புதன், 6 பிப்ரவரி, 2013

ஆத்மாவும் மனிதனும்.

மனிதனின் இரண்டு அம்சங்களாக உடலையும் ஆத்மாவையும் சொல்லுகிறோம். உடல் அழியக்கூடியது. ஆத்மா அழிவில்லாதது. இப்படித்தான் ஆன்மீக போதகர்கள் காலங்காலமாகச் சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.

அணுவின் தன்மையைப் பற்றிப் படித்தவர்களுக்கு அணுவின் உள்ளே என்னென்ன இருக்கின்றன என்று தெரியும். கரு, நியூட்ரான்ஸ், எலெக்ட்ரான்ஸ் ஆகியவை முக்கியமானவை. இதற்குள்ளும் பல நுண்-துகள்கள் இருக்கின்றன என்று கண்டு பிடித்திருக்கிறார்கள். அதில் ஒன்றுக்கு கடவுள் துகள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
இதில் நாம் கவனிக்கவேண்டியது என்னவென்றால், இந்த அணுவானது செயலற்றது பொல் தோன்றினாலும், அதற்குள் கண்ணுக்குப் புலனாகாத செயல்கள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. எலெக்ட்ரான்கள் கருவை இடைவிடாது சுற்றிக்கொண்டே இருக்கின்றன என்று கண்டு பிடித்திருக்கிறார்கள்.

இந்த இயற்கை ரகசியத்தைத் தான் ஆத்மா என்கிறோம். உயிருள்ள ஜீவராசிகளானாலும், உயிரற்றவைகளானாலும், அவைகளில் ஆத்மா இருக்குறது என்று நம்புகிறோம்.

ஆகவேதான் அணுக்களை உயிருள்ளவை என்று நாம் கருதுகிறோம். மனிதன் அணுக்களால் ஆனவன். ஆகவே அவன் ஜீவித்திருந்தாலும் சரி, இறந்தாலும் சரி, அவனுள் இருக்கும் இருந்த அணுக்கள் உயிருடன்தானே இருக்கும்? ஆகவேதான் மனிதனின் உடல் அழிந்தாலும் அவனுடைய ஆத்மா அழிவதில்லை என்று சொல்கிறார்கள்.

இதுதான் மெய்ஞானம்.

25 கருத்துகள்:

 1. நல்லதொரு விடயத்தை தொட்டுள்ளீர்கள் ஐயா !

  ஆனால், இந்திய மதங்கள் கூறும் இந்த ஆன்மா, ஆத்மா என்பது சற்றே குழப்பமானது ...

  உடலில் எங்கு ஆத்மா உள்ளது. அது எந்த பருப்பொருளாள் உண்டாகி உள்ளது. அந்த ஆத்மா உயிரின் இயக்கத்தை எவ்வாரு இயக்குவிக்கின்றது என்பதெல்லாம் இந்திய மதங்கள் விளக்கவில்லை...

  உயிரியல் மற்றும் வேதியல் கூறுகளாக மனித உடலைப் பகுக்கும் போது, மனிதன் திரவம், திடப் பொருள், காற்று மற்றும் மின் பொருட்களால் ஆனவன். இந்த உடலில் நீங்கள் சொல்லும் அணு என்பது திடப் பொருள்களில் தான் உள்ளது ... !

  மனித உயிரின் இயக்கம் உயிரணுக்களால் ஆனவை, அவற்றுக்கு நியுட்டரான்ஸ், எலக்ட்ரான்ஸ் எல்லாம் இல்லை, அந்த அணுவுக்குள் இருக்கும் வேதிப்பொருட்களுக்கு அவை இருக்கலாம். அந்த வேதிப் பொருட்களுக்கு உயிர் இல்லை, உயிர் என்பது இயக்கம் என்பதே அறிவியல் கணக்கு..

  மின்னாற்றல் மற்றும் சக்தி பெருக்கம் உயிரணுக்களை இயங்கச் செய்கின்றது, இறந்த பின் இந்த உயிரணுக்கள் ஆன்மாவை எல்லாம் வாழ்வது இல்லை . அவை அழிந்து விடும், உடலின் உயிர்ப்பொருட்கள் பிரிந்து விடும், திரவம் வடிந்து விடும், திடப்பொருள் மட்டுமே மிஞ்சும், காற்று வெளியேறி விடும், மின்னாற்றல் நின்று விடும். திடப்பொருள் கூட எலும்புகள் அழிய காலம் எடுக்கும், சதை, குருதி, போன்றவை நுண்ணுயிரிகளால் தின்னப்பட்டு விடும், கார்பன், நைட்ரஜன் எல்லாம் பிரிந்து போய்விடும்.

  இதில் எதனை ஆன்மா என நாம் கொள்வது, அத்தோடு அணுக்களில் அறியா ஆற்றலை கடவுள் துகள் என்படுவது வெறும் பெயர் தான். இதன் உண்மையான பெயர் அடக் கடவுளே ! என்ன துகள் இது என்பது தான் ( DAMN GOD PARTICLE ) மற்றபடி கடவுளுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை.

  மனித உடலில் ஏதேனும் அழியாமல் தப்புமானால் அது basic molecules தான், இவைகளை நீங்கள் சொல்வது போல ஆன்மா என்றழைக்கலாமா. அப்படி அழைத்தாலும் அது மறு ஜென்மம் எடுக்கும், நினைவு இருக்கும், பாவங்களை கடத்தும், பழி வாங்கும் எனக் கூறுவது எல்லாம் கொஞ்சம் கொஞ்சமல்ல ரொம்பவே பெரிய கப்ஸா கதை என்பது மட்டும் திண்ணம்.

  இந்த இஸ்லாமிய, கிறித்தவர்கள் தீர்ப்பு நாளில் மீள்வார்கள் என்பார்களே. அதில் எது மீளும்.. என்பதும் குழப்பமான கோட்பாடாகவே உள்ளது.

  பதிலளிநீக்கு
 2. உங்கள் கருத்துகளுடன் உடன்படுகிறேன். இந்த ஆத்மா தத்துவம் உண்மையிலேயே குளறுபடியானதுதான். எனக்கு தோன்றியதை எழுதியிருக்கிறேன். இது முடிவல்ல. ஆரம்பம்தான்.

  பதிலளிநீக்கு
 3. First define who are "we". Is it our body or mind or something else?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் யார்?
   இது ஒரு வேலையற்றவனின் கேள்வி. எதைச்சொன்னாலும் அதற்கு ஒரு குறுக்கு வாதம் சொல்வார்கள். இதைப்பற்றி வேதாந்தப் புத்தகங்களில் பல குப்பையான செய்திகள் இருக்கின்றன. இன்று வரை இதற்கு யாரும் முடிவான பதில் சொன்னதில்லை.

   நான் என்பது யாராக இருந்தால் என்ன? நான் என்று ஒரு வஸ்து அல்லது ஒரு உருவம் இருக்கிறது. அதில் சந்தேகம் இல்லை. அதற்கு மேல் ஆராய்வது வெட்டி வேலை.

   நீக்கு
  2. இது ஒன்றும் வேலையற்றவனின் கேள்வி அல்ல. ஒரு மனிதன் எனும் சொல்லானது அவன் உடலையும் மனத்தையும் சார்ந்தே குறிப்பதாகும். குழந்தை பிறந்தவுடன் அதற்கு மனம் என்ற ஒன்று இருப்பதில்லை. வளர வளரவே அதன் மனம் உருவாகிறது. உடல் பலமாக இருக்கும்போது அதில் இருக்கும் மனமும் பலமாகிறது. மனம் பலமாகும் போது அது உங்கள் உடலையும் பலமாக்குகிறது. இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தே இயங்குகின்றன.

   மற்றபடி ஆத்மா ஆன்மா என்பதெல்லாம் வெறும் கட்டுக் கதைகளே! அப்படி நான் சொன்னால், அதாவது எனது பலமான உடலில் இருக்கும் திமிரான மனத்துடன், நான் சொன்னால் உங்களுக்கு மூக்கின் மேல் கோபம் வரும். எனவே சொல்லவில்லை!

   - நான் அவனில்லை.

   நீக்கு
  3. நீங்கள் கூறும் கருத்துகள் முன்னுக்குப் பின் முரணாக இருக்கின்றன.

   ஆன்மா என்பது வெறும் கட்டுக் கதை என்றால் நான் யார் என்பதுவும் பயனற்ற கேள்விதானே?

   நீக்கு
  4. கவனிக்க.... இங்கு நான் சொன்ன கருத்து “நான்” என்ற சொல்லுக்கான விளக்கம் மட்டுமே. நீங்கள் தான் “நான்” என்பதை ஆத்மா மற்றும் ஆன்மா என்ற சொற்களோடு சம்பந்தப் படுத்தி குழப்புகிறீர்கள்!

   - நான் அவனேதான்!

   நீக்கு
  5. உங்கள் பெயர் என்னைக் குழப்பியது உண்மை.

   நீக்கு
 4. ஆத்மாவுக்கு மறுபிறவி உண்டு.மனசாட்சியுடன் நடந்தால் நல்லது

  பதிலளிநீக்கு
 5. சார் நீங்க காமடி, கீமடி எதுவும் பண்ணலியே?!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உலகத்திலேயே மிக வருத்தம் தரும் விஷயம் என்னவென்றால் காமெடியை காமெடி என்று புரிந்து கொள்ளாமல் இப்படி கேள்வி கேட்பதுதான்.

   நீக்கு
  2. இன்னொன்று தாஸ், நான் காமெடியைத் தவிர வேறொன்றும் எழுதுவதில்லை.

   நீக்கு
 6. பரமாத்மா, ஜீவாத்மா என்பவைகளைப் பற்றி விளக்க வேண்டுகின்றேன். .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த இரண்டும் ஒன்றா அல்லது வேறு வேறா என்ற ஆராய்ச்சி இன்னும் முடிவுறவில்லை. அநேகமாக கி.பி. 2500 க்குள் முடிந்துவிடும் என்று நினைக்கிறேன். உங்கள் கேள்வியை மறக்காமல் 2501 ல் கேளுங்கள். பதில் சொல்கிறேன்.

   நீக்கு
 7. /நான் யார்?
  இது ஒரு வேலையற்றவனின் கேள்வி. எதைச்சொன்னாலும் அதற்கு ஒரு குறுக்கு வாதம் சொல்வார்கள். இதைப்பற்றி வேதாந்தப் புத்தகங்களில் பல குப்பையான செய்திகள் இருக்கின்றன. இன்று வரை இதற்கு யாரும் முடிவான பதில் சொன்னதில்லை./

  மன்னிக்கவும். வேதாந்தப் புத்தகங்களில் குப்பைகள் இல்லை. நம்மால் புரிந்து கொள்ள இயலவில்லை. அனைத்தும் குரு பரம்பரையாக தெளிவு பெற வேண்டும் என்று கூறியே பல விஷயங்களை தெளிவாக்காமல் விட்டு விட்டார்கள்.

  ஆன்மா பற்றி இன்றைய மருத்துவ வல்லுனர்களே உண்மை என்று ஒப்புக்கொள்கிறார்கள். விஜய் டிவியில் வந்த முன் ஜென்மம் நிகழ்ச்சியில் மனோதத்துவ டாக்டர் கூறியது இது.

  ஆனால் அவரே ஒரு சிலருக்குத்தான் தனது முன் ஜென்ம பயணம் சாத்தியமாகிறது என்றார்.

  எனவே இவ்விஷயத்தில் பொறுமையான, முழுமையான, ஆழமான ஆராய்ச்சி தேவை.
  இந்தியாவின் மிகப்பெரிய சொத்து இது. நமக்கு தேவை சரியான விளக்கம். தேடுவோம்....சோர்வில்லாமல்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல விளக்கம் வரட்டும், வரவேற்போம்.

   நீக்கு
  2. //ஆன்மா பற்றி இன்றைய மருத்துவ வல்லுனர்களே உண்மை என்று ஒப்புக்கொள்கிறார்கள். விஜய் டிவியில் வந்த முன் ஜென்மம் நிகழ்ச்சியில் மனோதத்துவ டாக்டர் கூறியது இது.//

   அந்த நிகழ்ச்சியில் ஒரு தொலைகாட்சி நடிகையின் முன் ஜென்மத்தை ஆராய்வதாக கூறப்பட்ட ஒரு எபிசோடை பார்த்தேன். அதில் அந்த நடிகை போன ஜென்மத்தில் பசுவாக இருந்தாராம். அதுவும் ஏதோ ஒரு கோவிலின் பெயர் சொல்லி அந்த கோவிலின் அருகில் வாசித்தாராம். பசுவாக இருக்கும்பொழுது கோவிலின் பெயரெல்லாம் எப்படி தெரியும்? இதிலிருந்தே இதெல்லாம் ஒரு டுபாகூர் என்பது தெளிவாகிறது.

   //ஆனால் அவரே ஒரு சிலருக்குத்தான் தனது முன் ஜென்ம பயணம் சாத்தியமாகிறது என்றார்.//

   உண்மையாக இருந்தால் தானே எல்லாருக்கும் சாத்தியமாகும்.

   நீக்கு
 8. A different view from the perspective of layman. When layman thinks that Anma is some matter or code you have come with a definition of force and energy. So far I have not read any idea about this. Recently I read "Kadavul Irukkirara" by Sujatha and his conclusion was "It depends". He left the object of depends to reader's guess.

  Simple explanation whether provable or not is your strength. Thank you. Mail any response to my mail jayakumar22384@gmail.com.

  பதிலளிநீக்கு
 9. மெய்ஞானம். பற்றிய பகிர்வுகள் ..பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 10. அறிந்தேன்... ரசித்தேன்... (உங்களின் கருத்துரைகளையும்)

  பதிலளிநீக்கு
 11. விடை தேடிக் கொண்டேயிருக்கும் கேள்வி.

  பதிலளிநீக்கு
 12. அருமையான பகிர்வு! நிறைய அறிய முடிந்தது! நன்றி!

  பதிலளிநீக்கு
 13. வேதாத்திரி மகரிஷி பற்றி நீங்கள் அறிய முற்படும்போது இந்த தெளிவு
  எளிமையாக கைவரப்பெறும்.

  பதிலளிநீக்கு