வெள்ளி, 14 டிசம்பர், 2012

உலகம் அழியுமா?


மனிதன் விஞ்ஞானத்தில் எவ்வளவோ உயர்ந்திருக்கிறான். பல சாதனைகள்புரிந்திருக்கிறான். மரணத்தை வெல்ல முடியவில்லையே தவிர மனிதனின் பல நோய்களுக்கு தீர்வு கண்டு மனிதனின் ஆயுளை அதிகரித்திருக்கிறான்.

அப்படிப்பட்ட காலத்தில் யாரோ சிலர் ஒரு அபத்தமான கொள்கையின்படி இந்த உலகம் 21-12-12 அன்று அழியப்போகிறது என்று சொன்னால் அதையும் நம்புவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்பதுதான் அதிசயம்.

பகவத் கீதையில் பகவான் சொல்லியிருக்கிறாராம். உலகத்தில் தர்மம் அழிந்து அதர்மம் ஓங்கும்பொழுது நான் அவதரித்து தர்மத்தைக் காப்பாற்றுவேன் என்று. மத நம்பிக்கையுள்ளவர்கள் இதை நம்புகிறார்கள். ஆனாலும் கீதையில் நான் இத்தனாம் தேதி வருகிறேன் என்று கிருஷ்ணர் சொல்லவில்லை.

ஆனால் இந்த மாயன் கேலண்டர்காரர்கள் தேதியைக் குறிப்பிட்டு உலக அழிவை சொல்கிறார்கள். இது ஒரு அப்பட்டமான புளுகு. இதை நம்புகிறவர்கள் தங்கள் அறிவை அடகு வைத்துவிட்டார்கள் என்று பொருள்.

17 கருத்துகள்:

 1. இதுபோல அண்டப்புளுகுகள் ஏற்கனவே பரப்பட்டன. 1960ல் உலகம் அழியும் என்றார்கள். பின் 9 கிரகங்கங்களும் ஒன்றாக வருவதால் உலகம் அழியப்போகிறது என்றார்கள்.எனவே அதுபோல இதுவும் ஒன்று என்று கவனிக்காமல் விடுவதுதான் சரி எனத்தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 2. உங்களின் இந்த பதிவினைக் கண்டதும் நான் உங்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலையே இந்த கருத்துரைப் பெட்டியில்
  போட்டுள்ளேன்!

  // வணக்கம்! தொடர்ந்து உங்கள் பதிவுகளைப் ப்ளாக்கரில் படித்து வருபவன் நான்.. பதிவுலகிலிருந்து நீங்கள் விடைபெற்றுக் கொள்வதாகச் சொன்னபோது வருத்தமாக இருந்தது. இதே நிலைமை எனக்கும் வந்தது. எனது பதிவையும் சிலர் காப்பி அடித்து அவர்கள் பெயரைப் போட்டுக் கொண்டபோது வெறுத்துப் போய்விட்டேன். பதிவுலக நண்பர்களின் ஊற்சாகத்திற்குப் பின் எழுதி வருகிறேன்.
  “அய்யா பழனி.கந்தசாமி மீண்டும் எழுத வேண்டும்.’’ என்ற தலைப்பில் நான் ஒரு பதிவு போடலாம் என்று இருந்தேன். நல்லவேளை நீங்களே வந்துவிட்டீர்கள். இருந்தாலும் உங்கள் பதிவில் கருத்துரைப் பெட்டி இல்லாதபடியினால் கருத்துரை சொல்ல முடியவில்லை. யாரோ ஒரு போக்கிரி செய்த செயலுக்காக தாங்கள் கருத்துரைப் பெட்டி வைக்கவில்லை என்று நினைக்கிறேன். கருத்துரைப் பெட்டி வையுங்கள். உங்கள் ஒப்புதலுக்குப் பிறகு கருத்துரைகளை வெளியிடுங்கள். நன்றி!
  அன்புடன் – தி.தமிழ் இளங்கோ தேதி: 13.12.2012 //


  பதிலளிநீக்கு
 3. அழிகிறது அழியாமல் இருக்காது, அழியாமல் இருப்பது அழியாது ... ! :)

  பதிலளிநீக்கு
 4. மக்கள் மதங்கள் மீது கொண்ட நம்பிக்கையை வலுவிழக்கச் செய்வதற்காக ஒரு சில தீய சக்திகள் செய்யும் போலி நாடகம் தான் இது....
  மீண்டும் பிரசவித்தமைக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. சரியா சொன்னிங்க ஐயா. இந்த புருடா சிக்கிரம் புஸ் ஆவது உறுதி.

  பதிலளிநீக்கு
 6. உலகம் அழியுமா?


  அழியாது என்று நம்புவோம் .. நம்பிக்கைதானே வாழ்க்கை !

  பதிலளிநீக்கு
 7. ச்சே! வடை போச்சே !!

  21ம் தேதி உலகம் அழியும்ங்கிறதை நம்பி ,

  20ம் தேதி 40 லட்சம் கடன் வாங்கலாம்னு

  இருந்தேனே .......அத்தனையும் போச்ச்.........

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு டீல் போட்டுக்கலாமுங்க. 20 ந் தேதி நான் உங்களுக்கு 40 லடசம் ரூபாய் கொடுத்துடறேன். 21 ம் தேதி உலகம் அழியலைன்னா, 22ம் தேதி எனக்கு 80 லட்சம் கொடுத்திடணும். சரீங்களா?

   நீக்கு
 8. சிந்தனைத்தெளிவுடன் எழுதிய சிறந்த பதிவு!!

  பதிலளிநீக்கு
 9. உலகம் அழியும்னு ரொம்ப நாளாவே சொல்லிகிட்டு இருக்காங்க! பீதியை கிளப்பி பீஸ்வாங்குபவர்கள்! அருமையான பகிர்வு!

  பதிலளிநீக்கு
 10. ஐயா!
  அழியப் போகிறதென்றால் என்ன செய்யமுடியும்? அதனால் மகிழ்ச்சியுடன் பதிவைப் படித்துக் கொண்டிருப்போம்.
  இன்று வேலைத் தலத்தில் 2013 நாட்குறிப்புத் தந்தார்கள்.வங்கியும் 2013 நாட்காட்டி அனுப்பியுள்ளது.
  பிரஞ்சு அரசு 2013 ல் , தொலைக்காட்சிவரியை 8% ஆல் அதிகரிக்கவுள்ளதாக இன்று அறிவித்தது.
  அதனால் நானும் 2013 ஐ எதிர் கொள்ள உள்ளேன்.

  பதிலளிநீக்கு
 11. பழைய ஜோக்தான்!! போன வாரம் நான் வாங்கிய மருந்து, ஊறுகாய் பாட்டில்களில் 2013, 2014 என்றெல்லாம் எக்ஸ்பயரி டேட் போட்டிருந்தார்கள்! எனவே உலகம் அழியாது!

  அப்படி அழிந்து போனால் 'நான் அப்போவே சொன்னேன் இல்லை' என்று அப்படிச் சொன்னவர்களால் பெருமை கூட அடித்துக் கொள்ள முடியாது என்பது வருத்தமாக இருக்கிறது!! :)))

  பதிலளிநீக்கு