சனி, 30 நவம்பர், 2013

ஆம்ஸ்டர்டாம் அனுபவங்கள் - பாகம் 4


டிக்கட் பரிசோதகர் என்னிடம் டிக்கெட் கேட்டார். நானும் வாங்கி வைத்திருந்த டூரிஸ்ட் டிக்கட்டைக் காட்டினேன். அவர் அதை வாங்கிப் பார்த்துவிட்டு என்னை மேலும் கீழுமாகப் பார்த்தார். அப்போதே ஏதோ வில்லங்கம் போல் இருக்கிறது என்று மனதிற்குள் பொறி தட்டியது. இருந்தாலும் "கெத்தை" (Self Confidence) விடாமல் ஏதாவது பிரச்சினையா என்றேன். அவர் சொன்னார், "இந்த பாஸ் சிட்டி வரம்பிற்குள் பிரயாணம் செய்வதற்குத்தான் செல்லுபடியாகும். நீங்கள் சிட்டி லிமிட்டைத் தாண்டி வெகு தூரம் வந்து விட்டீர்கள் என்றார்."

நான் உடனே சுருதி இறங்கிப்போய், டிபன்ஸ் மோடுக்கு மாறினேன். "ஐயா, நான் அசலூருங்க, உங்க ஊரைச் சுற்றிப்பார்க்கலாமென்று வந்தேன். இந்த உள்  விவகாரங்களெல்லாம் எனக்குத் தெரியவில்லை. இப்போது என்ன செய்யலாம்" என்றேன். அவர் நீங்கள் டூரிஸ்ட்டாக இருப்பதால் இது வரைக்கும் வந்ததற்கும் திரும்ப போவதற்கும் உண்டான சாதாரண கட்டணம் மட்டும் வசூலிக்கிறேன். இதுவே ஊள்ளூர்க்காரர்களாயிருந்தால் பெரிய தொகை பைன் கட்ட வேண்டியிருக்கும் என்றார்.

எப்படியோ தலைக்கு வந்தது தலைப்பாகையுடனே போயிற்று என்று நினைத்துக்கொண்டு அவர் கேட்ட பணத்தைக் கொடுத்தேன். அவர் ரசீது கொடுத்து விட்டு, வரும் ஸ்டேஷனில் இறங்கி, திரும்பிப் போகும் ரயிலில் சிட்டி போய்ச் சேருங்கள் என்றார். அடுத்த ஸ்டேஷனில் இறங்கி கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தேன். அப்போது ஒரு சுவாரஸ்யமான காட்சியைக் கண்டேன்.

அந்த ஊர் நகரின் வெளிப்புறத்தால் உள்ள ஒரு சிறாய கிராமம். அன்று ஒரு விடுமுறை நாள் போலும். அங்கு ஒரு பெரிய வேளியில் சிறிய சிறிய பிளாட்டுகள் போட்டிருந்தார்கள். அதில் பலவிதமான செடிகள் பயிரிடப்பட்டிருந்தன. ஒவ்வொரு பிளாட்டிலும் பெரியவர்கள், சிறியவர்கள் ஆகியோர் குடும்பம் குடும்பமாக ஏதோ வேலை செய்து கொண்டிருந்தார்கள். இது ஒரு வழக்கம் போல் இருக்கிறது என்று எண்ணிக்கொண்டு நான் திரும்ப வேண்டிய ரயில் வந்ததால் திரும்பி விட்டேன்.

நெதர்லாந்துக்காரர்கள் ஒட்டு மொத்தமாகத் திருடர்கள் என்பது எவ்வளவு பேர்களுக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை. அதைப் பற்றி அடுத்த பதிவில். 

43 கருத்துகள்:

  1. வணக்கம்
    தொடர் அருமையாக உள்ளது.. மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. //நான் உடனே சுருதி இறங்கிப்போய், டிபன்ஸ் மோடுக்கு மாறினேன்//

    நீங்கள் தப்பித்ததற்கு அதுதான் காரணம்.
    வெளி நாட்டில் உண்மையை ஒத்துகொண்டால் தண்டனை குறைவு நம் நாட்டில் பொய் சொன்னால்தான் தண்டனையிலிருந்து தப்பிக்க சான்ஸ் இருக்கும். உண்மையை சொன்னால் 'கிடைத்தானய்யா ஒரு இளிச்சவாயன்' என்று ஒரு கேஸ் புக் செய்து அலைய விட்டு விடுவார்கள்.

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  3. //நெதர்லாந்துக்காரர்கள் ஒட்டு மொத்தமாகத் திருடர்கள் என்பது எவ்வளவு பேர்களுக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை//.

    இது புது செய்தியாக உள்ளதே.
    இப்படிப்பட்ட ஒரு ஸ்வீப்பிங் ஸ்டேட்மென்ட் நீங்கள் விட வேண்டுமானால் மிகவும் சீரியசாக எதோ நடந்திருக்க வேண்டும். அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது

    திருச்சி அஞ்சு

    பதிலளிநீக்கு
  4. //அவர் நீங்கள் டூரிஸ்ட்டாக இருப்பதால் இது வரைக்கும் வந்ததற்கும் திரும்ப போவதற்கும் உண்டான சாதாரண கட்டணம் மட்டும் வசூலிக்கிறேன். இதுவே ஊள்ளூர்க்காரர்களாயிருந்தால் பெரிய தொகை பைன் கட்ட வேண்டியிருக்கும் என்றார்..//

    ரொம்ப நல்லவராக இருப்பார் போலிருக்கிறதே.
    கிடைத்த ஒரு அருமையான சந்தர்ப்பத்தை விட்டு விட்டாரே
    நம்ம ஊராக இருந்திருந்தால் தனியாக பாத்ரூம் பக்கம் கூட்டிபோய் ஒரு நல்ல அமௌண்ட் பார்த்திருப்பார்

    திருச்சி தாரு

    பதிலளிநீக்கு
  5. பதில்கள்
    1. இழுவை எல்லாம் ஒன்றுமில்லை திண்டுக்கல் தனபாலன் அவர்களே. என்ன அய்யா அவர்கள் ஒரு டஜன் என்று சொல்லாமல் 'பத்தோடு பதினொன்னு அத்தோடு இதுவும் ஒன்னு' என்று சொல்லுகிறார். ஆனால் அதுவும் சுவையாகதானே இருக்கிறது. ரசித்து விட்டு போங்களேன்

      திருச்சி காயத்ரி மணாளன்

      நீக்கு
    2. இது என்ன இழுவை? அடுத்தது ஒரு தொடர் எழுதலாமென்று இருக்கிறேன். அதுதான் உலக மகா இழுவையாக இருக்கப்போகிறது, தனபாலன்.

      நீக்கு
  6. ஆர்வத்துடன் அடுத்தப் பதிவுக்கு
    காத்திருக்கிறோம்

    பதிலளிநீக்கு
  7. //அவர் சொன்னார், "இந்த பாஸ் சிட்டி வரம்பிற்குள் பிரயாணம் செய்வதற்குத்தான் செல்லுபடியாகும். நீங்கள் சிட்டி லிமிட்டைத் தாண்டி வெகு தூரம் வந்து விட்டீர்கள் ................................. . .....வரும் ஸ்டேஷனில் இறங்கி, திரும்பிப் போகும் ரயிலில் சிட்டி போய்ச் சேருங்கள் என்றார்//

    போகும் போது டிக்கட் பரிசோதகர் சோதனை செய்யும் போது சிட்டி லிமிட்டுக்கு வெளியே இருந்தீர்கள் சரி. பைன் கட்டிவிட்டு அடுத்த ட்ரெயினில் திரும்பும்போதும் சிட்டி லிமிட்டுக்கு வெளியில்தானே இருந்திருப்பீர்கள். திரும்பி வரும்போது இன்னொரு டிக்கெட் பரிசோதகர் சோதனை செய்யவில்லையா? இல்லை மாட்டிக்கொள்ளாமல் வந்து சேர்ந்து விட்டீர்களா?

    சேலம் குருப்ரியா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரும்பி வருவதற்கும் சேர்த்து அவரே ரசீது போட்டுவிட்டார்.

      நீக்கு
  8. //இருந்தாலும் "கெத்தை" விடாமல் ஏதாவது பிரச்சினையா என்றேன்.//

    அதுதானே கோயம்பத்தூர் கவுண்டரின் கெத்து.
    அந்த கெத்து நம்ம ஊரில் செல்லும்.
    வெளியூரில் செல்லாது. நல்ல வேளை. பெரிதாக ஏதும் ஆகாமல் தப்பித்து விட்டீர்கள்.

    திருச்சி காயத்ரி மணாளன்

    பதிலளிநீக்கு
  9. //திரும்பிப் போகும் ரயிலில் சிட்டி போய்ச் சேருங்கள் என்றார். அடுத்த ஸ்டேஷனில் இறங்கி கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தேன்.//

    இந்த சூழ்நிலையிலும் வேடிக்கையா? படிக்கும் போதே அவனவனுக்கு பேதி புடுங்குகிறது. பாஷை தெரியாத ஊரில் ரயிலை விட்டு இறக்கி விட்டு விட்டான். டென்சன் ஆகாமல் வேடிக்கை பார்த்த உங்கள் மனோதிடத்தை மெச்ச வேண்டியதுதான்

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதான் அனுபவம் என்பது. தனது 75 வயதில் இப்படிப்பட்ட எத்தனை அனுபவங்களை பார்த்திருப்பார்.
      ஆனாலும் 'வெளியிலே புலி உள்ளுக்குள்ள எலி' என்றுதான் இருந்திருப்பாரோ என்று நினைக்கத்தோன்றுகிறது.

      திருச்சி அஞ்சு

      நீக்கு
  10. //எப்படியோ தலைக்கு வந்தது தலைப்பாகையுடனே போயிற்று//

    எப்படியோ தப்பித்து விட்டீர்கள். உங்கள் பாரியாளின் பாக்கியம்தான். இல்லையென்றால் ஏதாவது ஆர்கியூ செய்ய ஆரம்பித்திருந்தால் அந்த ஊர் ஜெயில் களி தின்ன வேண்டியதிருக்கும்

    திருச்சி அஞ்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்யாள் என்றவுடன்தான் ஞாபகத்திற்கு வருகிறது.
      அவரை பார்த்தவுடன் பாரியாளின் முகம் நினைவுக்கு வந்திருக்கும். பாரியாளின் பார்வையைப்பாத்த பிறகு ஆர்க்யுமெண்டாவது ஒண்ணாவது. அந்த பார்யாலை பற்றிய பயம்தான் அவரை காப்பாற்றியிருக்கிறது

      சேலம் குருப்ரியா

      நீக்கு
  11. ஒவ்வொரு பதிவு முடிவிலும் ஒவ்வொரு சஸ்பென்ஸ். தொடர் அருமையாக போய்கொண்டிருக்கிறது. எங்களுக்கு லாபம்தான். பாத்து நாளைக்கு ஒரு பதிவு என்றிருந்த காலம் போய் ஒரே வாரத்தில் நான்கு பதிவுகள். நீங்கள் எழுதி ஜமாயுங்கள். நங்கள் படித்து ஜமாய்க்கிறோம்

    திருச்சி தாரு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்க கமெண்ட் அய்யாவுக்கு பிடித்துபோய்விட்டது போலிருக்கிறது. எனவேதான் நாளைக்கு காலையில் போட வேண்டிய பின்னூட்டங்களை இன்றைய மதியமே போட்டுவிட்டார்.

      அய்யாவுக்கு தொடரட்டும் இந்த சுறுசுறுப்பு.
      நமக்கு இதை படிக்க ஒரு விறுவிறுப்பு


      சேலம் குரு

      நீக்கு
  12. //இந்த பாஸ் சிட்டி வரம்பிற்குள் பிரயாணம் செய்வதற்குத்தான் செல்லுபடியாகும் //

    உண்மைதான் அய்யா. ஐரோப்பிய நாடுகளில் சுற்றுலா செல்கையில் இத்தகைய விசயங்களில் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பாரிசில் ஒருமுறை இப்படி லோக்கல் டிக்கெட் வாங்கிகொண்டு தெரியாமல் சிடி லிமிட்டுக்கு வெளியே செல்லும் வண்டியில் ஏறி விட்டோம். வண்டி உள்ளே பார்த்தவுடன் புரிந்து விட்டது. சீட்டிலிருந்து எல்லாமே நன்றாக - உயர் தரமாக - இருந்தது. இறங்கிவிடலாம் என்பதற்குள் வண்டியை எடுத்து விட்டான். அடுத்த ஸ்டேசனுக்கு போவதற்கு 45 நிமிடங்கள் ஆகின. அதற்குள் போகிற வருகிறவர்களை எல்லாம் ஒருவித பயத்துடனே பார்த்துகொண்டிருந்தோம். நல்ல வேளை டிக்கெட் பரிசோதகர் யாரும் வரவில்லை. ஆனால் ஆடு திருடிய கள்ளன் போல நாங்கள் முழிக்கும் முழியை பார்த்துவிட்டு ஒரு பெண் போலிஸ் அதிகாரி வந்து எங்கள் அருகில் அமர ஒரே உதறல்தான். ஆனால் அந்த பொம்மனாட்டியொ 'ஒன்றும் பயபடாதீர்கள். நீங்கள் இறங்கும் வரை நான் துணைக்கு இருக்கிறேன். யாரும் உங்களை ஒன்றும் செய்து விட மாட்டார்கள் என்பதற்கு நான் கியாரண்டி' என்று சொன்னாலே பார்க்கணும். அடிச்சி பிடிச்சி அடுத்த ஸ்டேசனில் இறங்கிவிட்டோம். இதில் பியுட்டி என்னவென்றால் அந்த போலிஸ் அதிகாரியும் எங்களுடன் கீழே இறங்கி நாங்கள் ரிடன் டிக்கெட் எடுக்க உதவினார். பெரிய நன்றி ஒன்றை சொல்லிவிட்டு நாங்கள் அடுத்த ரிடன் வண்டியில் ஏறி பாரிஸ் வந்து சேர்ந்தோம். இன்று நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. ஆனால் அன்று பயந்த பயம் உண்மை.

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த பெண் போலிஸ் அதிகாரி மாதிரி உண்மையிலேயே உதவும் மனப்பாங்கு நமது நாட்டில் குறைந்து வருவதாக தோன்றுகிறது. அதற்கு முக்கிய காரணம் உதவியவர்களை பிடித்துகொண்டு போலிஸ் ஸ்டேசனுக்கும் கோர்ட்டுக்கும் போலீஸ்காரர்கள் அலைய விடுவதுதான். போலிஸ் உங்கள் நண்பர்கள் என்பது அந்த போர்டில் மட்டும்தான் உள்ளது. நிஜத்தில் அது என்று வருமோ அன்று இங்கும் அத்தகைய உதவும் மனபாங்குக்கு மக்கள் வந்து விடுவார்கள்.

      சேலம் குருப்ரியா

      நீக்கு
  13. //ஐயா, நான் அசலூருங்க, //

    இப்படித்தான் தப்பித்தீர்களா?
    நல்ல வேளை. சும்மா ஆர்க்யு செய்யாமல் உண்மையை சொன்னீர்களே. அதுமுடிய தப்பித்தீர்கள். டிக்கெட் பரிசோதகரும் நல்லவராக இருந்திருக்கிறார். உங்களுக்கு உதவி செய்திருக்கிறார்.
    Not knowing things is not an excuse என்று சொல்வார்கள். அப்படி சொல்லி வம்பு செய்யாமல் இருந்தாரே. அவருக்கு நன்றி சொன்னீர்களா?

    திருச்சி தாரு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரச்சனைகளை தீர்ப்பதற்குத்தான் சட்ட திட்டங்களே ஒழிய சட்டதிட்டங்களை வைத்துகொண்டு புது பிரச்சனைகளை உருவாக்கிக்கொண்டிருக்கக்கூடது என்று அந்த டிக்கெட் பரிசோதகருக்கு புரிந்திருக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள்

      திருச்சி காயத்ரி மணாளன்

      நீக்கு
  14. //அவர் கேட்ட பணத்தைக் கொடுத்தேன். அவர் ரசீது கொடுத்து விட்டு, //

    என்னது ரசீது கொடுத்தாரா? கொடுத்த பணத்தை வாங்கி பையில் போட்டுக்கொண்டு போகாமல், இப்படியா ரசீது கொடுப்பார்கள்.
    ஹோஹோ நான் மறந்து விட்டேன். நீங்கள் அயல் நாட்டில் அல்லவா இருந்திருக்கிறீர்கள். அப்போது சரிதான்.

    திருச்சி காயத்ரி மணாளன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் நமது நாட்டைப்பற்றி நல்லபடியாக நினைக்கபழகவேண்டும்
      அவர் ஏன் அமௌண்ட் வாங்க வேண்டும்? பைன் கட்ட நாம் ரெடியாக இருக்கும்போது அதற்கு இன்சிஸ்ட் செய்யலாமே. அவர் பாக்கெட்டில் போட அனுமதிக்கக்கூடாது. ஒவ்வொரு குடிமகனும் இப்படி செய்தால் போதுமே. அப்புறம் எங்கிருந்து பணம் பாக்கெட்டுக்கு போகும். என்ன செய்வது. நமது சட்டங்கள் நம்மை எதற்கெடுத்தாலும் அலைய விடுவதால் , நமக்கு நேரமும் இல்லாததால், பிரச்சனையை அப்போதே முடித்துக்கொள்ள ஆசைபடுவதால் இதெல்லாம் நடக்கிறது.

      சேலம் குரு

      நீக்கு
  15. //நெதர்லாந்துக்காரர்கள் ஒட்டு மொத்தமாகத் திருடர்கள் என்பது எவ்வளவு பேர்களுக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை//

    அப்படியென்றால் நெதர்லாந்துக்காரர்கள் ஒட்டு மொத்தமாகத் திருடர்கள் என்று முன்பாகவே உங்களுக்கு தெரியும் போலிருக்கிறதே. எப்படி என்று ஒரு பதிவு போடுங்களேன்.

    சேலம் குருப்ரியா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படிக்க ஆவலாக இருக்கிறோம்.
      ஒரு காரணம் நம்மை போன்றே அவனும் ஒரு திருடன்தான் என்ற அற்ப சந்தோசம்
      இன்னொரு காரணம் அவன் ஏதாவது புதிய முறையில் திருடியிருந்தால் அதை நாமும் பின்பற்றலாமே என்ற நல்ல எண்ணம்தான்

      திருச்சி காயத்ரி மணாளன்

      நீக்கு
  16. //இந்த பாஸ் சிட்டி வரம்பிற்குள் பிரயாணம் செய்வதற்குத்தான் செல்லுபடியாகும். நீங்கள் சிட்டி லிமிட்டைத் தாண்டி வெகு தூரம் வந்து விட்டீர்கள்//

    நீங்கள் பரவாயில்லை. வெளி நாட்டில்தான் இப்படிப்பட்ட அனுபவம்.
    சென்னை எக்மோரில் மின்சார ரயிலில் பார்த்தால் புதிதாக வருபவர்களுக்கு எந்த பாகம் பீச் எந்த பக்கம் செங்கல்பட்டு என்றே புரியாமல் விசாரித்துகொண்டிருப்பார்கள். மேலே போர்டு வைத்திருந்தாலும் அவசரத்தில் எதையும் பார்க்காமல் விசாரிப்பார்கள். எதோ நம்மால் முடிந்த அளவு கேள்வி கேட்பவர்களுக்கு உதவி புரிவேன்

    சேலம் குருப்ரியா

    பதிலளிநீக்கு
  17. இது முடிய 'இதயம் பேசுகிறது' மணியன் தொடர் மாதிரி சந்தித்த மனிதர்களையும் சாப்பிட்ட உணவை பற்றியும் அந்த உணவிற்காக அலைந்ததைப்பற்றியும் எழுதாமல் இருக்கிறீர்கள். அதையும் போட்டால் என் போன்ற சைவ சாப்பாட்டுகாரர்களுக்கு உதவியாக இருக்குமே. நீங்கள் அந்த ஊர் அசைவ சாப்பாடு சாப்பிட்டீர்களா? பாதிதான் வெந்திருக்குமாமே? உண்மையா? சைவ சாப்பாடும் அப்படித்தானா

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். பாதி வெந்த சிக்கனை சாப்பிட்டு விட்டு கூடவே ஒரு குவார்ட்டரையும் அடித்து விடுவார்கள். ஜீரணமாகி விடும். ஆனால் அங்கெல்லாம் குவார்டர் அடித்து விட்டு நம்மூர் போல அலம்பல் பண்ண மாட்டார்கள். ஜீரணமாக நாம் ஒரு சோடா குடித்துவிட்டு பேசாமல் போவது போல, அவர்கள் ஜாலியாக ஒரு குவார்ட்டர் அடித்து விட்டு அடுத்த வேலைக்கு போய்விடுவார்கள்.

      திருச்சி தாரு

      நீக்கு
  18. //அவர் அதை வாங்கிப் பார்த்துவிட்டு என்னை மேலும் கீழுமாகப் பார்த்தார்.//

    பார்த்தால் என்ன? அய்யா நான் எங்கள் ஊரில் பெரிய கவுண்டனாக்கும். ஆமாம் ஒன்னும் அசச்சுக்க முடியாது என்று சொல்லிவிட வேண்டியதுதானே. (சொல்வதற்கு என்ன. சொல்லிவிட்டு அவஸ்தை படபோவது நீங்கள்தானே)

    திருச்சி காயத்ரி மணாளன்

    பதிலளிநீக்கு
  19. நீங்கள் ஏதாவது திருட்டுக் கொடுத்தீர்களா.?

    பதிலளிநீக்கு
  20. என்ன கடைசியில் நெதர்லாந்துக்காரர்கள் அனைவரையும் திருடர்கள் என சொல்லிவிட்டீர்கள்? காத்திருக்கிறேன் காரணம் அறிய.

    பதிலளிநீக்கு
  21. //நான் உடனே சுருதி இறங்கிப்போய், டிபன்ஸ் மோடுக்கு மாறினேன். "ஐயா, நான் அசலூருங்க, உங்க ஊரைச் சுற்றிப்பார்க்கலாமென்று வந்தேன். இந்த உள் விவகாரங்களெல்லாம் எனக்குத் தெரியவில்லை. இப்போது என்ன செய்யலாம்" என்றேன். //

    சரணாகதி தத்துவம் அருமை. ;)

    பதிலளிநீக்கு
  22. //நெதர்லாந்துக்காரர்கள் ஒட்டு மொத்தமாகத் திருடர்கள் என்பது எவ்வளவு பேர்களுக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை. அதைப் பற்றி அடுத்த பதிவில். //

    அடடா .... மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  23. அனைத்து பின்னூட்டங்களும் சுவையாய் இருக்கின்றன ஐயா!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  24. //ஒட்டு மொத்தமாகத் திருடர்கள் என்பது எவ்வளவு பேர்களுக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை.//

    இங்கு ஆஸ்திரேலியாவிலும் இதே மக்கள்தான்.

    பதிலளிநீக்கு
  25. அடுத்து ஒரு சஸ்பென்ஸா?
    அருமையான பயணக் கட்டுரை....
    வாழ்த்துக்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
  26. மொத்தமாக படித்துவிட்டதால், மற்ற சஸ்பென்ஸ் எல்லாம் தெரிந்துவிட்டன. இது என்ன என்று நானும் மற்றவர்களுடன் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  27. வெளிநாட்டு டிக்கட் பரிசோதகர் ரொம்பவும் கண்ணியமாக நடந்து இருக்கிறார். நம்நாட்டில் எல்லாம் சரியாக இருந்தாலும் நம்மை அழ விட்டு இருப்பார்கள் (இந்த தொடரில் விட்டுப் போன உங்கள் பதிவுகளை இப்பொழுதான் படிக்கத் துவங்கி இருக்கிறேன் )

    பதிலளிநீக்கு