திங்கள், 8 மார்ச், 2010

பிரபல பதிவர் ஆனபின்பு.....



என் நண்பன் ஒருவன் அடிக்கடி சொல்வான் ‘பணம் சம்பாதிப்பது சுலபம், அதை வைத்திருப்பதுதான் கஷ்டம்’ என்று. நான் சிரிப்பேன். பணத்தை வைத்திருப்பதில் என்ன கஷ்டம் வந்துவிடப்போகிறது என்று நினைத்துக்கொள்வேன். என்னிடமும் கொஞ்சம் பணம் சேர்ந்து அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஒரு பைனான்ஸ் கம்பெனியில் போட்டு, அந்த கம்பெனி திவாலானவுடன் அங்கே ஓடி இங்கே ஓடி, பல வருடங்கள் ஆனபின் ரூபாய்க்கு 50 பைசா வீதம் (5 வருட வட்டி ஹோகயா) செட்டில்மென்ட் முடித்து மீதிப்பணத்தை கையில் வாங்கும்போதுதான் நண்பன் சொன்னது எவ்வளவு சரி என்பதை உணர்ந்தேன்.

அதேபோல் பதிவுலகத்தில் அடியெடுத்து வைத்து சில மாதங்கள் ஆனபின்பு நாமும் பிரபல பதிவர் ஆகமாட்டோமா என்று ஏங்கிய நாட்கள் உண்டு. பதிவுலகில் ஏற்பட்ட சில பல சலசலப்புகள் வயிற்றில் புளியைக் கரைத்தாலும் பிரபல பதிவர் ஆகும் ஆசை விடவில்லை. பதிவுலக நடவடிக்கைகளை கவனித்து வந்ததில் சில நுணுக்கங்கள் புலப்பட்டன. அவைகளை ஒரு எட்டு பதிவுகளாகப் போட்டேன். ஆனால் அவைகளை நானே கடைப்பிடிக்கவில்லை. மற்றவர்கள் கடைப்பிடித்து பிரபலமானார்களா என்று தெரியவில்லை.

நமது நித்தியானந்தாவின் கடைக்கண் பார்வை என்மீது விழுந்தவுடன் அவர் அருளினால் அவரைப்பற்றி ஒரு நாலைந்து பதிவு போட்டேன். அவருடைய அருளாசியின் மகிமையினால் என்னுடைய வலைப்பதிவு கொஞ்சம் பிரபலமடைந்துள்ளது. ஹிட் லிஸ்ட்டில் நெம்பர் கூடியிருக்கிறது. பின்னூட்டங்கள் அதிகரித்துள்ளன. இப்போது எனக்கு முக்கியமான வேலைகள் என்னவென்றால் :-



1. ஒரு நாளைக்கு ஒரு பதிவாவது எழுதியாக வேண்டும்.

2. அதை பிளாக்கில் போட்டவுடன் ஒவ்வொரு திரட்டிக்கும் சென்று நம் பதிவைச்சேர்க்க வேண்டும்.

3. ஒரு மணிக்கொரு தடவை பிளாக்குக்குள் போய் எத்தனை ஹிட்ஸ்கள் வந்துள்ளன என்று பார்க்க வேண்டும்.

4. அதே சமயத்தில் எத்தனை பாலோயர்ஸ் புதிதாக சேர்ந்துள்ளார்கள் என்று செக் செய்யவேண்டும்.

5. நமது பிளாக்குக்கு ஒவ்வொரு திரட்டியிலும் எவ்வளவு ஓட்டு விழுந்திருக்கிறது என்று பார்க்கவேண்டும். ஓட்டுகள் அதிகம் விழுவதற்காக, அம்மா, தாயே, ஓட்டுப்பிச்சை போடுங்கள் என்று ஒவ்வொரு பதிவிலும் கடைசியில் தவறாமல் குறிப்பிட வேண்டும்.

6. நமக்கு வந்திருக்கும் பின்னூட்டங்களை மாடரேட் செய்து நமது பதிவில் ஏற்றவேண்டும். அந்த பின்னூட்டங்களுக்கு பதில்கள் நமது பதிவில் போடவேண்டும். பிறகு அவற்றுக்கு எதிர்வினைகள் வரும். அவற்றுக்கு நாம் பதில் போட, ஒரே தொடர்கதைதான். சில பதிவுகளில் அவர்கள் பதிவு இட்ட சில மணி நேரத்திலேயே 70 – 80 பின்னூட்டங்கள் சேர்ந்துவிடும். இது எப்படி என்று யோசித்து அதற்கு விடையும் கண்டுபிடித்துவிட்டேன். அதை இங்கே எழுத முடியாது.

7. பிறகு நமக்கு பின்னூட்டமிட்டவர்களின் பதிவுகளைத்தேடிப்போய் நாம் பின்னூட்டம் இடவேண்டும். You scratch my back, I scratch your back கதைதான்.

8. அந்தப்பதிவர்கள் நம்முடைய பின்னூட்டங்களை கண்டு கொண்டார்களாவென்று கண்காணிக்கவேண்டும். அப்படி கண்டுகொள்ளாமல் விட்ட பதிவர்களை நம் அடுத்த பதிவில் உண்டு இல்லை என்று ஆக்கிவிடவேண்டும். அந்தப்பதிவில் பின்னூட்டமிடும்போது அங்கு இருக்கும் கட்டங்களில் விளையாட்டாக டிக் செய்து விட்டால். வினை வந்துவிடும். பிறகு நமது மெயில் பாக்சைத் திறந்தால் வரும் மெயில்கள் நம்மை மூச்சு முட்ட செய்துவிடும்.

9. பின்னூட்டம் இடுபவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல சமயங்களில் நம் பதிவை எடிட் செய்யவேண்டி வரும்.

10. இத்தனைக்கும் நடுவில் நான் காலைக்கடன்களை முடித்து விட்டு குளிக்கவேண்டும், டிபன், சாப்பாடு இத்தியாதிகளை சாப்பிட வேண்டும், சொந்த வெளி வேலைகளை கவனிக்கவேண்டும், வீட்டம்மா சொல்லும் எடுபிடி வேலைகளை முடிக்கவேன்டும், போன் பேசவேண்டும், நண்பர்களைப் பார்க்கவேண்டும், தூங்கவேண்டும்.

அப்பப்பா, என்னால் முடியவில்லை. எனக்கு பிரபல பதிவர் பட்டம் வேண்டாம், வேண்டவே வேண்டாம், என்னை ஆளை விட்டால் போதும் சாமி (நித்தியானந்த சாமி இல்லை, இது நிஜ சாமி.) நான் ஓடி விடுகிறேன்.

27 கருத்துகள்:

  1. //பதிவுலகில் ஏற்பட்ட சில பல சலசலப்புகள் வயிற்றில் புளியைக் கரைத்தாலும் பிரபல பதிவர் ஆகும் ஆசை விடவில்லை. //

    :)

    உங்கள் பதிவுகள் பயங்கர......கலகல ரகம்!

    பதிலளிநீக்கு
  2. கண்ணா,
    இப்பத்தான் உங்கள் பதிவிற்கு போய்விட்டு வருகறேன். வடிவேலு சொன்ன மாதிரி 'ஒரு குரூப்பாத்தான்' அலையிறீங்க.

    70-80 பின்னூட்டங்கள் எப்படி ஒரு சில மணிக்காலத்தில் இடப்படுகின்றன என்பதைப்பற்றிய என் யூகம் நிரூபணமாகிவிட்டது. உங்கள் காலை வாரி விட்டதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்(ல்)கிறேன்

    பதிலளிநீக்கு
  3. "அப்பப்பா, என்னால் முடியவில்லை. எனக்கு பிரபல பதிவர் பட்டம் வேண்டாம், வேண்டவே வேண்டாம், என்னை ஆளை விட்டால் போதும் சாமி (நித்தியானந்த சாமி இல்லை, இது நிஜ சாமி.) நான் ஓடி விடுகிறேன். "

    அப்படி சொன்ன எப்படி முன் வைத்த காலை பின் நோக்கி செல்ல விடலாமா மோதி பார்த்திடுவோம்

    வடிவேலு சொன்ன மாதிரி
    "சின்ன பிள்ளை தனமா இல்லை இருக்கு "

    பதிலளிநீக்கு
  4. ஐயா! (ஆ) சாமிகள் ஓடலாம்.கந்தசுவாமிகள் ஓடலாமா?நம்புங்கள் நீங்கள் பிரபலமாகிவிட்டீர்கள்.7 வது உண்மையோ உண்மை.கலக்குங்க

    பதிலளிநீக்கு
  5. சொல்லீட்டிங்கல்ல, இனி விடறதில்லை அரும்பாவூர். நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்று முழங்கிய வீரத்தமிழன் நக்கீரன் பரம்பரையில் வந்த நாம் இந்த சலசலப்புக்கெல்லாம் பயப்படலாமா? முன்வைத்த காலை பின் வைக்கமாட்டோம். அப்படியே ரிவர்ஸ் டர்ன் எடுத்து முன்னால்தான் போவோம். கவலைப்படாதீங்க அரும்பாவூர். (எப்படீடீடீடீ :) )

    பதிலளிநீக்கு
  6. இதென்னங்க அநியாயமா இருக்கு, இப்ப இங்கே மணி விடியக்காலை 3.15. அப்படீன்னா பாரிஸ்லே ராத்திரி 12 மணியாக இருக்கும். பாரிஸ்லெ ஒருத்தரும் தூங்கமாட்டீங்களோ? கேள்விப்பட்டிருக்கேன் - பாரிஸ் ஒரு தூங்கா நகரம்னு. அது நிஜம்தான் போல இருக்கு. நானும் காலைல 2 மணிக்கு முழிச்சு டூட்டி பார்க்கறேனுங்க.

    எல்லாரும் சொல்ரீங்க, சரி, இன்னும் கொஞ்ச நாள் குப்பை கொட்டிப்பார்ப்போம். நன்றி யோகன் அவர்களே.

    பதிலளிநீக்கு
  7. என்ன பாஸ் இதெல்லாம் நமக்கு சகஜம் தானே, இவங்க எல்லாம் இப்படி தான்
    http://athiradenews.blogspot.com/

    பதிலளிநீக்கு
  8. பீர் முகமது,
    விவசாயக்கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பாடம் எடுத்து அவர்களை மேம்படுத்தி விட்டு ஓய்வில் இருக்கும் எனக்கு இதெல்லாம் ஜுஜுபி.

    பதிலளிநீக்கு
  9. ஹா.......ஹா......, இதோ நீங்க சொன்ன மாதிரியே இப்ப நான் வந்து உங்கள் blog - ஐ follow - பண்ணப்போறேன், நானும் பிரபல பதிவர் ஆகோணும் :))
    உங்க பதிவ படிச்சேன்.

    பதிலளிநீக்கு
  10. இப்ப‌லாம் 'சாமி'ங்க‌தான் பிர‌ப‌ல‌ம், உங்க‌ பேர்ல‌யும்....ஹி..ஹி...நீங்க‌ அச‌த்துங்க‌:)

    பதிலளிநீக்கு
  11. !!!பணம் சம்பாதிப்பது சுலபம், அதை வைத்திருப்பதுதான் கஷ்டம்!!!

    ???நித்தியானந்தாவின் கடைக்கண் பார்வை என்மீது விழுந்தவுடன் அவர் அருளினால் அவரைப்பற்றி ஒரு நாலைந்து பதிவு போட்டேன். அவருடைய அருளாசியின் மகிமையினால் என்னுடைய வலைப்பதிவு கொஞ்சம் பிரபலமடைந்துள்ளது????

    !?!?வீட்டம்மா சொல்லும் எடுபிடி வேலைகளை முடிக்கவேன்டும்!?!?

    பதிலளிநீக்கு
  12. தங்கமணி,

    1. சொந்த அனுபவ உண்மை.

    2. நிஜமா! நித்தி இல்லைன்னா நான் இல்லைங்க.

    3. ரிடைர்டு ஆன காலத்திலெ நான் நிம்மதியா சாப்பிடறதப்பார்த்து உங்களுக்கெல்லாம் ஏனுங்க பொறாமை?

    "அம்மா" வை தாஜா செய்து வைத்துக்கொண்டால் பிழைத்துக்கொள்ளலாம்.

    நான் எங்கூட்டு அம்மாவத்தான் சொன்னேன்.

    பதிலளிநீக்கு
  13. ரகு,

    பேர்ல சாமி இருக்கிற மாதிரி நிஜமாகவும் சாமி(யார்) ஆகிற ஆசை இருக்கு.

    எல்லாத்தையும் ஏறக்குறைய அனுபவிச்சாச்சு. இதையும் அனுபவிக்கலாம்தான். என்ன ஒரு 50 வருடம் லேட்.

    பதிலளிநீக்கு
  14. நசரேயன்,

    நீங்க சொன்னா அது சரியாகத்தான் இருக்கும்.

    இப்படி உசுப்பேத்தித்தான் நாங்க பல பேர கவுத்துட்டு இந்த நெலமக்கி வந்திருக்கோம்.

    பதிலளிநீக்கு
  15. தருமி,

    மொதோ தடவயா நம்மூட்டுக்கு, வராதவிய வந்திருக்கீங்க, நாலு நாள் தங்கியிருந்துட்டுப் போகணும். எதுக்குன்னா, எல்லாரும் சொறிஞ்சு சொறிஞ்சு முதுகெல்லாம் ஒரே புண்ணாகிக்கெடக்குது. நாலு நாளு ஆயின்ட்மெடன்ட் தடவுனாத்தான் நல்லாகும்னு டாக்டர் சொல்லீட்டாருங்க.

    பதிலளிநீக்கு
  16. என்ன நடக்குது இங்க... சாமீ, இன்னும் திருப்தியாகலையா :)

    பதிலளிநீக்கு
  17. தெகா,

    முடிச்சுடறனுங்க, இன்னும் ஒரே பதிவுதானுங்க இதைப்பத்தி

    பதிலளிநீக்கு
  18. சைவக்கோத்து புரோட்டா சொன்னது-

    ஹா.......ஹா......, இதோ நீங்க சொன்ன மாதிரியே இப்ப நான் வந்து உங்கள் blog - ஐ follow - பண்ணப்போறேன், நானும் பிரபல பதிவர் ஆகோணும் :))

    இப்பவே சைவக்கொத்து புரோட்டா நல்லாத்தானுங்க இருக்குது. எதுக்கு அசைவமா மாறோணும்னு ஆசைப்படறீங்க.

    பதிலளிநீக்கு
  19. Anonymous said:

    //Vathiyarae Neer nakaisuvai Surangam

    Nallamani//

    நல்லமணி, வருகைக்கு நன்றி.

    முன்னால எல்லாம் நல்லாத்தான் இருந்தனுங்க. இப்ப கொஞ்ச நாளாத்தான் நீங்க சொல்ற மாதிரி ஆயிட்டனுங்க.

    பதிலளிநீக்கு
  20. அன்பின் அய்யா

    அண்ணன் தருமி சொன்னத நானும் சொல்லிகறேன் - ஆமா

    நீங்க அவருக்குப் பதில் சொன்னது சரி - ஆறிடுச்ச்சா இல்லையா - ஆயின்Dமெண்ட் தடவ கோவை வரட்டா

    சொல்லுங்க வந்துடறேன்

    சரியா

    பதிலளிநீக்கு
  21. மதிப்பிற்குரிய அய்யா,
    உங்களை எனக்கு அறிமுகப்படுத்திய திருப்பூர் ஜோதிகணேசனுக்கு நன்றி, பதிவில் காணும் விபரங்களை விட பின்னூட்ட நண்பர்களுக்கு தாங்கள் பதில் அளிக்கும் விதம் உங்கள் வயதிற்கு தொடர்பில்லாமல் இளமைத் துள்ளலாக அல்லவா இருக்கிறது. அதுவே வலைக்குள் தொடர்ந்து உலாவர உற்சாகமளிக்கிறத. நன்றி அலுவலகம் சென்று வந்து உங்கள் பிற பதிவுகளை தொடர்கிறேன். -சித்திரகுப்தன்

    பதிலளிநீக்கு
  22. மதிப்பிற்குரிய அய்யா,
    உங்களை எனக்கு அறிமுகப்படுத்திய திருப்பூர் ஜோதிகணேசனுக்கு நன்றி, பதிவில் காணும் விபரங்களை விட பின்னூட்ட நண்பர்களுக்கு தாங்கள் பதில் அளிக்கும் விதம் உங்கள் வயதிற்கு தொடர்பில்லாமல் இளமைத் துள்ளலாக அல்லவா இருக்கிறது. அதுவே வலைக்குள் தொடர்ந்து உலாவர உற்சாகமளிக்கிறத. நன்றி அலுவலகம் சென்று வந்து உங்கள் பிற பதிவுகளை தொடர்கிறேன். -சித்திரகுப்தன்

    பதிலளிநீக்கு
  23. நல்லாத்தான் ஐடியா கொடுக்குறீங்க சார்...ஹா...ஹா....

    பதிலளிநீக்கு
  24. அய்யா, வணக்கம், வலைச்சரத்தில் உங்களைப்பற்றி அறிமுகம் பதிவு செய்திருந்ததைப் பார்த்து, தளத்தில் நுழைந்து உங்கள் வயதிலும் உள்ள இளமைத் துள்ளலை (மறுமொழிக்கு பதில் எழுதுவதில்) வியந்து ஒரு பின்னூட்டம் எழுதியிருந்தேன். ஆனால் ஏனோ பிரசுரமாகவில்லை என்பதால் மீண்டும் இதை எழுதியுள்ளேன். - தொடர்கிறேன் - சித்திரகுப்தன்

    பதிலளிநீக்கு