வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

சிறந்த பயணம் எப்படி இருக்கவேண்டும்?

                                   

பல பதிவர்களும் பயணங்கள் போகிறார்கள், பயணக் கட்டுரை எழுதுகிறார்கள் (நான் உட்பட).  நானும் பல உள்நாட்டு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டிருக்கிறேன். ஆனாலும் எல்லாப் பயணங்களும் சிரமம் கொண்டவையே. இந்த சிரமங்களையெல்லாம் அனுபவித்த பின்  புத்தருக்குப் போதி மரத்தடியில் ஞானோதயம் வந்த மாதிரி,  எனக்கும் ஒரு நாள் ஒரு அரச மரத்தடியில் ஞானோதயம் வந்தது.

                                    Image result for அரசமரம்

அரச மரமும் போதி மரமும் ஒன்றுதான் என்று எத்தனை பேருக்குத் தெரியும்? தெரியாதவர்கள் இன்று தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த ஞானோதயம் வந்த பிறகு எனக்குள் இந்த பயணங்கள் போவதைப் பற்றி நிறைய யோசனைகள் உதயமாயின. என் கற்பனையை ஓடவிட்டேன். இந்த ஓட்டத்தில் நான் அறிந்தவைகளை எல்லோரும் பயன் பெற வேண்டி இங்கே பதிகிறேன்.

இந்த மாதிரி பயணம் செல்ல முதலில் வேண்டியது அனைத்து அரசு வங்கிகளிலும் நிறைய பணமும் ஓவர்டிராப்ட் வசதியும். அனைத்து வங்கிகளின் பண அட்டைகள் கைக்கு வந்தவுடன் பயணம் புறப்படலாம்.

இரண்டாவது தேவை, ஒரு நல்ல டிராவல் ஏஜென்ட்.  உங்கள் விருப்பத்தைச் சொல்லிவிட்டால் பயணத்திட்டம் வகுத்துக் கொடுப்பது அவருடைய வேலை.
முடிந்தவரை விமானப் பயணமே சிறந்தது. அதிலும் பிசினஸ் கிளாஸ்தான் உத்தமம். ஏர் இந்தியா, கிங்க் பிஃஷர், கோஏர்,  ஜெட் ஏர்வேஸ், இந்த மாதிரி லோகல் பிளேன்களைத் தவிர்க்கச் சொல்லி விடவும்.

                                          Image result for japan airlines business class

அடுத்து 5 ஸ்டார் ஓட்டல்களில் மட்டுமே ரூம் ரிசர்வ் செய்யச் சொல்லவும். அடுத்து பயணத்தில் உங்களுக்கு உதவி செய்வதற்காக ஒரு இளம் (20 அல்லது 22 வயதுக்கு மேல் போகாமல்) உதவியாளரை தேர்ந்தெடுக்கச் சொல்லவும். நல்ல பிரபல பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து இதற்கு ஆளைத் தேர்ந்தெடுக்கவும். அவருடைய வேலை என்னவென்றால் உங்கள் பயணத்திற்கு வேண்டிய அத்தனை உதவிகளையும் செய்ய வேண்டும்.
                             
                                    Image result for 5 star hotel

உங்கள் வேலை குளிப்பது, சாப்பிடுவது, தூங்குவது, அந்தந்த ஊரில் இருக்கும் முக்கியமான இடங்களைப் பார்ப்பது, இவ்வளவுதான். உங்கள் துணிமணிகளை எடுத்து வருவது, ரூம் செக்இன் செய்வது, டாக்சி ஏற்பாடு செய்வது முதலானவை உங்கள் உதவியாளர் செய்து விடுவார். நீங்கள் உங்கள் உதவியாளர் தவிர வேறு யாருடனும் பேச வேண்டியதில்லை. உங்கள் உதவியாளர் அவ்வளவு பொறுப்புடனும் சாமர்த்தியத்துடனும் செயல்படவேண்டும். அப்படிப்பட்ட உதவியாளரைத் தேர்ந்தெடுத்துத் தரவேண்டியது டிராவல் ஏஜென்ட் பொறுப்பு. சம்பளம் எவ்வளவு கொடுத்தாலும் பரவாயில்லை.

                                                    Image result for personal assistant

பயண நாள் வந்து விட்டது. பிளேன் எத்தனை மணிக்கு, நீங்கள் எத்தனை மணிக்கு வீட்டை விட்டுப் புறப்பட வேண்டும் என்கிற விவரத்தை உங்களை உதவியாளர் காலையிலேயே சொல்லி விடுவார். அந்த நேரத்திற்கு நீங்கள் தயாராகி வீட்டு ஹாலுக்கு வருகிறீர்கள். டாக்சி வருகிறது. பென்ஸ் கார்தான். அதில் ஏறுகிறீர்கள். உதவியாளரும் ஏறிக்கொள்கிறார். ஏர் போர்ட் போகிறீர்கள். செக்இன் நடைமுறைகளை உதவியாளர் பார்த்துக்கொள்கிறார். பிளைனில் ஏறியாகிவிட்டது.

நீங்கள் போகவேண்டிய ஊருக்கு பிளேன் சென்றடைந்தாகிவிட்டது. பிளேனை விட்டு இறங்கி வெளியே வருகிறீர்கள். டாக்சியில் ஏறி ஹோட்டலுக்குப் போகிறீர்கள். உங்கள் உதவியாளர் உங்களை ரூமுக்கு அழைத்துப் போய் விடுகிறார். உங்கள் டிரஸ்களை கழட்டிப்போட்டு விட்டு படுக்கையில் படுத்து ஓய்வு எடுக்கிறீர்கள். இதுவரை நீங்கள் யாருடனும் பேசவேண்டிய அவசியம் வரவில்லை என்பதைக் கவனிக்கவும்.

                                       Image result for 5 star hotel room images

அடுத்த நாள் காலையில் 7 மணிக்கு உங்களுக்கு பெட் காபியும் அன்றைய புரொக்ராம் ஷீட்டும் வருகிறது. நீங்கள் காப்பியைக் குடித்துக்கொண்டே அந்த புரொக்ராமைப் பார்க்கிறீர்கள்.  இன்டர்காமில் உதவியாளரைக் கூப்பிட்டு ஓகே சொல்கிறீர்கள். அன்று காலை முழுவதும் அந்த ஊரில் உள்ள இரண்டு முக்கியமான இடங்களைப் பார்க்கிறீர்கள். பென்ஸ் அல்லது பிஎம்டபிள்யூ கார். கூட உதவியாளர்.

மதியம் சாப்பிட்டுவிட்டு ஒரு குட்டித்தூக்கம். மாலை அந்த ஊரில் உள்ள ஒரு மால் விசிட். இரவு சாப்பாடு முடிந்து நல்ல தூக்கம். நடு இரவில் ஒரு புயல் காற்று. இடி மின்னலுடன் பேய் மழை. நடுவில் ஒரு குரல். "சேர்லயே உட்கார்ந்துட்டு என்ன தூக்கம்? எழுந்து போய் கட்டிலில் படுத்துக்கொண்டு தூங்குவதுதானே?" அப்படியென்று ஒரு பேய்க்குரல். லேசாக கண் விழித்துப் பார்த்தால் பார்யாள் எதிரே நின்றுகொண்டு சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறாள். மணி பிற்பகல் இரண்டு. சாப்பிட்டு விட்டு சாய்வு நாற்காலியில் உட்கார்ந்தவன் அப்படியே தூங்கிப்போய்விட்டேன். அவ்வளவும் கனவு.

18 கருத்துகள்:

  1. லாட்டரி சீட்டைக் கூட நிறுத்தி விட்டார்களே.. நாம் என்ன செய்வது என்று பார்த்தேன்!

    :)))

    பதிலளிநீக்கு
  2. செலவே இல்லாமல் டூர் போனவிதம்
    இரசித்தேன்.சொல்லிச் சென்ற விதம்
    மிகவும் இரசிக்கும்படியாய் இருந்தது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. பயணங்கள் பற்றிய தொடர் பதிவுக்கு பதில் கனவு பயணம் செய்து விவரிக்கிரீகளா? காணுங்கள்.அப்துல் கலாம் சொன்னபடி கனவு காணுங்கள்.நனவாகும்.

    தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும். கல்லூரிப் பழக்கம் பணி ஒய்வு பெற்ற பின்பும். அதுதான் கதிரையில் (நாற்காலி) கனவு காண்பது.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  4. கனவுப்பயணம் அருமை. இளம் உதவியாளர் நம்முடன் நம் அறையில் இல்லாமல் வேறு எங்கோ இருந்து இன்டர்காமில் அழைப்பதெல்லாம் சரிப்பட்டது வராது. நமக்கே ஏதாவது ஒன்று என்றால் ஆத்திர அவசரத்திற்கு நம் அருகிலேயே கண்பார்வையிலேயே இருந்தால் அல்லவோ நல்லது. இதில் தகுந்த மாற்றங்கள் (மாற்று ஏற்பாடுகள்) நாம் உடனடியாகச் செய்ய வேண்டியுள்ளது.

    >>>>>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது வீட்டில் நடந்தது. டூர் போகும் இடங்களில் நீங்கள் சொன்ன மாதிரிதான்.

      நீக்கு
  5. இரவு சாப்பாடு முடிந்து நல்ல தூக்கம். நடு இரவில் ஒரு புயல் காற்று. இடி மின்னலுடன் பேய் மழை. நடுவில் ஒரு குரல். ஒரு பேய்க்குரல்.

    அடடா, இந்த இடம் எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.

    http://gopu1949.blogspot.in/2014/03/vgk-08.html இதில் உள்ள என் கதையான ‘அமுதைப் பொழியும் நிலவே’ ஞாபகம் வந்தது. சிரித்துக்கொண்டேன்.

    பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள், சார்.

    தங்கள் கனவு விரைவில் நனவாகவும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. அவ்வளவும் கனவா.....எங்களையும் தான் கனவு காண வைத்துவிட்டீர்கள் அய்யா....

    பதிலளிநீக்கு
  7. பதில்கள்
    1. அய்யா உங்களுக்கு கற்பனைவளம் அபாரமாகவே இருக்கிறது. ஹாரிபாட்டர் கதைகள் போன்று, குழந்தைகளுக்கான மந்திர தந்திர கதைகளை நன்றாகவே எழுதலாம். ( பழைய பின்னூட்டத்தில் நிறைய எழுத்துப் பிழைகள் (கீ போர்டு உபயம்) எனவே நீக்கி விட்டேன்)

      நீக்கு
  8. சொத்து எழுதி வைத்து விட்டு... மன்னிக்கவும்... விற்று விட்டு பயணம் செல்ல வேண்டும், நல்ல வேளை கனவு ...?

    பதிலளிநீக்கு
  9. கனவு காண எல்லோருக்கும் உரிமையுண்டு ..இந்த மாதிரி சொகுசு பயணம் ,நானும் கனவில் போனால்தான் உண்டு :)

    பதிலளிநீக்கு
  10. அவ்வளவும் கனவா....
    நாம எப்படி இப்படியெல்லாம் போறது... ஐயா ரொம்ப அருமையான திட்டத்தை முன் வைக்கிறாரேன்னு பயந்து போய் படிச்சிக்கிட்டு வந்தா... கனவா...
    நல்லவேளை நானும் இந்தக் கனவோட நிறுத்திக்கிறேன்...
    அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்ம மாதிரி ஆள்கள் இந்த மாதிரி கனவுதான் காணமுடியும். ஒரு சமயம் இந்த நாட்டின் பிரதம மந்திரி ஆனால் இப்படி பயணம் போக முடியும்.

      நீக்கு
  11. பௌத்தம் தொடர்பான ஆய்வின்போதுதான் அரச மரமும் போதி மரமும் ஒன்று எனத் தெரிந்துகொண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  12. இது நனவாக நீங்கள் ஒன்றுதான் செய்யவேண்டும். ஒரு கட்சிக்குத் தலைவராக இருக்கவேண்டும். இல்லாட்டா, பெரிய அரசுப் பொறுப்பில் இருக்கவேண்டும். (எம்பி, அமைச்சர், பிரதமர் போன்று). இல்லைனா, ரொம்ப வயதாகி தூக்கம் சரியாக வராமல் இருக்கவேண்டும். அப்படி இருந்தால், நன்றாகக் கனவுலகில் சஞ்சரிக்கலாம்.

    பதிலளிநீக்கு
  13. அய்யா நீங்கள் இன்னமும் முனைவர் கந்தசாமி அய்யா அவர்கள்தான். பிரதமர் திருவாளர் நரேந்திர மோடி ஆகி விடவில்லை. கடைசி பத்தி தவிர (பார்யாள் வந்து எழுப்புவது) மீதியெல்லாம் பிரதமர் வாழ்க்கையில் தினசரி நடப்பதுதானே.
    ஆனாலும் உங்களுக்கு 20-22 வயதில் ஒரு இளம் உதவியாளர் தேவையா? வேண்டுமென்றால் ஆண் உதவியாளர் வைத்துக்கொள்ளலாமே. ம் ம் ஆசை யாரை விட்டது

    காயத்ரிமணாளன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் உதவியாளர் ஆணோ பெண்ணோ என்று ஒன்றும் குறிப்பிடவில்லையே. நீங்களாகவே நான் பெண் உதவியாளர் வேண்டுமென்று கேட்பதாக நினைத்துக் கொள்ளலாமா ? இது நியாயமா? இது தர்மந்தானா?

      நீக்கு