பாக்கெட் மணி என்ற வழக்கம் தோன்றாத காலத்தில் நான் படித்தேன். வீட்டில் தினம் மூன்று வேளை சாப்பாடு கிடைக்கும். தீபாவளி, பொங்கல் பண்டிகை காலத்தில் இனிப்பு பலகாரம் கிடைக்கும். வருடத்திற்கு இரண்டு செட் புது துணி கிடைக்கும்.
அவ்வப்போது நான் செய்யும் லீலைகள் வெளியானால் பூசை கிடைக்கும். அவ்வளவுதான். இதைத் தவிர வேறொன்றும் எதிர்பார்க்கக்கூடாது. எதிர் பார்த்தாலும் பிரயோஜனமில்லை.
நான் ஹைஸ்கூலில் நான்காவது பார்ம் படித்துக் கொண்டிருந்தபோது இந்த வாழ்க்கை போரடித்தது. முக்கியமாக சினிமாக்கள் பார்க்கவேண்டும். தேங்காய் பர்பி சாப்பிடவேண்டும். கேக் சாப்பிடவேண்டும். இப்படியெல்லாம் சிலபல விபரீத ஆசைகள் தோன்றலாயின.
என்ன செய்வது என்று தலையைப் பிய்த்துக்கொண்டு யோசித்ததில் ஒரு வழி புலனாயிற்று. என் நண்பன் ஒருவனின் அப்பா புஸ்தகம் பைண்டிங்க் செய்வார். அவன் வீட்டிற்குப் போயிருந்த சமயங்களில் அதை நான் கவனித்திருந்தேன். ஓரளவு அந்த வித்தையில் தேர்ச்சியும் பெற்றிருந்தேன்.
ஏன் நாம் கற்ற வித்தையை நம் வாழ்க்கைக்கு பயன்படுத்தக்கூடாது என்று ஒரு நாள் புத்தருக்கு ஞானோதயம் வந்த மாதிரி எனக்கும் வந்தது. உடனே அதற்கான வழி முறைகளில் இறங்கினேன். புஸ்தகங்கள் பைண்ட் செய்து கொடுக்கப்படும் என்று விளம்பரம் செய்தேன். எல்லாம் வாய் வார்த்தைகள் மூலமாகத்தான். சில பையன்கள் புஸ்தகங்களை பைண்ட் செய்யக் கொடுத்தார்கள்.
நானும் அவைகளைப் பைண்ட் செய்து கொடுத்தேன். தொழில் சுத்தமாக இருந்ததால் வாடிக்கையாளர்கள் பெருகினார்கள். ஒரு புத்தகம் பைண்ட் செய்ய நாலணா செலவு ஆகும். நான் வாடிக்கையாளர்களிடம் எட்டணா வாங்குவேன். சும்மா 100 பர்சென்ட் லாபம் மட்டுமே.
இப்படி நான் படிக்கும்போதே ஒரு தொழிலதிபர் ஆனேன். பர்பி, கேக் எல்லாம் சாப்பிட்டேன். அப்புறம் கொஞ்ச நாள் கழித்து தொழில் நசித்து விட்டது. காரணம் ஞாபகமில்லை.
நான் கூட நெய்வேலியில் இருக்கும்போது செய்திருக்கிறேன். வாங்கும் காசு அத்தனையும் அம்மாவிடம் கொடுத்து விடுவேன்! :)
பதிலளிநீக்குநல்ல பையனா இருந்திருக்கீங்க.
நீக்குஇப்படி நான் படிக்கும்போதே ஒரு தொழிலதிபர் ஆனேன்
பதிலளிநீக்குதிறமை தான் செல்வம்...
இப்படி நான் படிக்கும்போதே ஒரு தொழிலதிபர் ஆனேன். பர்பி, கேக் எல்லாம் சாப்பிட்டேன். அப்புறம் கொஞ்ச நாள் கழித்து தொழில் நசித்து விட்டது. காரணம் ஞாபகமில்லை//அனுபவம் சுவாரஸ்யாமாக போய்க்கொண்டிருந்தது,இப்படி சட்டென முடித்து விட்டீர்கள்?
பதிலளிநீக்குஎனக்குள்ள வீக்னெஸ். என்னால் நிறைய, விரிவாக எழுத முடிவதில்லை. காரணம் இளம் வயதில் நன்னூல் படித்ததின் விளைவு. அதில் "சுருங்கச்சொல்லி விளங்க வைத்தல்" நல்லாசிரியனுடைய பண்பு என்று இருந்தது. அது என்னைப் பிடித்துக் கொண்டது.
நீக்குஇதெல்லாம் கதை, ஸாதிகா. உங்க கிட்ட மட்டும் உண்மையைச் சொல்லுகிறேன். நான் ஒரு வாழைப்பழச் சோம்பேறி. அவ்வளவுதான்.
நீங்கள் அப்போதே தொழிலதிபர்தான் போலிருக்கிறது..
பதிலளிநீக்குhttp://anubhudhi.blogspot.in/
நான் இப்போது தொழில் அதிபர் என்று நீங்கள் நினைத்தால் தவறில்லை. நான் இப்போதி RKD யின் தலைவர்.
நீக்குRKD என்றால் என்னவென்று தெரியும் என்று நம்புகிறேன்.
Rice Killing Department அதாவது தமிழில் தண்டச்சோறு.
நான் நன்றாக படம் வரைவேன். சட்டையில் பேபரிக் பெயிண்ட் மூலம் டிசைன்ஸ் வரைந்து கொடுத்து சம்பாதித்தேன்..... ஒன்பது 10 படிக்கும் காலங்களில்
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி. உங்கள் தளத்தில் பதிவுகளைக் காணோம். உங்கள் விமானப்படை அனுபவங்களை எழுதலாமே?
நீக்குஅங்கேயிருந்து கல்லால் அடித்தால் கூட இங்கே வராது.
பதிலளிநீக்குஅதுசரி......................உங்கள் ஊரிலேதானே காந்தி தத்தா போட்ட நோட்டும் அடிப்பாங்க அண்ணே !
அப்புறம் .....கத்தரிக்கோலு போட்ட சிகரெட்டும் தயார் பண்ணுவாங்களாமே!
நெஜமாவா? :)))
நாங்க நோட்டு அடிச்ச காலத்துல காந்தி தாத்தா படம் இல்லை.
நீக்குScissors சிகரட் எங்கூர்ல இல்லை. பீடிதான் ஸ்பெசல்.
நானும் இந்தத்தொழிலை விரும்பிக் கற்றேன். ஆனால் பிறருக்கு அதை தொழிலாக செய்து கொடுத்தது கிடையாது. ஓரிரு ஆண்டுகள் மட்டும் என் குழந்தைகளின் புத்தகங்களுக்கும் மட்டும் செய்து கொடுத்தேன்.
பதிலளிநீக்குஉங்களின் இந்தப்பதிவு தேங்காய் பர்பி போல எனக்கு இனித்தது. பாராட்டுக்கள்.
நல்ல விஷயம். உங்களிடம் திறமை இருந்திருக்கிறது சார்.
பதிலளிநீக்குஎங்கள் பள்ளியில் கூட பைண்ட் செய்ய சொல்லித் தந்தார்கள்.
ஐயா எனக்கும் தேங்காய் பர்பி ஒரு பார்சல்! அழகிய அனுபவம்!!
பதிலளிநீக்குமிக அருமையான அனுபவப் பதிவு..நாங்கெல்லாம் எங்க அப்பா அம்மாகிட்ட சுட்டுத்தான் பலகாரம் வாங்குவோம்..நீங்களே எவ்வளவோ மேல்.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி சார்.....
\\தேங்காய் பர்பி சாப்பிடவேண்டும். கேக் சாப்பிடவேண்டும். இப்படியெல்லாம் சிலபல விபரீத ஆசைகள் தோன்றலாயின.\\
பதிலளிநீக்குஇதெல்லாம் விபரீத ஆசையா :)) அப்ப எங்கிட்டயும் விபரீத ஆசைகள் இருக்கு :))
கையில காசு இல்லாம இதுக்கெல்லாம் ஆசைப்பட்டா அது விபரீதங்கள்தானே, சிவா.
நீக்குsir romba naaala sirikkaama iruntha enga amma unga indha story ah paaarthu viittu vaai vittu siritharkal ,. kurippaaga thozhil nasinthu vittathu word avarukku migavum sirippai erpaduthi vittathu ,. vaazhga unga pani ,. ellame nalla irukku sir nagaisuvaiyoda naanum theevira rasigan aayeitten
பதிலளிநீக்குநன்றி, பிரபாகர். உங்க அம்மாவுக்கு எனது வாழ்த்துக்கள். ஆகக்கூடி என்னுடைய பதிவு உங்க அம்மாவெல்லாம் படிக்கிற அளவுக்கு வந்தாச்சு.
நீக்குvery good experiance sir...........
பதிலளிநீக்குthank you for sharing wonderful experience packed with high level of nutrients.(sindhaniku)
பதிலளிநீக்கு