புதன், 26 டிசம்பர், 2012

குருவும் சிஷ்யனும்.


நான் ஞானியல்ல. ஆதலால் ரூம் போட்டு யோசித்ததில் நினைவிற்கு வந்த ஒரு கதையை உங்களுடன் பகிர்கிறேன்.

ஒரு ஊரில் ஒரு குரு வசித்து வந்தார். அவருக்கு ஒரு சிஷ்யன். ஒரு நாள் அவர்கள் இருவரும் ஒரு வேலையாக வெளியூருக்குப் போனார்கள். அப்போது அவர்கள் சென்ற பாதையில் ஒரு ஆறு குறுக்கிட்டது. ஆறு நிறைய வெள்ளம் போய்க்கொண்டிருந்தது.

ஆற்றின் அக்கரையில் ஒரு பரிசல் இருந்தது. ஆனால் பரிசல்காரனைக் காணோம். அந்தப் பக்கத்தில் சில குடிசைகள் இருந்தன. பரிசல்காரன் அந்தக் குடிசைகளில் ஏதாவதொன்றில் இருக்கலாம் என்று குரு யூகித்தார்.

சிஷ்யனைப் பார்த்து "உனக்கு நீச்சல் தெரியுமல்லவா, நீ ஆற்றைக் கடந்து போய் அந்த பரிசல்காரனைக் கூட்டுக்கொண்டு வா" என்றார். சிஷ்யன் மளமளவென்று ஆற்று நீரின் மேல் நடந்து அக்கரைக்குப் போய் பரிசல்காரனைக் கூட்டிக்கொண்டு வந்தான்.

குருவிற்கு மகா ஆச்சரியம். நம் சிஷ்யன் எப்படி ஆற்றின் மேல் நடந்து சென்றான் என்று அதிசயமாகப் பார்த்துக்கொண்டிருந்தார். சிஷ்யன் திரும்பி வந்தவுடன் இதைப் பற்றிக் கேட்டார். சிஷ்யன் "குருவே, உங்கள் பெயரைச் சொல்லிக்கொண்டே ஆற்றின் மேல் நடந்து போனேன். அவ்வளவுதான்" என்றான்.

குருவிற்கோ மிக்க ஆச்சரியம். ஆஹா, நம் பெயருக்கு இவ்வளவு சக்தி இருக்கா, அப்படியானால் நானும் ஆற்றின் மேல் நடக்கலாமே என்று முடிவு செய்தார். அவர் பெயர் "தேவானந்தா". அந்தப் பெயரைச் சொல்லிக்கொண்டே ஆற்றின் மேல் நடக்கப் பார்த்தார். ஆற்றில் மூழ்கி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

இந்தக் கதையின் நீதி, எவ்வளவு சிந்தித்தும் எனக்குப் புலப்படவில்லை. இதைப் படிக்கும் அன்பர்களுக்குத் தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

21 கருத்துகள்:

 1. சிறிதும் சஞ்சலமற்ற முழுமையான நம்பிக்கை நிச்சயம்
  பலன் தரும்.நம்பிக்கையற்ற புத்திசாலித்தனம்
  என்றுமே வென்றதில்லை
  மனம் கவர்ந்த பதிவு.தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. நான் சிறிய வயதில் கேள்விப்பட்டது: நீதி இது தான்: குருவின் மீது முழு நம்பிக்கை வைத்து நடந்த சிஷ்யனை கடவுள் காப்பாற்றினார். அகம்பாவத்துடன் நடந்த குருவிற்கு இறைவன் அருளவில்லை.

  பதிலளிநீக்கு
 3. உங்களுக்கு அந்த கதையின் பொருள் தெரிந்திருக்கும், இருந்தாலும் எங்களுக்கு தேர்வு வைக்கிறீர்கள் என நினைக்கிறேன். பேராசிரியராக இருந்தவர் அல்லவா! தான் என்ற அகந்தையோடு தன் பெயரையே சொல்லிக்கொண்டு சென்றால் தோல்வி நிச்சயம் என்பதை இது சொல்கிறது என நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 4. சிஷ்யன் எப்படி ஆற்றின் மேல் நடந்து சென்றான் ..

  -- ஆங்காங்கே இருந்த பாறைகளின் மேல் கால்வைத்து நடந்து சென்றான் ..

  குரு தன் சிந்தித்துப்பாராத ஆணவத்தால் ஆற்றில் அடித்துச் செல்லப்படார் ..

  பதிலளிநீக்கு
 5. இதன் நீதி குரு நம்பிக்கையாக, பக்தியாக இருக்கலாம்...

  பதிலளிநீக்கு
 6. தான் என்ற தலைக்கனம் தண்ணீரில் தள்ளிவிடும்....

  பதிலளிநீக்கு
 7. கடைசி கதையை படியுங்கள்...

  http://www.athishaonline.com/2009/05/blog-post.html

  -பாலா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படிச்சேனுங்க. ஆக மொத்தம் இந்தக் கதை ரொம்ப பிரபலமாக இருக்கு.

   நீக்கு
 8. the disciple chanted his guru's name, which shows his devotion and belief on his guru. The Guru should have chanted his guru's name for the same effect. Instead he chanted his own's name, which means that he just felt more proud on himself[headweight]. That means, he is not humble like his disciple. Being humble is what helped the disciple. And being proud is what drowned the guru.

  பதிலளிநீக்கு
 9. NANBARUKKU VANNAKKAM,
  ENNAL TAMIZIL PATHIVU SEYYA IYYALAMAIKKU MANNIKKAVUM,IDHU RAMAYANA KATHAI,RAMAR KETTAR ANUMANIDAM UNNAL EPPADI THANEERIL KARKALAI MIDHAKKA VAITHU BALATHAI KATTAMUDIKIRADHU,ANUMAN SONNAR UNGAL NAMATHAI SOLLI AKALLAI THANNEERIL POTTEN MITHAKKIRDHU,RAMANUM MUYARCHI CHEYTHAR KAL THANNEERIL MOOZKIYADHU,ANUMAN MARUMOZHI KOORINAR,IYYANEE NAAN THANGAL MEL KONNDA BAKTHIYAL RAMA RAMA ENRU VENDI KARKALAI THANEERIL POTTEN MITHAKKIRADHU,RAMAR ANUMANIN BAKTHIYAI MECHINAR,IDHU KAVIYAM,
  NANBARE UNGAL ULNOKKAM ENNAKKU PURIYAVILLAI,AAANAL UNMAIYANA GURUBAKTHI MANALAIYUM KAIYRU AAKKUM , NANRI

  பதிலளிநீக்கு
 10. என்ன குருவே நம்ம கதையை பதிவாவே போட்டுட்டீங்க!! உங்க சிஷ்யனான என்னை இவ்வளவு உயரத்துல வச்சிட்டீங்களே!! நன்றி!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குருவிற்கு மிஞ்சன சிஷ்யனுக்குண்டான மரியாதையைக் கொடுக்கவேண்டாமா?

   நீக்கு
 11. சிஷ்யனுக்கு குருவின் மேல் அபார நம்பிக்கை! ஆனால் குருவுக்கோ தன் மீதே நம்பிக்கை இல்லை! நம்பிக்கை உள்ளவன் ஆற்றை கடப்பான்! இதுவே நீதி! அருமையான பகிர்வு!

  பதிலளிநீக்கு

 12. பல பதில்கள். நீங்கள் எதை எடுத்துக் கொள்ளப் போகிறீர்கள். ?

  பதிலளிநீக்கு
 13. இதில் சிஷ்யனின் ஆழமான நம்பிக்கையே பிரதானம். நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம். அந்தக் குருவிற்கு தன் மேலேயே நம்பிக்கை இல்லை. அவர் என்னத்தை சாதிக்கப் போகிறார்? சிலர் குருவே எல்லாவற்றையும் நிறைவேற்றுவார் என்று நம்புகிறார்கள். அது எவ்வளவு அபத்தம் என்பதைக் காட்டுவதற்கே இந்தக் கதை.

  பதிலளிநீக்கு