ஞாயிறு, 25 ஜனவரி, 2015

சுயநலம் vs பொது நலம்

                              

"சுயநலம்" "Selfish" என்றாலே ஏதோ செய்யத்தகாத குற்றம் செய்ததாக கருதும் உலகத்தில் இன்று நாம் வாழ்கிறோம். சுயநலம் கொண்டவன் என்று ஒருவனைக் குறை கூறுவது மிகவும் சாதாரணமாக நடக்கிறது. ஆனால் இது போலித்தனத்தின் (Hypocrisy) உச்சகட்ட சிந்தனையாகும்.

சுயநலம் என்பது தீண்டத்தகாத வார்த்தை அல்ல என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளவேண்டும். தன்னைக் காப்பாற்றிக்கொண்டால்தான் அடுத்தவர்களைக் காப்பாற்றத் தேவையான சக்தி பிறக்கும். தன்னைக் காப்பாற்றிக் கொள்ளாமல் நான் பொது நலவாதி,  பிறரைக் காப்பாற்றுவதே என் பிறவி நோக்கம் என்று இருந்தால் நீங்கள் மறைந்து போவதைத் தவிர வேறு ஒன்றும் நடக்காது.

ஒரு குடும்பத்தில் ஒருவன் மூத்த மகனாகப் பிறக்கிறான். அவனுக்குக் கீழே நான்கு உடன் பிறப்புகள். அனைவரையும் கடைத்தேற்ற வேண்டிய பொறுப்பு மூத்த மகனுக்கு உண்டு. ஆனால் அவன் தன்னுடைய நலத்தைக் கருதாமல் உடன் பிறப்புகளை மட்டும் கடைத்தேற்றி விட்டு வயதான காலத்தில் தனி மரமாக நின்று கொண்டு இருந்தால் அவன் மீது கூடப் பிறந்தவர்களோ உறவினர்களோ அனுதாபம் காட்ட மாட்டார்கள் என்பதை அவன் புரிந்து கொள்ளாவிட்டால் அவன் இந்த உலகில் வாழத் தகுதி அற்றவன்.

சிலர் பொது நல சேவை செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு தான் சம்பாதிப்பதை எல்லாம் பிறருக்குச் சேவை செய்தே காலம் கழிப்பார்கள். தன் குடும்பம் எப்படி நடக்கிறது என்பதைக் கண்டு கொள்ள மாட்டார்கள். அவர்க்ள எல்லோரும் இந்நாளைய அரசியல்வாதிகளைப் பார்த்து நடந்து கொள்ளவேண்டும்.

ஆகவே சுயநலம் என்பது தீண்டத்தகாத வார்த்தை அல்ல. தனக்கு மிஞ்சித்தான் தானதருமம் என்று சொல்லியதை நினைவில் கொள்ளவேண்டும். மகாபாரதத்தில் வரும் கர்ணனைப் போல் பகழ் பெறவேண்டும் என்று ஆசைப்படாதீர்கள்.


14 கருத்துகள்:

 1. இதை சொல்வதற்கு நிறைய துணிவு வேண்டும்.

  பதிலளிநீக்கு
 2. நல்ல ஆலோசனை

  பொது நலம் பாதிக்காத சுய நலம்
  நிச்சயம் தவறேயில்லை

  சுய நலம் பாதிக்காத பொது நலமே
  என்றும் தொடரச் சாத்தியம்

  மனம் கவர்ந்த பதிவு

  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. சுயநலத்தைப் பற்றிய பொதுநலத்திலான தங்களது பதிவினைப் படித்தேன். தங்களது கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 4. ஒவ்வொரு நிலையிலும் ஏணியாக வாழ்வதில் திருப்தி இல்லை என்றால் வாழ்வு நரகம் தான்...

  பதிலளிநீக்கு
 5. ஐயா

  selfish என்பது வேறு, சுயநலம் என்பது வேறு. இது என்னுடைய கருத்து. எல்லாம் எனக்கே என்பது selfish எனலாம். சில குழந்தைகள் அவ்வாறு செய்வதுண்டு. சுயநலம் என்பது முதல் உரிமை எனக்கே, எனக்குப் பின்தான் மீதி உள்ளதை மற்றவர்கள் உரிமை கோரலாம் என்று சொல்லலாம்.

  ஆக சுயநலத்தோடு இருப்பது தவறில்லை. ஆனால் selfish ஆக இருக்காதீர்கள் என்று அறிவுரை கூறலாம்.

  --
  Jayakumar

  பதிலளிநீக்கு

 6. ‘தனக்கு மிஞ்சித்தான் தான தருமம்’ என்பது சரியே. ஆனாலும் முழுதும் சுயநலமாய் இருப்பது சரியா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாத்திரமறிந்து பிச்சையிடவேண்டும் என்பதில் நான் உறுதியான கொள்கை வைத்திருக்கிறேன்.

   நீக்கு
  2. மிக்க சரி . நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை

   நீக்கு
 7. “உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்”
  “ஈதல் இசைபட வாழ்தல்”
  “வெள்ளத்தனைய மலர் நீட்டம்”
  “ஈயெனெ இரத்தல் இழிந்தன்று
  ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று”

  குமணவள்ளல், அரசனிடமிருந்து உயிர்காத்துக்கொள்ள பதுங்கி வாழ்ந்தபொழுது, ஈ என்று ஒருவன் வந்துவிட்டானாம். கொடுப்பதற்கு ஒன்றுமில்லை. என் தலையை அரசனிடம் கொடுத்தால் பரிசு தருவான் என்று தலையைக் கொடுத்தானாம் அந்தவள்ளல்.

  எப்படியிருந்த கலா – சாரம், எந்த நிலைமைக்கு வந்துவிட்டது என்று உங்கள் பதிவும் பின்னூட்டங்களும் பறைசாற்றுகின்றன.

  உங்களது மாணவர்கள் அதிர்ஷ்டசாலிகள் !

  பதிலளிநீக்கு
 8. நீங்க சொன்னது சரி. சுயநலம் அவசியமானது.
  அதிகாரத்திற்கு வரும் அரசியல்வாதிகளும், அரசில் பணிபுரியும் லஞ்சம் வாங்குபவர்களும் மற்றவர்களிடம் அடிப்பது கொள்ளை.

  பதிலளிநீக்கு
 9. ஒரு சதவிகிதம் கூட சுயநலம் இல்லா மனிதனை காண்பது அறிது

  ///ஒரு குடும்பத்தில் ஒருவன் மூத்த மகனாகப் பிறக்கிறான். அவனுக்குக் கீழே நான்கு உடன் பிறப்புகள். அனைவரையும் கடைத்தேற்ற வேண்டிய பொறுப்பு மூத்த மகனுக்கு உண்டு. ஆனால் அவன் தன்னுடைய நலத்தைக் கருதாமல் உடன் பிறப்புகளை மட்டும் கடைத்தேற்றி விட்டு வயதான காலத்தில் தனி மரமாக நின்று கொண்டு இருந்தால் அவன் மீது கூடப் பிறந்தவர்களோ உறவினர்களோ அனுதாபம் காட்ட மாட்டார்கள் என்பதை அவன் புரிந்து கொள்ளாவிட்டால் அவன் இந்த உலகில் வாழத் தகுதி அற்றவன்.///

  இந்த மூத்தமகன் "தன்" உடன் பிறப்புகளை மட்டும் கடைத்தேற்றுவது என்பதும் அவனின் சுயநலம்தானே இதில் வரும் தன் உடன் பிறப்பு என்பது சுயநலத்தைதானே சொல்லுகிறது

  பதிலளிநீக்கு
 10. அன்புடையீர், வணக்கம்.

  தங்களின் வலைத்தளம் இன்று வலைச்சரத்தில் என்னால் அடையாளம் காட்டி சிறப்பிக்கப்பட்டுள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  இணைப்பு:- http://blogintamil.blogspot.in/2015/01/blog-post_27.html.

  பதிலளிநீக்கு