வெள்ளி, 24 ஏப்ரல், 2015

மற்றவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?

                                       Image result for indian saints photos

மற்றவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?

ஒவ்வொருவரும் எண்ணி எண்ணி வேதனைப்படும் கேள்வி இது. நான் மட்டும் இதற்கு விலக்காவேனா? நானும் இந்தக் கேள்வியைக் கேட்டதினால் வந்த பதிவுதான் இது.

மற்றவர்களைப் பற்றிய இப்படி ஒரு எண்ணம் ஏன் வருகிறது? உலகிலேயே தான் ஒருவன்தான் புத்திசாலி, மற்றவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்ற கருத்து நம் மனதின் ஏதோ ஒரு மூலையில் பதுங்கியிருக்கிறது. அதுதான் நம்மை இப்படிக் கேள்வி கேட்க வைக்கிறது.

இதனால் நம் அடிமனதில் ஒரு வேட்கை உருவாகிறது. எல்லோரையும் நாம்தான் உய்விக்கவேண்டும், நம்மை விட்டால் அவர்களைக் கடைத்தேற்ற வேறு யாரும் இந்த பரந்து விரிந்த உலகில் இல்லை. இப்படிப்பட்ட எண்ணங்களுடன் பலர் வாழ்கிறார்கள்.

இவர்கள் யாரைப் பார்த்தாலும் அறிவுரைகளை அள்ளி வீசுவார்கள். அவர்கள் கேட்கிறார்களோ இல்லையோ, அவர்களுக்குத் தேவையோ இல்லையோ, இவர்கள் பாட்டுக்கு தங்கள் போதனைகளை ஆரம்பித்து விடுவார்கள். அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தானே, அவர்களும் சிந்திப்பார்கள் அல்லவா, அப்போது அவர்களுக்கு எது சரியென்று படுகிறதோ, அதைத்தானே செய்வார்கள் என்ற ஞானம் இப்படிப் பட்டவர்களிடத்தில் இல்லாமல் போவதுதான் உலக மகா அதிசயம்.

நானும் முன்பெல்லாம் இந்த தவற்றை, தப்பு, தவறு அல்ல, முட்டாள்தனத்தைச் செய்து வந்தேன். பதிவுலகத்தில் எழுத ஆரம்பித்த பிறகு, இப்போது கொஞ்சம் அறிவு வந்து விட்டது. இப்போதெல்லாம் யார் என்ன செய்தாலும் அது அவர்கள் விருப்பம், செய்யட்டுமே, அதனால் வரும் இன்ப துன்பங்களை அவர்க்ளதானே அனுபவிக்கப் போகிறார்கள், என்ற எண்ண்த்தில் அதைப்பற்றி கவலைப் படுவதில்லை.

இதுதான் மனமுதிர்ச்சி அடைந்தவர்கள் அனுசரிக்கவேண்டிய நடைமுறை. இதை விட்டி விட்டு புத்தி சொல்கிறேன் பேர்வழி என்று யாரும் கேட்காமல் புத்தி சொல்லிக்கொண்டு திரிவீர்கள் என்றால் உங்களை கீழ்ப்பாக்கத்தில் சேர்க்கவேண்டி வரும். ஜாக்கிரதை. இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? என்று இனிமேல் கேட்க மாட்டீர்கள் அல்லவா?

எல்லாம் சரி, இப்போது நான் ஏன் இப்படி அறிவுரை கூறப் புகுந்து விட்டேன் என்று கேட்கிறீர்களா? பதிவு எழுத வேறு நல்ல சப்ஜெக்ட் கிடைக்கவில்லை, அவ்வளவுதான். மற்றபடி நீங்கள் எல்லோரும்  என்னைவிட அறிவிலும் அனுபவத்திலும் சிறந்தவர்கள் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. அப்படி இருப்பதினால்தான் என்னை தமிழ்மணம் தரவரிசையில் ஆறாவதாகக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறீர்கள்.

                                                  Tamil Blogs Traffic Ranking

எல்லோருக்கும் நன்றி.வணக்கம்.

பின்குறிப்பு: சமீபத்தில் ஒரு பிரபல பதிவர் தன் பதிவில் எழுதியிருந்ததைப் பார்த்து எனக்குத் தோன்றிய எண்ணங்க்ள.

20 கருத்துகள்:

  1. சரியாகத்தான் சொல்லி இருக்கிறீர்கள்.... அது சரி அந்த பிரபல பதிவர் யார் கொஞ்சம் க்ளூவாவது கொடுக்க கூடாதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தூங்குறவனத்தான்யா எழுப்பமுடியும்.

      நீக்கு
  2. வேறு பொருள் கிடைக்கவில்லை என்று கூறிவிட்டு நல்ல முறையில் விவாதப் பொருளை வைத்து விவாதித்துள்ளீர்கள். தமிழ்மணம் தமிழ் வரிசையில் முன்னுக்கு வருவதறிந்து மகிழ்ச்சி. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. தமிழ்மணத்தில் 2015க்கான தமிழின் முன்னனி வலைப்பதிவுகள் வரிசையில், இன்றைய தேதியில் TRAFFIC RANK No. 6 இல் இருப்பது கேட்க மிக்க மகிழ்ச்சி. என் மனம் நிறைந்த பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.

    தாங்கள் FIRST RANK க்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதன் அறிகுறியாக இது அமைந்துள்ளது. மிக்க மகிழ்ச்சி, ஐயா.

    பதிலளிநீக்கு
  4. பதிவெழுத நல்ல உரிப்பொருள் (Subject) கிடைக்காத காரணத்தால் பதிவெழுதுவதாக சொல்லிவிட்டு பயனுள்ள அறிவுரையையே தகவலாக கூறியுள்ளீர்கள்.அதற்கு நன்றி. தமிழ் மண தர வரிசையில் தங்களின் வலைப்பக்கம் ஆறாம் இடத்தை அடைந்தமைக்கு வாழ்த்துக்கள்! விரைவில் முதலிடம் அடையவும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துகள் ஐயா விரைவில் 1 ஐ பிடிப்பதற்காக..
    தமிழ் மணம் 4

    பதிலளிநீக்கு
  6. ஐயா

    இது எனது லினக்ஸ் அறிவுரைக்கு ஜாடை போடுவது போல் இருக்கிறது. ஐயா நான் எனக்குத் தெரிந்த சப்ஜெக்டில் தான் மூக்கை நுழைப்பேன். மற்றபடி தவறாக எண்ண வேண்டாம்.

    ரேங்க் 6 அடைந்து விட்டீர்கள். மிக்க மகிழ்ச்சி.ஒன்று என்ற பரம பதம் நிச்சயம்.

    வாசகர்கள் ஆகிய நாங்கள் ஏதாவது ஜாலியாக கமெண்ட் போட்டால் அதையெல்லாம் சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயையோ, நான் உங்களை நினைக்கவேயில்லை, வேறு ஒரு பதிவில் மற்றவர்களைப் பற்றி ஒருவர் அங்கலாய்த்திருந்தார். அதற்குப் பதிலாகத்தான் இதை எழுதினேன். அவர் எனக்கு நல்ல நண்பர். அதனால் பெயர் போடாமல் எழுதினேன்.

      லினக்ஸ் என் கணினியில் போடலாம் என்றுதான் இருக்கிறேன். ஒரு பார்ட்டிஷன் முழுசாக காலியாயிருக்கிறது. கொஞ்சம் கைடு பண்ணுங்களேன்.

      நீக்கு
    2. இந்த சுட்டியில்
      http://freetamilebooks.com/ebooks/learn-gnulinux-in-tamil-part1/

      போய் இந்தப் புத்தகத்தை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். படித்துப் பாருங்கள்.

      some important points before you decide for linux in your computer.

      Linux is not like windows OS. No body owns it. Several persons provide their own Linux packages.

      There are several versions of Linux and also several releases.

      Linux is more like MacOS or Unix.

      Linux does not and will not disturb other OS like Windows or Firefox OS.

      First Boot page will always ask for which OS to load (Linux or Windows). there are two loaders LILO and GRUB.

      You have to set some limits for some system files like swap tmp etc. Since storage is not a problem nowadays you can be generous for speeding your computer.

      Fedora Ubuntu Redhat Suse mint are some flavours of linux.

      You can have Linux in Pendrive and boot from it and work on without using your hard disk. only it will be a little slow because of reading and writing on Pendrive. This is more useful as portable OS. No License problems are involved.

      The con side
      ;
      Since many persons have developed the applications in the package it sometimes is susceptible for going wrong or getting suspended. Then you have to rebbot the OS.

      You should always have your backup boot pendrive to recover from crashes.
      --
      Jayakumar

      நீக்கு
  7. மதுரை தமிழா,,,
    நீங்கள் எல்லாவற்றையும் எழுதவேண்டும்!
    அதை எழுத தைரியம் வேண்டும். அந்த தைரியம் உங்களுக்கு இருக்கு!
    உங்கள் புரிதல் சரியா தவரா என்ற விவாதத்தில் என்னால், ஏன், யாராலும் நுழைய முடியாது!

    புளிச்சு போன பலமுறை பதில் சொன்ன அதே கேள்விகளை நீங்கள் கேட்டதை தவிர உங்கள் மீது தவறு இல்லை. உங்கள் பதிவில் வந்த கேள்விகளுக்கு பதில் சொல்லி அலுத்து போய் விட்டது எங்களுக்கு. பின், அதே கேள்விகளை மறுபடியும் மறுபடியும் கேட்டால் பதில் சொல்லிக் கொண்டே இருக்கவேண்டுமா? என்ன?

    அதான் வருணுக்கு கோபம்.
    மேலும் அவர் கூப்பிடாமலே ஆஜர் ஆகி வாந்தி எடுக்கும் கேஸ் என்று என்று பதிவுலகமே அறிந்தது தானே!
    அப்புறம் என்ன?
    இதைப் போய் பெரிதாக எடுத்துக்கொண்டு....வாந்தியை கழுவி விடுங்கள்...அதான் ஒரே வழி!
    இதற்கு போய் நீங்க, மதுரை தமிழன், அலட்டிகலாமா?

    பதிலளிநீக்கு
  8. சூப்பர் , சான்சே இல்ல கலக்கிட்டிங்க, நான் உங்களோட தீவிர ரசிகன் எனக்கு உங்ககிட்ட பிடிச்ச விஷயமே சப்பை மேட்டரை கூட ஒரு பதிவாக்கிருவிங்க, உங்கள் எழுத்து திறமை(?) என்னை ரொம்பவே இம்ப்ர்ஸ்(?) செய்யுது விடாம தொடர்ந்து எழுதுங்க

    பதிலளிநீக்கு
  9. பதிவெழுத மேட்டர் இல்லை என்று இதை எழுதியிருப்பதாக சொன்னாலும் இதிலும் ஒரு மேட்டரை தருவதில் இருந்தே உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படுகிறது. ஆறாம் இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்! மேலும் முன்னேற வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. நம் அனுமானங்கள் தவறாக வருவதற்கு வாய்ப்புகள் உண்டென்று ஒரு நண்பர் என் பதிவின் பின்னூட்டத்தில் கூறி இருந்தார். ஆகவே நான் எதையும் அனுமானிக்க வில்லை.

    பதிலளிநீக்கு
  11. ஆறாம் இடத்தை அடைந்ததற்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. / /இப்போதெல்லாம் யார் என்ன செய்தாலும் அது அவர்கள் விருப்பம், செய்யட்டுமே, அதனால் வரும் இன்ப துன்பங்களை அவர்க்ளதானே அனுபவிக்கப் போகிறார்கள், என்ற எண்ண்த்தில் அதைப்பற்றி கவலைப் படுவதில்லை./ / Well said Sir ...

    பதிலளிநீக்கு
  13. 6 ஆம் இடத்திற்கு முதலில் வாழ்த்துக்கள் ஐயா! மதிவு மேட்டர் இல்லை என்று மேட்டரை அழகான பதிவாக்கி விட்டீர்களே ஐயா!

    பதிலளிநீக்கு
  14. சில சமயம் என்ன எழுதுவது என்றே தோன்றாது. எப்படி கூட்டி கழித்து பார்த்தாலும் தலைப்பும் கிடக்காது. இதனையே ஒரு செய்தியாக்கி பதிவாக்கி எழுதிய உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள். நீங்கள் ஒரு பத்திரிகை ஆசிரியராக இருந்து இருக்க வேண்டியவர். தமிழ்மணத்தில் உங்களுக்கு 6 ஆவது இடம்.. அப்புறம் முதலிடம்.. எனது வாழ்த்துக்கள்
    த.ம.7

    பதிலளிநீக்கு
  15. இங்கே ஒரு சமயம் ஆன்மிகவாதி ஒருவரின் பேச்சுக் கேட்கப்போயிருந்தேன். அவ்ளோ விருப்பம் இல்லை என்றாலும் கூப்பிட்ட நண்பருக்காகப்போனதுதான். சாமியார், காவி ட்ரெஸ் போட்டுக்காதவர். 'உங்க எல்லாருக்கும் அடுத்தவர் எப்படி நடந்துக்கணும் என்பது நல்லாத் தெரிஞ்சுருக்கும்' என்று ஆரம்பித்த முதல்வரி என்னை நிமிர்ந்து உட்கார வச்சது!

    பதிலளிநீக்கு