புதன், 21 ஜனவரி, 2015

மகாபாரதமும் மாதொரு பாகனும்"நிர்வாணபுரியில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்" என்று ஒரு பழமொழி உண்டு. நான் முதலிலேயே அரைப் பைத்தியம்.  முழுப்பைத்தியம் ஆகாமலிருக்கத்தான் இந்தப் பதிவு.

மாதொரு பாகனைப் பற்றி ஏறக்குறைய பெரும்பாலானோர் தங்கள் தங்கள் கருத்துக்களை பதிவேற்றி விட்டார்கள். நேற்று ராத்திரி, (எதையாவது கற்பனை செய்து கொள்ளாதீர்கள்) தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தபோது, இதைப்பற்றிய நினைவு வந்தது. ஊரே தீப்பற்றி எரிகிறது,  நாமும் நம் பங்கிற்கு ஏதாவது கொஞ்சம் செய்ய வேண்டாமா என்று தோன்றியது. அதன் விளைவுதான் இந்தப் பதிவு.

இராமாயணம், மகாபாரதம் இரண்டும் நம் நாட்டில் இந்துக்களால் போற்றிக் கொண்டாடப்படும் மாபெரும் இதிகாசங்கள். அவற்றைப்பற்றி ஏதாவது மோசமாகப் பேசினால் நான் உயிருடன் எரிக்கப்படுவேன் என்பதை நன்கு உணர்ந்திருக்கிறேன். ஆகவே அவற்றைப் பற்றித் தவறாக ஒன்றும் பேசமாட்டேன்.

அதில் வரும் சில நிகழ்வுகளை மட்டும் அப்படியே மேலோட்டமாக சுட்டிக்காட்ட மட்டும் விரும்புகிறேன். இந்த நிகழ்வுகள் ஏற்கெனவே தொலைக் காட்சியில் ஒளி பரப்பப்பட்டவைதான். நான் ஒன்றும் புதிதாக இட்டுக்கட்டவில்லை.

சந்தனு மகாராஜாதான் மகாபாரதத்தில் வரும் முதல் ராஜா. இவருக்கு இரண்டாவது பெண்டாட்டி சத்தியவதி என்ற மீனவ ராஜகுமாரி. சந்தனுவிற்கும் சத்தியவதிக்கும் இரு புதல்வர்கள் பிறந்தார்கள். சித்திராங்கதன், விசித்திரவீரியன் என்பவை அவர்கள் பெயர், இதில் சித்திராங்கதன் கல்யாணம் செய்யாமலேயே ஒரு சண்டையில் இறந்து போகிறான்.அடுத்தவன் விசித்திரவீரியன். இவனுக்கு அம்பிகை, அம்பாலிகை என்று இரண்டு காசி நாட்டின் இளவரசிகளை மணமுடிக்கிறார்கள்.

விசித்திரவீரியன் குழந்தைப்பேறு இல்லாமல் இறந்து போகிறான். சத்தியவதி தர்ம சங்கடத்தில் மூழ்கிறாள். ராஜ்யத்திற்கு வாரிசு இல்லை. வாரிசு இல்லாத ராஜயத்தை எதிரிகள் பிடித்துக்கொள்வார்கள். என்ன செய்வது என்று யோசித்து ஒரு உபாயம் செய்கிறாள். அதன் விளைவாக இரண்டு வாரிசுகள் உண்டாகின்றன. திருதராஷ்டிரன், பாண்டு ஆகிய இருவரும்தான் அந்த வாரிசுகள்.

அந்த உபாயம் என்னவென்பதை  டிவி தொடர் மூலம் வாசகர்கள் நன்கு அறிவார்கள். அதை நான் இங்கு விவரித்து தேசப் பிரஷ்டம் ஆக விரும்பவில்லை. அதனால் அதைத் தவிர்க்கிறேன். அதே மாதிரி பாண்டவர்கள் ஐவரும் பிறந்த வழியும் அனைவரும் அறிந்ததே.

இந்தக் கதை நடந்தது திரேதா யுகத்தில். இப்போது நடக்கும் கலியுகத்திலும் இந்த மாதிரி வம்ச விருத்திக்காக சில உபாயங்களைக் கடைப்பிடித்ததாக பெருமாள் முருகன் என்பவர் மாதொரு பாகன் என்கிற தன் நாவலில் குறிப்பிட்டிருக்கிறாராம். நான் இந்த நாவலைப் படித்ததில்லை. திரேதாயுகத்தில் நடந்ததை கலியுகத்திலும் நடந்ததாகச் சொல்லலாமோ?  வம்பில் சிக்கிக்கொண்டார்.

பெருமாள் முருகனுடைய அப்பா ஒரு தீர்க்கதரிசி. தன் மகன் எதிர் காலத்தில் சைவ-வைஷ்ணவப் போராட்டத்தில் சிக்கிக்கொள்ளக்கூடாது என்பதற்காக இரண்டு கடவுள் பெயர்களையும் சேர்த்து பெருமாள் முருகன் என்று பெயர் வைத்திருக்கிறார். யாரானாலும் தங்கள் பெயருக்கு "ஹானி" வருகிறமாதிரி நடந்து கொள்ளக்கூடாது. இவர் தன் பெயருக் கேட்ப நடந்து கொள்ளவில்லை.

இப்போது மர-இடுக்கில் வாலை விட்டுவிட்டு ஆப்பை பிடுங்கின குரங்கின் நிலையில் இருக்கிறார். இதனால் நான் சொல்லும் நீதி என்னவென்றால் ஒவ்வொருவரும் தங்கள் பெயருக்கேட்ப நடந்து கொள்ளவேண்டும். இல்லாவிட்டில் ஆப்பைப் பிடுங்கின குரங்கின் கதிதான் வாய்க்கும்.

நான் என் பெயருக்கேட்ப நடந்து கொள்கிறேனா இல்லையா என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும். இல்லையென்று சொன்னால் வருத்தப்படமாட்டேன்.

பின்குறிப்பு - குரங்கு வாலை விட்டுட்டு ஆப்பைப் பிடுங்கின படம் கிடைக்கவில்லை. அதனால் இந்தப் படத்துடன் திருப்திப் பட்டுக்கொள்ளவும்.

25 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. என்னங்க, மகாபாரதத்தைப் பூராவும் ஒரு பதிவில சொல்லச் சொல்லறீங்களே, இது நியாயமா?,

   நீக்கு
 2. சுவாரஸ்யமான
  மிக புத்திசாலித்தனமான
  சுருங்கச் சொன்னால் நாசூக்கான நையாண்டி
  மிகவும் இரசித்தேன்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. பெருமாள் முருகன் தான் கவுண்டர் என்பதை எந்த நிலையிலும் வெளிப்படுத்தாத இலக்கியவாதி ்இவரது கதைகள் இயல்பானவை கங்கனம் கதை என்னளவில் இவரது கதைகளில் வைரம் ் மடாதிபதிகளின் கிழ்தரமான செயல்களை எதிர்க்கதிரணியில்லாத இயக்கங்கள் எழத்தாளன் சமரசித்திற்க்கு வந்த பின்பும் அவனை ஊரை விட்டு ஓதுக்கி வைப்பது அன்றைய காலத்தை ஞாபகத்தில் கொண்டு வருகிறது ்பெருமாள் முருகன் எழத்துக்களை வாசியுங்கள் ்அவரை புரியும் ்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எவ்வளவு பெரிய எழுத்தாளனாக இருந்தாலும் ஒரு சமூகத்தின் ஆத்திரத்தைக் கிளறுகிற மாதிரி எழுத அவனுக்கு உரிமை இல்லை. அந்தக் குறிப்பிட்ட சமூகத்தினரிடையே பழகி செய்திகள் சேகரித்தவருக்கு அவர்களின் நாடித்துடிப்பு தெரியாமல் போனது வருந்தத்தக்கது.

   அவருடைய "மாதொருபாகன்" புத்தகத்தை என்னால் படிக்க முடியவில்லை. அந்த நடை எனக்குப் பிடிக்கவில்லை.

   நீக்கு
 4. ஐயா

  ஊட்டியில் தோடர் பழங்குடியினர் இப்போதும் தாங்கள் பாண்டவ வம்சத்தினர் என்று எல்லா சகோதரர்களுக்கும் ஒரு மனைவி என்று கட்டுவதாகக் கேள்வி.

  "என்னங்க, மகாபாரதத்தைப் பூராவும் ஒரு பதிவில சொல்லச் சொல்லறீங்களே, இது நியாயமா?,"

  மிகச்சிறிய ஆய்வுரை எழுதி முனைவர் பட்டம் பெற்ற தாங்களுக்கா இது முடியாது?
  --
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தோடர் பழங்குடியினர் ஏறக்குறைய அழிந்து விட்டார்கள் என்று கேள்விப்பட்டேன். இப்போது செய்திகளில் காட்டப்படும் தோடர்கள் நாடக நடிகர்கள்.

   நீக்கு
 5. நிகண்டு.காம் புதிய பொலிவுடன் புது சாப்ட்வேர் உடன் புதிய வேகத்தில் இந்த தமிழர் திருநாளில் ஆரம்பமாகிறது. தமிழில் எழுதுபவர்களையும் படிபவர்களையும் இணைக்கும் தளம் நிகண்டு.காம் வழியாக உங்கள் வலைப்பூக்கள்,புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  பதிலளிநீக்கு
 6. பதில்கள்
  1. தடி முண்டம், என்ன எளவு எளுதீரிக்குற, ஒரு மண்ணும் புரியலடா.

   நீக்கு
 7. உங்கள் பெயருக்குப் பெருமை சேர்த்திருக்கிறீர்கள். சந்தேகமே வேண்டாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயோ, எனக்குப் பெருமையே வேண்டாம் சாமி, என்னை ஆளை சும்மா விட்டால் போதும்.

   நரி இடம் போனால் என்ன வலம் போனால் என்ன, மேலே விழுந்து பிடுங்காமல் போனால் சரி.

   நீக்கு


 8. // ஊரே தீப்பற்றி எரிகிறது, நாமும் நம் பங்கிற்கு ஏதாவது கொஞ்சம் செய்ய வேண்டாமா என்று தோன்றியது. அதன் விளைவுதான் இந்தப் பதிவு.//

  எல்லோரும் இது பற்றி எழுதும்போது நீங்களும் மாதொருபாகன் பற்றி எழுதாவிட்டால் அது மாபெரும் பாதகமாகும் என்றெண்ணி ‘மகாபாரதம்’ பற்றி சொல்லி உங்கள் பங்களிப்பை செய்துவிட்டீர்கள்!

  பதிலளிநீக்கு
 9. your views and ideas are so abstract and shallow. Problem & solution can be stated clearly. Please look after that. Sorry for not typing in tamil.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Dear Sir,
   I have no intention of analyzing this problem in full and suggest solution. I just wanted to compare the puranic event with the current issue raised against Perumal Murugan. The problem of Perumal Murugan has gone beyond settlement by Administrative people or social organisations. It can be settled only by a court of law which will take a long time and that too only if Perumal Murugan approaches the court for redressal.

   Till then it has become a public topic that can be discussed from all angles by one and sundry. I have thrown my idea to the public. That is all. I am not for or against Perumal Murugan. In any case it is a pity that he got into this mire.

   நீக்கு
 10. ஐயா!
  களவு போன ஆறாம் மாதம் நாய் குரைத்தது என்பது போல் இக் கதைக்கு வெளிவந்த 4 ஆண்டுகளின் பின் ஏன்? இவ்வளவு பிரச்சனை, தயவு செய்து யாராவது விளக்கவும்.
  நான் இன்னும் கதை படிக்கவில்லை.
  //இவர் தன் பெயருக் கேட்ப நடந்து கொள்ளவில்லை.//- இவர் பெயருக்கேற்ப நடப்பதாக பெருமாள், முருகன் போல் இரண்டு மனைவிகளுடன் வாழமாட்டார் என நம்புகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது ஏன் இப்படி ஆயிற்று என்பது பெருமாள் முருகனுக்கும் திருச்செங்கோடு பொது ஜனங்களுக்கும் மட்டுமே நன்கு தெரியக்கூடும். ஏறக்குறைய ஒரு கட்டைப் பஞ்சாயத்து மாதிரி ஒரு தீர்வு ஏற்பட்டு பெருமாள் முருகனும் அதற்கு ஒத்துக் கொண்டதாய் தெரிகிறது. இந்த முடிவிற்கு மேல் முறையீடு செய்வதென்றால் சம்பந்தப்பட்ட நபர்தான் கோர்ட்டை நாடவேண்டும்.

   அது வரையில் பொது மக்களாகிய நாம் உலக வழக்கப்படி வெறும் வாய்க்கு அவல் கிடைத்த மாதிரி இந்தப் பிரச்சினையை மெல்லுகிறோம். அவ்வளவுதான்.

   நீக்கு
 11. ஐயா! இன்று காலையில் இதே மாதிரி சிந்தனை உதித்தது! இதையொட்டி பதிவு எழுதலாமா என்று யோசித்து வம்பை எதற்கு வாங்க வேண்டும் என்று விட்டுவிட்டேன்! நீங்கள் நாசூக்காக எழுதி அசத்திவிட்டீர்கள்! அருமை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விதி இருந்தால் வம்பு நீங்கள் விரும்பாமலேயே வீடு தேடி வரும். எனக்கு பெருமாள் முருகன் பேரில் வெறுப்போ இல்லை அபிமானமோ இல்லை. இந்தப் பிரச்சினை எப்படி உருவானது, எப்படித் தடுத்திருக்க முடியும் என்பதில் ஒரு ஆர்வம். அவ்வளவுதான்.

   நீக்கு
 12. //பெருமாள் முருகனுடைய அப்பா ஒரு தீர்க்கதரிசி. தன் மகன் எதிர் காலத்தில் சைவ-வைஷ்ணவப் போராட்டத்தில் சிக்கிக்கொள்ளக்கூடாது என்பதற்காக இரண்டு கடவுள் பெயர்களையும் சேர்த்து பெருமாள் முருகன் என்று பெயர் வைத்திருக்கிறார்//
  எழுத்தாளர் பெருமாள் முருகனின் இயற்பெயர் முருகன். பெருமாள் அவரது தந்தையின் பெயர்.எழுத்துலகிற்காக பெ.முருகன் பெருமாள் முருகன் என்று ஆகி இருந்தார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செய்தித் தாள்களின் அவர் பெயரை பெருமாள் முருகன் என்று குறிப்பிடப் படுவதால் அதுதான் அவர் முழுப்பெயரோ என்று நினைத்தேன். தவிர அவர் பெயரோ அதை நான் நகைச்சுவையாகக் குறிப்பிட்டதோ முக்கியமில்லை. இது மாதிரி ஒரு பிரச்சினையில் அவர் சிக்கிக்கொண்டது ஒரு பரிதாபமே.

   நீக்கு