வியாழன், 28 மார்ச், 2013

கள்ளக்காதலை எதிர்கொள்வது எப்படி?

நாட்டில் அவலங்கள் அதிகப்பட்டு வருகின்றன. நம் மனதிற்கு அவை பிடிக்கவில்லை என்பதற்காக அவைகளை புறக்கண்ப்பதால் அவை மறைந்து விடப்போவதில்லை. அவைகளை நாம் எவ்வகையிலாவது சந்திக்க நேரிடும்.

கள்ளக்காதல் என்பது ஒரு முக்கூட்டுப் பிரச்சினை. கணவன், மனைவி, கள்ளக்காதலன் அல்லது காதலி. இது இன்று அல்லது நேற்று முளைத்த பிரச்சினை இல்லை. காலங்காலமாக இருந்து வரும் பிரச்சினை. இதை சாதாரண மனிதன் எப்படி எதிர்கொள்ளுகிறான் என்று பார்ப்போம்.

ஆண் என்றால் இதை மூன்று வழிகளில் கையாளுகிறான்.

1. கள்ளக்காதலனைப் போட்டுத்தள்ளுவது.

இதுதான் வழக்கமாக நடக்கும் ஒன்று. அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் இதை ஒரு குற்றமாகவே கருத மாட்டார்கள். ஆனால் இந்தியாவில் இது ஒரு கொலைக்குற்றமாக கருதப்படுகிறது. இந்தக் குற்றம் புரிபவன் குறைந்த பட்சம் ஆயுள் தண்டனை பெறுவான். ஜெயிலில் களி சாப்பிடும்போதுதான் அவனுக்கு யோசனை வரும்.

நாம் ஏன் இப்படி செய்தோம் என்று யோசிப்பான். குற்றம் செய்தது அவன் பெண்டாட்டி. இதற்கு நான் தண்டனை அனுபவிக்கிறேனே, அவள் வெளி உலகில் சுதந்திரமாக வாழ்கிறாளே என்று எண்ணி வருந்துவான்.

2. கள்ளக்காதலனையும் பெண்டாட்டியையும் போட்டுத் தள்ளுவது.

மிகவும் உணர்ச்சி வசப்படும் ஆண் செய்யும் காரியம் இதுதான். குற்றம் புரிந்தது இருவர் என்பதால் ஒருவரை மட்டும் தண்டிப்பது சரியல்ல என்பது இவர்கள் எண்ணம். ஆனால் விளைவு என்னமோ ஒன்றுதான். இரட்டைக் கொலைக்காக இவன் தண்டனை பெறுவான்.

ஜெயில் தண்டனை என்பது சாதாரணமானதல்ல. ஒருவன் குற்றம் சாட்டப்பட்டு விசாரணைகள் முடிந்து தண்டனை பெற்று அதை அனுபவித்து முடித்து வெளியில் வரும்போது அவன் மனநிலை எப்படி இருக்கும் என்று சொல்லமுடியாது.

3. இருவரையும் போட்டுத் தள்ளிவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்வது.

இதுதான் உச்சகட்ட உணர்ச்சிகளின் வெளிப்பாடு. இதில் உள்ள ஒரே சௌகரியம் என்னவென்றால் கதை உடனடியாக முடிந்து விடுகின்றது. போலீஸ்காரர்களுக்கும் நீதிபதிகளுக்கும் வேலை குறைவு. பிரேதப் பரிசோதனை முடித்து அடக்கம் செய்தால் கேஸ் முடிந்துவிடும்.

இந்த மூன்று வழிகளிலும் உள்ள ஒரே வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், அவர்களுக்கு குழந்தைகள் இருந்தால் அவர்களுடைய எதிர்காலம் என்ன ஆகும் என்பதே.

12 கருத்துகள்:

 1. கண்டுக்காமல் துறவியாவோர் எத்தனை பேரோ...!

  பதிலளிநீக்கு
 2. நமது சட்டவிதிகளை அதிக பட்ச தண்டனை தரும் வண்ணம் மாற்றினாலோழிய இதை முழுதும் ஒழிக்கமுடியாது. மேலும் நமது ஊடகங்கள் குறிப்பாக தொலைக்காட்சிகள் இந்த அவலங்களை காட்டாமல் இருப்பது நல்லது.

  பதிலளிநீக்கு
 3. இரண்டு கையாலும் ஆசையோடு எதிர்கொள்ளலாம்னு பாத்தா.. ஏதும் வசப்படக் காணோமே?

  பதிலளிநீக்கு
 4. கணவன் மனைவிக்கும் இடையே நல்ல காதல் இருந்தால் ஏன் கள்ள காதல் உருவாகப் போகிறது ?

  பதிலளிநீக்கு
 5. நான் சொல்லும் கருத்துக்கள் கொஞ்சம் கடுமையாக இருக்கலாம். ஆனால் உண்மையானவை
  1) அந்த காலத்திலும் இது இருந்திருக்கலாம். ஆனால் அளவு குறைவாக இருந்திருக்கும். ஊடகங்கள் இந்த அளவு இல்லாததால் வெளியே தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனாலும் அன்று செய்திகள் வெளியிடுவதில் ஒரு சுய கட்டுப்பாடு இருந்தது. இத்தகைய செய்திகள் அதிகமாக வெளி வராது
  இன்றோ சென்சேசனல் செய்திகள் வெளியிடுவதில் அனைத்து ஊடகங்களும் போட்டி போடுகின்றன. டெல்லி இளம் பெண் நிகழ்ச்சி இதற்க்கு நல்ல உதாரணம். இவ்வளவு நடந்த பிறகும் தினமும் இத்தகைய நிகழ்சிகளை பற்றி படிக்க வேண்டியதைத்தான் இருக்கிறது. காரணம் மதில் மேல் பூனையாக இருப்பவர்களுக்கு நாமும் இந்த காரியங்களை செய்யலாம் என்ற ஊக்கத்தை இத்தகைய செய்திகள் கொடுத்து விடுகின்றன. இத்தகைய நிகழ்சி பற்றிய செய்திகள், அதற்கு உரிய தண்டனை, அவமானங்கள் பற்றிய செய்திகள் இரண்டையும் படித்தாலும் we tend to believe what we wish என்பதற்கேற்ப நாம் இரண்டாவது செய்தியை உதாசீனம் செய்து விடுகிறோம். மாட்டிகொண்டால்தானே இந்த அவமானமும் தண்டனையும். நாம் மாட்டிகொள்ளாமல் இந்த தப்பை செய்து விடலாம் என்ற எண்ணம் வந்து விடுகிறது. இதை தடுக்க இத்தகைய நிகழ்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து புப்ளிசிசே பண்ணாமளிருக்க வேண்டும். ஆனால் யார் இதை ஒத்துகொள்ள போகிறார்கள். பெண்கள் இயக்கத்திற்கு போராட ஒரு காரணம் வேண்டும். ஊடங்களுக்கு சென்சேசனல் செய்திகள் வேண்டும். எதிர் கட்சிகளுக்கு ஆளும் கட்சியை குறை சொல்ல ஒரு காரணம் வேண்டும். இதில் தப்பிழைகப்பட்ட அந்த பெண்ணுக்கு எவ்வளவு பெரிய அவமானத்தை தேவையற்ற விளம்பரத்தை கொடுக்கிறோம் என்று யாரும் நினைப்பதில்லை.
  மீதி அடுத்த பின்னூட்டத்தில்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை. இன்றுள்ள ஊடகங்கள் இத்தகைய செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. இந்தப் பதிவை நான் எழுதக் காரணம் என்னுடைய பதிவுகளை படிப்பவர் எண்ணிக்கை குறைந்து கொண்டிருக்கிறது. அதை அதிகப் படுத்தலாமா என்ற முயற்சாதான் இந்தப் பதிவு.

   நீக்கு
  2. சார், நான் உங்க பதிவை ரீடரில் படிக்காம விடமாட்டேன். கருத்து போடுவதில் தான் கொஞ்சம் சோம்பேறி.

   நீக்கு
 6. இரு மனங்கள் ஒன்றாக வேண்டும்...

  இன்றைக்கு எங்கே...?

  பணங்கள், வசதிகள், ..., ..., etc.

  பதிலளிநீக்கு
 7. நான் சொல்லும் கருத்துக்கள் கொஞ்சம் கடுமையாக இருக்கலாம். ஆனால் உண்மையானவை

  2) இத்தகைய நிகழ்வுகள் நடக்க அடுத்த காரணம் இந்த சினிமா இயக்குனர்கள். முக்கோண காதல், கல்லூரி காதல், பள்ளி கூடத்தில் காதல், பக்கத்துக்கு வீட்டு, எதுத்த வீட்டு பொண்ணுகளோடு காதல், கல்யாணமான பொண்ணோடு காதல் என்று சினிமாவையே காதல் இல்லை என்றால் உலகமே இல்லை என்ற அளவுக்கு ஆக்கிவிட்டார்கள். இவர்களை மாதிரி மன வக்கிரம் பிடித்தவர்களை பார்த்தல் அரிது. காசு பார்க்கவேண்டும் என்பதற்காக என்ன மாதிரி வேண்டுமானாலும் கதை எழுதுவார்கள். இலை மறை கை மறை என்றிருந்த காலம் போய் எல்லாமே வெளிப்படை என்ற அளவுக்கு கொண்டுவந்து விட்டார்கள். சமுதாயத்தை சீர் கெடுத்ததில் இவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. எங்கோ ஒரு இடத்தில் நடந்த தப்பை வெளிச்சம் போட்டு காட்டி நீயும் இப்படி செய்யலாமே என்று தூண்டி விடுவதில் சினிமாவுக்கு ஈடு இணை கிடையாது.

  பதிலளிநீக்கு

 8. நான் சொல்லும் கருத்துக்கள் கொஞ்சம் கடுமையாக இருக்கலாம். ஆனால் உண்மையானவை

  3) அடுத்த முக்கியமான காரணம் நாம்தான். நம் குழந்தைகள் ஐஐடி இல்தான் படிக்க வேண்டும். டாக்டர் தான் ஆக வேண்டும் என்று நினைத்துகொண்டு residential ஸ்கூல் களில் விடுகிறோம். அங்கு ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொள்ளாமல் பக்கா சுய நலத்துடன் அடுத்தவனை விட நான் ஒரு மார்க் அதிகமாக எடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் படிக்கிறார்கள். ஒழுக்கத்தை போதிக்கும் பீரியட்ஸ் எல்லாம் கணக்குக்கும் அறிவியலுக்கும் ஒதுக்கப்பட்டு விட்டன. மாரல் சயின்ஸ் கிளாசஸ் எல்லாம் காணாமலேயே போய்விட்டன. அந்த ஒரு பாடத்தில் சொல்லிகொடுப்பவை ஒரு தலைமுறையையே காப்பற்றுமே. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? ஐந்தில் நாம் குழந்தைகளுக்கு materialistic ஆக
  வாழ சொல்லிகொடுத்து விடுகிறோம். ஜெயிப்பது ஒன்றே வாழ்க்கை என்பதை மந்திரம் மாதிரி மனத்தில் பதித்து விடுகிறோம். நீதான் முக்கியம் வேறு யாருமல்ல என்பதை அழியாத வண்ணம் அவன் எண்ணத்தில் உண்டாக்கி விடுகிறோம். ஒரே குழந்தை மிஞ்சி போனால் ரெண்டு அதுவும் ஒரு ஆண் ஒரு பெண் என்பதால் ஏகப்பட்ட செல்லம். கேட்பதற்கு முன்பு எல்லாம் கிடைத்து விடுகிறது. இதெல்லாம் சேர்ந்துதான் எதற்கு ஆசை படுகிறோமோ அதை அடைய, அது நல்லதா கெட்டதா என்று கூட பார்க்காமல் முரட்டுதனமாக முயல்கிறோம்.
  இதையெல்லாம் நீக்கினால்தான் இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க முடியும்.

  பதிலளிநீக்கு
 9. புரிதல் இருந்தால் கள்ளக் காதல் பிரச்சனையில்லை

  பதிலளிநீக்கு