சனி, 10 மார்ச், 2012

களை எடுப்பது மகா குற்றம்.


தெரு நாய்களைக் கொல்வது ஜீவகாருண்யத்திற்கு எதிரானது என்று மனேகா காந்தி என்று ஒருவர் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து இப்போது நெரு நாய்களைக் கொல்வதில்லை என்று சொல்கிறார்கள். தெருநாய்கள் பொது ஜனங்களுக்குத் தொந்திரவாக இருந்தால் சாத்வீக முறையில் அவைகளைப் பிடித்து அவைகளுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்து விட்டால் அப்புறம் தெரு நாய்கள் இல்லாமல் போய்விடும். இப்படி ஒரு திட்டம் இருக்கிறது

அதாவது கொக்கை எப்படி பிடிக்கிறது என்று ஒருத்தன் கேட்டானாம். அதற்கு மற்றொருவன் சொன்னானாம், நல்ல வெயில் அடிக்கும்போது கொக்கு தலையில் ஒரு கை வெண்ணெயை வைத்து விட்டால், அந்த வெண்ணை உருகி, கொக்கின் கண்ணை மூடிவிடும். அப்போது போய் கொக்கை லபக்கென்று பிடித்துக் கொள்ளலாம் என்றானாம். அது மாதிரிதான் இந்தத் திட்டமும்.

ஆனாலும் தெரு நாய்கள் வருடாவருடம் அதிகமாகிக்கொண்டு இருக்கிறதே தவிர குறைந்த மாதிரி காணோம். நாம்தான் சிந்தனையாளராயிற்றே? இந்தப் பிரச்சினை குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கும்போது சில பல கருத்துக்கள் தோன்றின. உலக நன்மையை முன்னிட்டு அந்தக் கருத்துக்களை இங்கே பகிர்கிறேன்.

ஜீவகாருண்யம் என்பது உயிர்களைக் கொல்லாமல் இருப்பது. சரிதானே? அதனால்தானே தெரு நாய்களுக்காக மனேகா காந்தி போராட்டம் நடத்தினார்கள். எனக்குத் தோன்றிய எண்ணம் என்னவென்றால் பல மனிதர்கள் இந்த ஆடு, மாடு, கோழி ஆகியவற்றின் மாமிசங்களை உண்கிறார்களே, அவர்களுக்கு அந்த மாமிசம் எங்கிருந்து கிடைக்கிறது? அந்த ஆடு மாடு கோழிகளையெல்லாம் கொல்லாமலே அந்த மாமிசங்கள் கிடைக்கின்றனவா அல்லது அவைகளைக் கொன்றுதான் அந்த மாமிசங்கள் கிடைக்கின்றனவா? அப்படி அவைகளைக் கொல்கிறார்கள் என்றால் அது ஜீவகாருண்ய அடிப்படையில் தடை செய்யப்பட வேண்டுமா இல்லையா?

இந்த எண்ணம் தோன்றிய நாளிலிருந்து என்னால் சரியாகச் சாப்பிட முடியவில்லை, தூங்க முடியவில்லை. இப்படியே தூங்காமல் சிந்தித்துக் கொண்டிருக்கும்போது வேறொரு எண்ணம் தோன்றியது.

நான் ஒரு விவசாயப் பட்டதாரி. செடி கொடிகளுக்கும் உயிர் இருக்கிறது என்று நான் படிக்கும்போது சொல்லிக் கொடுத்தார்கள். இப்பொழுதும் அப்படித்தான் இருக்கும் என்று நம்புகிறேன். அப்படியானால் அந்த செடிகொடிகளைக் கொன்றுதானே நாம் சாப்பிடுகிற அரிசி, பருப்பெல்லாம் கிடைக்கிறது? எந்த உயிரானாலும் கொல்லாமலிருப்பதுதானே ஜீவகாருண்யம்? இதை ஏன் ஒருவரும் அந்த மனேக்காவுக்குச் சொல்லவில்லை?

சரி, இப்படி வைத்துக்கொள்வோம். அந்த செடிகளெல்லாம் இறந்த பிறகுதான் அதிலிருந்து அரிசி பருப்பெல்லாம் எடுக்கிறோம் என்று வைத்துக் கொளவோம். அப்போது வேறொரு எண்ணம் உதித்தது. உதாரணத்திற்கு நெல் பயிரை எடுத்துக் கொள்வோம். நெல் பயிர் வளரும்போது கூடவே வேறு செடிகளும் வளருகின்றன. விவசாயிகள் அவைகளை களைகள் என்று கூறி அவைகளைப் பிடுங்கி விடுகிறார்கள். அந்தக் களைச் செடிகள் உயிருள்ளவைதானே. அவைகளைப் பிடுங்கி எறிவது ஜீவகாருண்யத்திற்கு எதிரான செயல்தானே?

இதை ஏன் இதுவரை ஒருவரும் எதிர்த்து பிரசாரம் பண்ணவில்லை? இனிமேல் யாரும் களை எடுக்கக்கூடாது என்று ஏன் மனேக்கா காந்தி சொல்லவில்லை? இந்த எண்ணம் என் மனதைக் குடைந்துகொண்டே இருக்கிறது. அதனால் நான் உடனடியாககளை பிடுங்க எதிர்ப்புகட்சி ஆரம்பித்து கூடங்குளம் எதிர்ப்புப் போராட்டம் அளவில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப் போகிறேன். வெளிநாட்டுப் பணங்கள் அதிக அளவில் பெறும்தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்மகத்தான ஆதரவு கொடுப்பார்கள் என்று எதிர் பார்க்கிறேன்.

மேலும் நமது உயிருக்கும் மேலான பதிவுலகக் கண்மணிகளும் ஆதரவு கொடுத்தால், இந்தக் களை பிடுங்கா போராட்டம் மகத்தான வெற்றி பெறுவது உறுதி, உறுதி, உறுதி.

37 கருத்துகள்:

  1. அதான்..காலையில வாக்கிங் போக வேண்டாம்னு சொன்னேன்.. கேட்கமாட்டீங்கிறீங்க..!!
    :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பட்டா , நான் கேட்கலாமுன்னு வந்தேன் ஹா..ஹா... :-))))

      நீக்கு
    2. வாக்கிங்க் போகாட்டா கொஞ்ச நாள்ல கைகால் வெளங்காம்பஃ போயிடும் அப்படீங்கறாங்களே, அதனால்தான நாய்க்கடி வாங்கினாலும் பரவாயில்லைன்னு வாக்கிங்க் போறேன்.

      நீக்கு
  2. ஆகா...வெரி குட்...எப்படிங்க...யாருங்க மனேக்கா...மேனகா தானே...நாமளும் பிடிங்கிடுவோம்..களை தான்...

    பதிலளிநீக்கு
  3. Dear Sir, everyday thousands of kids and adults being attacked by crazy street dogs.Mainly poor people. Menaka Gandhi is rich enough to use car for her travel.So she does not have to worry about street dogs. If you think about "Jeeva Karunyam" no one can live in this world. Ofcourse plants are living things ,no doubt about it.

    பதிலளிநீக்கு
  4. சிறப்பான சிந்தனைகள் சிந்தனாவாதி ஐயா அவர்களே..

    பதிலளிநீக்கு
  5. //அதான்..காலையில வாக்கிங் போக வேண்டாம்னு சொன்னேன்.. கேட்கமாட்டீங்கிறீங்க..!!
    :-)// ரசித்தேன்.... :)))

    மேனகா காந்தி - அவங்க சொன்ன பல விஷயங்களில் இது தான் ரொம்ப பாப்புலர்... :)))

    பதிலளிநீக்கு
  6. மேனகா காந்தி கரப்பான்பூச்சியையும்தான் கொல்லக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்க.....கரப்பான்பூச்சி நம்முடைய உணவு கழிவை உண்டு வெளியேற்றுவதால் அதில் கிருமிகள் தோன்றுவதில்லை!
    நாய்களை பிடித்து தாய்லாந்து, வியட்நாம் ஏற்றுமதி செய்யலாம், நாய் வளர்க்க கடுமையான சட்டங்கள் கொண்டு வரவேண்டும்.....களையை பிடுங்கலைன்னா பாதிப்பு நமக்குத்தான்....நைட் சினிமா பார்த்திட்டு வண்டியில வரமுடியலை.....பேய விட நாய்கதான் பயமுறுத்துகிறது....இதுல வேற குறுக்க விழுந்து அடிக்கடி நம்மளை கால்கட்டு கைகட்டு போட வைக்கிறது...உங்க சங்கத்தில என்னையும் சேர்த்திக்குங்க

    பதிலளிநீக்கு
  7. //எந்த உயிரானாலும் கொல்லாமலிருப்பதுதானே ஜீவகாருண்யம்? இதை ஏன் ஒருவரும் அந்த மனேக்காவுக்குச் சொல்லவில்லை?//


    இந்த கொசு மருந்து , எறும்பு மருந்து , களை கொல்லி ......இதுப்போல மருந்து அடிக்கிறாங்களே இது ஜீவ காருண்யத்துல வராதா..???? என் சார்பில இதையும் கேளுங்க ஹா..ஹா... :-)

    பதிலளிநீக்கு
  8. சரியாக சொன்னீர்கள். சரி, கொசு கடிக்கும் போது அதை அடிக்கலாமா?

    பதிலளிநீக்கு
  9. kalaiyai pudungka kutaathu.. sari thaan ... appuram vialaichchal poyirumee... ayyaa eppadiyellaam yoosikka vaikkirathu.. paarungka intha jeeva kaarunyam..

    பதிலளிநீக்கு
  10. சார் என்னமா யோசிக்கிறீங்க சார். கொசுக்கடிச்சா கூட அடிக்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். காய்ச்சல் வந்தா கூட மருந்து சாப்பிடக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன், பேக்டீரியாவும் உயிர்தானே?

    பதிலளிநீக்கு
  11. காலையில் வாக்கிங் போவதில் தப்பொன்றும் இல்லை. ஆனால் சற்று குளிர் இருகிறது என்பதற்காக அந்த மங்க்கி கேப் - அதுதான் ....குரங்கு குல்லாய், அதையும் தலையில் மாட்டிக்கொண்டு செல்வதால் தான் இந்த "வம்பு"
    நாம் சொன்னால் பெரிசுகள் கேட்கமாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  12. அண்ணே உங்களுக்கு மீன் மேல என்ன கோபம்., அத விட்டீட்டிங்களே.,
    நம்ம ஊரு பக்கம் கடல் ஏதுமில்லைங்கறதாலயா?

    பதிலளிநீக்கு
  13. விலங்குகளின் உயிர்களுக்கு கொடுக்கப்படும் மதிப்பு கூட இன்று மனித உயிர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை...

    பதிலளிநீக்கு
  14. நான் உடனடியாக “களை பிடுங்க எதிர்ப்பு” கட்சி ஆரம்பித்து கூடங்குளம் எதிர்ப்புப் போராட்டம் அளவில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப் போகிறேன்/// நான்தான் அதுல கொ.ப.செ!!

    பதிலளிநீக்கு
  15. தங்களின் களை பிடுங்கா போராட்டம் மகத்தான வெற்றி பெற வாழ்த்துகள் ;)))))

    தெரு நாய்களால் மனிதர்களுக்கு ஏற்படும் தொல்லைகள் கொஞ்சநஞ்சமல்ல.
    அதனால் பாதிப்படைந்தவர்களுக்கு தான் அதன் வலி தெரியும்.

    அவைகள் யாவும் உடனடியாக சுட்டுத்தள்ளப்பட வேண்டியவையே !

    ஆடு கோழிகளாவது நாய்களைப்போல அதிக ஆபத்து ஏதும் கொடுக்காதவை.
    அவற்றை கொல்வது தான் மிகவும் அநியாயம்.

    பதிலளிநீக்கு
  16. நானும் கண்டிப்பா மெம்பர் ஆயிடுறேன். மெம்பர் கார்டு அனுப்புங்க சகோ. அருமையான கேள்விகள்? நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  17. பதில்கள்
    1. tha .ma. oo endraal enna nanum romba nream yosichum pidi padala?

      நீக்கு
    2. அது ஒண்ணும் இல்ல, பிரபாகர். தமிழ்மணம் திரட்டியின் ஓட்டுப்பெட்டி அது. அதுல ரிஜிஸடர் செஞ்சிருக்கிறவங்க ஓட்டுப்போடலாம். 0/0 அப்படீன்னா இன்னும் யாரும் ஓட்டுப்போடலேன்னு அர்த்தம்.

      நீக்கு
  18. What i dont understand is this :- In some foreign countries these Stray dogs dont bite the people,are very calm ie dont bark on seeing some strangers.Also,public dont throw stones on these dogs,may be because of this ?

    பதிலளிநீக்கு