எச்.ஜி.வெல்ஸ் எழுதிய இந்தக் கதையை பலரும் படித்திருப்பீர்கள். இது ஒரு விஞ்ஞான கற்பனை.
ஒரு மனிதனுக்குள் இரு வேறு மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது இந்தக் கதையின் அடிப்படை. ஒருவன் நல்லவன். இன்னொருவன் கெட்டவன். அதாவது எல்லோருக்குள்ளும் இந்த இரண்டு குணங்களும் இருக்கிறது என்பது ஒரு சித்தாந்தம்.
ஒரு டாக்டர் தன் பரிசோதனைகளின்போது ஒரு புது மருந்தை அகஸ்மாத்தாக கண்டு பிடிக்கிறார். அந்த மருந்தை சாப்பிட்டால் மனிதன் முற்றிலும் மாறி விடுகிறான். அப்போது அவனுடைய வக்கிர குணங்களெல்லாம் தலை தூக்கி இருக்கின்றன. அதற்குள்ள மாற்று மருந்தை சாப்பிட்டால் பழையபடி நல்ல மனிதராக ஆகி விடலாம்.
இந்த மருந்தை உபயோகித்து அந்த டாக்டர் தன்னை அடிக்கடி மாற்றிக்கொள்கிறார். பிறகு ஒரு மாற்றமுடியாத நிலைக்குப்போய் மாண்டு போகிறார்.
இந்தக் கதையை என் இளமைக் காலத்திலேயே படித்திருக்கிறேன். அப்போதெல்லாம் ஒரு கற்பனை என் மனதில் தோன்றும். நமக்குள்ளும் இப்படி ஒரு கெட்ட மனிதன் இருப்பானா என்று தோன்றும். அன்றைய காலகட்டத்தில் இதை சோதனை செய்து பார்க்கும் அளவிற்கு தொழில் நுட்பங்கள் வளரவில்லை.
சமீபத்தில் நான் ஒரு ஸ்மார்ட் போன் வாங்கினேன். அதில் இரு பக்கமும் கேமரா இருக்கிறது. ஆனால் அவைகளை முழுமையாக பயன்படுத்தும் அளவிற்கு நான் தேர்ச்சி பெறவில்லை. ஒரு நாள் ஒரு எக்சிபிஷனில் இந்த போனை வைத்து சில படங்கள் எடுக்க முயற்சி செய்தேன். அப்போது திடீரென்று என் முகம் ஸ்கிரீனில் தெரிந்தது. எதையோ அழுத்த அந்த படம் போனில் பதிவாகிவிட்டது.
வீட்டிற்கு வந்து சாவகாசமாக நான் எடுத்த படங்களைப் பார்த்துக்கொண்டு வரும்போது இந்தப் படமும் தெரிந்தது. அதில் என்ன விசேஷம் என்றால் நான் எச்.ஜி.வெல்ஸ் கதையைப் படித்த போது ஏற்பட்ட ஆசை இந்த படத்தில் நிறைவேறி விட்டது. என்னுடைய மறுபக்கம் இதில் தெளிவாக பதிவாகியுள்ளது.
இதை நீங்களும் பார்க்கவேண்டாமா? அதனால் உங்கள் பார்வைக்கு, என்னுடைய இரண்டு பக்கங்களையும் வைக்கிறேன். அநேகமாக இந்தப் படங்களைப் பார்த்த பிறகு என்னுடைய தளத்திற்கு வரும் அன்பர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விடும் என்று எதிர்பார்க்கிறேன்.

எது என் நல்ல பக்கம், எது என் கெட்ட பக்கம் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.
ஒரு செல்ஃபி பிக்சர் போடுறத்துக்கு இம்புட்டு விளக்கமா :)
பதிலளிநீக்குஇரண்டும் அழகுதான் ஐயா
பதிலளிநீக்குஐயா. நானும் அந்த கதையைப் படித்திருக்கிறேன். அதில் கதாநாயகனின் புறத்தோற்றத்தில் எந்த மாற்றமும் இருக்காது, நடவடிக்கைகளில் மட்டும் மாற்றம் இருக்கும் என படித்ததாக நினைவு.
ஆனால் தங்களது புகைப்படங்களில் மாற்றம் இருக்கிறதே. தங்களுடைய கம்பீரமான மீசை காணாமல் போய் இருக்கிறதே! இரண்டுமே நன்றாக இருக்கின்றன
செல்ஃபி படமா.?இந்த நோய் வேகமாகப் பரவிவருகிறது.
பதிலளிநீக்குஹைடு கண்டுபிடித்து விட்டேன்
பதிலளிநீக்குபுகைப்படமும் அதற்கான கதையும் அருமை! நன்றி!
பதிலளிநீக்குபடமெடுக்கும் ஆங்கிளை பொருத்து முகத்தோற்றம் மாறும் இந்த படம் எனது கணிப்பில் கேமரா கீழிருந்து மேலாக பிடிக்க பட்டிருக்கிறது தவிர உங்களது கெட்ட பக்கமாக தோன்றவில்லை.
பதிலளிநீக்குஇரு படங்களுமே அருமை தான் ஐயா.
பதிலளிநீக்குஇக்கதையினைப் படித்திருக்கிறேன் ஐயா
பதிலளிநீக்குஆனால் தங்களால் எப்பொழுதும் மிஸ்டர் ஹைடாக மாறவே இயலாது
தங்களின் சுபாவம் அப்படிப்பட்டது
தம 1
பதிலளிநீக்குஉங்களைப்போன்ற நல்லவர் ஒருவர் கெட்டவராக மாறவேண்டுமென்றால் அதற்கு அதீத கெடுதி உங்களால் பொறுத்துக்கொள்ளமுடியாத அளவுக்கு நடந்திருக்க வேண்டும். அப்போதுதான் தன சுய கட்டுப்பாட்டை மீறி அப்படிப்பட்ட கெட்டவன் வெளியே வரமுடியும். உங்கள் விசயத்தில் அப்படி நடந்த மாதிரி தெரியவில்லை.
பதிலளிநீக்குஆனாலும் அப்படிப்பட்ட எண்ணம் ஒன்று மனதளவில் உருவாகியுள்ளது என்பது புரிகிறது.
காந்திக்குக்கூட புகைவண்டிப்பெட்டியில் இருந்து கருப்புநிறத்தான் என்ற ஒரே காரணத்துக்காக வெளியே தூக்கி எறியப்பட்ட சம்பவம்தான் அவரை மாற்றியது. ஆனால் அந்த மாறிய குணத்தை காந்திஜி நல்ல வழியில் திருப்பிவிட்டதால் நமக்கு அஹிம்சை வழியில் சுதந்திரம் கிடைத்தது.
அந்த மாதிரி உங்களுக்குள்ளிருந்தும் (அதிகமான ஆசைதான் இல்லையா?) ஒரு கெட்டவன் வெளியே வந்தால் அதை காந்திஜி போன்று நல்ல வழியில் திருப்பி விடுங்கள்.
மற்றபடி இரண்டு படங்களும் நன்றாகத்தான் இருக்கின்றன.
சேலம் குரு
நன்றி. குரு.
நீக்குதங்கள் படத்தை பதிவில் வெளியிட வேண்டும். அவ்வளவுதானே அய்யா. மீசையுடன் ஒரு படம் மீசையின்றி ஒரு படம். ( தமிழ் படங்களில் வரும் இரட்டை வேட கதாநாயகன் மாதிரி). உங்களுக்கு வேண்டுமென்றால் ஒன்று சாந்தமாகவும் இன்னொன்று கொட்டோரமாகவும் தோன்றியிருக்கலாம். எங்களுக்கென்னவோ இரண்டுமே சாந்தமாகத்தான் இருக்கின்றன.
பதிலளிநீக்குநல்லவன் கெட்டவனாவது அவ்வளவு எளிதல்ல.
சேலம் அஞ்சு
நன்றி, அஞ்சு. 80 வயசுக்கு மேல என்ன பண்ண முடியும். இந்த மாதிரி பதிவு போடலாம். அவ்வளவுதான்.
நீக்குஇந்த மாதிரி ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கெட்டவன் இருக்கத்தான் செய்கிறான். அநியாயத்தை கண்டு பொங்கி எழ அவனுக்கு ஆசைதான். ஆனால் அதை செய்ய இயலாமல் அவனை தடுப்பது அவனுக்குள்ள குடும்ப பொறுப்புகள்தான். இத்தகைய "பொங்கி எழும் நிகழ்வுகளில்" ஈடுபட வேண்டியது இளைஞர்கள் கையில்தான் உள்ளது. ஆனால் அவர்களோ சினிமாவிலும் மொபைல்களிலும் காதல் எனும் மாயப்பிசாசிடமும் மாட்டிக்கொண்டு சமூகபிரக்ஜை இன்றி இருக்கிறார்களே. அதனால் நம்மை போன்ற கிழடுகள் இப்படி இரண்டு புகைப்படங்களைபோட்டுகொண்டு நானும் கெட்டவன் என்று சொல்லிகொள்ளவேண்டியதுதான் (வடிவேலு ஒரு படத்தில் நானும் ரவுடிதான் என்னையும் கைது செய்யுங்கள் என்று சொல்வது போல)
பதிலளிநீக்குதிருச்சி காயத்ரி மணாளன்
இந்த இரண்டு படங்களை வைத்து எங்களால் எந்த படம் கெட்டவர் எது நல்லவர் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. பக்கவாட்டு தோற்றத்தில் இன்னும் இரண்டு படங்களை வெளியிடுங்களேன். எங்களுக்கு சுலபமாக இருக்கும். ( அடுத்த பதிவுக்கு அவள் கொடுத்து விட்டேன். சந்தோசம்தானே)
பதிலளிநீக்குசேலம் அஞ்சு
சினிமாக்களில்தான் (கண்டிப்பாக அந்தக்கால படங்களில்) இப்படி கெட்டவன் பார்ப்பதற்கு சகிக்காமலும் நல்லவன் நன்கு அழகாகவும் இருப்பான். ஒருவர் நல்லவரா அல்லது கெட்டவரா என்பது அவர் செய்யும் செயல்களில்தான் வெளிப்படுமே ஒழிய இப்படி உருவத்தினால் அல்ல. உங்கள் படம் கர்ண கொடூரமாக இருந்தாலும் (அப்படி இல்லை என்று உங்களுக்கும் எங்களுக்கும் நன்றாக தெரியும்)உங்களால் கெட்டது செய்ய முடியாது என்று அனைவருக்கும் தெரிந்ததே.
பதிலளிநீக்குதிருச்சி தாரு