ஞாயிறு, 10 மார்ச், 2013

பாலியல் வன்முறைக்கு தூக்கு தண்டனை கூடாது

கொஞ்ச நாளாக என்னுடைய கற்பனை ஜெட் வேகத்தில் வேலை செய்கிறது. அதனுடைய தாக்கம்தான் இந்தப் பதிவு.


சமீப காலமாக பாலியல் வன்முறைகள் பெருகிக்கொண்டு இருக்கின்றன. காரணம் என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லை. சமூக ஆர்வலர்களும் பெண்ணியல் முன்னேற்றவாதிகளும் இதைப் பற்றிய ஆராய்ச்சிகள் செய்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இது ஒரு புறம் இருக்க, இந்த பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கொடுக்கவேண்டும் என்று பலரும் சொல்லிக்கொண்டு வருகின்றனர். அது தவறு. என்னுடைய கருத்து என்னவென்றால் அப்படி தூக்குத் தண்டனை கொடுத்தால், அது எப்படி அந்த குறிப்பிட்ட பெண் அனுபவித்த வேதனைக்கு ஈடாகும்?

சமீபத்தில் நான் தேவலோகம் போயிருந்தபோது அப்படியே யமனையும் ஒரு வேலையாகப் பார்க்கப் போயிருந்தேன். அவனுடன் பேசிக் கொண்டிருந்தபோது சார், நரகத்தைப் பார்க்கறீர்களா என்று கேட்டான். சரி, இவ்வளவு தூரம் வந்து விட்டு அதைப் பாக்கி வைப்பானேன் என்று போனேன்.

அங்கு பலவிதமான தண்டனைகள் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அவைகளில் எனக்குப் பிடித்த இரண்டு தண்டனைகளைப் பற்றி மட்டும் சொல்லுகிறேன்.

எண்ணைக் கொப்பறை:

பெரிய பெரிய கொப்பறைகளில் நிறைய எண்ணை ஊற்றி கொதிக்கவைத்துக்கொண்டு இருக்கிறார்கள். திடீரென்று ஒருவனை நான்கு ஆட்கள் தூக்கிக்கொண்டு வந்து அதற்குள் அவனைப் போடுகிறார்கள். அந்த ஆள் படும் பாட்டை எழுத்தால் விவரிக்கமுடியாது. கொஞ்ச நேரத்தில் அவன் வெந்து போகிறான். அவனை. தப்பு, அந்தக் கரிக்கட்டையை வெளியில் எடுக்கிறார்கள். அவனுக்குப் பழைய உடம்பு வந்து விடுகிறது. மறுபடியும் அவனை அந்தக் கொப்பறையில் போடுகிறார்கள்.

இப்படியே அவனை நாள் முழுவதும் செய்கிறார்கள்.

அடுத்தபடியாக நான் பார்த்தது.

தோலுரித்து உப்புக் கண்டம் போடுவது:

தண்டனைக்குரிய ஆளை கைகால்களைக் கட்டி ஒரு மேஜை மேல் படுக்கவைக்கிறார்கள். நல்ல எக்ஸ்பர்ட் அறுவை மன்னர்கள் அவனுடைய தோலை மட்டும் உரித்து விடுகிறார்கள். பிறகு நல்ல நைஸ் உப்பை அவன் உடல் மேல் தடவுகிறார்கள். அப்படியே மேஜையுடன் தூக்கிக்கொண்டு போய் நல்ல வெயிலில் வைத்து விடுகிறார்கள். மாலை வரைக்கும் அவன் அப்படியே கிடக்கிறான். அவன் போட்ட சப்தம் பூலோகம் வரை கூட கேட்டிருக்கும்.

மாலையில் அவனை அவிழ்த்து விட்டால் பழையபடி ஆகிவிடுகிறான். மறுநாளும் இதே மாதிரி செய்வார்களாம்.

நான் பார்த்த வரையில் இந்த இரண்டு தண்டனைகளும் என் மனதிற்குப் பிடித்தன.

என்னுடைய கருத்து. ஏன் இந்த தண்டனைகளை நம் பாலியல் குற்றவாளிகளுக்கு கொடுக்கக் கூடாது?

24 கருத்துகள்:

  1. அட டா நான் வேற மாதிரி எதிர்பார்த்தன் இந்த முற
    உங்கட கற்பனையில எனக்கு வந்தது.தூக்குத்தண்டனை
    கூடாது தான் ஆனா நீங்க சொன்ன தண்டணைகளைக்
    கொடுத்திற்று ஆளத் தூக்கி விடலாமே நல்ல மரமா பாத்து ! :)

    பதிலளிநீக்கு
  2. இரண்டுமே நல்ல தண்டனை தான்... இரண்டும் கொடுக்கலாம்...

    பதிலளிநீக்கு
  3. கற்பனையென்றாலும் எல்லோரும் தர நினைக்கின்ற தண்டனையை வேறு கோணத்தில் எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் சொல்வது சரி. உடனே தூக்கிலிடக்கூடாது. அவர்கள் உயிரோடு இருந்து துன்பத்தை அனுபவித்து இறக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. இரண்டு தண்டனைகளையும் மாற்றி மாற்றி கொடுக்கலாம் ...

    பதிலளிநீக்கு
  5. இந்து சமயம் இவ்வளவு கொடுமையானதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்து மதம் நீங்கள் நினைக்கிறது மாதிரி கொடூரமானது அல்ல.
      உப்பு தின்னவன் தண்ணி குடிக்கணுங்கிற பழமொழி மாதிரி, தவறு செய்தால் கண்டிப்பாக தண்டனை உண்டு என்று சொல்வதற்கு ஒரு படி மேலே போய் அந்த தண்டனையும் நினைத்து பார்ப்பதற்கும் மேலாக இருக்கும் என்ற எண்ணத்தை ஊட்டுவதற்குத்தான்.
      எண்ணெய் கொப்பரை, தோல் உரித்து உப்புக்கண்டம் போடுதல் போன்ற தண்டனைகள் இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் ஒரு வித பயம் (moral fear) உண்டாகும். அந்த பயம், இத்தகைய தவறுகள் செய்வதிலிருந்து மக்களை தடுக்கும்.
      இதை தவிர, தெரியாமல் தவறு செய்துவிட்டு ஐயயோ தப்பு செய்து விட்டோமே இப்போது என்ன செய்வது என்று வருந்துபவர்களுக்காக இந்து மதம் பரிகாரங்களையும் வகுத்து வைத்திருக்கிறது. இப்படிப்பட்டவர்களுக்கு பரிகாரங்கள் செய்த பின்னர் மனதளவில் ஒரு நிம்மதி கிடைக்குமல்லவா.
      மொத்தத்தில் மனிதனை நல்வழிபடுத்தவும், தவறினால் தண்டனை உண்டு என்பதை வலியுறுத்தவும், தெரியாமல் செய்த தவறுகளுக்கு வருந்துவோருக்கு பிராயச்சித்தமாக பரிகாரங்களை வகுத்து வைத்தும் இப்படி பல வகைகளில் நமக்கு நல்ல வழி காட்ட இந்து மதம் பல்வேறுபட்ட வழிமுறைகளை காட்டியுள்ளது. இதை கொடூரமான மதம் என்று தயவு செய்து சொல்ல வேண்டாம்

      நீக்கு
  6. நீங்கள் ஒரு வேலை முருக்கு, சீடை, ஊறுகாய் போட்டு விற்பனை செய்தீர்களா?

    உங்களுடைய கற்பனைக்கும் அதற்கும் நிறைய சம்பந்தம் இருக்கிறதே.

    பதிலளிநீக்கு
  7. பதில்கள்
    1. திரு lcnathan அவர்களே
      கீழே உள்ள வலைக்கு சென்று தமிழில் எழுத முயற்சிக்கவும். ஆங்கிலத்தில் டைப் செய்து தமிழ் வார்த்தையை தேர்வு செய்யவும்.
      http://tamil.changathi.com/ பிறகு தமிழிலேயே பின்னோட்டங்கள் எழுதலாம்

      நீக்கு

  8. தண்டனைகள் பலவிதம் தவறு செய்தவன் திருந்த கொடுக்கப்படும் ஒரு வாய்ப்பு, என்று கொள்ளலாம். இந்தத் தண்டனையை பார்த்து வேறு யாரும் தவறு செய்யாதிருக்கக் கொடுக்கப்படும் தண்டனையும் உண்டு. பாலியல் பலாத் காரத்துக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் பாதிக்கப் பட்டவர்களின் பாதிப்பு குறையப் போவதில்லை.

    பதிலளிநீக்கு
  9. எங்கு பார்த்தாலும் ஒருவித கையாலாகாத்தனமும் யாராவது எங்கிருந்தாவது வந்து எதையாவது செய்து நிலைமையை சரி செய்து விட மாட்டார்களா என்ற ஆதங்கமும்தான் நிலவுகிறது.
    வெறும் பேச்சுக்கள், பலவித விவாதங்கள், செயல்முறைகள் போன்றவறைதான் காதில் விழுந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இத்தகைய மிருகத்தனமான செயலுக்கு பதிலடி என்னவென்று எங்களை போன்ற எதுவும் செய்ய இயலாத இன்றைய இளைஞர் சமுதாயத்தை கேட்டால் எங்களின் ஒருமித்த கருத்து இதுதான் - முதலில் இத்தகைய கொடுஞ்செயலில் ஈடுபட்ட அந்த மிருகத்தின் ஆண் அடையாளமாக உள்ள உறுப்பை நறுக்கி எடுக்க வேண்டும்.
    பிறகு நல்ல மருத்துவ உதவி தந்து உடலை தேற்றி அடுத்த இரண்டு வாரங்களில் இந்த செயலுக்கு அவனுக்கு உதவி புரிந்த அவனுடைய கையையும் காலையும் வெட்டி எடுக்க வேண்டும். நல்ல மருத்துவ உதவி தந்து உடலை தேற்றிய பின் அதற்கடுத்த வாரம் அந்த அபலையின் கூக்குரலுக்கு செவி சாய்க்காத அவனுடைய காதை பிய்த்தெடுக்க வேண்டும். பின்னர் இந்த செயலுக்கு அவனை தூண்டிய அவன் கண்களை நோண்டி எடுக்க வேண்டும். கடைசியாக அவன் தலையை கொய்து எடுக்க வேண்டும். இவை அனைத்தையும் வீடியோ படமாக எடுத்து வாரா வாரம் நிகழ்ச்சியை ஒலி பரப்ப வேண்டும். இதற்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டும். பிறகு பாருங்கள், இத்தகைய கொடூர நிகழ்வுகள் நிஜமாகத்தான் நடந்தனவா என்று கேட்ககூடிய நிலை கண்டிப்பாக வந்து விடும். ஆனால் செய்ய முடியுமா என்று தெரிய வில்லை. கொடுஞ்செயலை செய்த ஒரு கொடூரனை சிறுவன் என்று சொல்லி ஒரு கூட்டம் அலைகிறது.

    பதிலளிநீக்கு
  10. பதிவு பெரிதாக இருப்பதால் மூன்றாக பதிவு செய்கிறேன்
    பதிவு 1/3


    உண்மையில் இத்தகைய நிகழ்ச்சிகள் இதற்கு முன்னர் நடந்து கொண்டிருந்தாலும் இன்றைய ஊடகங்கள்தான் இவற்றை ஊரறிய பறை சாற்றின. அந்த வகையில் ஊடகங்கள் பாரட்டபடவேண்டியவைதான். ஆனால் அதை ஒரு நிலைக்கு மேல் கொண்டு சென்று பரபரப்பு மிக்க சென்சேஷனலாக செய்ததும் இதே ஊடகங்கள்தான்

    நானும் பார்த்துக்கொண்டேயிருக்கின்றேன். ஒருவராவது இந்த நிகழ்ச்சிகள் இந்த அளவுக்கு அதிகமானதற்கு ஒரு முக்கியமான காரணம் இந்த ஜன ரஞ்சக பத்திரிகைகளும், தொலை காட்சி பெட்டிகளில் வாயிலாக நம் வீட்டில் வந்து நம் மனதை ஆக்கிரமித்துக்கொள்ளும் மெகா சீரியல்களும், விளம்பரங்களும், காசு கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று சில சினிமா நடிகைகள் நடிக்கும் சினிமாக்களும் என்பதை சொல்ல மாட்டேன் என்கிறார்கள்.

    இன்று எந்த பத்திரிகையை எடுத்து பார்த்தாலும் அதன் சில பக்கங்கள் நம் அம்மா, அக்கா, தங்கையுடன் அமர்ந்து பார்க்ககூடிய அளவில் இருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

    சினிமா பற்றி சொல்லவே வேண்டாம். இன்றைய முன்னணி நகைச்சுவை நடிகர் ஒருவர் நடிக்கும் படத்தைப்பற்றியோ, பேசும் பேச்சுக்களைப்பற்றியோ நாம் பேசாமல் இருந்தால் நமக்கு நல்லது. அந்த அளவு ஆபாசம் தலை விரித்தாடுகிறது. அந்த காலத்தில் கதாநாயகி ஒருவர் இருந்தால் கீழ் மட்ட ரசனைக்கு என்று கிளப் டான்சர் என்று ஒரு கதாபாத்திரம் இருக்கும். ஆனால் இந்த கிளப் டான்சர் வரும் நேரம் குறைவாகவே இருக்கும். கதையின் முக்கியத்துவத்தில் கிளப் டான்சர் பற்றிய நினைவுகள் படத்தைப்பார்த்து விட்டு வெளியே வரும்போதே மறந்து விடும். ஆனால் இன்றோ கதாநாயகியே ஒரு கைக்குட்டை அளவு துணியைத்தான் அணிந்து கொள்கிறார்; மற்றும் படம் முழுவதும் வருகிறார். இதில் ஆபாசத்திற்கும் கவர்ச்சிக்கும் விளக்கம் வேறு கொடுக்கிறார். மனம் முழுக்க இந்த நினைவுகள்தானே இருக்கும். அவருக்கென்ன பணம் வாங்கிகொண்டு போய்விடுகிறார். அதன் விளைவுகள் பற்றி சிந்திக்க அவருக்கேது நேரம். முன்பாவது சினிமா கொட்டகைக்கு சென்று பார்க்கவேண்டும். இப்போதோ நட்டநாடு வீட்டில் தொலைகாட்சி பெட்டிகளில் இந்த அசிங்கம் தலை விரித்தாடுகிறது

    பதிலளிநீக்கு
  11. பதிவு 2/3

    தொலைகாட்சி மெகா சீரியல்களோ தினசரி எல்லா வீடுகளிலும் அழுகையை தவிர வேறு எதவும் கேட்க முடியாத நிலையில் நம் மக்களை வைத்துள்ளன. மாமியார் மருமகள் உறவை கொச்சை படுத்துவதற்கென்றே பல சீரியல்கள். இந்த அழுகை சீரியல்களுக்கு நடுவே வரும் விளம்பரங்கள். இன்னும் ஆண்கள் அணியும் ஜட்டிக்கு மட்டுமே பெண்கள் மாடல்களாக வரவில்லை. ஒரு பாடி ஸ்பிரேக்கு வரும் விளம்பரம் பெண்களை இழிவுபடுத்துவதன் உச்சகட்டம்.

    எந்த ஒரு துறையை எடுத்துக்கொண்டாலும் ஒரு தப்பு நடந்தால் அதன் மூல காரணங்களை ஆராய RCA (Root cuase analysis) என்று ஒரு ஆய்வு நடத்துவார்கள். தப்பு என்பது விளைவுதான். காரணங்களை களைந்து விட்டால் விளைவுகளை தவிர்த்து விடலாம். இத்தகைய RCA தான் மேலே நாம் சொன்னது.

    இதை படித்தவுடன் கருத்து சுதந்திரம், தர்மம் என்றெல்லாம் பேச்சு வரும். இன்றைய உலகிற்கு இவை கண்டிப்பாக வேண்டும்தான். ஆனால் நமது கருத்தோ அல்லது படைப்போ அடுத்தவனை கெடுக்காமலிருக்க வேண்டுமல்லவா. கெடுப்பது மட்டுமன்றி அவனுடைய இந்த மாதிரி சமூகத்திற்கு கேடு விளைவிக்கும்படி உணர்ச்சிகளை தூண்டி விட்டு சம்மந்தமே இல்லாதவரை பாதிக்கும் படியாக இருக்கக்கூடாதல்லவா. நாங்கள் பணம் போட்டு படம் எடுக்கிறோம் நாங்கள் போட்ட பணத்தை எடுக்க வேண்டுமா வேண்டாமா என்று ஒரு கேள்வி வருகிறது. இப்படி கேட்பவர்களுக்கு நாம் சொல்லக்கூடிய பதில் ஒன்றே ஒன்றுதான். இதனால் கெட்டு போகிறவர்கள் உங்கள் குழந்தைகளும்தான். இன்று நீங்கள் பணத்தில் திளைக்கலாம் ஆனால் நாளை நீங்கள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். வினை விதித்தவன் திணை அறுக்க முடியாது. சினிமா உலகிலேயே இதற்கு உதாரணம் காட்ட முடியும். ஆனால் அது பல பேர் மனதை புண் படுத்தும்.என்பதால் இத்தோடு விட்டு விடுவது நன்று.

    பதிலளிநீக்கு
  12. பதிவு 3/3

    படைப்பாளிகள் முதலில் சமுதாய பிரக்ஞையோடு நடந்து கொள்ள வேண்டும். நமது படைப்புக்கள் நாட்டை திருத்துவதற்கு, பண்படுத்துவதற்கு என்ற எண்ணத்தோடு இருக்க வேண்டும்.

    மற்றொரு வழி, குழந்தைகளுக்கு பள்ளி பருவத்திலிருந்தே ஒழுக்க கல்வி ஒரு வகுப்பு நடத்துவது. மதிப்பெண் என்று பார்த்து பார்த்து இத்தகைய வகுப்புகளையெல்லாம் எடுத்து விட்டோம். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா. எனவே இன்றைய கட்டாய தேவை பள்ளிகளில் moral science. அந்த இளம் வயதிலே ஒழுக்கத்தை நாம் விதைத்து விட்டால் அது வளர்ந்து மரமாகிய பிறகு அந்த நல்லொழுக்க மரத்தை வெட்டியெறிந்து விட்டு வேறு கெட்ட எண்ணங்கள் உள்ளே நுழைவது கடினம்.

    எனவே மேற்கண்ட செயல்களை செய்வது அதுவும் உடனே செய்ய வழிமுறைகளை மேற்கொள்வது மிக மிக அவசியமாகும்.
    அய்யா அவர்கள் தனது பதிவில் வெளியிட்டால் பல பேருக்கு சென்று சேரும். பின்னர் இது ஒரு movement ஆக மாறினால் நாட்டுக்கு நல்லதுதானே.

    ஒரு தப்பு நடந்த பிறகு ஆளாளுக்கு சத்தம் போடுவதை விட, எப்படி அதை கையாளலாம் என்று பேசுவதை விட, அந்த தப்பு நடக்காமலிருக்க என்ன செய்ய வேண்டும் என்று பேசுவது சால சிறந்தது அல்லவா. அதற்கான முயற்சிகளை மேற்கொள்வது ஒன்றே இத்தகைய பாலியல் கொடுமைகளுக்குள்ளான ஆத்மாக்களுக்கு நாம் செய்யும் பெரிய உதவியாகும்

    பதிலளிநீக்கு
  13. //ஒரு தப்பு நடந்த பிறகு ஆளாளுக்கு சத்தம் போடுவதை விட, எப்படி அதை கையாளலாம் என்று பேசுவதை விட, அந்த தப்பு நடக்காமலிருக்க என்ன செய்ய வேண்டும் என்று பேசுவது சால சிறந்தது அல்லவா. அதற்கான முயற்சிகளை மேற்கொள்வது ஒன்றே இத்தகைய பாலியல் கொடுமைகளுக்குள்ளான ஆத்மாக்களுக்கு நாம் செய்யும் பெரிய உதவியாகும்// Right point.
    //படைப்பாளிகள் முதலில் சமுதாய பிரக்ஞையோடு நடந்து கொள்ள வேண்டும். நமது படைப்புக்கள் நாட்டை திருத்துவதற்கு, பண்படுத்துவதற்கு என்ற எண்ணத்தோடு இருக்க வேண்டும்.

    மற்றொரு வழி, குழந்தைகளுக்கு பள்ளி பருவத்திலிருந்தே ஒழுக்க கல்வி ஒரு வகுப்பு நடத்துவது. மதிப்பெண் என்று பார்த்து பார்த்து இத்தகைய வகுப்புகளையெல்லாம் எடுத்து விட்டோம். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா. எனவே இன்றைய கட்டாய தேவை பள்ளிகளில் moral science. அந்த இளம் வயதிலே ஒழுக்கத்தை நாம் விதைத்து விட்டால் அது வளர்ந்து மரமாகிய பிறகு அந்த நல்லொழுக்க மரத்தை வெட்டியெறிந்து விட்டு வேறு கெட்ட எண்ணங்கள் உள்ளே நுழைவது கடினம்.
    // i am also represent the same

    பதிலளிநீக்கு
  14. ரெண்டு தண்டனைகளையும் தினம் ஒன்னுன்னு மாத்தி மாத்தித் தரலாம்.

    பெயரில்லா சொன்ன பதில்கள் அத்தனையும் அருமை.

    இந்த மாதிரி எல்லாம் வேணுமுன்னு மக்கள் கேக்கறாங்கன்னு சொல்லும் சினிமாக்காரர்களை.............. திருத்தணும் முதலில்!

    பதிலளிநீக்கு
  15. இது மாதிரி தண்டனைகளை நிறைவேற்ற கொடூரமான மனம் கொண்ட நபர்கள் தேவை. கொடூரமான மனம் கொண்டவர்களே அடுத்தவர்கள் (அது நல்லவராக இருந்தாலும் கெட்டவராக இருந்தாலும்) துன்பப் படுவதை பார்த்து ரசிக்க முடியும். கொடூரமான மனம் கொண்டவர்கள் நல்லவர்களாக இருக்க முடியாது.

    பதிலளிநீக்கு
  16. ஐயா உங்கள் தண்டனை கற்பனை நல்லா இருக்கு. எனக்கு கழுமரம் போன்ற அந்த கால தண்டனைகளை இன்னும் நேர்த்தியாய் உங்களிடம் பகிர ஆசை். Mail panungal kaliadimai@gmail.com

    பதிலளிநீக்கு
  17. ஐயா உங்கள் தண்டனை கற்பனை நல்லா இருக்கு. எனக்கு கழுமரம் போன்ற அந்த கால தண்டனைகளை இன்னும் நேர்த்தியாய் உங்களிடம் பகிர ஆசை். Mail panungal kaliadimai@gmail.com

    பதிலளிநீக்கு