களும் கிடைக்கின்றன. மக்கள் கொஞ்சம் கவனம் எடுத்துக் கொண்டால் வீட்டில் யாருக்கும் எந்த சத்துக் குறைவும் வராது. ஆனாலும் இன்றைய தாய்மார்கள் தங்கள் மேலேயே நம்பிக்கை இல்லாமல் டிவி விளம்பரங்கள் மேல்தான் நம்பிக்கை வைக்கிறார்கள்.

அவர்களுக்கு வீட்டு வேலை முடிந்த பிறகு பொழுது போக்க டிவி யை விட்டால் வேறு வழியில்லை. டிவிக் காரனுக்கும் விளம்பரங்களில்தான் வருமானம். அதற்காகத்தான் சீரியல்கள். சீரியல் பார்க்கும் பெண்களைக் குறிவைத்தே அனைத்து விளம்பரங்களும் காட்டப் படுகின்றன. விளம்பரங்களில் சொல்லப்படும் அனைத்து தகவல்களையும் அப்படியே வேதவாக்காக எடுத்துக் கொண்டு செயல்படும் குடும்பத்தலைவிகள் அநேகம்.

உதாரணத்திற்கு குழந்தைகளுக்கான உணவு வகைகளில் "பெடியாஷ்யூர்" என்று ஒரு பொருள் விளம்பரப்படுத்தப்படுகிறது. குழந்தைகள் இந்த உணவைச் சாப்பிடாவிட்டால் அவர்கள் வளர மாட்டார்கள், அவர்களின் மூளை வளராது, வாழ்க்கையில் அவர்கள் தோற்று விடுவார்கள் என்றெல்லாம் விளம்பரத்தில் சொல்லுவார்கள். இதைக் கேட்கும் தாய்மார்கள், தங்கள் குழந்தை எல்லாவற்றிலும் முதலாவதாக வரவேண்டும், அதற்கு இதைக் கொடுத்தால்தான் நடக்கும் என்று நம்புகிறார்கள்.

இதன் விலை யானை விலை. ஆனாலும் அதை வாங்கிக் கொடுக்கிறார்கள். இத்தகைய உணவுகளைச் சாப்பிடும் குழந்தைகள் அனைத்தும் வெகு புஷ்டியாக, அதாவது அதிக குண்டாக வளர்கின்றன. இத்தகைய குழந்தைகளுக்கு "கிளாக்சோ பேபி" என்றே அந்தக் காலத்தில் பெயர். இந்த உணவுகளில் தேவைக்கு அதிகமான மாவுச்சத்துக்கள் இருப்பதே இந்தக் குழந்தைகள் கொழு கொழுவென்று ஆவதற்குக் காரணம்.

டிவியில் ஒரு விளம்பரத்தை பத்து செகன்ட் காட்டுவதற்கு என்ன கட்டணம் தெரியுமா? 20 முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை ஆகிறது. அனைத்து மொழிகளிலும் அனைத்து முக்கிய சேனல்களிலும் தினம் பலமுறை இந்த விளம்பரங்கள் காட்டப்படுகின்றன. அப்படியானால் தினசரி என்ன செலவாகும், மாதத்திற்கு எவ்வளவு, வருடத்திற்கு எவ்வளவு என்று கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நிறுவனமும் வருடத்திற்கு பல கோடி ரூபாய்கள் விளம்பரத்திற்காக செலவு செய்கிறார்கள்.

இதற்கு மேல் அந்தப் பொருளின் தயாரிப்புச் செலவு இருக்கிறது. அதை மார்க்கெட்டுக்கு அனுப்ப செலவு இருக்கிறது. இத்தனையையும் செய்த பிறகு அந்தக் கம்பெனிக்கு லாபமும் வரவேண்டும். அப்படியானால் உற்பத்தி செலவுக்கு மேல் எத்தனை அதிகம் விலை வைக்கவேண்டும்? யோசித்துப் பாருங்கள்.

என்னுடைய அனுமானம், இந்த மாதிரி பொருள்களில் விற்பனை விலையில் கால் பங்குதான் உற்பத்திச் செலவு இருக்கும் என்று நினைக்கிறேன். இப்படி கொள்ளையடிக்கும் பொருட்களை நாம் வாங்குகிறோம். இப்படிப்பட்ட உணவுகளை நாமே வீட்டில் தயாரித்துக் கொண்டால் ஆரோக்கியத்துடன் பணவிரயமும் தவிர்க்கப்படும்.

மக்களே, சிந்தியுங்கள்.


22 கருத்துகள்:

 1. //என்னுடைய அனுமானம், இந்த மாதிரி பொருள்களில் விற்பனை விலையில் கால் பங்குதான் உற்பத்திச் செலவு இருக்கும் என்று நினைக்கிறேன்//
  கால் பங்கு கண்டிப்பாக இருக்க முடியாது. கோக கோலா ஒரு கேனின் உற்பத்தி செலவு அதிகம் போனால் இரண்டு ரூபாயாக இருக்கும். உள்ளே இருப்பது பெரும்பாலும் தண்ணீர் மற்றும் சக்கரை தான். அந்த கேனின் விலை இருபத்தைந்து ரூபாய். பத்து சதவிகிதத்திற்கும் குறைவு!

  பதிலளிநீக்கு
 2. சார் விளம்பரக்கட்டணங்களை யார் சொல்வார்கள் அது டி ஆர்..பி யை பொறுத்தது

  பதிலளிநீக்கு
 3. அன்புடையீர் வணக்கம்! இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், இன்று (18.02.2013) உங்கள் வலைப்பதிவினை அறிமுகம் செய்து எழுதியுள்ளேன். தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி!

  பதிலளிநீக்கு
 4. உண்மை, உண்மை! பெடியாசியூர் வாங்கும் சிலரை எனக்கும் தெரியும்! இதே போலத்தான் உங்கள் டூத் பேஸ்டில் மசாலா இருக்கா சீரகம் இருக்கா கதைகளும்! :))

  பதிலளிநீக்கு
 5. இந்த அவசர உலகில் எல்லாமே அவசரம் தான்... போய் சேர்வதற்கு அவசரம் கூடாது என்றால் எப்படி ஐயா...?

  வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 6. நுகர்வோர்களின் நலன்களை பாதுகாக்க ASCI (Advertising Standards Council of India) என்ற சுய கட்டுப்பாட்டு தொண்டு நிறுவனம் உள்ளது. அவர்களுக்கு நுகர்வோர்கள் இந்த மாதிரியான விளம்பரங்கள் பற்றி புகார் தரலாம். ஆனால் அதைவிட அந்த விளம்பரங்களின் ஆலோசனைப்படி நடக்காமலிருப்பதே நல்லது.

  பதிலளிநீக்கு
 7. இதைவிடப் பெரிய கொடுமை பெரிய நிறுவனங்களே எடை அளவில் கொள்ளையடிப்பது தான். சில வருடங்களுக்கு முன்பு 100 கிராம், 200 கிராம், 250கிராம், 500 கிராம் மற்றும் 1 கிலோ என்றிருந்த பொருட்கள் 95 கிராம், 185 கிராம், 460 கிராம் 945 கிராம் என்று மாறிவிட்டது... கவனித்தீர்களா?

  பதிலளிநீக்கு
 8. உற்பத்தி விலை நிச்சயம் மிகக் குறைவாகவே இருக்கும்.சச்சினுக்கும் அமீர்கானுக்கும் கோடி கோடியாக கொடுத்துவிட்டு நம்மிடம் இருந்து பிடுங்கிக் கொள்கிறார்கள். நல்லா சொல்லி இருக்கீங்க!

  பதிலளிநீக்கு
 9. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள் ஐயா..

  பதிலளிநீக்கு
 10. //இப்படிப்பட்ட உணவுகளை நாமே வீட்டில் தயாரித்துக் கொண்டால் ஆரோக்கியத்துடன் பணவிரயமும் தவிர்க்கப்படும்.//
  உண்மை . வீட்டிலே சத்துமாவு என்று அரைத்து அதை கூழ் காய்ச்சி குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.நான் அது தான் குழந்தைகளுக்கு கொடுத்தேன். அதை வீட்டில் செய்ய முடியாவிட்டால் அதுவே கடையில் விற்கிறார்கள். அதைக்கூட வாங்கி கொடுக்கலாம்.
  நீங்கள் சொல்வது போல் யானைவிலை, குதிரைவிலை கொடுத்து சத்துள்ள ஆகாரம் கொடுப்பதாய் நினைத்து ஏமாந்து கொண்டு இருக்கிறார்கள். பணவிரயமும் ஆகிறது.

  நல்ல விழிப்புணர்வு பதிவு.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 11. ayya indha makkaley appadithan , evallavu seikkiram valaranumo avulavu seikkiram poi seranumnnu asai , kalam kali kalam ayya, andtha ayyaa vandthuthan maththanum.

  பதிலளிநீக்கு
 12. காம்ப்ளான், போர்விட்டா, கபில்தேவுக்கும், டெண்டுல்கருக்கும் எனர்ஜியின் ரகசியமாய் விளங்கிவரும் பூஸ்ட்டு என எத்தனைவ்யோ கருமாந்திரங்களை விற்று காசு பிடுங்குகிறார்கள், ஆனால் அவற்றில் எதைக் குடித்தாலும் தெம்பு வருவது போலத் தோன்றவில்லை. நீங்கள் சொன்ன கன்றாவியும் இதே ரகத்தைச் சேர்ந்தது போலத்தான் உள்ளது. பல்வேறு தானியங்களை வறுத்து அரைக்கப் படும் சக்தி, மன்னா health Mix போன்றவற்றை உட்கொண்டபின்னர் உடலில் தெம்பு ஏற்ப்படுவதை உணர முடிகிறது. இவை எவ்வளவோ மேல். ஆனாலும் மக்கள் விளம்பரத்தில் ஏமாந்து பொய் ஒன்றுக்கும் உதவாதவற்றில் காசை வீணாக்குகிறார்கள். TV விளம்பரத்தைப் பார்த்து கழுதை மூத்திரத்தை விட கேவலமான கோலா பானங்களை வாங்கியவர்கள் இவற்றையும் வாங்குவதில் வியப்பில்லை.

  பதிலளிநீக்கு
 13. விளம்பரங்கள் 5 % மட்டுமே செய்தி;( INFORMATION );
  மிகுதி 95 % பித்தலாட்டம் ( fraud ); என்பது எனது புரிதல் ; நன்றி ...
  மாலி .

  பதிலளிநீக்கு
 14. உண்மைதான்! விளம்பர மோகத்தில் வெளிநாட்டு கம்பெனிகளின் பொருட்களை வாங்கி நாம் ஏழைகள் ஆகிக் கொண்டிருக்கிறோம்!

  பதிலளிநீக்கு

 15. தவறான வாக்குறுதிகளைக் கொடுத்து விளம்பரப் படுத்தினால் அவர்களை தண்டிக்க சட்டத்தில் இடம் வேண்டும்.

  பதிலளிநீக்கு
 16. அருமையான சிந்தனை ஐயா. இவ்வளவு நாளும் வரவில்லை தங்கள் வலைத்தளம் கிடு கிடுவென ஆடியது. இப்போது அந்த பிரச்சனையைக் காணோம்.
  நன்றாக நிற்கிறது.மகிழ்ச்சி. பல தடவை வந்து ஏமாற்றத்தொடு போனேன்.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 17. என் சிறிய குழந்தைக்கு பீடியாசூர் கொடுக்கிறேன் பெரியவனுக்கு காம்ப்ளான் கொடுக்கிறேன் என்று பக்கத்துவீட்டு பெண்களிடம் தெறிவிக்கவில்லை என்றால் அவர்களின் ஸ்டேட்டஸ் வெளிக்காட்டப்படாமல் போய்விடும் இல்லையா? இதில் ஏமாறுவதைக்காட்டிலும் தன்னுடைய வாழ்க்கை தரத்தை பிறருக்கு காண்பிக்கவே சிலர் வாங்கி குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள்.
  இது மட்டுமல்ல விக்ஸ், அமிர்தாஞ்சன், பாஸ்ட் ரிலீப், மூவ், வாலினி என அனைத்து கிரீம்களும் வலியை தீர்க்கும் மருந்தல்ல ஒரு வலியை மறைக்க வேறுமாதிரியான எரிச்சல் விறுவிறுப்பு போன்றவற்றை உருவாக்கும் ரசாயனங்களே இந்த பாம் போடுற பழக்கத்தை எல்லாம் விட்டொழியுங்கள் உங்கள் உடல்வலி மற்றும் தலைவலிக்கு மருத்துவரை அனுகி சரியான சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள்.

  பதிலளிநீக்கு
 18. கொஞ்சம் குண்டாக இருக்கிறேன் என்று டாக்டரைப் போய்ப் பார்க்க, அவர் ”குறிப்பிட்ட ஆயிலை சமையலுக்குச் சேர்த்துக் கொள்ளாதீர்கள்”, என்று சொல்ல,”டி.வி. யில் ஒரு டாக்டரே ஒயிட் ட்ரஸ் போட்டுட்டு ரிகமண்ட் பண்ணினாரேன்னு” நான் வெள்ளந்தியாய்க் கேட்க, அதற்கு அவர் “ அந்த டி.வி.டாக்டர் நிஜ டாக்டர் இல்ல.. நான் தான் நிஜ டாக்டர்..என் பேச்சைக் கேளுங்க’ என்றார்.
  சின்ன வயதிலேயே நான் கொஞ்சம் பூசினால் போல் தான் இருப்பேன்..
  அந்த காலத்தில் COW&GATE குடித்து வளர்ந்த கொழுக்கு,மொழுக்கு பேபியாக்கும் நான்!  பதிலளிநீக்கு