சனி, 30 மார்ச், 2013

12. தேவலோகத்திற்கு சுற்றுலா






இந்தியாவில் தனிமனித வாழ்க்கை சுபிட்சமாக மாறத்தொடங்கியது. எங்கும் எதிலும் முன்னேற்றம் தென்பட்டன. அமெரிக்கா, இந்தியாவைப் பார்த்து பயப்பட ஆரம்பித்தது. அனைத்து வெளிநாடுகளும் இந்தியாவுடன் சுமுக உறவை நீட்டித்தன. இந்தியாவின் அனைத்து எல்லைகளிலும் வெளிநாட்டிலிருந்து யாரும் ஊடுறுவ முடியாதபடி வேலிகள் அமைக்கப்பட்டன.

பாகிஸ்தான் தன் உளவு வேலைகளையும் சதித்திட்டங்களையும் நிறுத்திக்கொண்டு விட்டது. காஷ்மீரில் அதிக அளவில் டூரிஸ்ட்டுகள் வர ஆரம்பித்தார்கள். இந்துக்களும் முஸ்லிம்களும் அதிக இணக்கம் காட்டினார்கள். தீவிர வாதம் அடியோடு மறைந்து விட்டது.

வடகிழக்கு மாகாணங்களில் சைனா தன் தலையீட்டை நிறுத்தி விட்டது. அந்த மாநிலங்களில் ஆர்ப்பாட்டங்கள் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விட்டது.

ராஜபக்க்ஷே வாலைச்சுருட்டிக்கொண்டு, இலங்கையில் வசிக்கும் எல்லோருக்கும் சம உரிமை கொடுத்துவிட்டார். வெளி நாடுகளுக்கு குடிபெயர்ந்த அனைத்து இலங்கை அகதிகளும் தாய்நாடு திரும்பிவிட்டார்கள். பிரபாகனுக்கு ஆங்காங்கே நினைவுச்சின்னங்கள் வைக்கப்பட்டு வை.கோ. வைக்கொண்டு திறந்து வைக்கப்பட்டன. பிரபாகரன் நினைவாக ஒரு தபால் தலை வெளியிடப்பட்டது.

பொதுவைக் கூப்பிட்டு, இனி நம் சொந்த வேலைகளைக் கவனிக்கலாமா என்றேன். அவர்கள் என்னவென்று தெரியாமல் விழித்தார்கள்.

நான் சொன்னேன், பொது, நம் நாட்டில் ஏகப்பட்ட பேர் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருக்கிறார்கள். நாம் எப்பேர்ப்பட்ட முட்டாள்தனமான திட்டம் சொன்னாலும் பணத்தைக் கொட்டிக்கொடுக்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

என்னுடைய திட்டம் இதுதான். நமது தூதரகத்திலிருந்து இந்தியர்களுக்கு தேவலோகத்திற்கு செல்ல இரண்டு விதமான விசா கொடுக்கப்படும்.

ஒன்று: டூரிஸ்ட் விசா. மூன்று பகல், இரண்டு இரவு அவர்களைத் தேவலோகத்திற்கு அழைத்துச் சென்று அங்கு நாம் போட்டிருக்கும் நகர்களைக் காட்டுவோம். அங்கு தங்க, சுற்றிப் பார்க்க எல்லா வசதிகளும் செய்து தரப்படும். விசா சார்ஜ் ஒரு கோடி ரூபாய். இதில் 50 சதம் வரியாக இந்திய அரசுக்கு கொடுத்துவிடுவோம்.

இந்த டூர் நமது தேவ்லோக் ஏர்லைன்ஸ் மூலமாக ஏற்பாடு செய்யப்படும். வாரத்தில் திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமை கோயமுத்தூர் ஏர் போர்ட்டிலிருந்து புறப்படும். திங்கட்கிழமை செல்பவர்கள் புதன்கிழமை திரும்புவார்கள். வியாழக்கிழமை புறப்படுபவர்கள் சனிக்கிழமை திரும்புவார்கள். இதற்கான விமானக் கட்டணம் மற்றும் ஊர் சுற்றிப் பார்க்கும் செலவுகள், உணவு, தங்கும் வசதிகள் எல்லாவற்றிற்கும் மொத்தமாக பத்து கோடி ரூபாய். இதற்கு உள்ளூர் வரிகள் தனி.

ஒரு ட்ரிப்புக்கு 200 பேர் வீதம் வாரத்திற்கு 400 பேர் மட்டுமே செல்ல முடியும். டிக்கெட்டுகள் அந்த அளவிற்குத்தான் கொடுப்போம். அதிகப் பேர் வந்தால் அவர்களுக்கு அட்வான்ஸ் புக்கிங்க் செய்யப்படும். டூர் கட்டணத்தை வாங்க கோவையில் தேவலோக பேங்கின் கிளை ஒன்றை ஆரம்பிப்போம். இதற்காக ஒரு 50 ஏக்கர் நிலம் வாங்கி, மயனை விட்டு ஒரு காம்ப்ளெக்ஸ் கட்டி விடலாம்.                                                      

இரண்டாவது இமிக்ரேஷன் விசா: இது ஒருவருடைய ஆயுள் காலத்திற்குப் பின்தான் அமுலுக்கு வரும். ஒருவர் தன் ஆயுள்காலம் முடிந்தவுடன் யமலோகம் போய் தனக்குண்டான பாவபுண்ணிய பலன்களை அனுபவித்த பின், இந்த விசா அமுலுக்கு வரும். அவர்களுக்கான குடியிருப்பு ரெடியாக இருக்கும். அங்கு அவர்களை அழைத்துச் சென்று, குடியமர்த்தப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு தேவலோக கிரீன் கார்டு கொடுக்கப்படும்.

இந்த குடியிருப்புக்கான விலை மற்றும் விசா சார்ஜ் மொத்தம் 100 கோடி ரூபாய். பணம் முழுவதையும் ரொக்கமாக இந்திய ரூபாயிலோ அல்லது அமெரிக்க டாலராகவோ அல்லது ஐரோப்பிய யூரோவாகவோ கட்டலாம். வேறு எந்தக் கரன்சியும் வாங்கப் படமாட்டாது. செக்குகள், பாங்க் டிராப்டுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.

இந்தப் பணத்தை ரொக்கமாக நமது தூதரகத்திலுள்ள தேவலோகப் பேங்கில் கட்டவேண்டும். பணம் கட்டும்போது ஒரு ஒப்பந்தம் போடப்படும். அந்த ஒப்பந்தத்தின் முக்கிய ஷரத்துகள்.

1. எக்காரணம் கொண்டும் விசா கட்டணம் திருப்பித்தரமாட்டாது.

2. இந்த விசா வாங்கிய செய்தியை யாரிடமும் சொல்லக் கூடாது.

3. இந்த சமாசாரத்தில் எக்காரணம் கொண்டும் காவல் துறைக்கு புகார் கொடுக்கக் கூடாது.

4. அப்படி யாராவது புகார் கொடுக்கலாம் என்று நினைத்தவுடனேயே அவர்கள் யமலோகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

5. தினம் பத்து பேருக்கு மட்டுமே விசா வழங்கப்படும். அதிகம் பேர் விண்ணப்பித்தால் அவர்கள் வெய்ட்டிங்க் லிஸ்டில் வைக்கப்படுவார்கள்.

6.  75 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே விசாவிற்கு தகுதியானவர்கள்.

இந்த ஒப்பந்தத்தில்  ஒவ்வொருவரிடமும் கையெழுத்து வாங்கி விடுங்கள். ஒப்பந்தத்தின் காப்பி அவர் யமலோகம் சென்றவுடன் கொடுக்கப்படும். இங்கு அதன் காப்பி இருக்கக் கூடாது.


இமிக்ரேஷன் விசாவில் 50 சதம் இந்திய அரசுக்கு வரியாக செலுத்தி விடுவோம். மீதியுள்ள விசா கட்டணத்தில் நம் ஊதியம் போக மிச்சமிருக்கும் பணத்தை அன்றன்று  தேவலோக பிராஞ்சிற்கு அனுப்பி விடவேண்டும்.

இந்த இமிக்ரேஷன் விசா கட்டணத்தில் 10 சதம் நம்முடைய உழைப்பிற்கான ஊதியமாக எடுத்துக்கொள்வோம். அதாவது ஒரு விசாவிற்கு 10 கோடி. அதில் எனக்கு 50 சதம். உங்களுக்கு, ஆளுக்கு 25 சதம். அவரவர்கள் பங்கை அன்றன்றே எடுத்துக் கொண்டு விடவேண்டும். நாம் தூதரக அதிகாரிகளானதால் நமக்கு வருமான வரி கிடையாது. இந்தப் பணத்தை இங்கேயுள்ள தேவலோகப் பேங்கில் அவரவர்கள் அக்கவுன்ட்களில் போட்டு வைப்போம்.

முதலில் டூரிஸ்ட் விசா மட்டுமே கொடுங்கள். இமிக்ரேஷன் விசா பற்றிய விஷயம் தேவலோகத்தில் டூர் வருபவர்களுக்கு மட்டும் வாய் வார்த்தையாக பரவட்டும்.

மறுநாள் இந்திய தினசரிகள் அனைத்திலும் இந்த டூரிஸ்ட் விசா பற்றிய விளம்பரம் முதல் பக்கத்தில் முழு பக்க விளம்பரமாக வெளி வந்தது.

விளம்பரம் வெளிவந்து சிறிது நேரத்திலேயே ஜனங்கள் தூதரகத்திற்கு வர ஆரம்பித்தார்கள். தங்களுக்கு டூரிஸ்ட் விசா வேண்டும் என்றார்கள். வந்த கூட்டத்தைப் பார்த்துவிட்டு உடனடியாக ஒரு பந்தல் போட்டு எல்லோரையும் உட்காரவைத்தோம். அவர்களுக்குத் தேவையான சிற்றுண்டிகள், பானங்கள், டி.வி. அனைத்து வசதிகளும் உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டன.

யமனிடமிருந்து தேவையான ஆட்களை வரவழைத்து ஜரூராக விசாக்கள் கொடுக்கப்பட்டன. முதல் நாளே 5000 பேருக்கு டூரிஸட் விசா கொடுத்தோம்.

கோவையில் பேங்கும் விமான சர்வீசின் ஆபீசும் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன. இந்திய விமானப் போக்குவரத்து அதிகாரியிடம் தேவலோகப் போக்குவரத்துக்கான அனுமதிகள் வாங்கப் பட்டுவிட்டன. தேவலோகப் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது.

முதல் வெள்ளோட்டப் பயணத்தில் பிரதம மந்திரி, நிதி அமைச்சர், கட்சித்தலைவர். முக்கிய அதிகாரிகள் மற்றும் தமிழ் மணத்தில் முதல் 20 ரேங்க் வைத்திருக்கும் பதிவர்கள் இவர்களை ஏற்றிக்கொண்டு போனோம்.

அங்கு அவர்களுக்கு ராஜோபசாரம் நடந்தது. இதுவரை பூலோகத்தில் யாரும் சாப்பிட்டிராத உணவு வகைகள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டன. அவர்கள் தங்குவதற்கு கொடுக்கப்பட்ட அறைகள் அரேபிய சுல்தான்கள் தங்கும் அறைகள் போலிருந்தன. அந்த விடுதிகளில் இல்லாத சௌகரியங்களே இல்லை.

அவர்கள் தேவலோகத்தை சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பஸ்களைப்போல் அவர்கள் தங்கள் ஆயுளில் பார்த்ததில்லை என்னும்படியாக இருந்தன. ஒவ்வொரு பஸ்சிலும் முப்பது பேர்கள்தான். வழிகாட்டுவதற்கு ஒவ்வொரு பஸ்சிற்கும் ஒரு தேவலோக அப்சரஸ்ஸை ஏற்பாடு பண்ணியிருந்தோம். அவ்வப்போது குடிப்பதற்கும் கொறிப்பதற்கும், வறுத்த முந்திரி, பாதாம்பருப்பு, ஆல்மண்ட், நல்ல திராக்ஷை ரசம், ஆப்பிள் ஜூஸ், மேங்கோ ஜூஸ், இப்படி  ஏதாவது கொடுத்துக்கொண்டிருந்தோம்.

இரவானதும் அவர்கள் தங்கும் விடுதிகளில் பலவிதமான கேளிக்கை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அவைகளில் முக்கியமானவை ரம்பை-ஊர்வசி நாட்டியம்தான். இரவு விருந்தில் நூற்றுக்கணக்கான உணவு வகைகள் பரிமாறப்பட்டன. ஒவ்வொன்றையும் ருசி பார்ப்பதற்குள்ளேயே பசி தீர்ந்து விட்டது. பல விதமான தீர்த்தங்கள் கொடுக்கப்பட்டன.


இவைகளை எல்லாம் சாப்பிட்டு முடித்தவுடன்  90 சதம் பேர்கள் (பதிவர்களில் 100 சதம்) அங்கேயே படுத்து விட்டார்கள். காரணம் நான் சொல்ல வேண்டியதில்லை. அவர்களை எல்லாம் யம கிங்கரர்கள் தூக்கிக்கொண்டுபோய் அவரவர்கள் அறையில் படுக்க வைத்தார்கள்.

அவர்கள் புறப்படும் நாள் வந்தது. ஒருவருக்கும் புறப்படவே மனது இல்லை. இங்கேயே இருந்து விடுகிறோமே என்றார்கள். அப்போது அவர்களுக்கு "இமிக்ரேஷன் விசா" வைப்பற்றி நாரதர் ஒரு வகுப்பு எடுத்தார். அன்வரும் ஒரே குரலில் நாங்கள் திரும்பிப் போனதும் முதல் வேலையாக இந்த விசாவை வாங்குவோம் என்று பதிவர்களைத் தவிர மற்ற எல்லோரும் ஏகமனதாகச்சொன்னார்கள்.

 இப்படியாக அனைவரையும் பூலோகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தோம்.

33 கருத்துகள்:

  1. இந்தியாவில் தனிமனித வாழ்க்கை சுபிட்சமாக மாறத்தொடங்கியது. எங்கும் எதிலும் முன்னேற்றம் தென்பட்டன. அமெரிக்கா, இந்தியாவைப் பார்த்து பயப்பட ஆரம்பித்தது. அனைத்து வெளிநாடுகளும் இந்தியாவுடன் சுமுக உறவை நீட்டித்தன. இந்தியாவின் அனைத்து எல்லைகளிலும் வெளிநாட்டிலிருந்து யாரும் ஊடுறுவ முடியாதபடி வேலிகள் அமைக்கப்பட்டன.

    அமர்க்களம் ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல கனவு.
      பலிக்குமா?
      பலிக்கும்
      எப்போது?
      இந்த பாழாப்போன அரசியல்வாதிகள் ஒழியும் போது.
      நமக்கு அயல் நாட்டு மோகம் தீரும் போது.
      லஞ்ச லாவண்யம் மடியும் போது.
      மனிதனை மனிதன் மதிக்கும் போது
      சுய மரியாதையுடன் வாழும்போது
      அடுத்தவன் கைகூலியாக இருக்க மாட்டேன் எனும்போது
      இலவசங்கள் ஒழியும்போது
      உழைத்துத்தான் உண்பேன் எனும்போது
      வேலைக்குரிய கூலி கிட்டும்போது
      படிப்புக்கு மரியாதை இருக்கும்போது
      நன்னடத்தையை நாம் மதிக்கும்போது
      காசுக்கு மட்டுமே மதிப்பு என்பது மறையும்போது
      ஆனால்
      நடக்குமா?
      நடக்கும்
      எல்லாம் நம் கையிலேதான் உள்ளது
      இந்த மாற்றத்தை உருவாக்குவோம்
      நல்லதொரு இந்தியாவை காண்போம்
      செய்வோமா மக்களே
      வாருங்கள்
      கை கோர்ப்போம்
      செய்து காட்டுவோம்
      உலகத்தை வென்றெடுப்போம்

      சேலம் குரு

      நீக்கு
  2. அன்வரும் ஒரே குரலில் நாங்கள் திரும்பிப் போனதும் முதல் வேலையாக இந்த விசாவை வாங்குவோம் என்று பதிவர்களைத் தவிர மற்ற எல்லோரும் ஏகமனதாகச்சொன்னார்கள்.

    ஏனுங்க ஐயா??

    பதிவர்கள் விசா வாங்க மறுத்தார்கள் ??/!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவர்களிடம் காசு ஏதம்மா? 100 கோடிக்கு அவர்கள் எங்கே போவார்கள், பாவம்?

      நீக்கு
  3. // தேவ்லோக் ஏர்லைன்ஸ்-------கோயமுத்தூர் ஏர் போர்ட்டிலிருந்து புறப்படும்.//
    சென்னைக்கு ஏன் இந்த ஓர வஞ்சனை!

    //சாப்பிட்டு முடித்தவுடன் 90 சதம் பேர்கள் (பதிவர்களில் 100 சதம்) அங்கேயே படுத்து விட்டார்கள்.//
    பத்து கோடி ரூபாய் கொடுத்து விசா வாங்கும் அளவிற்கு பதிவர்களின் நிதி நிலை இருக்கிறது என அறிய சந்தோஷமாக இருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவர்களை காம்ப்ளிமென்டரி பாசில் கூட்டிக்கொண்டு போனோம். பத்து கோடி கொடுக்கற நிலைமையிலா நாம் இருக்கிறோம்?

      சென்னைக்கு ஒரு ஷட்டில் சர்வீஸ் ஆரம்பிச்சுடலாம்.

      நீக்கு
    2. // தேவ்லோக் ஏர்லைன்ஸ்-------கோயமுத்தூர் ஏர் போர்ட்டிலிருந்து புறப்படும்.//
      மதுரைக்கு ஏன் இந்த ஓர வஞ்சனை!

      நீக்கு
    3. கோயம்பத்தூர், கவுண்டரோட சொந்த ஊர்.
      பின்னே அங்கிருந்து ஆரம்பிக்காம உங்க ஊரிலிருந்தா ஆரம்பிப்பாங்க?
      கவுண்டர்தான் சென்னைக்கு ஷட்டில் ட்ரிப் அடிக்கறேன்னுட்டாரே
      மதுரையிலிருந்தும் ஒண்ணு அடிச்சிட்டா போச்சு
      கவுண்டரய்யா, அந்த ரெண்டு ஷட்டில் ட்ரிப்பையும் எனக்கே கொடுத்துடுங்கையா
      ஷட்டில் ட்ரிப் டிக்கெட் காசு ஒண்ணும் அதிகமில்லை டூருக்காகும் காசில் 0.1% தான் (அதுவே 1,00,000 ரூபாய் ஆயிற்றே)

      நீக்கு
  4. அருமையான ரசனையான கற்பனை! மிக ரசித்தேன்! படித்ததும் சபாபதி சார் சொல்லியிருக்கற விஷயம்தான் என் மனசுலயும் ஓடிச்சு உண்மையில!

    பதிலளிநீக்கு
  5. தேவலோக பேங்க் கணக்குலே காசைப் போட்டுட்டா அதை ரகசியமா வச்சுக்குவாங்களா? வட்டி வீதம் எல்லாம் சரியாச் சொல்லுங்க.

    விஸா எடுக்க குடும்ப டிஸ்கவுண்ட் இருக்குதானே? ஃபேமிலி ரீயூனியன் வகையில்..............

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரகசியமாக வச்சுக்குவாங்களா?
      இதென்ன கேள்வி.
      அய்யா அவர்கள் இபோதுதான் ஸ்விஸ் வங்கி ரகசிய கணக்கையெல்லாம் துடைத்தெடுத்துக்கொண்டு வந்திருக்கிறார்.
      அடஹ்ர்க்குள் இன்னொரு ரகசிய கணக்கா அஷ்வும் தேவ்லோக் வங்கியிலேவா?
      வேணாம் அம்மா இந்த விபரீத ஆசை
      சரியாக வட்டி வாங்கி சரியா அளவு வருமான வரி கட்டி நேர்மையாக வாழ்வோம்

      நீக்கு
  6. ஹா... ஹா...

    20 ரேங்க்... பதிவர்களுக்கு நல்ல போட்டி...!

    பதிலளிநீக்கு
  7. //இந்தியாவில் தனிமனித வாழ்க்கை சுபிட்சமாக மாறத்தொடங்கியது. எங்கும் எதிலும் முன்னேற்றம் தென்பட்டன. அமெரிக்கா, இந்தியாவைப் பார்த்து பயப்பட ஆரம்பித்தது. அனைத்து வெளிநாடுகளும் இந்தியாவுடன் சுமுக உறவை நீட்டித்தன. இந்தியாவின் அனைத்து எல்லைகளிலும் வெளிநாட்டிலிருந்து யாரும் ஊடுறுவ முடியாதபடி வேலிகள் அமைக்கப்பட்டன.//

    நல்ல கனவு.
    பலிக்குமா?
    பலிக்கும்
    எப்போது?
    இந்த பாழாப்போன அரசியல்வாதிகள் ஒழியும் போது.
    நமக்கு அயல் நாட்டு மோகம் தீரும் போது.
    லஞ்ச லாவண்யம் மடியும் போது.
    மனிதனை மனிதன் மதிக்கும் போது
    சுய மரியாதையுடன் வாழும்போது
    அடுத்தவன் கைகூலியாக இருக்க மாட்டேன் எனும்போது
    இலவசங்கள் ஒழியும்போது
    உழைத்துத்தான் உண்பேன் எனும்போது
    வேலைக்குரிய கூலி கிட்டும்போது
    படிப்புக்கு மரியாதை இருக்கும்போது
    நன்னடத்தையை நாம் மதிக்கும்போது
    காசுக்கு மட்டுமே மதிப்பு என்பது மறையும்போது
    ஆனால்
    நடக்குமா?
    நடக்கும்
    எல்லாம் நம் கையிலேதான் உள்ளது
    இந்த மாற்றத்தை உருவாக்குவோம்
    நல்லதொரு இந்தியாவை காண்போம்
    செய்வோமா மக்களே
    வாருங்கள்
    கை கோர்ப்போம்
    செய்து காட்டுவோம்
    உலகத்தை வென்றெடுப்போம்
    புறப்படுங்கள்

    சேலம் குரு








    பதிலளிநீக்கு
  8. //இந்த இமிக்ரேஷன் விசா கட்டணத்தில் 10 சதம் நம்முடைய உழைப்பிற்கான ஊதியமாக எடுத்துக்கொள்வோம். அதாவது ஒரு விசாவிற்கு 10 கோடி. அதில் எனக்கு 50 சதம். உங்களுக்கு, ஆளுக்கு 25 சதம். அவரவர்கள் பங்கை அன்றன்றே எடுத்துக் கொண்டு விடவேண்டும்.//

    ஐயயோ ஒரு விசாவிற்கு 10 கோடி அதில் 50% அய்யாவிற்கு
    அதாவது 5 கோடி.
    ஒரு பதிவருக்கு (ஐயாவும் பதிவர்தானே) ஒரு விசாவிலேயே 5 கோடி வருமானம் என்றால் முதல் நாள் பதிவு செய்த 5000 டூரிஸ்ட் விசாகாரர்களில் 50% இமிக்ரேசன் விசா வாங்கினால் கூட 12500 கோடி ஐயாவிற்குத்தானே. சீக்கிரமே ஒரு தனி நபர் ஸ்விஸ் வங்கி உருவாகி விடும் போலிருக்கிறதே.

    பதிலளிநீக்கு
  9. //ஒருவருக்கும் புறப்படவே மனது இல்லை. இங்கேயே இருந்து விடுகிறோமே என்றார்கள். அப்போது அவர்களுக்கு "இமிக்ரேஷன் விசா" வைப்பற்றி நாரதர் ஒரு வகுப்பு எடுத்தார்.//

    அருமையான மார்க்கெட்டிங் ஸ்டிராடஜி
    நன்கு அனுபவிக்க விட்டு விட்டு பிறகு அதை தொடர்வதற்கு ஒரு பீஸ். வலையில் விழாமல் இருப்பார்களா

    பதிலளிநீக்கு
  10. //இந்திய தினசரிகள் அனைத்திலும் இந்த டூரிஸ்ட் விசா பற்றிய விளம்பரம் முதல் பக்கத்தில் முழு பக்க விளம்பரமாக வெளி வந்தது.

    விளம்பரம் வெளிவந்து சிறிது நேரத்திலேயே ஜனங்கள் தூதரகத்திற்கு வர ஆரம்பித்தார்கள். தங்களுக்கு டூரிஸ்ட் விசா வேண்டும் என்றார்கள்//

    முன்னேறிய இந்தியாவிலும் இப்படித்தானா
    நமக்கு தேவையா இல்லையா என்ற யோசனையே இல்லாமல் விளம்பரத்தை பார்த்தவுடனே பந்தல் போட்டு கியூ நிற்குமளவிற்கு கூட்டம் வந்து விட்டது என்றால் அய்யா அவர்கள் இந்தியாவின் பொருளாதாரத்தை முன்னேற்றிய மாதிரி இந்திய மக்களின் புத்தியையும் நல்வழிப்படுத்த ஒரு பதிவில் ஆலோசனை செய்து நடைமுறைபடுத்தினால் நன்றாக இருக்கும்

    பதிலளிநீக்கு
  11. //முதல் வெள்ளோட்டப் பயணத்தில் பிரதம மந்திரி, நிதி அமைச்சர், கட்சித்தலைவர். முக்கிய அதிகாரிகள் மற்றும் தமிழ் மணத்தில் முதல் 20 ரேங்க் வைத்திருக்கும் பதிவர்கள் இவர்களை ஏற்றிக்கொண்டு போனோம்//

    கவனிக்க வேண்டியவர்களை கவனித்தாயிற்று
    இனிமேல் எந்த தடையும் வராது.
    நல்லபடி பதிவு போட 20 பதிவர்களையும் கூடி கொண்டாயிற்று.
    நல்லபடி பிளான் செய்துதான் நடத்துகிறீர்கள்
    இனியொரு குறையுமில்லை உங்கள் தேவலோக சுற்றுலா ஜாம் ஜாம் என்று நடக்கும்.
    .

    பதிலளிநீக்கு

  12. //முதல் வெள்ளோட்டப் பயணத்தில் பிரதம மந்திரி, நிதி அமைச்சர், கட்சித்தலைவர். முக்கிய அதிகாரிகள் மற்றும் தமிழ் மணத்தில் முதல் 20 ரேங்க் வைத்திருக்கும் பதிவர்கள் இவர்களை ஏற்றிக்கொண்டு போனோம்.//





    முக்கியமான ஆட்களை அழைத்துக்கொண்டு போயாயிற்று
    இனி மேல் என்ன தடை
    நல்லபடி பதிவுகளை போட 20 தேர்ந்த பதிவர்களும் கூட வந்தாயிற்று.
    தேவ லோக பயணத்திற்கு இனி ஒரு தடங்கலுமில்லை.
    குறையொன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா
    ஜாம் ஜாம் என்று நடத்த வேண்டியதுதான்

    பதிலளிநீக்கு
  13. // இதுவரை பூலோகத்தில் யாரும் சாப்பிட்டிராத உணவு வகைகள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டன. அவர்கள் தங்குவதற்கு கொடுக்கப்பட்ட அறைகள் அரேபிய சுல்தான்கள் தங்கும் அறைகள் போலிருந்தன. அந்த விடுதிகளில் இல்லாத சௌகரியங்களே இல்லை.

    அவர்கள் தேவலோகத்தை சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பஸ்களைப்போல் அவர்கள் தங்கள் ஆயுளில் பார்த்ததில்லை என்னும்படியாக இருந்தன. ஒவ்வொரு பஸ்சிலும் முப்பது பேர்கள்தான். வழிகாட்டுவதற்கு ஒவ்வொரு பஸ்சிற்கும் ஒரு தேவலோக அப்சரஸ்ஸை ஏற்பாடு பண்ணியிருந்தோம். அவ்வப்போது குடிப்பதற்கும் கொறிப்பதற்கும், வறுத்த முந்திரி, பாதாம்பருப்பு, ஆல்மண்ட், நல்ல திராக்ஷை ரசம், ஆப்பிள் ஜூஸ், மேங்கோ ஜூஸ், இப்படி ஏதாவது கொடுத்துக்கொண்டிருந்தோம்.

    இரவானதும் அவர்கள் தங்கும் விடுதிகளில் பலவிதமான கேளிக்கை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அவைகளில் முக்கியமானவை ரம்பை-ஊர்வசி நாட்டியம்தான். இரவு விருந்தில் நூற்றுக்கணக்கான உணவு வகைகள் பரிமாறப்பட்டன. ஒவ்வொன்றையும் ருசி பார்ப்பதற்குள்ளேயே பசி தீர்ந்து விட்டது. பல விதமான தீர்த்தங்கள் கொடுக்கப்பட்டன.//

    10 கோடி ரூபாய் கண்டிப்பாக பத்தவே பத்தாதே
    இவ்வளவு செலவு செய்தால் டிக்கெட் விலை சீக்கிரமே அதிகம் பண்ண வேண்டியதுதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னங்காணும் அர்த்தம் புரியாதவராய் இருக்கிறீர்
      இது சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கிற கதையாக்கும்
      போன யாராவது இமிக்ரேசன் விசாவுக்கு அப்ளை பண்ணாமல் இருப்பார்களா அது 100 கோடியாச்சே
      இன்றைக்கு பண்ற செலவில் ஒரு கோடி அப்படி இப்படி இருந்தாலும் நாளைக்கு வர்ற 100 கோடியில் சமாளித்துகொள்ளலாம் என்ற என்னம்தானும் ஒய் இதேஹ்ல்லாம் புரியாத அம்மாஞ்சியாக இருக்காதேயும் இனிமேல்

      நீக்கு
  14. //நாம் தூதரக அதிகாரிகளானதால் நமக்கு வருமான வரி கிடையாது. //

    ரொம்ப விவரமாகத்தான் இருக்கிறீர்
    இரும் இரும் நம்ப சிதம்பரம்கிட்ட சொல்லி தனியாக ஒரு வரி போட சொல்கிறேன்
    அப்புறம் தெரியும் வரின்னா என்னன்னு

    பதிலளிநீக்கு
  15. //பிரபாகனுக்கு ஆங்காங்கே நினைவுச்சின்னங்கள் வைக்கப்பட்டு வை.கோ. வைக்கொண்டு திறந்து வைக்கப்பட்டன//

    இங்கு கூட கருணாநிதிக்கு இடமில்லையா?
    டெசோ, உண்ணாவிரதம், மத்திய மந்திரிகள் ராஜினாமா என்றெல்லாம் வேஷம் போட்டதற்கு ஒரு சிலையையாவது திறக்க விடுங்களேன்.

    பதிலளிநீக்கு
  16. //பாகிஸ்தான் தன் உளவு வேலைகளையும் சதித்திட்டங்களையும் நிறுத்திக்கொண்டு விட்டது. காஷ்மீரில் அதிக அளவில் டூரிஸ்ட்டுகள் வர ஆரம்பித்தார்கள். இந்துக்களும் முஸ்லிம்களும் அதிக இணக்கம் காட்டினார்கள். தீவிர வாதம் அடியோடு மறைந்து விட்டது.//

    படிப்பதற்கே நன்றாக இருக்கிறதே
    உண்மையாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்
    இன்னொரு கற்பனை.
    200 வருடங்களுக்கு முன்னிருந்தது போல்,
    கிழக்கு ஜெர்மனியும் மேற்கு ஜெர்மனியும் ஒன்று சேர்ந்தது போல்,
    காந்திஜி கனவு கண்டது போல்,
    பாகிஸ்தானும் ஸ்ரீலங்காவும் பங்களாதேசும் இந்தியாவோடு ஒன்றிணைந்து அகண்ட பாரதமாக பிரகாசித்தால் நன்றாக இருக்குமல்லவா

    பதிலளிநீக்கு
  17. //பாகிஸ்தான் தன் உளவு வேலைகளையும் சதித்திட்டங்களையும் நிறுத்திக்கொண்டு விட்டது. காஷ்மீரில் அதிக அளவில் டூரிஸ்ட்டுகள் வர ஆரம்பித்தார்கள். இந்துக்களும் முஸ்லிம்களும் அதிக இணக்கம் காட்டினார்கள். தீவிர வாதம் அடியோடு மறைந்து விட்டது.

    வடகிழக்கு மாகாணங்களில் சைனா தன் தலையீட்டை நிறுத்தி விட்டது. அந்த மாநிலங்களில் ஆர்ப்பாட்டங்கள் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விட்டது.

    ராஜபக்க்ஷே வாலைச்சுருட்டிக்கொண்டு, இலங்கையில் வசிக்கும் எல்லோருக்கும் சம உரிமை கொடுத்துவிட்டார்.//

    வலியவன் வாழ்வதும் எளியவன் தேய்வதும் என்பது போல இந்திய வலிமை பெற்றவுடன் நடக்கும் நிகழ்சிகளை பார்த்தீர்களா
    சும்மா நீதி நேர்மை நியாயம் என்றெல்லாம் பேசிகொண்டிருந்தால் எவனும் வழிக்கு வர மாட்டான்
    வலிக்கிற இடத்தில் அடிக்கணும் அப்போதுதான் புரியும்
    சும்மா வெட்டி பேச்சு பேசிகொண்டிருந்தால் ஒரு பய புள்ள மதிக்க மாட்டான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரில்லாவின் கருத்துக்கள் நன்றாகத்தானே போய்கொண்டிருந்தன
      திடீரென்று எதற்கு இத்தகைய வன்முறை கண்ணோட்டம்
      நல்ல சிந்தனை தெளிவான கருத்துக்கள் பரவாயில்லை என்று நினைத்தோம் இப்போது இந்த மாதிரி "வலிக்கிற இடத்தில அடிக்கணும்" என்பது போன்ற வார்த்தைகள் வேண்டாமே

      திருச்சி அஞ்சு

      நீக்கு
  18. பதில்கள்
    1. ஒண்ணுமில்லீங்க, பதிவெளுத விசயம் கெடைக்க மாட்டேங்குது, அதுதான் இப்படியாச்சும் எளுதலாமேன்னு.........

      நீக்கு
    2. கனவெல்லாம் சரிதான்.
      ஆனால் டூ மச் டூ பாஸ்ட் ஆக இருப்பதால் நடப்பது நம்புகிற மாதிரி காணோமே.
      ஒவ்வொன்றுக்கும் ஒரு நடைமுறை சாத்தியம் இருப்பது போல காணவில்லையே.
      இவ்வளவு ஸ்பீடாக செய்வதற்கு பதில் ஒரு சின்ன காரியத்தை எடுத்து அதை எப்படி நடைமுறைபடுத்தினால் இத்தகைய விளைவை நிகழ்விக்கலாம் என்று சில பிராக்டிகலாக செய்யகூடிய செயல்களை கூடவே சொல்லியிருந்தால் அருமையாக இருந்திருக்கும்.

      ஆனாலும் சிந்தனைகள் அனைத்தும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.

      அடுத்த தேர்தலுக்கு அதிமுக, திமுக, பாமக போன்ற உள்ளூர் கட்சிகளும் மற்றும் பிஜேபி, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளும் தனது தேர்தல் அறிக்கையில் உள்ளடக்க வேண்டிய கருத்துக்கள்

      நீக்கு
  19. வேறொன்றுமில்லை
    நல்லபடியாக சொல்லும்போது நடக்க மாட்டேனென்கிறது
    எதற்கும் ஒரு லிமிட் இருக்கிறதல்லவா
    டக் என்று அந்த லிமிட் தாண்டிய மாதிரி ஒரு எண்ணம். அதுதான்.
    ஆளுக்கு ஆள் நாட்டாமை. ஒரு ஒழுங்கில்லை ஒரு முறையில்லை எமர்ஜன்சி சமயத்தில் வேலைகள் எவ்வளவு ஜரூராக நடந்தன.
    தடி எடுத்தால்தான் வேலை நடுக்கும் என்ற நிலை
    ஓகே ஓகே நன்றி
    நல்ல சமயத்தில் ஒரு அடி கொடுத்ததற்கு மிக்க நன்றி
    இனி கொஞ்ச நாளைக்கு நல்லபடி மனசு திங்க் பண்ணும்

    பதிலளிநீக்கு
  20. தமிழ்மணம் ராங்க் 20? நான் எப்போது போவது?

    பதிலளிநீக்கு