செவ்வாய், 17 மே, 2016

தப்புக்கணக்கு போட்டுவிட்டேன் !

                                       Image result for கருணாநிதி குடும்பம்
போன பதிவில் நான் அம்மா புகழ் பாடியதை அனைவரும் படித்திருப்பீர்கள். எனக்கு தன்மானம் இல்லையா என்று கூட ஒருவர் பின்னூட்டம் போட்டிருந்தார். இத்தனை வயசுக்கப்புறம் சின்னப்பசங்க மாதிரி தன்மானம், ரோஷம், சுயமரியாதை அப்படீன்னு எல்லாம் பேசிக்கிட்டு திரியலாமா?

இப்ப விஷயத்திற்கு வருகிறேன். போன பதிவில் போட்டது எல்லாம் சும்மானாச்சுக்கும் என்று எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது நான் சொல்லப் போவதுதான் நிஜம். அம்மா புகழ் பாடி அலுத்துப்போச்சு. இனி அய்யா  புகழ்தான் பாடப்போகிறேன்.

அய்யாவின் அனுபவம் என்ன? சாதுர்யம் என்ன? எப்படி இருந்தவர் எப்படி ஆகியிருக்கார் என்று பாருங்கள். எத்தனை நாளைக்குத்தான் சும்மாவே உட்கார்ந்து கொண்டு இருக்க முடியும்? ஆகவே அவரை முதல் அமைச்சர் நாற்காலியில் அமர வைத்து அழகு பார்ப்பது என்று பச்சைத் தமிழர்கள் அனைவரும் ஆசைப்படுகிறார்கள். அவர்கள் ஆசை நிறைவேறட்டும். எத்தனை நாளைக்குத்தான் ஒரே முகத்தைப் பார்த்துக்கொண்டு இருப்பது?

வாழ்க தமிழகம், வாழ்க தமிழ், வாழ்க, வாழ்கவே.

பின்குறிப்பு; உனக்கு முதுகெலும்பு என்று ஒன்றிருக்கிறதா என்று கேட்பவர்களுக்கு ஒரு பதில். விஞ்ஞான உலகில் ஒரே கொள்கையைப் பிடித்துக்கொண்டிருப்பவன் அடி முட்டாள்.

16 கருத்துகள்:

  1. அதெல்லாம் சரி. வோட்டு போட்டீங்களா இல்லையா?

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. boss : ஏனுங்க வோட்டு போட போகலியா?
      ஐயா : நான் வோட்டுப் போடப் போவதில்லை என்று பதிவு போட்டுட்டேன்.
      boss : நீங்க போடாட்டி என்ன. எனக்கு வோட்டு போடணும். நீங்க கொஞ்சம் துணைக்கு கூட வாங்க. நான் போட்டுட்டு வரேன்.
      ஐயா : சரி சேலையை மாற்றிட்டு அங்கராக்கு சோப்பிலே கார் தொரப்பக்காய எடுத்திட்டு வா அம்மணி.

      Near booth:

      ஐயா : அம்மணி வரிசையிலே நில்லுங்க. வந்தது வந்துட்டேன். நானும் வரிசையில் நிற்கிறேன்.

      after voting

      ஐயா: வோட்டு போட்டக் கதையை யாரிடமும் சொல்லிடாதே அம்மணி. முக்கியமா பதிவர்கள் கிட்டே.
      --
      Jayakumar

      நீக்கு
  2. சும்மனாச்சுக்கும் கூறவில்லை. நிஜமாகக் கூறுகிறேன். உங்களது பதிவு வித்தியாசமாக ரசிக்கும்படியாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  3. என்ன ஆச்சு உங்களுக்கு? நேற்று ஒரு பேச்சு. இன்று ஒரு பேச்சு. நாளை ஒரு பேச்சாக இருக்குமோ என்னவோ!

    நாளைய ஒரு நாளுக்குப்பின் யாரும் இதுபற்றி பேசவே வழி இருக்கப்போவது இல்லை என்பது என்னவோ நிச்சயம்.

    அதன்பின், தேர்தல் முடிவுகள் ஏன் இப்படி ஆச்சு என, நடந்து முடிந்ததைப்பற்றி ஏதேதோ அவரவர்கள் பாணியில் பேசிக்கொண்டிருப்பார்கள், எல்லோருமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் எப்போதும் ஒரே பேச்சுதான். ஜெயிக்கிற கட்சி நம்ம கட்சி. அவ்வளவுதான்.

      நீக்கு
  4. உங்கள் சாதுர்யம் வியக்க வைக்கிறது

    பதிலளிநீக்கு
  5. மாற்றுக் கருத்தை வித்தியாசமாக
    தாங்கள் பதிவு செய்வதை விரும்பிப்
    படிப்பவர்களில் நானும் ஒருவன்

    அந்த வகையில் இந்தப் பதிவும்
    அருமை

    வாழ்த்துக்களுடன்.

    பதிலளிநீக்கு
  6. மதில் மேல் பூனை என்பது இதுதான் போலும்))

    பதிலளிநீக்கு
  7. என்ன முனைவரே? மரத்திற்கு மரம் தாவுகிறீர்களே!
    நேற்று அம்மா. இது உண்மையான கருத்து.
    இன்று தாத்தா! இது பச்சையப்பன் வேலையோ?
    வெட்கப்படுகிறேன் உங்கள் திடீர் 'கொள்கை' மாற்றத்திற்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு அதற்குத் தக்க தன்னை மாற்றிக் கொள்பவனே இப்புவியில் நிலையாய் வாழ்வான் என்னும் பால பாடத்தைக் கற்காமல்தான் தமிழன் எதற்கெடுத்தாலும் உணர்ச்சி வசப்பட்டே பாழாய்ப் போகிறான்.

      நீக்கு
  8. எங்கள் ஊரில் ஒரு பெரும் பணக்காரர் இருந்தார். அவர் அவ்வப்போது கட்சி மாறிக்கொண்டே இருந்தார். அவரிடம் இது நியாயமா? அடிக்கடி கட்சி மாறுகிறீர்களே என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் புகழ்பெற்றது - “நா எங்கடா கட்சி மாறுறேன்? நா எப்பவும் ஒரே கட்சிதான். நீங்க மாத்திமாத்தி ஆட்சிக்கு வந்தா நானா பொறுப்பு? நா எப்பவும் ஆளும் கட்சிதான்” நீங்கள் அப்படி இல்லை என்று எனக்குத் தெரியும் அய்யா. சும்மா போரடித்துத்தானே கட்சி மாறினீர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் உங்க ஊர் பணக்காரர் மாதிரிதான். ஆனா பணம் இல்லை. அது வேற விஷயம். ஒண்ணு சொல்றேன் கேட்டுக்குங்க. சோறு போடறவனுக்கு எப்பவும் விசுவாசமாக இருக்கணுமுங்க. நாமெல்லாம் அரசாங்க கஜானாவை நம்பிப் பொழைக்கறவங்க. எதிர் கட்சியில இருக்கலாமுங்களா? அது மகாத் தப்புங்க.

      நீக்கு