திங்கள், 4 பிப்ரவரி, 2013

மூக்கு - ஒரு வாதனை

வாதிப்பது = வாதனை. மூக்கு நம்மை எப்படி வாதிக்கும் அல்லது நாம் எப்படி அதை வாதிக்கிறோம் என்பது ஒரு பெரிய சமாசாரம்.

"மூக்குள்ள வரைக்கும் சளி இருக்கும்" என்பது பழமொழி. "சளிப் பிடித்த மூக்குடன் வெளியில் போகாதே" என்பது புதுமொழி.

தெனாலிராமன் காளியுடன் செய்த வேடிக்கை ஞாபகம் இருக்கும். மனிதர்களுக்குள்ள ஒரு மூக்கில் சளி பிடித்தாலே எங்களால் சமாளிக்க முடியவில்லையே. காளிக்கு இருக்கும் ஆயிரம் மூக்குகளிலும் சளி பிடித்தால் இரண்டு கைகள் எப்படிப் போதும் என்பதுதான் தெனாலிராமனின் கேள்வி.

சளியும் தும்மலும் சாகும் வரைக்கும் என்று சொல்வார்கள். சில மாவட்டங்களில் இதை "தடுமன்" என்றும் சொல்வார்கள். எப்படி சொன்னாலும் சளி பிடித்தால் மூக்கை அடிக்கடி சிந்த வேண்டி வரும். நீங்கள் வீட்டில் இருக்கும்போது இதை எப்படி செய்தாலும் யாருக்கும் ஆட்சேபணை இருக்காது. ஆனால் பொது இடங்களில் கொஞ்சம் நாகரிகத்துடன் இருக்கவேண்டும்.

நாலுபேர் மத்தியில் இருக்கும்போது மூக்கை சிந்த வேண்டி வந்தால், அவர்களை விட்டு விலகிச்சென்று, உங்கள் காரியத்தை முடித்துவிட்டு, பிறகு அவர்களிடம் வரவேண்டும். அங்கேயே இதைச்செய்வது காட்டுமிராண்டித்தனம். அதேபோல் உணவு விடுதியில் சாப்பிடும்போதும் இதே முறைதான்.

சளி பிடித்தால் கூடவே தும்மலும் வரும். தும்மல் வந்தால், அந்த இடத்தை விட்டு விலகி, தும்மிவிட்டு, பிறகு அங்கு வருவதுதான் நாகரிகம். முடியாத பட்சத்தில் முகத்தை ஒரு துண்டு அல்லது கர்சீப்பால் நன்கு மூடிக்கொண்டு தும்மலாம். அப்படி இல்லாமல் எல்லோர் மீதும் ஸ்ப்ரே செய்வது நம் வழக்கம். உங்களுக்கு எது சௌகரியமோ அப்படி செய்து கொள்ளவும்.

மூக்குக்கும் காதுக்கும் ஒரு ட்யூப் கனெக்ஷன் இருக்கிறது. இது எவ்வளவு பேருக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை. மூக்கை மிகவும் பலமாக சிந்தினால் காது ஜவ்வு கிழிந்து போய்விடும் அபாயம் உள்ளது. ஆகவே ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

பொதுவாக ஒரு டிப்ஸ். சளி பிடித்தால் பேசாமல் வீட்டில் இருந்துகொள்வது உத்தமம்.

14 கருத்துகள்:

  1. பணிக்கு செல்பவர்கள் வீட்டில் இருந்தால் என்ன பயன் அதனால் சுகாதாரம் போற்றினாலே அடுத்தவருக்கு தொட்ட்று ஏற்படாது

    பதிலளிநீக்கு
  2. ரயில்வே ஸ்டேஷன் படிக்கட்டு சுவர்களில் தப்பித் தவறி கூட கைவைக்கக் கூடாது. வைத்தால் அவ்வளவுதான்.எல்லாம் சளியின் மகிமை சுவர் இருப்பதே அதற்குத்தான் என்று நினைத்து விடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  3. தும்மும்போது எத்தனையோ கிலோமீட்டர் வேகத்தில் காற்று வெளியேறுகிறதாம். என் நண்பர் ஒருவர் தும்மல் வந்ததும் அவசரத்துக்கு 'சட்'டென்று தன் பனியனுக்குள் தும்மி விடுவார்!

    இருமுவதும் இதே வகையில் வந்து விடுகிறது. எதிராளி முகத்திலேயே இருமுவோர் எத்தனை பேர்!!

    பதிலளிநீக்கு
  4. //மூக்குக்கும் காதுக்கும் ஒரு ட்யூப் கனெக்ஷன் இருக்கிறது.//
    அதனால்தான் காது மூக்கு தொண்டை ஆகிய மூன்றுக்கும் ஒருவரே சிறப்பு மருத்துவராக இருக்கிறார். மூக்கு சில வியாதிகளின் அறிகுறிகளைக் கூட
    காட்ட உதவும் என்பதைப் பற்றி எனது பதிவில் எழுதியுள்ளேன்.
    பார்க்கவும் http://puthur-vns.blogspot.com/2011/11/blog-post_17.html

    பதிலளிநீக்கு
  5. தடுமனை நாம் தான் நாகரீகமாக தடுக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
  6. தும்முபவர்களை வாழ்த்துவார்கள்.. யாரோ வேண்டியவர்கள்..நினைக்கிறார்கள். என்று எண்ணுவார்கள்..

    ஒரு தும்மல் போட்டால் நூறு ஆயுசு என்பார்கள் .. இருதும்மலானால் இருநூறு என்பார்கள்..

    பதிலளிநீக்கு
  7. https://naturalfoodworld.wordpress.com/2013/02/04/running-nose/#comment-2970

    ஜலதோசம், மூக்கடைப்பு எந்தவிதமான பக்க விளைவுகளும் மாத்திரைகளும் இல்லாமல் உடனடி நிவாரணம்.

    tதங்கள் பதிவைப்படித்தவுடன் என்க்குக்கிடைத்த அடுத்தபதிவு இது ஐயா..
    பகிர்ந்துகொள்ளத் தூண்டியது ...

    பதிலளிநீக்கு
  8. உண்மைதான்! போனவாரம் பிடித்த சளி இன்னும் முழுதாய் என்னை விடவில்லை! அருமையான பதிவு! நன்றி!

    பதிலளிநீக்கு

  9. மூக்கு மட்டுமா உடலின் எல்லா உறுப்புகளும் வாதனைதான். பெங்களூரில் 30 லிருந்து 40 சதவீதம் பேர். மூக்கு வாதகையால் பீடிக்கப் பட்டவர்களாம் காரணம் அலர்ஜி , ஆஸ்த்துமா. அதது வரும்போது அந்தந்த வாதனைகள் அதிகமாய்த் தெரியும்.

    பதிலளிநீக்கு
  10. கடைசியில் சொன்னீங்களே - வீட்டில் இருந்து விடுவது உத்தமம்னு.... ரெண்டு நாள் லீவு போட்டுட வேண்டியது தான்! :))))

    பதிலளிநீக்கு
  11. மூக்கு என்றதும் உங்கள் போட்டோவில் உங்கள் மீசை ஞாபகம் வந்தது. மீசை வகைகள், நீங்கள் மீசை வைத்த கதை, மீசைக்கு செலவிடும் நேரம் – இவைகள் பற்றி விரிவாக, வழக்கம் போல உங்கள் பாணியில் நகைச்சுவையாக ஒரு பதிவு போடவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல ஐடியாவாத்தான் தோணுது. ஒரு பதிவு போட்டுட வேண்டியதுதான்.

      நீக்கு