வியாழன், 27 டிசம்பர், 2012

வெளியூர் செக்குகள் பணமாகும் விதம்

இந்தப் பதிவு நைஜீரியாவிலிருந்து வரும் செக்குகளைப் பற்றியதல்ல. இந்திய நாட்டிற்குள் ஒரு ஊரிலிருந்து வேறொரு ஊருக்கு அனுப்பப்படும் செக்குகளைப் பற்றியது.

உங்கள் மாமனார் டில்லியிலிருந்து உங்களுக்கு தீபாவளிக்காக ஆயிரம் ரூபாய்க்கு ஒரு செக் அனுப்பியிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். நீங்களும் ஆனந்தப்பட்டு (ஆனந்தப்படாவிட்டால் உங்கள் மனைவி உங்களை பார்வையாலேயே எரித்து விடுவார்) அந்தப் பணத்தை எப்படியெல்லாம் செலவு செய்யலாம் என்ற கற்பனையில் மூழ்குவீர்கள்.

உங்களுக்கு அப்போது தெரியாதது,  உங்களை ஏழரை நாட்டுச் சனி பிடித்திருக்கிறதென்ற விஷயம். அந்த சங்கதி பிறகுதான் தெரியும்.

நீங்கள் ஆனந்தமாக அடுத்த நாள் அந்தச் செக்கை உங்கள் அக்கவுன்டில் போட்டுவிடுவீர்கள்.

பேங்கில் இந்த மாதிரி வெளியூர் செக்குகளை எல்லாம் தனியாக எடுத்து வைத்து விடுவார்கள். அந்தந்த வாரக்கடைசியில் அந்த செக்குகளை எல்லாம் சேர்த்து, உங்கள் செக் எந்த ஊரிலிருந்து வந்திருக்கிறதோ அந்த ஊரிலிருக்கும் அவர்களுடைய பேங்கிற்கு அனுப்புவார்கள். நமது தபால் இலாக்காவின் சாமர்த்தியம் எல்லோருக்கும் தெரியும். உங்கள் அதிர்ஷ்டம் சரியாக இருந்தால் உங்கள் செக் சரியாகப் போய்ச் சேர்ந்து விடும்.

அந்த ஊரில் இருக்கும் பேங்க் அலுவலர் இந்த மாதிரி செக்குகளைப் பிரித்து அந்தந்த பேங்குகளுக்கு அனுப்புவார். அதை வாங்கும் பேங்க் அதை பாஸ் செய்து அந்த விபரத்தை இந்த பேங்குக்கு அனுப்பும். அங்கிருந்து அந்த செக் பாஸான விபரம் நீங்கள் செக் போட்ட பேங்க்குக்கு தபால் மூலமாக வரும்.

இதற்கு சுமாராக 15 முதல் 45 நாட்கள் வரை ஆகலாம். இதுதான் பழைய நடைமுறை. அதுவரை நீங்கள் தினமும் பேங்கிற்குப் போய் செக் பாஸாகி வந்து விட்டதா என்று விசாரித்துக் கொண்டிருக்க வேண்டும். இப்போது இந்த விபரங்கள் இன்டர்நெட் மூலமாக வரலாம். அப்படி வந்தால் செக் பணம் உங்கள் கைக்கு வந்து சேரும் நாட்கள் குறையும்.

அதற்குப் பிறகு அந்தச் செக்கின் பணம் உங்கள் கணக்கில் போடப்படும். ஆயிரம் ரூபாய்க்கு ஏறக்குறைய நூறு ரூபாயை கமிஷன் என்று பிடித்துக் கொள்வார்கள்.

உங்கள் மாமனார் ஊரில் உங்கள் பேங்கின் கிளை இருந்தால் நீங்கள் தப்பித்தீர்கள். ஏதாவது சிறிய ஊராக இருந்து, உங்கள் பேங்க்கின் கிளை அந்த ஊரில் இல்லையென்றால், நீங்கள் பேசாமல் அந்த செக்கை கிழித்துப் போட்டுவிடலாம். ஏனென்றால் அது ஒழுங்காக பாஸ் ஆகி வராது. செக் என்ன ஆயிற்று என்றும் தெரியாது. முக்கால்வாசி சமயங்களில் அந்த செக் அபேஸ் ஆகி, உங்கள் மாமனார் பணத்தை ஊர் பேர் தெரியாத உங்கள் சகலை சாப்பிட்டுக்கொண்டிருப்பார்.

இப்போது பல பேங்குகளில் மல்டிசிட்டி செக்குகளை அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள். அந்த செக்குகள் அந்தந்த ஊரிலேயே பாஸ் ஆகிவிடும். தவிர இப்போது புதிதாக வரப்போகும் சிடிஎஸ் 2010 செக்குகள் நடைமுறைக்கு வந்து விட்டால் இந்தச் சிக்கல்கள் ஏறக்குறைய மறைந்து போகும் என்று நம்பலாம். அந்த நன்னாளை ஆவலுடன் எதிர்பார்ப்போம்.

18 கருத்துகள்:

 1. உண்மை சார்,நிறைய மாமனார்கள் இப்படித்தான் செய்வார்கள் .ஏன் பணம் சீக்கிரம் கிடைக்க விரும்பினால் மனியார்டரோ நேரிலோ கொடுக்க லாமே

  பதிலளிநீக்கு
 2. பதிவிலிருந்து விலகி ஒரு கேள்வி... ஏன் மாமனாருக்கும் மருமகன்களுக்கும் ஒத்துக் கொள்வதேயில்லை?!! அதுபோலவே நாத்தனார் Vs அண்ணி..!

  நீங்கள் சொல்லியுள்ளபடி 15 நாட்கள் எல்லாம் ஆகாது, இப்போதே கூட 3,4 நாட்களில் பாஸ் ஆகி விடும் என்கிறார் பேங்க் நண்பர் ஒருவர்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பதிவிலிருந்து விலகி ஒரு கேள்வி... ஏன் மாமனாருக்கும் மருமகன்களுக்கும் ஒத்துக் கொள்வதேயில்லை?!! அதுபோலவே நாத்தனார் Vs அண்ணி..!//

   நல்ல கேள்வி. ஆனால் கொஞ்சம் யோசிக்கவேண்டிய கேள்வி. ஒரு தனிப் பதிவாப் போட்டுடட்டுமா? எனக்கும் ஒரு பதிவு தேத்தீட்டாப்ல ஆகும்?

   நீக்கு
  2. //நீங்கள் சொல்லியுள்ளபடி 15 நாட்கள் எல்லாம் ஆகாது, இப்போதே கூட 3,4 நாட்களில் பாஸ் ஆகி விடும் என்கிறார் பேங்க் நண்பர் ஒருவர்!//

   சில சமயம் லோகல் செக்குக்கே அவ்வளவு நாள் ஆகிவிடுகிறது. இருந்தாலும் பேங்குக்காரரே சொன்னா நம்பித்தான் ஆகணும், இல்லீங்களா? நான் நம்ம்ம்ம்ப்ப்ப்ப்புகிறேன்.

   நீக்கு
 3. உண்மைதான்.. நீங்கள் சொல்வதில் பெருமளவு உண்மை. தற்கால தொழில்நுட்பத்தில் உடனுக்குடன் பணபரிமாற்றம் செய்துகொள்ளலாம். செக் என்றாலே அதில் பல பிரச்னைகள் வரத்தான் செய்கிறது. பகிர்வுக்கு நன்றி..!

  பதிலளிநீக்கு
 4. இப்போது வெளியூர் காசோலைகள் பற்றி கவலைப்படத்தேவையில்லை. CTS 10(Cheque Truncation System) அறிமுகமான பிறகு (ஏற்கனவே டில்லியிலும்(2008) சென்னையிலும்(2011) வங்கிகளில் நடைமுறையில் உள்ளது) காசோலைகள் வெளியூருக்கு அனுப்பப்படாது. அவைகளுடைய படிமங்கள்(Images) படியெடுக்கப்பட்டு அந்தந்த வங்கிகளுக்கு மின்னணு மூலம் மாற்றப்பட்டு அன்றே மாற்றப்பட்டு மறுநாளே நமது கணக்கில் நாம் கொடுத்த காசோலைக்கான பணம் வரவு வைக்கப்படும் (காசோலை கொடுத்தவர் கணக்கில் பணம் இருக்குமானால்). நாம் கொடுத்த காசோலைகள் நமது கணக்கு உள்ள கிளைகளிலேயே இருக்கும். இதனால் காசோலைகள் தொலைந்துபோகவோ வேறொருவர் அதை தங்கள் கணக்கில் போட்டுக்கொள்ளவோ வாய்ப்பு அறவே இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்ல ஊர்களிலும் எல்லா பேங்குகளிலும் இந்த செக்குகள் அறிமுகமாகி, நடைமுறைக்கு வந்து விட்டால் எல்லோருக்கும் மிகவும் சௌகரியமாக இருக்கும்.

   நீக்கு
 5. சிடிஎஸ் 2010 செக்குகள் நடைமுறைக்கு வந்து பல நாட்கள் ஆகி விட்டன. அதைக் கட்டாயமாக‌ பயன்படுத்துவதற்கு கால அவகாசம் ஏப்ரல் 1, 2013 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சில பேங்குகளில்தான் செக்குகள் மட்டும் நடைமுறைக்கு வந்திருக்கிறது. அந்த பேங்குகளில் கூட இன்னும் CTS கிளியரிங்குக்கான நடைமுறை அமலாகவில்லை.

   நீக்கு
 6. பலருக்கும் தேவையான தகவல்! நன்றி!

  பதிலளிநீக்கு
 7. SBI மற்றும் பல தேசிய மயமாக்கப் பட்ட வங்கிகள் தற்போது -Core Banking முறையில் தங்களது கிளைகளை கணினி மூலமாக இணைத்துள்ளன. நீங்கள் எந்த வங்கிக்கும் நேரடியாகவே அவர்களது கணக்கிற்கு பணத்தை டெபாசிட் செய்ய முடியும், அதை அவர்கள் உடனடியாகப் பெற்றுக் கொள்ளலாம். ஆன்லைன் கணக்கு இருந்தால் நீங்கள் வங்கிக்கே செல்ல வேண்டியதில்லை வீட்டிலிருந்தபடியே வேறெந்த வங்கிக் கணக்கிற்கும் பணத்தை நேரடியாகப் போட முடியும். ஆன்லைனில் பணத்தை களவாட முடியுமா என்றால், எலி தானாக பொறியில் போய் தலையை விடுவது போல, நீங்களாகவே கையையும் காலையும் வைத்துக் கொண்டு சும்மா இராமல் எங்கேயாவது போய்த் தொலைத்தால் தான் உண்டு. பாஸ்வேர்டை பத்திரமாக வைத்திருந்தாலே போதும், எந்த கொம்பனும் எதுவும் செய்துவிட முடியாது. மேலும், ஒரு நபருக்கு பணம் அனுப்புவதர்க்கோ, அல்லது புதிதாக அவரை உங்களிடம் இருந்து பணம் பெறலாம் என நியமிக்க வேண்டுமானாலோ முதலில் தகவல் உங்கள் மொபைலுக்கு வரும். ஆன்லைன் வங்கிக் கணக்கு ரொம்ப சே ஃ ப் .

  பதிலளிநீக்கு
 8. வங்கி நடைமுறைகளை விளக்கும் சிறப்பான பதிவிற்கு நன்றி!

  பதிலளிநீக்கு

 9. பலரும் வெளியூர் செக்குகளை விரும்புவதில்லை. டிடி அல்லது மணி ஆர்டர் என்றால் அனுப்புபவர் கமிஷன் தொகை செலுத்த வேண்டும். செக்கானால் பெருபவர் கமிஷன் பணம் அழவேண்டும்.ஊர் பேர் தெரியாத சகலைகள்....? ஹூம்...!

  பதிலளிநீக்கு
 10. Atta pathivare.Naalu perai kettuttu pathivu podamattingala? Ippo konsam paravaillai. Neega solluvathu pazhaya nadaimurai. perumpalana vangigal core Bank aagividathu. Clearing days kurainthvittathu.

  பதிலளிநீக்கு
 11. //உங்கள் மாமனார் ஊரில் உங்கள் பேங்கின் கிளை இருந்தால் நீங்கள் தப்பித்தீர்கள். ஏதாவது சிறிய ஊராக இருந்து, உங்கள் பேங்க்கின் கிளை அந்த ஊரில் இல்லையென்றால், நீங்கள் பேசாமல் அந்த செக்கை கிழித்துப் போட்டுவிடலாம். ஏனென்றால் அது ஒழுங்காக பாஸ் ஆகி வராது. செக் என்ன ஆயிற்று என்றும் தெரியாது. முக்கால்வாசி சமயங்களில் அந்த செக் அபேஸ் ஆகி, உங்கள் மாமனார் பணத்தை ஊர் பேர் தெரியாத உங்கள் சகலை சாப்பிட்டுக்கொண்டிருப்பார்.//

  சிரித்தேன். நீங்கள் சொல்வதெல்லாம் கம்ப்யூட்டர் நெட் வொர்க் வராததற்கு முன்பு ந்டந்த பழம் கதைகள் சார். இப்போவெல்லாம் எவ்வளவோ ON LINE வசதிகள் வந்து விட்டன. சுலபமாக உடனுக்குடன் CREDIT ஆகிறது. CROSSED CHEQUE என்றால் யாராலும் அவ்வளவு சுலபமாக அபேஸ் செய்து சாப்பிட்டு விடலாம் முடியவே முடியாது. சாப்பிட்டாலும் யார் என்று பிடித்து விடலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்தந்த பேங்கின் செக்குகள் நீங்கள் சொன்ன மாதிரி உடனடியாக கிரெடிட் ஆகின்றன. ஆனால் வேறு பேங்க் செக்கென்றால் இந்த நடைமுறைதான் இன்றும் கடைப் பிடிக்கப்படுகிறது.

   நீக்கு