வெள்ளி, 23 ஜனவரி, 2015

கலாச்சாரம்


கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம், பண்பாடு என்று பல சொற்களால் குறிக்கப்படும் குணம் அறிவியலுக்கு அப்பாற்பட்டது. இது மக்களின் பழக்க வழக்கங்களைக் குறிப்பிடுவது ஆகும். பெரும்பாலும் இது நம்பிக்கை சார்ந்ததே ஆகும். நம் முன்னோர்கள் கடைப்பிடித்தார்கள், நாமும் கடைப்பிடிப்போம் என்ற வகையில் வருவதே இந்த கலாச்சாரப் பண்புகள்.

ஒரு தனி மனிதனின் பண்புகள் அவன் வாழும் சமூகக் கலாச்சாரத்தை ஒட்டி அமைவது இயற்கை. அந்தக் கலாச்சாரத்தின் அங்கங்களை அவ்வப்போது சுட்டிக்காட்டிக்கொண்டு இருக்கவேண்டியது அந்த சமூகத்தில் உள்ள அனுபவமிக்கவர்களின் கடமையாகும்.

ஆனால் இன்றைய விஞ்ஞான அறிவு அபரிமிதமாக வளர்ந்துள்ள நிலையில் இத்தகைய கலாச்சார அடையாளங்கள் தேவையில்லை என்று பலர் நினைக்கிறார்கள்.  மக்கள் மனம் மாற்றமடையும்போது கலாச்சாரங்கள் மற்றமடையத்தான் செய்யும்.

இத்தகைய மாற்றங்களைக் கண்டு சிலர் புலம்புவார்கள். அவர்களை பழமைவாதிகள் என்று உலகம் புறக்கணித்து விட்டு தன் போக்கில் போய்க்கொண்டே இருக்கும்.

"பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே"
என்ற கொள்கையினை பழங்காலத்திலேயே தமிழன் உண்டாக்கியிருக்கிறான். ஆகவே மாற்றங்கள் நடைபெற்றே தீரும். அவைகள் நன்மை தருமாயின் நன்றே. இல்லாவிடில் சமூகம் சீரழியும்.

14 கருத்துகள்:

  1. இப்பதிவைக்கண்டதும். எதேச்சையாக சண்டியர் படம் பற்றி கமல்ஹாசன் பேசிய ஒரு யூட்யூப் பதிவு நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. வாழ்க கலாசாரமும் அதன் காவலர்களும்.

    பதிலளிநீக்கு
  2. ஐயா

    இதில் தங்களுடைய முத்திரை இல்லை. ஒரு சாதாரண மொக்கைப் பதிவு போன்று உள்ளது. கொஞ்சம் நையாண்டி என்னும் சுக்கு சேர்த்திருக்கலாம்.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் எழுத நினைத்தது வேறு. ஆனால் அதில் சில சிக்கல்கள் வந்து விட்டன. ஆதலால் இது ஒரு அவசரப் பதிவு. அசல் மொக்கையேதான். சந்தேகமே வேண்டாம். மொக்கைப் பதிவுகளை அடையாளம் காணும் சூரர் என்னும் பட்டம் தரலாம். ஏற்பாடு செய்கிறேன்.

      நீக்கு
  3. வணக்கம்
    ஐயா.
    தாங்கள் சொல்லிய கருத்துக்கள் உண்மைதான் .... பகிர்வுக்கு நன்றி.த.ம6

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. யாரையோ சமாதானப்படுத்த இந்த பதிவா என்று சந்தேகப்படும் மாதிரி எனக்கு தெரிகிறது. ஏன் இந்த திடீர் சமாதானம்?
    புரியவில்லையே

    சேலம் குரு

    பதிலளிநீக்கு

  5. ஒரு தனி மனிதனின் பண்புகள் அவன் வாழும் சமூகக் கலாச்சாரத்தை ஒட்டி அமைவது இயற்கை. அந்தக் கலாச்சாரத்தின் அங்கங்களை அவ்வப்போது சுட்டிக்காட்டிக்கொண்டு இருக்கவேண்டியது அந்த சமூகத்தில் உள்ள அனுபவமிக்கவர்களின் கடமையாகும்.
    தாங்கள் ஒரு அனுபவமுள்ள ஆசான் என்பதை நிருபித்து விட்டிர்கள் அய்யா!
    இந்த பயனுள்ள பதிவின் மூலம்.
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  6. சரியாக சொன்னீர்கள்.
    மற்றும் புலம்புவோர்கள் இங்கு மிக அதிகம்.

    பதிலளிநீக்கு
  7. காலம் மாறும்போது மாற்றம் வருவது இயற்கை. ஆனால் அது நமது கலாச்சாரத்தை அசைக்காமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டியது அவசியம்.

    பதிலளிநீக்கு