சனி, 7 பிப்ரவரி, 2015

ஒரு அவசர உதவி

என் தளத்தில் ஏதோ ஒரு வேகத்தில் பின்னூட்டப் பெட்டியை மூடிவிட்டேன். ஆனால் நண்பர்கள் வேண்டுகோளுக்காக அதைத் திறக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.

எனக்குத் தெரிந்த வித்தைகளையெல்லாம் உபயோகித்து விட்டேன். ஆனால் பின்னூட்டப் பெட்டியைத் திறக்க முடியவில்லை. டெம்ப்பிளேட்டை மாற்றிப் பார்த்து விட்டேன். பலனில்லை.

யாராவது உதவிக்கு வாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பின் குறிப்பு; இந்த வேடிக்கையைப் பாருங்க. உதவி வேணும்னு நான் பதிவு போட்டவுடனே கூகுள்காரன் பயந்து போயி பின்னூட்டப்பெட்டியைக் கொண்டு வந்து கொடுத்துட்டான். நண்பர் ஸ்ரீராம் அவர்களும் ஏதோ மந்திரம் போட்டிருக்கார். முதலில் அவருக்கு நன்றி. அப்புறம் கூகுளுக்கும் நன்றி.

20 கருத்துகள்:

 1. என் கண்ணுக்கு முன்பு படவேயில்லைங்க. ஆனா நீங்க சொன்னதுக்கப்புறம் தெரியுதுங்க. நீங்க என்னமோ மாய மந்திரம் போட்டிருக்கீங்க!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா....ஹா....ஹா...

   எல்லாம் உங்கள் சக்தி! உங்கள் பலம் உங்களுக்குத் தெரியலை ஸார்!

   :P

   நீக்கு
 2. எங்களது அன்பினை ஏற்று, தாங்கள் பின்னூட்டப் பெட்டியைத் திறந்தமைக்கு நன்றி. தங்கள் வரவு நல்வரவு ஆகுக. தொடர்ந்து உங்களது பதிவுகளைப் படிக்கக் காத்திருக்கிறோம். நன்றி.

  பதிலளிநீக்கு
 3. அப்படி வாங்க வழிக்கு. உங்க பின்னூட்டந்த்தை தரா விட்டாலும் பரவாயில்லை.
  எங்களுக்கெல்லாம் தமிழ்மணத்தில் முதலிடம் பிடிக்கணும் என்கிற லட்சியமெல்லாம்? கிடையாது.
  நீங்க செய்த வேலையால பல மூத்த (அய்யோ) மூத்த பதிவர்கள் எவ்வளவு மன வேதனை பட்டாங்க தெரியுமா?

  பதிலளிநீக்கு
 4. உங்களுக்கு பின்னூட்டம் இடுபவர்களின் பதிவுகளுக்கு நீங்கள் கருத்திட வேண்டும் என்ற அவசியம் இல்லை., தொடருங்கள் உங்கள் பதிவுகளை

  பதிலளிநீக்கு
 5. “திறந்திடு தீசே” – ஒரு வழியாக, அன்பு பதிவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, உங்கள் வலைப் பதிவினில் மீண்டும் பின்னூட்டப் பெட்டி வந்து விட்டது. மிக்க மகிழ்ச்சி. நன்றி.
  த.ம.3

  பதிலளிநீக்கு
 6. வெல்கம் ஐயா பெட்டியை வைத்தமைக்கு நன்றி
  தமிழ் மணம் 4

  பதிலளிநீக்கு
 7. தமிழ் இளங்கோ அய்யா அவர்களின் தளம் பார்த்துப் பதறிப்போனேன்... ஏன் அய்யா இப்படி?
  தொடர்ந்து எழுதுங்கள்..“பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” அலலவா? தொடருங்கள்.. தொடர்கிறோம். தொடர்வோம். நன்றி அய்யா.

  பதிலளிநீக்கு
 8. வணக்கம்
  ஐயா
  பின்னூட்ட கருத்து எழுதாமல் விட்டால் பிரச்சினை இல்லை.. ஐயா.. தங்களின் பதிவை படித்து அதைப்பற்றிய நிறை குறை சொல்வதற்கா கருத்துப் பாட்டியை திறந்தமைக்கு நன்றி.. த.ம5
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 9. உங்களுக்கு தெரியாத சாமர்த்தியம் உண்டா என்ன...?

  பதிலளிநீக்கு
 10. நன்றி!
  ஐயா, பின்னூட்டங்களிலும் அறிய பல விடயங்கள் கிடைக்கிறது.

  பதிலளிநீக்கு
 11. கருத்துரைப் பெட்டியை திறந்தமை கண்டு மகிழ்கின்றேன் ஐயா
  பெட்டி திறந்தே இருக்கட்டும்

  பதிலளிநீக்கு
 12. மகிழ்ச்சி ஐயா. பின்னூட்டம் இடுவது, உங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தை பொறுத்தது. பதிலுக்கு பதில் பின்னூட்டம் இட வேண்டுமே; அதை நாம் செய்வதில்லையே என்றெல்லாம் கவலைப்படுவது தேவையற்றது. அது மட்டுமின்றி, யோகன் பாரீஸ் அவர்கள் சொன்னதைப்போல, பின்னூட்டங்களில் கிடைக்கப்பெறும் தகவல்களும் ஏராளம்.

  பதிலளிநீக்கு

 13. நன்றி!
  "ஐயா, பின்னூட்டங்களிலும் அறிய பல விடயங்கள் கிடைக்கிறது." இது முற்றிலும் உண்மை

  தாங்கள் பின்னூட்டப்பெட்டியை திறந்தது குறித்த்து மகிழ்ச்சி .
  மாலி.

  பதிலளிநீக்கு
 14. மீண்டும் பெட்டியை திறந்தது குறித்து மகிழ்ச்சி ஐயா...

  பதிலளிநீக்கு
 15. தங்களுடைய எண்ணம் அறிந்ததால் தங்களை பின்னோட்ட பெட்டியை திறக்க சொல்லி வற்புறுத்தவில்லை. இருப்பினும் பலருடைய வேண்டுகோளை ஏற்று அதை திறந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 16. பின்னூட்டப் பெட்டியினை மீண்டும் திறந்தமைக்கு நன்றி.

  த.ம. 7

  பதிலளிநீக்கு