சனி, 10 ஜனவரி, 2015

O Controversy, is thy name Palani.Kandaswamy?

                                   
                                 

ஆங்கிலத்தில் தலைப்பு வைத்ததிற்கு வருந்துகிறேன். ஆனால் என் தற்கால நிலையை வர்ணிப்பதற்கு தமிழில் பொருத்தமான வார்த்தைகள் எனக்கு உடனடியாகக் கிடைக்கவில்லை. ஆறின கஞ்சி பழங் கஞ்சி. மேட்டரும் காப்பியும் சூடாக இருந்தால்தான் சுவையாக இருக்கும். அதனால்தான் இந்தப் பதிவு.

இன்றைக்கு நான்தான் தமிழ் பதிவுலகில் பிரபல பதிவர், இதில் யாருக்காவது மாற்றுக்கருத்து இருக்குமாயின் அவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம். மாற்றுக் கருத்துகள் எதுவாகினும் அவைகள் மட்டுறுத்தப்படாது என்று உறுதி அளிக்கிறேன்.

"குடும்பப் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டியவை" என்ற பதிவை எழுதினாலும் எழுதினேன். மக்கள் பிலுபிலுவென்று என்னைப் பிடுங்கித் தின்கிறார்கள். ஒரு பதிவைப் பற்றி பல பதிவர்கள் தங்கள் தளங்களில் அலசுவது புதிதல்ல.

ஆனால் அத்தகைய பதிவுகள் சமீப காலமாக பதிவுலகில் எழுதப்படவில்லை. அதனால் தமிழ் பதிவுலகமே சோர்ந்து இருந்தது. என்னுடைய பதிவு அந்தக் குறையை நிவர்த்தி செய்திருக்கிறது. இதனால் சோம்பிக்கிடந்த பதிவுலகம் ஓரளவிற்கு விறுவிறுப்பாகியுள்ளது. இதற்குக் காரணமான எனக்கு விருது வழங்கும் வள்ளல்கள் தங்கள் விருதுகளை தாராள மனதுடன் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இப்போது அலசப்படும் பிரச்சினை என்னவென்று எனக்குப் புரிந்ததென்றால் பதிவுகளில் சொல்லப்படும் கருத்துகள் அவரவர்கள் சொந்தக் கருத்தாக இருக்கவேண்டும். அதற்கு பலதரப்பட்டவர்களிடமிருந்தும் பலதரமான பின்னூட்டங்கள் வரும். அந்தப் பின்னூட்ங்களின் முக்கிய நோக்கம் அந்தப் பதிவரின் வாயில் வார்த்தைகளைத் திணித்து, அவர் அதை துப்பினால் அதிலிருந்து மீண்டும் வாதத்தைத் தொடர்வது.

அதாவது ஆங்கிலத்தில் "Putting words into one's mouth" என்று சொல்வார்கள். அதற்கு நான் இடம் கொடுக்காவிட்டால் வேறு விதமாகத் தாக்குதல் தொடரும்.

எப்படி இருந்தாலும் இன்றைக்கு காரசாரமான விவாதப் பொருள் "பழனி.கந்தசாமி" யே.

கல்யாண வீடாக இருந்தால் தான் மாப்பிள்ளையாக இருக்கவேண்டும். எளவு வீடாக இருந்தால் தான் பிணமாக இருக்கவேண்டும்.

இந்தப்  பழமொழி எல்லோரும் அறிந்ததே. ஆனால் அதற்கு நானே உதாரணமாவேன் என்று கனவில்கூட நினைத்ததில்லை. ஆனால் இது நடந்திருக்கிறது.

நடந்த விஷயங்கள் நடந்து முடிந்தவை. அவை நல்லவைகளாகவே இருக்கட்டும்.

(தற்பெருமை தப்புத்தான். ஆனாலும் சில விதிவிலக்குகள் உண்டு என்று தமிழ் இலக்கண நூலான நன்னூலிலேயே சொல்லியிருக்கிறது. அதையொட்டியே இந்தப் பதிவு)

23 கருத்துகள்:

  1. Sir, Don't worry, Truth always bitters for many people. So Don't waste your time or energy by responding to them.

    Karthikeyan Palanisamy

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Dear Karthikeyan Palaniswamy,
      What is there to worry? All are part of the game.
      My aim is to become number 1 in Tamilmanam ramk. So this is not a waste of time. This is part of that strategy.
      Palani.Kandaswamy

      நீக்கு
  2. வாழ்த்துக்கள் சார்

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. நடந்த விஷயங்கள் நடந்து முடிந்தவை. அவை நல்லவைகளாகவே இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  4. ஐயா நீங்கள் விரும்பினால் இதை தலைப்பாக தமிழில் வைக்கலாம். ஓ. கருத்து வேறுபாடே உனது பெயர் கந்தசாமியா?

    // போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித்
    தூற்றுவார் தூற்றட்டும் தொடர்ந்து சொல்வேன்
    ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால்
    எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன், அஞ்சேன்//

    என்ற கவிஞர் கண்ணதாசனை நினத்து, தொடருங்கள் உங்கள் பயணத்தை.

    பதிலளிநீக்கு
  5. மாற்றுக் கருத்து இல்லை. பதிவுலகம் கொஞ்சம் சுருஸ்ருப்பு அடைந்தது போல் உள்ளது தொடர்ந்து உங்கள் பாணியில் கலக்குங்கள்

    பதிலளிநீக்கு
  6. எப்போ நீங்க இரண்டாவது பொண்டாட்டி கம்ப்யூட்டர் ஐப் பிடிச்சீங்களோ அதுலே இருந்து வருசத்துக்கு ஒரு புது பொண்டாட்டி ஆயிடுச்சு. எங்கே பொய் நிக்குமோ?
    போன் வாங்கிய போது அது மூணாவது என்று சொன்னவனே நான்தான்.

    Congrats on new addition ALTO


    Jayakumar

    பதிலளிநீக்கு
  7. அய்யா யார் தங்களை எத்தகைய பார்வையில் பார்க்கிறார்களோ !
    அப்படியே பார்த்து விட்டு போகட்டும்.
    தங்கள் பதிவால் எத்தனையோ அரிய விவரங்களை அறிய
    வாய்ப்பு கிடைத்தது.
    'நா'நயம் மட்டுமல்ல நாணயமும் மிக்க பதிவராகிய தங்கள் பதிவில் தவறு ஏதும் இல்லை. ஏற்பதும் மாறுபட்ட கருத்தை பதிவிடுவதும் படிப்பவருக்குள்ள உரிமை என்கின்ற தங்களின் பரந்த பார்வை எல்லோருக்கும் வந்துவிடுமா.

    பதிலளிநீக்கு
  8. நடந்த விஷயங்கள் நடந்து முடிந்தவை. அவை நல்லவைகளாகவே இருக்கட்டும்...
    இனி நடப்பவையும் நல்லவையாக அமையட்டும்...
    உங்கள் வழியில் பயணியுங்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  9. நீங்கள் கார் வைத்து அதன் செலவை சமாளீத்தீர்களா? ஒரு பதிவு போடுங்களேன்

    பதிலளிநீக்கு
  10. என் பதிவுகளின் பின்னூட்டங்களில் நீங்கள் சொல்லிப் போகும் putting the words in your mouth நிகழ்ந்துள்ளது. பொதுவாக மாற்று கருத்துக்களைச்சொல்லத் தயங்குகிறார்கள். அதனால் ஏன் எதற்காக மாறுபாடு என்பது தெரியாதுஅப்படி இருந்தால்.பேசாமல் தாண்டிப் போகிறவர்களே அதிகம்

    பதிலளிநீக்கு
  11. எனக்கென்னவோ
    The Controversy, in the name of Palani.Kandaswamy என்பதுதான்
    பிடிமானம் தலைப்பாக தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  12. அண்மைக் காலமாகத் தான் தங்களது பதிவுகளைப் படித்துவருகிறேன். ஒவ்வொருவர் எழுத்திலும் ஒரு நடை உண்டு, ஒரு இலக்கு உண்டு. அதனை உங்களது பதிவுகளிலும் காணமுடிகிறது. Men may come men may go but I go on for ever என்பது எனக்குப் பிடித்த சொற்றொடர். தாங்கள் தங்கள் வழியிலேயே செல்லலாம். உங்களது வித்தியாசமான எழுத்துக்களை நான் ஊன்றிப் படிக்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  13. நேற்றே , உங்களைப் பற்றி நம்பள்கி தளத்தில் நான் போட்ட கருத்து ,இதோ ...எப்படி இருந்தாலும் பழனி .கந்தசாமி அய்யா அவர்கள் பாராட்டப் பட வேண்டியவரே ,அவரின் ஒரு பதிவை வைத்து எத்தனை பதிவுகள் !..இன்று நீங்களும் இதைதான் பதிவாக்கி இருக்கிறீர்கள் :)
    த ம 8

    பதிலளிநீக்கு
  14. O Controversy, is thy name Palani.Kandaswamy? > ” முரண்பாடே! உன் பெயர்தான் பழனி.கந்தசாமியா?” – சரியான மொழிபெயர்ப்பு என்று நினைக்கிறேன். உங்கள் எண்ணம் போல, தமிழ்மணத்தின் தர வரிசையில், முதலாம் எண் பெற்றிட (கே.ஏ.பகவான்ஜீ கோபித்துக் கொள்ளப் போகிறார்) எனது வாழ்த்துக்கள்.
    த.ம.9

    பதிலளிநீக்கு
  15. Why dont you just continue Leading a peaceful retired and happy life instead of stirring up controversies. After all you must be past 70 by now.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Dear Mr.Hariharan, You have quoted my own words. What makes you think that I am not leading a peaceful and retired life? And I presume that there is some sinister motive behind your suggestion..I perceive a hint of insult in this suggestion.Have I wounded any of your fine sensitivities? If so I beg your pardon.

      Stirring up controversies is my way of enjoying life. After all one must have spices in his life. Otherwise it becomes dull you know.

      நீக்கு
  16. எப்போதும் உங்கள் பகிர்வுகளில் ஒரு சிறப்பம்சம் இருக்கும் ஐயா
    அவைகள் தான் இன்றும் எங்கள் உள்ளத்திலும் நிறைந்திருக்கிறது எனவே
    எங்கள் பார்வைக்கும் நீங்கள் தான் பிரபல பதிவராகத் தெரிகின்றீர்கள்
    அதனால் என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உங்களுக்கே
    உரித்தாகட்டும் .

    பதிலளிநீக்கு