செவ்வாய், 4 டிசம்பர், 2012

விடை பெறுகிறேன்

இந்தப் பதிவுலகிற்கு நான் வந்ததன் நோக்கம் இதிலுள்ள நுட்பங்களை தெரிந்து கொள்ளத்தான்.

அந்த நுட்பங்களையும் இதிலுள்ள அரசியலையும் நன்கு கற்றுக்கொண்டேன்.

என் பதிவுகளைத்  தொடர்ந்து வந்து எனக்கு ஆதரவு கொடுத்தவர்களுக்கும், பின்னூட்டமிட்டு என்னை உற்சாகப் படுத்தியவர்களுக்கும், என் பதிவுகளை வாசித்தவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு சலிப்பு வந்து விட்டது. என்னால் இனி தொடர முடியாது. விடை பெற்றுக்கொள்கிறேன்.

8 கருத்துகள்:

 1. ஐயா,தாங்கள் பதிவெழுத தொடர்ந்தமைக்கு மிக்க நன்றி.பதிவுலகத்திற்கு மீண்டும் வரவேற்கிறோம்.ஐயா 13/12/2012கமாண்ட் பாக்சை கானோம்.அதனால் இப்பதிவில் கமாண்ட் போடுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொஞ்சம் இடைவெளியில் கமென்ட் பாக்ஸை யாரோ லவட்டிக்கிட்டு போய்ட்டாங்க. அப்புறம் போலீசுக்குப் போயி கம்ப்ளெய்ன்ட் கொடுத்து கண்டு பிடிச்சேன். இப்ப இருக்குது பாருங்க.

   நீக்கு
 2. சார் நீங்க போறேன்னு சொன்னது பிடிக்காததாலே ஒரு மைனஸ் ஒட்டு போட்டுவிட்டேன். என்ன இருந்தாலும் நீங்க இப்படிச் செய்திருக்கக் கூடாது. Wordpress போவதாக இருந்தால் புதிய பக்கத்தின் முகவரி கொடுத்திருக்கலாம் அல்லவா? உங்கள் வாசகர்கள் துடித்துப் பொய் விட்டார்கள். என் வலைப்பூவில் ஒரு குழந்தை வந்து அழுதுகொண்டு இருந்தது. இப்படி தவிக்க விடலாமா? எப்படியோ, இன்றைக்கு தங்கள் பதிவைப் பார்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. மற்ற வாசகர்களைப் போலவே எனக்கும் தங்களது பதிவுலக சந்நியாசத்தை தாங்கும் சக்தி இல்லை. தொடர்ந்து எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்.

  உங்களது விடை பெறுகிறேன் பதிவுக்கு பின்னூட்டம் இட முயன்றேன் - அப்போதே - முடியவில்லை.
  நீங்கள் திரும்பி வலைபதிவு எழுத ஆரம்பித்தத்தற்கு பாராட்டுக்கள்.
  'போன மச்சான்'பதிவிலும் பின்னூட்டம் போட முடியவில்லை. சரி பார்க்கவும்.

  வேர்ட்ப்ரஸ் - இல் துட்டு கேட்கிறார்கள் என்று எழுதி இருக்கிறீர்களே! ரொம்பவும் வியப்பாக இருக்கிறது. நான் ஒரு வருடமாக எழுதி வருகிறேன். இதுவரை ஒரு பைசாவும் கொடுத்ததில்லை.

  பல லட்சக்கணக்கானவர்கள் எழுதுகிறார்கள். மறுபடி முயன்று பார்க்கவும்.

  நானும் ப்ளாக்ஸ்பாட்டில் ஒரு வலைபூ ஆரம்பித்தேன். எனக்கு வேர்ட்ப்ரஸ் பழகி விட்டதால் இதில் அத்தனை கவனம் செலுத்தவில்லை.

  நீங்கள் சொவது போல தெரிந்த சாத்தான் தெரியாத தேவதையை விட சிறந்ததுதான்.

  எதைப் பற்றியும் கவலைப் படாமல் எழுதவும். அறிவுரை என்று நினைக்க வேண்டாம்.
  உங்கள் எழுத்துக்களின் ரசிகை என்ற முறையில் சொல்லுகிறேன்.

  வணக்கம்,
  ரஞ்சனி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் இரண்டு வருடமாக ஒரு வேர்டு பிரஸ் பதிவு வைத்திருந்தேன். நன்றாக இருந்தது. இப்போது புதிதாக ஆரம்பித்ததில் முன்பு இருந்த பல வசதிகள் இல்லை. அந்த வசதி வேண்டுமென்று ஆப்ஷன் கோடுத்தால் அப்கிரேடு செய்யுங்கள் என்று பதில் வருகிறது. அப்கிரேடுக்கு பணம் கட்டச் சொல்கிறார்கள்.

   இதுதான் இன்றுள்ள நிலை.

   நீக்கு

 4. எனக்கு மட்டும்தான் கமெண்ட் பெட்டி இருக்கவில்லையோ என்று நினைத்தேன். உங்கள் வேர்ட் பிரஸ் ப்லாகுக்கு கமெண்ட் போட முயன்று தோற்றேன். மீண்டும் வரவேற்கிறேன்.

  பதிலளிநீக்கு
 5. வயது ஆனவுடன் வரும் குழப்பத்தில் முக்கியமானது தற்காலத்தில் உள்ள நிகழ்வுகளோடு முரண்பட்டு நிற்பது. உங்கள் வயதில் பாதி இருக்கும் என்னையே என் மனைவி காலத்திற்கும் உங்களுக்கும் சம்மந்தம் இல்லை என்று நக்கலடிக்கும் போது உங்களின் அந்த விடைபெறுகின்றேன் பதிவை பார்த்த போதே மனதில் தோன்றியது.

  தோன்றிய எண்ணங்களை தோன்றும் போது எழுதி வைத்து விட்டு மறந்து விடுங்க. பேரன் பேத்திகள் படித்துக் கொள்ள.

  ஜோதிஜி

  பதிலளிநீக்கு