இந்தக் கதையைப் படிக்க இங்கே சுட்டவும்.
கதையின் விமர்சனம்.
ஒவ்வொருவர் வாழ்க்கையின் ஆரம்ப காலங்களும் மகிழ்ச்சியும்
வேதனைகளும் கலந்துதான் ஆரம்பித்திருக்கின்றன. அவரவர் விதிப்படி அவர்கள் வாழ்க்கைப்
பாதையில் பயணிக்கிறார்கள்.
அந்தக் காலத்து ஸ்டோர் வாழ்க்கை என்பதை இன்று நினைத்துக்கூடப்
பார்க்கமுடியாது. ஆனால் மக்கள் அவைகளில் வசித்துக்கொண்டுதான் இருந்திருக்கிறார்கள்.
அந்த வாழ்க்கை முறையை அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்
கதாசிரியர். அந்த வாழ்க்கையிலும் இளம் பருவ ஆசைகள் வரத்தான் செய்யும்.
அப்படி அவர் வாழ்வில் வந்தவர்கள் மூவர். ஆனால் ஒருவருடன்தான்
வாழ்க்கைப் பிணைப்பு ஏற்பட்டுள்ளது. காரணம் குடும்ப பாரம்பரியம். குடும்பத்தில் மூத்த
மகனாகப் பிறப்பவனுக்கு சில கடமைகள் இருக்கின்றன. தன் சுகத்தை மட்டும் பார்த்துக்கொண்டு
போக முடியாது. அவனுக்குப் பின் இருக்கும் தம்பி தங்கைகளின் வாழ்வும் அவன் கையில்தான்
இருக்கிறது.
அந்தக்காலத்தில் இந்தப் பொறுப்பை மக்கள் உணர்ந்து நடந்து
கொண்டார்கள். அவர்கள் வாழ்க்கை சிறப்பாக அமைந்தது. இது ஒரு வேள்வி என்றே சொல்லலாம்.
இந்த வேள்வியில் அவ்வப்போது தோன்றும் ஆசாபாசங்கள் எரிந்து போகும்.
அப்படி எரிக்கப்பட்டவைகளில் சில பிற்காலத்தில் வாழ்வில் தலை
காட்டலாம். அப்போது அவை எந்த நிலையிலும் இருக்கலாம். இந்த உண்மையை இரண்டு சம்பவங்கள்
மூலம் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் ஆசிரியர். இது போன்ற நிகழ்வுகள் வெறும் கற்பனையல்ல.
நிஜவாழ்விலும் நடக்கலாம். அப்படியான ஒரு கதையைப் படித்த திருப்தி ஏற்பட்டது.
தங்களின் மதிப்புரையைப் படித்துவிட்டு திரு வைகோ அவர்களின் ‘மறக்க மனம் கூடுதில்லையே’ கதையைப் படித்தேன். ஸ்டோஸ் எனப்படும் வீடுகளில் உள்ளோரின் வாழக்கையை நேரில் காண்பது போல் இருந்தது கதையைப் படிக்கும்போது. நீங்கள் முத்தாய்ப்பாய் சொன்னதுபோல ‘’இது போன்ற நிகழ்வுகள் வெறும் கற்பனையல்ல. நிஜவாழ்விலும் நடக்கலாம். அப்படியான ஒரு கதையைப் படித்த திருப்தி ஏற்பட்டது.’’ என்பது உண்மையே. கதையைப் படித்து மனம் கரைந்தேன்.
பதிலளிநீக்குஅது சரி தங்களின் மதிப்புரைக்கு ஒரு நடிகையின் படத்தைப் போட்டதேன்? கதாநாயகனின் வாழ்வில் மூவர் குறுக்கிட்டதற்கும் இதற்கும் ஏதும் சம்பந்தம் உண்டோ?
"நெருக்கத்தில் அந்தப்பெண்ணைப் பார்த்ததும் நான் ஸ்தம்பித்துப்போய் நின்று விட்டேன். "
நீக்குகதாசிரியரின் இந்த வரிகளுக்குப் பொருத்தமான ஒரு படம் போட விரும்பினேன. அதன் விளைவுதான் இது.
அன்புள்ள ஐயா, வணக்கம்.
பதிலளிநீக்குதங்களின் இந்த விமர்சனம் படிக்க மிகவும் சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் உள்ளது.
தங்கள் தள வாசகர்களையும் அந்த என் சிறுகதையை வாசிக்க வைக்கத் தூண்டுதலாகவும் அமைந்துள்ளது.
தாங்கள் தேர்வு செய்து கொடுத்துள்ள படம் அனைவருக்கும் ஓர் ‘கிக்’ ஏற்படுத்தி தங்கள் பக்கம் சுண்டியிழுப்பதாகவும் உள்ளது :)))))
தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
என் ’சிறுகதை விமர்சனப் போட்டி’யில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்ததற்கும் அதை இன்று இங்கே தனிப்பதிவாக வெளியிட்டுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.
அன்புடன் கோபு [VGK]
ooooooooooooooooooooooooooo
கதை படித்தேன். கதையின் நாயகன் வசித்திருக்கும் ஆரம்ப கால வீடுகளை ஆசிரியர் கண்முன் கொண்டுவந்திருக்கும் விதம் உண்மையில் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இப்படியான வீடுகள் இங்கு (இலங்கையில்) இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கின்றது. அண்மைய மண்சரிவிலும் பாதிக்கபட்டதும் இப்படியான வீடுகள்தான்
பதிலளிநீக்குநல்ல விமர்சனம். இருந்தும் கதையில் சிறு சலிப்புத்தன்மை இல்லாமலுமில்லை :)
தங்களின் விமர்சனம் படிக்க மிகவும் சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது
பதிலளிநீக்குநன்றி ஐயா
நல்ல விமர்சனம் ...
பதிலளிநீக்கு