திங்கள், 17 டிசம்பர், 2012

பெட்டி போனாப் போகட்டே. தாக்கோல் இவட உண்டல்லோ!


கேரளாவில் ஒரு பிரபலமான கதை. அங்கு ஒரு நம்பூதிரி, ஒரு பிரயாணம் மேற்கொண்டார். அவருடைய உடமைகளெல்லாவற்றையும் ஒரு பெட்டியில் போட்டு நல்ல பூட்டினால் பூட்டி சாவியை பூணூலில் முடிந்து கொண்டார். போகும் வழியில் அவர் கொஞ்சம் கண்ணசந்து விட்டார். விழித்தபின் பார்த்தால் பெட்டியைக் காணவில்லை.

சக பிரயாணிகளிடம் விசாரித்தார். ஒருவரும் பெட்டியைப் பார்க்கவில்லை என்றனர். சக பிரயாணிகள் அனுதாபத்துடன் இவருக்கு ஆறுதல் கூறினர். அப்போது நம்பூதிரி சொன்னார்.

"பெட்டி போனால் போகட்டே. தாக்கோல் இவட உண்டல்லோ, ஆ கள்ளன் பெட்டியைத் திறக்கான் கூடி இவடதன்னே வரணும். ஆ சமயம் ஞான் அவனைப் பிடிக்கான்"

அப்படீன்னாராம்.

அர்த்தம் மனசிலாயோ?

"அதாவது பெட்டி போனா என்ன, சாவி என்கிட்டதான இருக்கு, அந்த திருடன் பெட்டியைத் திறக்க என்கிட்டதானே வந்தாகணும், அப்ப அவனை நான் பிடிப்பேன்."

கிரெடிட் கார்டு, ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்களும் இப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கார்டுகளின் நெம்பரை வைத்துக்கொண்டு யார் என்ன செய்து விட முடியும்? கார்டு என்னிடம்தானே இருக்கிறது என்று எண்ணிக்கொண்டு இருப்பார்கள்.

இந்தக் கார்டுகளின் நெம்பர் மட்டும் இருந்தால் போதும், தங்கள் கணக்கிலுள்ள எல்லாப் பணத்தையும் சுருட்டிவிடலாம் என்று அவர்கள் அறிய மாட்டார்கள்.

கிரெடிட் கார்டு, ஏடிஎம் கார்டு, மற்றும் இன்டர்நெட் அக்கவுன்ட் வைத்திருக்கும் அன்பர்களே, கொஞ்சம் ஏமாந்தீர்களானால், நீங்கள் விழித்திருக்கும்போதே உங்கள் கண்ணாமுழியைப் பிடுங்கிக்கொண்டு போய்விடுவார்கள். ஜாக்கிரதை.

உங்கள் கார்டு நெம்பர், பாஸ்வேர்டு ஆகியவை எக்காரணம் கொண்டும் அடுத்தவர்களுக்குத் தெரியக்கூடாது. தெரிந்தால் அப்புறம் உங்கள் பணம் கோவிந்தாதான்.

16 கருத்துகள்:

 1. அப்படீங்களாண்ணா? போச்சாது போங்க; உங்க நெம்பரை எனக்கு மட்டுமு அனுப்பி உடுங்கோ!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தம்பி, அக்கவுன்ட்ல மினிமம் பேலன்ஸ்தான் இருக்கு, பரவாயில்லையா?

   நீக்கு
 2. உங்க ஐடியா சூப்பர்.அக்கவுன்ட்டை துடைச்சி வைச்சுட்டா எந்தக் கவலையும் இல்ல..

  பதிலளிநீக்கு
 3. நல்ல விழிப்புணர்வு கட்டுரை!நன்றி கந்தசாமி!

  பதிலளிநீக்கு
 4. ரசித்தேன்.... :)

  மடியில் கனம் இருப்பவர்கள் தான் வழியில் பயப்பட வேண்டும்! :)))


  பதிலளிநீக்கு
 5. பொருத்தமான கதையை சொல்லி, ATM/Credit Card வைத்திருப்போரை எச்சரித்திருக்கிறீர்கள். கூடியவரையில் அவைகளை அதிகம் உபயோகிக்காமல் இருப்பது தற்போதைய நிலையில் நல்லது.

  பதிலளிநீக்கு
 6. இந்த பயம் எப்போதும் உண்டு! அதனால்தான் ஆன்லைன் பாங்கிங் பக்கம் வருவதில்லை!!!

  பதிலளிநீக்கு
 7. எனக்கு இதுவரை எந்த அனுபவமும் ஏற்பட்டதில்லை... ஏடிஎம் கார்டை நான் தேவைப்படும்போது மட்டுமே எடுத்துச்செல்கிறேன்... ஆன்லைன் பேங்கிங் வீட்டில் மட்டுமே உபயோகிக்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் அப்படித்தான். சமீபத்தில் செய்தித்தாள்களில் ஒரு செய்தி ஆன்லைன் மோசடி பற்றி ஒரு செய்தி வந்தது. அதனால்தான் இந்தப் பதிவு. எல்லாம் நம் அஜாக்கிரதைதான் காரணம்.

   நீக்கு
 8. நான் நான்கைந்து வருடங்களாக ஆன்லைன் வங்கிக் கணக்கை இயக்கி வருகிறேன், நமக்கு வேண்டியவர்களுக்குப் பண பரிமாற்றம், மின்சார பில் கட்டுதல், இரயில் டிக்கட் விமான டிக்கெட் எடுத்தல் இவற்றில் எதிலுள்ள சவுகரியம் சும்மா சொல்லப்படாது. எக்சலேன்ட் தான். எங்கே பிரச்சினை வரும்? உங்க பயனர் கணக்கு [User Name] கடவுச் சொல் [Password] இது இரண்டையும் எக்காரணம் கொண்டும் மெயில் மூலமாகவோ, ஃ போன் மூலமாகவோ யார் கேட்டாலும் தெரிவிக்கக் கூடாது. வங்கி மேனேஜர் உட்பட யாரும் இதை உங்களிடம் கேட்க மாட்டார்கள், அதற்க்கு அவசியமும் இல்லை. அவ்வாறு தெரிவித்தால் உங்கள் பணம் காலி.

  ATM கார்டு எண்களை கண்டிப்பாக வெளியில் தெரிவிக்கக் கூடாது என்பதை சமீபத்தில் தான் தெரிந்து கொண்டேன். அது தெரிந்தால் மொத்தமும் காலி.

  பதிலளிநீக்கு
 9. நம்புதிரியின் பெட்டி எப்படி இருந்ததோ தெரியாது. நீங்கள் போட்டிருக்கும் பேட்டியின் படம் வேறு அழகு.

  நல்ல எச்சரிக்கை!

  பதிலளிநீக்கு