வெள்ளி, 9 மார்ச், 2012

நிறைவேறின ஆசைகள்

கொஞ்சும் சலங்கை என்ற சினிமா வந்த புதிதில், 1962 என்று ஞாபகம், சிங்கார வேலனே தேவா என்ற பாடல் பிரபலமாகி பட்டி தொட்டிகளிலெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தது. திருமதி ஜானகி திரை உலகத்தில் பிரவேசித்த முதல் பாடல். ஆபேரி ராகத்தில் அமைந்த பாடல். திரு காருகுறிச்சி அருணாசலம் அவர்களின் நாதஸ்வர இசையோடு பின்னிப்பிணைந்த பாடல். அதற்கு முன்பும் அப்படி ஒரு பாடல் வந்ததில்லை. அதற்குப்பின்பும் அந்த பாடல் மாதிரி வரவில்லை.

நான் அப்போதுதான் முதுகலை படிப்பு முடித்துவிட்டு வேலையில் சேர்ந்திருந்தேன். படிப்புக்காக வாங்கிய கடனை அடைக்கவேண்டும். குடித்தனம் நடத்தவேண்டும். அப்போது நான் பிரம்மச்சாரிதான். இருந்தாலும் பாட்டியுடன் தனிக்குடித்தனம். என் அம்மாவிற்கும் பாட்டிக்கும் ஆகாது. ஆனால் நான் பாட்டி செல்லம். ஆகவே என்னை பாட்டியுடன் தனிக்குடித்தனம் அனுப்பி விட்டார்கள்.

இந்த சிங்கார வேலன் பாட்டைக் கேட்கும் போதெல்லாம் மனதில் ஒரு ஏக்கம் தோன்றும். ஆஹா, இந்தப் பாட்டை கிராமபோன் ரிக்கார்டில் வீட்டில் போட்டு கேட்டால் எவ்வளவு ஆனந்தமாக இருக்கும் என்று ஏங்கியிருக்கிறேன். கிராமபோன் வாங்கும் அளவிற்கு என்னுடைய அன்றைய பொருளாதார நிலை இல்லை. இந்த ஏக்கம் மனதில் இருந்து கொண்டே இருந்தது.

பல வருடம் கழித்து டேப் ரிகார்டர் வாங்கினேன். அதில் இந்தப் பாடல் கேசட் வாங்கி என் மனம் திருப்தியடையும் வரையிலும் இந்தப் பாடலைக்கேட்டேன். இப்போது கம்ப்யூட்டர், சி.டி.ப்ளேயர், ஐபாட், டேப் ரிகார்டர் என்று பலவித உபகரணங்களும் வீட்டில் இருக்கின்றன. இந்தப் பாட்டு பல வடிவங்களில் இந்த உபகரணங்களில் இருக்கின்றன. ஆனால் அன்று டீக்கடைகளில் ஓரமாக நின்று கேட்டு ஆனந்தித்த அனுபவம் இப்போது வரவில்லை.

ஒரு பொருள் இல்லாதபோது அதன் மீது ஏற்படும் ஈர்ப்பு, அந்தப் பொருளை நாம் அடைந்த பிறகு வெகுவாக குறைந்து விடுகிறது.

18 கருத்துகள்:

  1. //ஒரு பொருள் இல்லாதபோது அதன் மீது ஏற்படும் ஈர்ப்பு, அந்தப் பொருளை நாம் அடைந்த பிறகு வெகுவாக குறைந்து விடுகிறது//
    அதற்கு பதிலாக இன்னொரு பொருள் மீது ஆசை வந்துவிடுகிறதே..

    பதிலளிநீக்கு
  2. தங்கள் பதிவின் கருத்தும் அதனை
    மிக அருமையான உதாரணத்துடன்
    விளக்கியுள்ளவிதமும் ம்க மிக அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    tha.ma 2

    பதிலளிநீக்கு
  3. ஒரு பொருள் இல்லாதபோது அதன் மீது ஏற்படும் ஈர்ப்பு, அந்தப் பொருளை நாம் அடைந்த பிறகு வெகுவாக குறைந்து விடுகிறது.


    யதார்த்தமான வரிகள்..

    பதிலளிநீக்கு
  4. //ஒரு பொருள் இல்லாதபோது அதன் மீது ஏற்படும் ஈர்ப்பு, அந்தப் பொருளை நாம் அடைந்த பிறகு வெகுவாக குறைந்து விடுகிறது.// நிதர்சனம்....

    எதையுமே அடையும் வரைக்கும் தானே ஆர்வம். அடைந்த பிறகு பல சமயங்களில் “சே... இவ்வளவு தானா..” என்றுத் தோன்றிவிடுகிறது.....

    பதிலளிநீக்கு
  5. சிங்கார வேலனே தேவா....ஜானகியின் முதல் பாடல் அல்ல.அவர் முதலில் பாட ஆரம்பித்தது 1957 ஆம் வருடம்.விதியின் விளையாட்டு என்ற தமிழ் திரை படத்தில் சலபதி ராவ் இசை அமைப்பில் "பேதை என் வாழ்கை பாழானதேனோ " என்ற சோகமான பாடலே. தெலுங்கிலும், கன்னடத்திலும் முன்னரே பாட ஆரம்பித்துவிட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி, கக்கு-மாணிக்கம். நான் சரியான சோம்பேறி. இவ்வளவு ஆராய்ச்சி செய்ய என்னால் ஆகாது!

      நீக்கு
    2. அவர் முதல் பாடல் பாசம் என்ற படத்தில் என்று கேள்வி. ஜல், ஜல் எனும் சலங்கை ஒலி. நம்பள்கி அப்ப சின்னப் பயன். எல்லாம் கேள்வி ஞானம் தான்.

      ஆனால் இதல் நடித்தது சாம்பார் என்று தெரியும்!!!
      ஹி! ஹி!! ஹி!!!

      நீக்கு
  6. கடைசியில் கூறியுள்ள வரிகள் நிதர்சனத்தை சொல்கிறது.
    இன்று என்ன தான் கம்ப்யூட்டர், சி.டிகளில் கேட்டாலும், ரேடியோவில் கேட்டது போல் வராது.

    பதிலளிநீக்கு
  7. நல்ல பதிவு.
    அருமையான பாட்டு.
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  8. நிஜமான, எதார்த்தமான வரிகள் அய்யா.

    நர்மி.

    பதிலளிநீக்கு
  9. உண்மை!
    இப்படி பல பாடல்களைக் கேட்க ஏங்கியதுண்டு. இன்று எல்லாமிருந்தும், இலங்கை வானொலியை இணையத்தில் கேட்பதிலே தனிச் சுகமுண்டு.

    பதிலளிநீக்கு
  10. ஐயா சொன்னது "ஒரு பொருள் இல்லாதபோது அதன் மீது ஏற்படும் ஈர்ப்பு, அந்தப் பொருளை நாம் அடைந்த பிறகு வெகுவாக குறைந்து விடுகிறது."

    இது நூற்றுக்கு நூறு உண்மை தான் போல; ஐயாவின் அனுபவம் பேசுவது இங்கு நன்றாகத் தெரிகிறது. சரி நம்ம கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.

    இந்த இரண்டில் ஒன்று உண்மை, ஒன்று,
    உங்கள் மனைவி உங்கள் அலைகளை அலசுவதில்லை!
    அல்லது,
    உங்கள் வீட்டில் பூரி கட்டை இல்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சரி நம்ம கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.

      இந்த இரண்டில் ஒன்று உண்மை, ஒன்று,
      உங்கள் மனைவி உங்கள் அலைகளை அலசுவதில்லை!
      அல்லது,
      உங்கள் வீட்டில் பூரி கட்டை இல்லை!//

      என் கேள்விக்கு நீங்கள் சரியாகப் பதில் சொன்னால் உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும்.

      எப்போதிலிருந்து உங்கள் மனைவி உங்களை பூரிக்கட்டையால் அடிப்பதில்லை?

      நீக்கு
  11. சமையல் என்னுடையது என்பதால் எனக்கு மட்டும் தான் தெரியும் பூரி கட்டை இருக்குமிடம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///என் கேள்விக்கு நீங்கள் சரியாகப் பதில் சொன்னால் உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும்.///
      நீங்கள் கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லிவிட்டேன். நீங்க சொல்லவில்லையே? திருப்பியும் ஆரம்பத்திலிருந்த்தா!

      நீக்கு
    2. //சரி நம்ம கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.

      இந்த இரண்டில் ஒன்று உண்மை, ஒன்று,
      உங்கள் மனைவி உங்கள் அலைகளை அலசுவதில்லை!
      அல்லது,
      உங்கள் வீட்டில் பூரி கட்டை இல்லை!//

      கொஞ்சம் டைம் கொடுங்க. கேள்வி புரியமாட்டேங்குது. புரிஞ்ச உடனே பதில் சொல்லீடறேன்.
      கொஞ்சம் டைம்னா சும்மா ஒரு பத்துப் பதினைந்து வருடம்!!!! அதுவரைக்கும் நான் இருப்பேனா என்று நினைக்கலாம். கட்டாயம் இருப்பேன். என்ன வேற ஊர்ல இருப்பேன். எப்படியும் ஒரு காலத்தில நீங்களும் அங்க வருவீங்கல்ல. அங்க வச்சு பேசித் தீத்துக்கலாம். சரீங்களா?

      நீக்கு