எங்க ஊர்ல கடைவீதிக்குப் போனால் ஒவ்வொரு ஜவுளிக்கடை வாசலிலும் ஒரு பையன் அல்லது ஆள் இருப்பான். அந்த வழியில் போகிறவர்களையெல்லாம் " அம்மா வாங்க, ஐயா வாங்க, நல்ல துணிகள் சலீசாக இருக்கு" என்று கூவி அழைத்தவாறே இருப்பான். அவனுக்கு அதுதான் வேலை. சம்பளம் அதுக்காகத்தான்.
பழனிக்குப் போனால் பழக்கடைக்காரர்கள் இவ்வாறு ஆட்கள் வைத்து தங்கள் கடைக்கு வாடிக்கையாளர்களைக் கவர்வார்கள்.
இதே டெக்னிக்கை சோப்புக் கம்பெனிகள் எப்படி உபயோகப்படுத்தினார்கள் என்றால், தங்கள் சோப் சுற்றிவரும் காகிதத்தை நல்ல வர்ணத்துடனும் ஒரு சினிமா நடிகை போட்டோவுடனும் போட்டார்கள். பிறகு ஏறக்குறைய எல்லாப் பொருட்களின் பேக்கிங்க்குகளும் மிகவும் கவர்ச்சிகரமாக மாறின.
சரக்கு எப்படியிருந்தாலும் அது நல்ல முறையில் கவர்ச்சிகரமாக பேக் செய்தால்தான் விறபனை ஆகும் என்ற நிலை வந்து விட்டது. எவ்வளவு அழகான பெண்ணாக இருந்தாலும் கல்யாண தினத்தில் பல ஆயாரம் செலவழித்து மேக்கப் போடுகிறார்கள்.
இந்த நிலை வந்த பிறகு விளம்பரக் கம்பெனிகளுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. விளம்பரத்துக்காக பெரும் தொகையை கம்பெனிகள் செலவிடுகின்றன.
நிஜ உலகில் இருக்கும் இந்த நிலை பதிவுலகத்திலும் எதிரொலிக்கிறது. ஆள் வைத்துக் கூவுவதற்குப் பதிலாக ஈமெயில் ஆனுப்புகிறார்கள். கவர்ச்சி பேக்கிங்க்குக்குப் பதிலாக கவர்ச்சிகரமான தலைப்பு வைக்கிறார்கள். கால ஓட்டத்தில் இந்த டெக்னிக்குகளெல்லாம் தேவைப்படுகின்றன. என்னுடைய சரக்கு அருமையான சரக்காக்கும், எனக்கு இந்த கவர்ச்சிகளெல்லாம் தேவையில்லை என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களின் சரக்கு விலை போவதில்லை.
என்னுடைய பதிவில் இந்தத் தத்துவத்தை பரிசோதனை செய்து பார்த்தேன். கவர்ச்சிகரமான தலைப்பு நிச்சயமாக அதிக வாசகர்களைக் கொண்டு வருகிறது. ஆனாலும் எனக்கு அந்த மாதிரி தலைப்புகள் வைக்க கஷ்டமாக இருக்கிறது. ஆகவே நான் பைத்தியக்காரனாகவே இருந்துவிட்டுப் போகிறேன்.
தலைப்பு தகவல்கள் எல்லாமே சூப்பர்.
பதிலளிநீக்குநிர்வாணத்தலைப்பால் தங்களுக்கு ஏதாவது
நிவாரணம் கிடைத்தால் சரியே ;)
எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்றுதான் அலைகிறேன்!
நீக்குபதிவின் தலைப்புக்கு விளக்கம் சொல்லிய பதிவிலும் தலைப்பு மார்க்கம் தானா? ஐயா.
பதிலளிநீக்குநன்றி, பிரகாஷ.
நீக்குநீங்களும் விதவிதமா டைட்டில் வைக்கறீங்க ..யாரும் உங்க கடைக்கு வர மாட்டேன்கிறாங்க..நல்லா கவர்ச்சியா வைங்க...
பதிலளிநீக்குஇது ஒரு ஆராய்ச்சிதானுங்க. பாருங்க, அப்படி இப்படின்னு என்னுடைய தமிழ்மணம் ரேங்க் 28 க்கு வந்துடுச்சு. அதைப் பற்றி தனியா ஒரு பதிவு போடோணுமுங்க.
நீக்குசிறப்பு..
பதிலளிநீக்குநன்றி
நீக்குபைத்தியங்களுக்கு நல்ல வைத்தியம்
பதிலளிநீக்குசொல்லி இருக்கிறீர்கள் ஐயா!
வாழ்த்துக்களுடன் வணங்குகிறேன்!
மிக்க நன்றியும் பதில் வணக்கங்களும்.
நீக்கு:) ஆஹா... நல்லா சொன்னீங்க போங்க...
பதிலளிநீக்குஎப்படியாச்சும் பொழுத ஓட்டணுமே, நாகராஜ்.
நீக்குநீங்கள் சொல்வது ஓரளவுதான் உண்மை. நம் வாசகர்களுக்கு தலைபெல்லாம் ஜுஜுபி அய்யா.
பதிலளிநீக்குஅவர்கள் நேராக "மெயின் பார்ட் க்கேதான் " கவனம் செலுத்துவார்கள்.
ஐயோ, மாட்டிக்கிட்டேனே?
நீக்குசவுக்கடி கொடுத்து விட்டீர்கள் , எனக்கு பதிவே எழுத வரமாட்டேங்குது நான் எங்கு போய் சொல்வது என் குறையை
பதிலளிநீக்குஅதுக்குத்தான் கூகுள்காரன் ஏற்பாடு பண்ணிக் கொடுத்திருக்கானுங்க.
நீக்குஏன் இந்த கொலைவெறி?
பதிலளிநீக்குஏனுங்க, ஐந்து வேளை சாப்பிட்டுட்டு சும்மா எப்படீங்க இருக்கிறது? (நான் டயபெடிக் நோய் உள்ளவன். அதனால்தான் ஐந்து வேளை சாப்பாடு. இரண்டு வேளை சாப்பாட்டைத்தான் ஐந்து வேளை சாப்பிடுகிறேன்)
நீக்குயார் படித்தால் என்ன யார் படிக்காவிட்டால் என்ன? நீங்கள் எழுதுவது நல்ல உபயோகமான எழுத்து. எந்த வித காம்ப்ரமைசும் வேண்டாம். நல்லது வேண்டுவோர் வரட்டும்..
பதிலளிநீக்குபோற்றுவார் போற்ற புழுதி வாரித் தூற்றுவார் தூற்ற எம் கடன் பணி செய்து கிடப்பதே.
நீக்குஇந்த பதிவ படிச்சிட்டு அஞ்சு பேரு கருத்து தெரிவிச்சிருக்காங்க.அப்ப இந்த பதிவுக்கான தலைப்பு நல்ல தலைப்பா அல்லது கெட்ட தலைப்பா?
பதிலளிநீக்கு//உங்கள் எல்லாவிதமான கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன. தங்கள் பதிவின் சுட்டிகளுடன் இடப்படும் விளம்பர பின்னூட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்//
பதிலளிநீக்குவன்மையாக ...........................................
போற்றுவார் போற்ற புழுதி வாரித் தூற்றுவார் தூற்ற எம் கடன் பணி செய்து கிடப்பதே.
பதிலளிநீக்குதங்கள் பகிர்வுகள் அனைத்தும் பயனுள்ளவை..
தலைப்பைத் தாண்டியும் வெற்றிபெற தகவல்கள் நிரம்பியவை..
///பழனிக்குப் போனால் பழக்கடைக்காரர்கள் இவ்வாறு ஆட்கள் வைத்து தங்கள் கடைக்கு வாடிக்கையாளர்களைக் கவர்வார்கள்.///
பதிலளிநீக்குஎங்கள் பழனி அப்படியில்லை; உங்களது மதிப்பீடு சரியில்லை! பக்தர்களை பார்த்தல் எங்க ஊர் கடைக்காரர்கள் "பக்தி பரவசப்பட்டு," நடை வீதிலே உங்களைப் புடிச்சான்ன, அடிவாரத்தில் ஒரு மொட்டை, அப்புறம் மலை ஏறி இறங்கும் வரை வரிசையா ஒவ்வொரு இடத்திலும் பல மொட்டைகள் போடுவான். நீங்க வேண்டியது ஒரு மொட்டை; ஆனால் எங்க ஆட்கள் உங்களுக்கு வழி எல்லாம் மொட்டை போடுவர்கள்.
ஒரு முறை நான் என் மனைவி, என் குழந்தைகளுடன் பழனி மலைக்கு சென்ற போது, நாங்கள் பேசிய தமிழ்+ஆங்கிலம் வைத்து எங்களை குடும்பத்துடன் மொட்டை போட ஒரு கூட்டமே அலை மோதியது. கடைசியில், நான் என்னுடைய "பாப்பம்பட்டி தமிழில் (கொங்கு + மதுரை வட்டார mix)" பேசியும் எவனும் போகலை. அப்படி ஒரு தொல்லை. அராஜகம். அங்கு இருக்கும் இரண்டு டாக்டர் நண்பர்களுக்கு போன் பண்ணிட்டு, அப்புறம் நம்ம மெட்ராஸ் பாஷையை எடுத்து உட்டதும் எல்லா பயலும் ஓடிட்டானுங்க.
அதனால் "பழனிக்குப் போனால் பழக்கடைக்காரர்கள் இவ்வாறு ஆட்கள் வைத்து தங்கள் கடைக்கு வாடிக்கையாளர்களைக் கவர்வார்கள்" என்று குறைவாக மதிப்பீடு செய்து எழுதியதால், என் மனது மிகவும் புண்படுகிறது!!!
>>>அப்படி இப்படின்னு என்னுடைய தமிழ்மணம் ரேங்க் 28 க்கு வந்துடுச்சு<<<
பதிலளிநீக்கு28! சூப்பர்! :) அதோட அப்படியே ஒரு 1760 என்ற மிகச்சிறிய இலக்கத்தை கூட்டிகொண்டால் அதுதான் எனது தமிழ்'மானம்' போகும் ரேங்க்! ;)