சனி, 9 மார்ச், 2013

ஒரு விளம்பரம்

விளம்பரம்

ஒரு புதிய விமான சர்வீஸ்


தமிழ்நாட்டிலிருந்து தேவலோகத்திலுள்ள இந்திரபுரிக்கு விமான சர்வீஸ் தொடங்கவுள்ளோம்.  கட்டணம் ஒரு கோடி ரூபாய் மட்டுமே. போக விருப்பமுள்ளவர்கள் முன் பதிவு செய்துகொள்ளவும்.

எமது புது விமான சர்வீசுக்கு அனுபவமுள்ள பைலட்டுகள், கோ-பைலட்டுகள், விமான பணிப்பெண்கள், மற்றும் கிரவுண்ட் ஸ்டாப் தேவைப்படுகிறார்கள். வேலைக்கு அணுகவும். நின்று போன விமான சர்வீஸ்களிலிருந்து வருபவர்கள் முறையான டிஸ்சார்ஜ் சர்டிபிகேட்டுடன் வரவும்.டிஸ்கி: இது ஒரு கற்பனை விளம்பரம். உண்மை என்று ஏமாந்து போனால் கம்பெனி பொறுப்பேற்காது.

15 கருத்துகள்:

 1. என்னிடம் கொஞ்சம் பணம் குறைகிறது.... 99 லட்சத்து 95 ஆயிரம் மட்டும் குறைகிறது. பரவாயில்லையா?

  பதிலளிநீக்கு
 2. புதிய விமான சர்வீஸ் சிறப்பாக வளர வாழ்த்துகள்...!!

  பதிலளிநீக்கு
 3. பதிவர்களுக்கு ஏதாவது சலுகைக்கட்டணம் உண்டா ஐயா.??!

  பயணம் செய்து பதிவுகள் எழுதுவார்களே ..!

  விளம்பரமும் கிடைக்குமே ..!

  பதிலளிநீக்கு
 4. விமான சர்வீஸ் ஓகே. ஆனால் தேவ லோகம் இருக்கும் இடம் பூலோகத்தில் இருந்து ரொம்ப தூரம் ஆச்சே. இங்கு பக்கத்தில் இருக்கும் நிலவுக்கு போவதற்கே விமானத்தில் போக முடியாது ராக்கெட்டில்தானே போக வேண்டும். எனவே விமான சர்வீசை ரத்து செய்து விட்டு ராக்கெட் சர்வீஸ் ஆரம்பித்தால் ரொம்ப பேர் இந்த கோடியில் இருக்கும் பூலோகத்தில் இருந்து அந்த கோடியில் இருக்கும் தேவலோகத்துக்கு கையில் ஒரு கோடியுடன் ஓடி வருவார்களே.

  பதிலளிநீக்கு
 5. அப்பாட ஒரு நிமிசம் பேயடிச்ச மாதிரி இருந்திச்சு .
  இது ஒண்டுதான் நடக்க இல்லை இதுக்குமா என்று :)
  அழகி கற்பனை தான் :)) வாழ்த்துக்கள் ஐயா மேலும் தொடருங்கள் .

  பதிலளிநீக்கு
 6. //நின்று போன விமான சர்வீஸ்களிலிருந்து வருபவர்கள்//
  கிங் பிஷர் விமான பணிபெண்கள் வந்தால் உடனே எடுத்துக்கொள்ளுங்கள்.
  டிஸ்சார்ஜ் சர்டிபிகேட்டுக்கள் எல்லாம் கேட்டுகொண்டிருக்க வேண்டாம்

  பதிலளிநீக்கு
 7. //கட்டணம் ஒரு கோடி ரூபாய் மட்டுமே//

  வேண்டாம் சார்
  ஒரு கோடி கட்டணம் வைத்தால் பாழாய்போன அரசியல்வாதிகளும் எல்லா தில்லுமுல்லும் தெரிந்த வியாபாரிகளும்தான் தேவலோகம் வர முடியும்.
  ஏதோ உருப்படியாக செய்யலாம் என்று போயிருக்கும் உங்களை தூக்கி முழுங்கி விடுவார்கள்
  அப்புறம் தேவ லோகமாவது ஒன்றாவது
  இன்னொரு பூலோகந்தான்
  அப்புறம் கனவில் கூட (பதிவில் கூட) நாங்கள் நினைக்கும் நல்ல உலகத்தை காண முடியாது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தனக்கு மிஞ்சித்தான் தான தருமம். நான் ஏதோ உருப்படியா செய்யப் போயிருக்கிறதா யார் உங்களுக்குச் சொன்னாங்க. எனக்கு மண்டையில களிமண்ணா இருக்கு? கவர்மென்ட் சர்வீஸ்லதான் உருப்படியா ஒண்ணும் சேர்த்தல. இப்பவாவது ஏதாவது பண்ணலாம்னு பார்த்தா அதுக்கு உலை வச்சுடுவீங்க போலிருக்குதே?

   நீக்கு
 8. பதில்கள்
  1. புஷ்பக் விமான் Pushpsk Viman பேர் எப்படியிருக்குங்க? சர்வீஸ் பிச்சுக்கிட்டு போகப்போகுது பாருங்க.

   நீக்கு
 9. People lost huge money on many services?. Is this also a kind of that service?

  பதிலளிநீக்கு
 10. அருமையான விளம்பரம்! திருமதி இராஜராஜேஸ்வரி சொல்வது போல பதிவர்களுக்கு கட்டண சலுகை கொடுங்கள்!
  தேவலோகம் வந்து அதைப்பற்றி பதிவு எழுதி உங்கள் விமான சர்வீஸை லாபகரமாக்குகிறோம்!
  (இதுவும் கற்பனையே! உண்மை என்று நம்பி ஏமாற வேண்டாம்!

  பதிலளிநீக்கு