சனி, 21 பிப்ரவரி, 2015

மனவலிமை

                                  Image result for mind

உடல் வலிமை பற்றி எல்லோரும் அறிந்திருப்பீர்கள். அந்த அளவிற்கு மன வலிமை பற்றி பெரும்பாலானோர் சிந்தித்திருக்க மாட்டார்கள்.

மனவலிமை இயற்கையாக ஒருவனுக்கு வருவதில்லை. அவன் பிறந்த, வளர்ந்த சூழ்நிலைகளே அவனுக்கு மனவலிமையைக் கொடுக்கிறது. அவன் வளர்ந்த பிறகு தகுந்த பயிற்சிகளின் மூலம் மனவலிமையை அதிகரித்துக் கொள்ளலாம்.

மன வலிமை என்றால் என்ன? பாய்ந்து வரும் சிங்கத்தின் முன் நிற்பது மனவலிமையாகாது. அது முட்டாள்தனம். வாழ்வில் ஒரு மனிதன் சிக்கல்களைச் சந்திக்கும்போது அந்தச் சிக்கல்களினால் மனதைக் கலங்க விடாமல் வைத்துக்கொண்டு, அந்தச் சிக்கல்களைத் தீர்க்க முயற்சிப்பவனே மனவலிமை கொண்டவனாகும்.

இப்படி செய்யப்படும் முயற்சிகள் தோல்வியுற்றாலும் மனது கலங்காமல் வாழ்க்கையை தொடர்பவனே மனவலிமை கொண்டவனாவான். இந்த நிலைக்கு ஒருவன் தன்னைத் தயார் செய்தி கொள்வதே வாழ்க்கையில் அனுபவம் பெற்றதற்கு அடையாளம்.


16 கருத்துகள்:

  1. சரி தான்... அடுத்து என்ன...? என்று செயல்படுவதும் சரி தான்...

    பதிலளிநீக்கு
  2. மன வலிமை உடலுக்கு வலிமை தந்துவிடும். ஆனால் உடல் வலிமை மனதிற்கு வலிமை தராது. மன வலிமையுடன் எச்சூழலையும் எதிர்கொள்ளும் ஆற்றலைக் கொடுக்கும். நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  3. ஐயா

    விளக்கம் சுருக்கம் + அருமை. ஆனால் எத்தகைய மனவலிமை உள்ளவர்களும் கிளைமாக்ஸ் என்று வரும்போது பிரெஸ்டிஜ் பத்மநாபன் ஆகி விடுகிறார்களே?

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு

  4. ஐயா

    விளக்கம் சுருக்கம் + அருமை. ஆனால் எத்தகைய மனவலிமை உள்ளவர்களும் கிளைமாக்ஸ் என்று வரும்போது பிரெஸ்டிஜ் பத்மநாபன் ஆகி விடுகிறார்களே?


    Jayakumar

    பதிலளிநீக்கு
  5. மனவலிமை பற்றிய சிறந்த கருத்துகள் ஐயா
    தமிழ் மணம் இணையவில்லையே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னுடைய கணினியில் இணைந்திருக்கிறதே, கில்லர்ஜி.
      வேறு யாராவது கணினியிலும் தமிழ் மணம் இணையாமல் இருக்கிறதா? அன்புகூர்ந்து பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

      நீக்கு
    2. திரு.கில்லர்ஜி, டெம்ப்ளேட் மாற்றியதின் விளைவு இந்த குழப்பம். இப்போது சரி செய்து விட்டேன். பாருங்கள்.

      நீக்கு
  6. மனவலிமை குறித்து சிறப்பான கருத்துக்கள்! அருமை! நன்றி!

    பதிலளிநீக்கு
  7. மனவலிமை குறித்து சிறப்பான கருத்துக்கள்! அருமை! நன்றி!

    பதிலளிநீக்கு
  8. மிக மிக சரியா சொன்னிங்க....பகிர்வுக்கு நன்றி....
    மலர்

    பதிலளிநீக்கு
  9. //வாழ்வில் ஒரு மனிதன் சிக்கல்களைச் சந்திக்கும்போது அந்தச் சிக்கல்களினால் மனதைக் கலங்க விடாமல் வைத்துக்கொண்டு, அந்தச் சிக்கல்களைத் தீர்க்க முயற்சிப்பவனே மனவலிமை கொண்டவனாகும்.//

    சரியாய் சொன்னேர்கள். ஆனால் எல்லோராலும் மனதை கலங்க விடாமல் வைத்துக்கொள்ள முடியுமா என்பது சந்தேகமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். எதிர்பாராத சிக்கல்களைக் கண்டு நிலை தடுமாறாமல் இருப்பது முற்றிலும் துறந்த துறவிகளினால் மட்டுமே இயலும். ஆனாலும் அந்த முதல் தடுமாற்றத்திலிருந்து எவ்வளவு சீக்கிரம் வெளிவர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளி வந்து, மேற்கொண்டு செய்யவேண்டியவற்றைச் செய்வதே மனவலிமைக்கு அடையாளம்.

      நீக்கு