வியாழன், 20 டிசம்பர், 2012

பதிவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

போனால் வராது. இன்றே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பதிவர்களே, இப்பேர்ப்பட்ட வாய்ப்பு இனி உங்கள் ஆயுட்காலத்தில் வரப்போவதில்லை. இன்று அந்த வாய்ப்பை பயன்படுத்தினால் உண்டு. இல்லையென்றால் உங்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படும்.

பதிவெழுதும் ஒவ்வொருவருக்கும் தெரியும், பதிவெழுத கருப்பொருள் கிடைப்பது மிகவும் கடினம். நான் உங்களுக்கு ஒன்றல்ல, இரண்டு பதிவுகளுக்கான தலைப்புகளைக் கொடுக்கிறேன். உபயோகித்துக்கொள்வதும் கொள்ளாததும் உங்கள் விருப்பம். பின்னால் வருத்தப்பட்டு பயனில்லை.

1. உலகம் 21 ம் தேதி அழியாது. இதுக்கு நான் கேரண்டி.

           இது இன்று போடவேண்டிய பதிவு.

2. அப்பவே நான் சொன்னேன், பார்த்தீர்களா.

          இது 22 ம் தேதி போடவேண்டிய பதிவு.

சிலர் கேட்கக்கூடும்? அப்படி 21 ம் தேதி உலகம் அழிந்து போனால் என் கேரண்டி என்ன ஆகிறது? அட, கூமுட்டையே, அப்படி 21 ம் தேதி உலகம் அழிஞ்சு போச்சுன்னா உன்னைக் கேக்கறதுக்கு யாரு இருப்பா? நீயே இருக்க மாட்டியே, அப்புறம் என்னத்துக்கு பினாத்தறே?

பதிவுலகத்திற்கு உலகம் அழியறதுக்கு முன்னால ஏதோ என்னால் ஆன சேவையைச் செய்துவிட்டேன். அப்புறம் மாயன் விட்ட வழி.

16 கருத்துகள்:

 1. சுவாரஸ்யமான பதிவு
  படித்து ரசித்தேன்
  22ல் பதிவில் மீண்டும் சந்திப்போம்

  பதிலளிநீக்கு
 2. பதிவர்களுக்கு கொண்டாட்டம்தான் ஏராளமான பதிவுகளை இன்று எதிர் பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு
 3. ஹிஹி..... இந்தப் பதிவுக்கு எனக்குக் கூட கொஞ்சம் ராயல்டி கிடைக்கும்னு நம்பறேன்! :))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கு இல்லாத ராயல்டியா? எனக்கு வர்ரத அப்படியே எடுத்துக்குங்க.

   நீக்கு
 4. பதிவிட உங்களுக்கு ஒரு தலைப்பு இன்று கிடைத்துவிட்டது என நினைக்கிறேன். நடத்துங்கள்!

  பதிலளிநீக்கு
 5. ஹா ஹா

  அருமை அய்யா!!

  ஹேப்பி மாயன்ஸ் டே!!!

  [சாலமன் பாப்பையா பாணியின் படிக்கோணும்]

  நாளன்னைக்கு [ ஹி ஹி இருந்தால்] சந்திப்போமா!!

  நன்றி!!!

  பதிலளிநீக்கு
 6. தமிழ் திரட்டிகளில் பதிவர்கள் மாயன் நாள்காட்டியை தான் பிரிகட்டி அடிக்கிறார்கள் .மறுபடியுமா?

  பதிலளிநீக்கு
 7. பதிவுலகத்திற்கு உலகம் அழியறதுக்கு முன்னால ஏதோ என்னால் ஆன சேவையைச் செய்துவிட்டேன். //

  சேவைக்குப் பாராட்டுக்கள் ஐயா.. !!??

  பதிலளிநீக்கு

 8. 22- ஆம் தேதியன்று என் பதிவைப் படியுங்கள்.

  பதிலளிநீக்கு
 9. ஐயா நாங்க நடுங்கி தவிச்சிட்டு இருக்கோம். உங்களுக்கு விளையாட்டா போச்சு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. "காற்றிலேறி அவ்விண்ணையும் சாடுவோம்" அப்படீன்னது எல்லாம் சும்மாதானா?

   நீக்கு
 10. ஆஹா, நாம இன்னும் உசிரோடுதான் இருக்கோம்.................

  பதிலளிநீக்கு
 11. நாம இன்னும் இருக்கோம் அத சொல்ல தானுங்க வந்தேன்.

  பதிலளிநீக்கு