வைகோ அவர்களின் கதைக்கு நான் எழுதிய விமர்சனம்.
VGK 14. நீ ..... முன்னாலே போனா .....நா ..... பின்னாலே வாரேன் !
(இந்தக் கதையைப் படிக்க இங்கே சுட்டவும்.)
அருமையான கதை. இது மட்டுமே இந்தக் கதைக்குப் போதுமான விமர்சனம்.
ஆனால் நடுவர்கள் ஏளனமாகப் பார்ப்பார்கள் என்பதற்காக கொஞ்சம் விரிவான விமர்சனம் எழுத
முயற்சிக்கிறேன்.
மனிதனின் உணர்வுகளைச் சரியாகப் புரிந்து கொள்பவர்கள் அரிது.
நாம் ஒன்றை நினைத்து செய்தால் மற்றவர்களுக்கு அது பிடிக்காது. அதுவும் மனமொத்த தம்பதியினருக்குள்
பலவித புரிதல்கள் இருக்கும். அது மற்றவர்களுக்கு புரியாது.
இந்தக் கதை அப்படிப்பட்ட உணர்ச்சிப் போராட்டத்தின் சரித்திரம்.
தன் மனைவியை மிகவும் நேசித்த ஒருவர் அந்த மனிவியின் இறுதிக்காலத்தில் அவளுடைய ஆசைகளை
நிறைவேற்றுகிறார். அவளுக்கு மிகவும் விருப்பமான இனிப்புப் பண்டங்களை வாங்கிக் கொடுக்கிறார்.
ஏன் என்றால் அவளுடைய வாழ்வு இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டதை அவர் உணர்கிறார்.
ஆனால் மற்றவர்களின் பார்வையில் இது ஒரு கொலை போலத்தான் படும்.
இந்த உணர்ச்சிப் போராட்டத்தை நுணுக்கமாக கதாசிரியர் விளக்கியிருக்கிறார். இந்த நுணுக்கத்தை
அனுபவிக்கவே வாசருக்கு ஒரு தனி மனோபாவம் வேண்டும். அப்படிப்பட்ட மனோபாவம் இல்லாதவர்கள்
இந்தக் கதையில் உட்பொருளை விளங்கிக்கொள்ள முடியாது.
மனைவி இழந்த சோகம் கணவனையும் இறுதி யாத்திரைக்கு அழைத்துச்
சென்று விடுகிறது. பாகவத சப்தாகம் கேட்டு முடித்தவுடன் இந்த முடிவு ஏற்படுவதாக காண்பித்திருப்பது
கதையை வேறு ஒரு தளத்திற்கு இட்டுச் செல்கிறது.
அரட்டை ராமசாமி கதைக்கு சுவாரஸ்யம் சேர்க்கிறார். ஏறக்குறைய
அவர்தான் கதையை நகர்த்திச் செல்கிறார் என்றே கூறலாம். ஆசிரியர் இந்தக் கதையை பின்னியிருக்கும்
விதம் ஆழ் மனதைத் தொடுகிறது.
கதையோடு ஒன்றிப்போவது என்பது இதுதான்.
பதிலளிநீக்குதங்களின் விமர்சனத்தையும் கதையையும் படித்தேன். யதார்த்தத்தைப் பகிர்ந்துள்ள விதம் நன்று.
பதிலளிநீக்குதிரு வைகோ அவர்களின் ‘’ நீ முன்னாலே போனா நா பின்னாலே வாரேன்!’’ என்ற தொடர் கதை உள்ளத்தை தொட்டது. இந்த கதையில் மனமொத்த தம்பதியினரின் பாசப்பிணைப்பு பற்றி சொல்லும்போது, ஊடே நீரிழிவு பற்றிய அறிவு பூர்வ தகவல்களையும், சுகப்பிரும்ம ரிஷி பரீக்ஷித் மஹாராஜாவிடம் பாராயணம் செய்த ஸ்ரீமத் பாகவத ஸப்தாகம் பற்றியும், நாம் இதுவரை அறிந்திராத பரீக்ஷித் மஹாராஜா பற்றிய இரண்டாவது புராணக் கதையையும், முதியோர் இல்லத்தில் மக்களின் வாழ்க்கை முறை பற்றியும் இணைக்கவேண்டிய இடத்து இணைத்து ஒரு கதம்ப மாலை போல் தொடுத்துள்ளார் கதாசிரியர். பாசமும், அறிவியலும், ஆன்மீகமும் மனித நேயமும் இணைந்த இதுபோன்ற ஒரு கதையை திரு வைகோ அவர்களால் தான் தரமுடியும். அவருக்கும், அவரது இந்த தொடர் கதையை தங்களுடைய திறனாய்வோடு தந்தமைக்கும் வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவே.நடனசபாபதி புதன், 7 ஜனவரி, 2015 ’அன்று’ 7:28:00 முற்பகல் IST
நீக்கு//ஒரு கதம்ப மாலை போல் தொடுத்துள்ளார் கதாசிரியர். பாசமும், அறிவியலும், ஆன்மீகமும் மனித நேயமும் இணைந்த இதுபோன்ற ஒரு கதையை திரு வைகோ அவர்களால் தான் தரமுடியும். //
Respected Dear Sir,
Thanks a Lot for your kind appreciation, Sir. :)
- VGK
மழை விட்டும் தூவானம் விடவில்லையா.?
பதிலளிநீக்குநல்ல சுருக்கமான விமர்சனம்...
பதிலளிநீக்குஅன்புள்ள ஐயா, வணக்கம்.
பதிலளிநீக்குதங்களின் இந்த விமர்சனம் படிக்க மிகவும் விறுவிறுப்பாகவும், சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் உள்ளது.
தங்கள் தள வாசகர்களையும் அந்த என் சிறுகதையை வாசிக்க வைக்கத் தூண்டுதலாகவும் அமைந்துள்ளது.
தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
என் ’சிறுகதை விமர்சனப் போட்டி’யில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்ததற்கும் அதை இன்று இங்கே தனிப்பதிவாக வெளியிட்டுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.
அன்புடன் கோபு [VGK]
ooooooooooooooooooooooooooo