திங்கள், 24 நவம்பர், 2014

இது என்ன வியாதி?

இரண்டு நாட்களாக தமிழ்மணம் திரட்டியில் இருந்து சில தளங்களை பார்வையிடும்போது கீழ்க்கண்ட படத்தில் இருப்பது போல் இருட்டிக்கோண்டு வருகிறது. கூடவே ஒரு சுட்டியும் தெரிகிறது. பதிவை மேலும் படிக்க பக்கத்தில் இருக்கும் விளம்பரத்தை சுட்டுங்கள் என்கிறது. ஆனால் பக்கத்தில் எந்த விளம்பரமும் இல்லை.

சில பதிவுகளில் மட்டுமே இவ்வாறு ஆகிறது.

வேறு யாருக்காவது இந்த அனுபவம் உள்ளதா?


படத்தின் மேல் கர்சரைக் கொண்டு போனால் படம் பெரிதாகத் தெரியும்.

12 கருத்துகள்:

 1. நான் அந்த வழியை உபயோகப் படுத்துவதில்லை என்பதால் தெரியவில்லை என்பதே என் பதில்! :))

  பதிலளிநீக்கு
 2. எனக்கும் இந்த அனுபவம் உண்டு. இது மாதிரியான பதிவுகள் என்றாலே அந்த பக்கம் போவதில்லை.

  பதிலளிநீக்கு
 3. சில பதிவுகளைப் பார்க்க க்ளிக் செய்தால்..... ஏகப்பட்ட விளம்பரங்கள் முன்னால் வர பதிவு பின்னாலே ஒளிஞ்சு இருக்கு. அவைகளையெல்லாம் கிளிக்கிட்டுத்தான் பதிவை வாசிக்கணும் போல. வேற வேலை இல்லையா.... இனிமேல் அவைகளை வாசிக்கவே வேணாமுன்னு முடிவு , அவற்றின் தலைப்பு சுண்டி இழுத்தாலுமே:(

  இன்னொன்னும் சொல்லிக்கறேன். வியாபாரிகள் தமிழ்மணத்திற்குள் வந்துருக்காங்க:( இதை வாங்கு இவ்ளோ டிஸ்கவுண்டு. அதை வாங்கு அவ்ளோ டிஸ்கவுண்டுன்னு.......

  நிர்வாகிகள் கவனத்துக்குக் கொண்டு போகணும். தானியங்கி என்பதை அவரவர்களுக்கு அனுகூலமா ஆக்குனா... இலக்கியம் வளரும் போல!

  பதிலளிநீக்கு

 4. எனக்கும் இதுபோன்ற அனுபவம் ஏற்பட்டதுண்டு. சிலசமயம் பதிவின் முழுப் பக்கமும் விளம்பரங்களால் நிரப்படும் அனுபவும் உண்டு.அப்போது எதையும் படிக்கமுடியாததாகையால் உடனே அந்த பதிவை விட்டு வெளியேறிவிடுவேன்.

  பதிலளிநீக்கு
 5. அந்த புண்ணியவான் கூகிள் விளம்பரஙகளை அருகில் காண்பித்து உழைத்துக்கொண்டிருந்தாhர் கூகிள் அதனை கண்டுபிடித்து விளம்பரங்களை விறுத்திவிட்டது போலும்

  பதிலளிநீக்கு
 6. பதிவில் விளம்பரம் செய்ய அனுமதித்தால் பண வரவு இருக்குமோ.?

  பதிலளிநீக்கு
 7. அய்யா அவர்களே

  ஒரு பதிவில் இதை படித்தேன். நம்பவே முடியவில்லை.
  இத்தகைய அரசியல்வாதியையும் இன்றைய அரசியல்வாதிகளையும் compare செய்து ஒரு பதிவிடுங்களேன். இன்றைய இளைய தலைமுறைக்கு ஒரு புதிய பாடமாக இருக்கும்
  முதலமைச்சர் காமராசரும் பிரதமர் நேருவும் கூட்டமொன்றில் பங்கேற்க மதுரையைத் தாண்டி மகிழுந்தில் சென்று கொண்டிருக்கிறார்கள்.

  படித்த பதிவு

  முதலமைச்சர் காமராசரும் பிரதமர் நேருவும் கூட்டமொன்றில் பங்கேற்க மதுரையைத் தாண்டி மகிழுந்தில் சென்று கொண்டிருக்கிறார்கள்.

  உரையாடலின் நடுவே நினைவுகூர்ந்தவரான நேரு ‘மிஸ்டர் காமராஜ்... உங்க சொந்த ஊர் இந்தப் பக்கம்தானே...?’ என்று கேட்கிறார்.

  ‘ஆமாங்க. இங்ஙனதான். இன்னும் கொஞ்ச தூரத்தில் வரப்போகிறது’ என்று கூறுகிறார் காமராசர்.


  ‘அப்படியானால் உங்கள் வீட்டுக்குப்போய் உங்கள் தாயாரைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டுச் செல்லவேண்டும் அல்லவா...’ என்று நேரு கேட்க ‘அது எதுக்குன்னேன். இப்பவே கூட்டத்துக்கு நேரமாயிட்டு...’ என்று காமராசர் மறுக்கிறார்.

  ‘நோ நோ... இவ்வளவு தூரம் வந்துவிட்டு உங்கள் தாயாரைப் பார்க்காமல் சென்றால் நன்றாக இருக்காது. நீங்கள் பார்க்க நினைக்காவிட்டாலும் பரவாயில்லை. நான் அவர்களைப் பார்த்தேயாக வேண்டும். என்னை அவர்களிடம் கூட்டிச் செல்லுங்கள்’ என்று அன்புக் கட்டளையிடுகிறார் நேரு.

  ‘விடமாட்டேன்னுதீகளே...’ என்ற காமராசர்., வண்டி சற்று தூரம் சென்றதும் ஓட்டுநரிடம் ‘ஏப்பா. வண்டிய இப்படி ஓரங்கட்டு...’ என்று நிறுத்தச் சொல்கிறார்.

  அது வீடுகளே இல்லாத பகுதி. சாலையின் இருமருங்கிலும் விவசாய நிலங்கள். அந்நிலங்களில் அப்பகுதிப் பெண்கள் களை பறித்துக்கொண்டிருக்கிறார்கள்.

  தாயாரைப் பார்க்க வீட்டுக்கு அழைத்துச் செல்லச் சொன்னால் இப்படி அத்துவான வெயிலில் வண்டியை நிறுத்தியிருக்கிறாரே என்ற வினாவுடன் வண்டியை விட்டிறங்குகிறார் நேரு.

  காமராசர் களைபறிக்கும் பெண்டிர் கூட்டத்திலிருந்து வயதான பெண்மணி ஒருவரை அழைக்கிறார் ‘ஆத்தா... நான்தான் உன் மகன் காமராசு வந்திருக்கேன். உன்னப் பார்க்க நேரு வந்திருக்காரு...’ என்று கூவியிருக்கிறார்.

  புன்செய்க் காட்டுப் புழுதியுடன் உழைத்து வியர்த்த முகத்துடன் ‘ஏ காமராசு... வந்திட்டியாப்பா... நல்லாருக்கியா...’ என்று தன் மகனைக் கண்ட மகிழ்ச்சியில் உள்ளம் நெகிழ அருகில் வருகிறார் காமராசரின் தாயார்.

  தாயும் மகனும் அளவளாவிக் கொள்கிறார்கள். நேருவைக் காட்டி அறிமுகப்படுத்துகிறார்.

  நேருவால் தன் முன்னால் நடந்துகொண்டிருப்பதை நம்ப முடியவில்லை. சிலையாகி நிற்கிறார் !

  அவர்தான் நம் அய்யா காமராசர்!

  சேலம் குரு

  பதிலளிநீக்கு
 8. நீங்கள் சொல்வது உண்மைதான். சில வலைப்பதிவுகள் இத்தகைய விளம்பரங்களைக் கொண்டிருக்கின்றன. விளம்பரங்களை கிளிக் செய்தால்தான் படிக்க முடியும் என்கிற வாசகம் வேறு. கிளிக் செய்தால் virus, malvares, நம் வலைத்தளத்திற்குள் நுழைந்து விடுமோ என்கின்ற பயம் வேறு...

  பதிலளிநீக்கு
 9. நெருப்புநரி உலவியில் ad block இருப்பதால் படிக்க முடியவில்லை என்றென்னி internet explorer ஐ பயன்படுத்தினால் அதுவும் அதே கதை ! விளம்பரத்திற்காக உள்ள வலைத்தளங்கள் =வெட்டி + ஒட்டு

  பதிலளிநீக்கு