புதன், 28 மார்ச், 2012

வயதானவர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறை

இந்திய நாட்டில் எல்லா மதத்தினரும், வயதில் மூத்தவர்களை மதிப்புடனும் மரியாதையுடனும் நடத்தவேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். பல பொது இடங்களில், முக்கியமாக, வட இந்தியாவில் இதை வெளிப்படையாக நடைமுறையில் பார்க்கிறோம். இராமாயணம், மகாபாரதம் போன்ற சீரியல்களில் இந்த வழக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தார்கள்.

இந்த வழக்கம் பாலிவுட் உலகில் அறிமுகமாகி, கோலிவுட்டிற்கும் இறக்குமதியாகி, சினிமா நடிகர்கள், இயக்குநர்கள், பைனான்சியர்கள் எங்கு போனாலும் அவர்கள் காலைத் தொட்டு வணங்க சினிமாக்காரர்கள் தயங்குவதில்லை. நான் ஒரு முறை ஒரு பிரபல நடிகர் வீட்டிற்குப் போயிருந்தேன். நான் எப்போதும் போல் நின்றுகொண்டே ஒரு வணக்கம் போட்டேன். ஆனால் அங்கு வந்திருந்த வேறு ரசிகர்கள் அவர் காலைத் தொடுவது போல் பாவனை செய்து வணங்கினார்கள். அந்த நடிகர் என்னைப் பற்றி என்ன நினைத்தாரோ எனக்குத் தெரியாது.

யார் எந்தப் பெரியவர்களை காலைத்தொட்டு அல்லது நின்றுகொண்டு வணங்கினாலும் அவர்களை ஆசி கூறி வாழ்த்த வேண்டும் என்பது மரபு. ஆனால் அதற்கெல்லாம் இன்று நேரமில்லை. ஆனானப்பட்ட கடவுளுக்கே போகிற போக்கில் ஒரு டாட்டா காட்டிக்கொண்டு போகிற அவசர உலகம் இது. ஆனால் கடவுள் வஞ்சகமில்லாமல் எல்லோருக்கும் சலிப்பில்லாமல் அபயஹஸ்தம் காட்டிக்கொண்டு இருக்கிறார்.

அப்படிப்பட்ட மரியாதைக்குரிய பெரியவர்கள் வீட்டிற்குள்ளும் வெளியிலும் நடந்து கொள்ளும் முறைகள் பல சமயங்களில் எரிச்சலூட்டுபவையாக இருக்கின்றன. இது அவர்கள் உணராமல் செய்யக்கூடும். உணர்ந்து செய்தாலும் உணராமல் செய்தாலும் விளைவுகள் ஒன்றே. அவற்றில் சிவற்றை பட்டியலிட்டுள்ளேன்.

1. தொணதொணத்தல் அல்லது புலம்புதல்:
2. துருவுதல்
3. அருவருப்பான செயல்கள்
4. உணவுக்கட்டுப்பாடு இன்மை
5. இலவச அறிவுரைகள்
6. இடம், பொருள் தெரியாமல் பேசுதல்
7. மறத்தல்

இந்த சமாசாரங்களை விரித்து எழுதினால் பலருடைய மனம் நோகும் என்பதால் இத்துடன் முடிக்கிறேன்.

14 கருத்துகள்:

 1. . இலவச அறிவுரைகள்
  6. இடம், பொருள் தெரியாமல் பேசுதல்

  மிகவும் கடுமையாக பாதிக்க வைக்கும் பல குணங்கள் மாற்றிக்கொள்ள பெரியவர்கள் முன்வருவதில்லை தங்கள் வயதை காரணம் காட்டி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வயதானவர்கள் தங்கள் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும். பண்புடன் நடந்து கொள்ளவேண்டும். பலர் இவ்வாறு செய்வதில்லை.

   நீக்கு
 2. // பல பொது இடங்களில், முக்கியமாக, வட இந்தியாவில் இதை வெளிப்படையாக நடைமுறையில் பார்க்கிறோம். //

  ஆமாம். பொது இடமோ, வீடோ எங்கு பார்த்தாலும், உடனே ஒரு கையால் அவரை விடப் பெரியவர்களை வணங்குவது இங்கே வழக்கம்.

  நாளை பெரியவர்கள் ஆகப் போகும் நபர்களுக்கும் மேலே சொன்னவை உதவும்.... :)

  பதிலளிநீக்கு
 3. நீங்கள் கொடுத்துள்ள பட்டியலில் உள்ள முதல் கருத்தை ஒப்புக் கொண்டு விலகுகிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம்மிடம் உள்ள குறைகளை நாமே சொல்லி விட்டால் அடுத்தவர்களுக்கு அந்த வாய்ப்பு இல்லையல்லவா? அடுத்தவர்கள் நம் குறைகளைச் சொல்லும்போது ஏற்படும் காயங்கள் ஏற்படாது அல்லவா? அந்த முயற்சிதான் இது, தருமி ஐயா.

   நீக்கு
 4. வயதில் மூத்தவர்களை மதிப்புடனும் மரியாதையுடனும் நடத்தவேண்டும் என்பது அவசியம் ஆனால் வணங்குவதும் தொழுவதும் அஞ்சுவதும் அடிபணிவதும் இறைவன் ஒருவனுக்கே இருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 5. 'வயது வந்தால் ஏதாவது சொல்வார்கள்,எழுதுவார்கள் அதை நாம் பொருட்படுத்தக் கூடாது காரணம் அவர்கள் மூத்தவர்கள்' என நினைக்கும்படி இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.இது எனக்கும் பொருந்தும்.

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் ஐயா, நல்லா இருக்கீங்களா? நான் நலமே.

  சுருக்கெனச் சூப்பரான ஐடியா கொடுத்திருக்கிறீங்க. வயதான பின்னர் எனக்கும் உதவும் என நினைக்கிறேன். ஒன்று சொல்கிறேன். யாரும் தப்பா நினைக்க வேணாம். இன்றளவில் இளையோர் தான் பல இடங்களில் காலைத் தொட்டு வணங்கி தம்மைக் காப்பத்திக் கொள்ள நினைக்கிறாங்க

  பதிலளிநீக்கு
 7. நல்லா சொன்னீங்க. நானும் இவ்வளவு நாளா இதையெல்லாம் செய்துக் கொண்டுதான் இருந்தேன். இனிமேல் விட்டுவிட முயற்சிக்கிறேன்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 8. நான் உங்கள் வயதில், என் மனைவியுடன் தனியாகத் தான் இருப்பேன். மகன், மகள் கூப்ட்டாலும் செல்ல மாட்டேன். எனக்கு உயிரை விட முக்கிமானது தனி மனித சுதந்திரம். அப்புறம் தான் சோறு, இத்யாதி இத்யாதி.

  எவனுக்காகவும் என் வாழ்கையை மாற்றிக் கொள்ள மாட்டேன். ஏனென்றால் பிறப்பது ஒரு முறை. இறப்பது ஒரு முறை. மேலும், போனஜென்மம், மறுஜெனம், புனர்ஜெனம் மாதிரி வெண்டைக்காய் தத்துவத்தின் மேல் நம்பிக்கை இல்லாதால் நன்றாக வாழ்ந்து விட்டு சாவதே மேல். இந்த தத்துவத்தில் நானும் என் மனைவியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

  அப்படியென்றால், எவனுக்காகவும் என் வாழ்கையை மாற்றிக் கொள்ள மாட்டேனா? என் மனைவி சொன்னால் மட்டுமே மாற்றிக் கொள்வேன்...ஏனென்றால் அவர்கள் என்னுடைய Bitter-Half., சாரி மன்னிக்கணும், என்னுடைய Better-Half.

  பதிலளிநீக்கு