"முப்பத்தியிரண்டு பல்லையும் காட்டறான் பாரு" என்று காக்கா பிடிப்பவர்களை இளக்காரமாகச் சொல்வது வழக்கம். ஸ்நேகா பல் போல் இருந்தால் முப்பத்தியிரண்டு பல்லையும் காட்டுவதில் தவறில்லை. ஆனால் கோபு சார் கதையில் வருகிற பஞ்சாமியின் பல் மாதிரி இருந்தால் என்ன செய்வது?
ஏன் இந்தப் பல் விசாரம் என்றால் எனக்கு இப்போது நேரம் சரியில்லை. என் பற்கள் தொந்தரவு செய்கின்றன. அவைகளை என் பற்கள் என்று சொல்லவே எனக்கு வெட்கமாக இருக்கிறது. வெட்கப்பட்டு ஆகப்போவது என்ன? ஒன்றுமில்லை.
ஆகவே என் ஆஸ்தான பல் மருத்துவரிடம் சரண்டைந்தேன். அவர் என் பற்களைப் பார்த்துவிட்டு உங்கள் 32 பற்களில் இப்போது 14 பற்கள்தான் இருக்கின்றன. பேசாமல் அவைகளை எடுத்து விட்டு பல் செட் வைத்து விட்டால் நீங்களும் ஸ்நேகா மாதிரியே சிரிக்கலாம் என்றார். நானும் அவர் வார்த்தையில் மயங்கி அப்படியே செய்யுங்கள் என்றேன்.
கீழ்த்தாடையில் ஐந்து பற்கள் மட்டுமே இருந்தன. அவைகளில் மூன்று பற்கள் ஒழுங்காக விடுபட்டு விட்டன. இரண்டு பற்கள் மட்டும் தாடை எலும்புடன் இணைந்து, விடுபடமாட்டேன் என்று ரகளை செய்தன. இந்த மாதிரி எத்தனை பற்களை அந்த டாக்டர் பார்த்திருப்பார்? ஒரு மகாபாரத யுத்தம் நடத்தி அவைகளை ஒருவாறாக பெயர்த்து எடுத்தார். இப்போது என் கீழ்த் தாடை மகாபாரத யுத்தம் நடந்த குருக்ஷேத்திரம் போல் ஆகிவிட்டது.
எங்கும் ரத்தக்களரி. கடைசியாக எடுத்த இரண்டு பற்களுக்குப் பக்கத்தில் இருந்த ஈறுகள் சரியாக சேர்வதற்காக தையல்கள் வேறு. இப்படியாக ஏறக்குறைய யமதர்ம ராஜாவின் அரசு எல்லை வரைக்கும் போய் மீண்டேன். சாப்பிடுவது, தூங்குவது, விழித்திருப்பது ஆகிய மூன்று மட்டுமே இப்போது பிரச்சினை. அது கொஞ்சம் சரியானதும் உங்களுக்குச் சொல்ல வேண்டியவை நிறைய இருக்கின்றன. அவைகளைச் சொல்கிறேன்.
Anupavam Totarattum
பதிலளிநீக்குAnupavam Totar Aakattum
பதிலளிநீக்குநலம் பெற்று வருக ஐயா
பதிலளிநீக்குகாத்திருக்கிறோம்
நன்றி
தம +1
பல் பிரச்னை எனக்கும் இருக்கிறது. பல் டாக்டரைப் பார்க்காமலே காலம் கடத்துகிறேன்! சிரிப்பதில்லை!
பதிலளிநீக்குமூன்று முக்கியமானவைகளை முதலில் கவனியுங்கள் ஐயா...
பதிலளிநீக்குGet Well Soon.....
பதிலளிநீக்குஉங்களுக்கு எல்லாமே நகைச்சுவைதான். உங்கள் முகத்தையும் வாயையும் ’செல்பி’ எடுத்துக் கொள்ளவில்லையா?
பதிலளிநீக்குஇதுக்கு போட்டோ ஒரு சாட்சியா?
நீக்குநீங்கள் முழு குணமடைந்து வர வேண்டும். உங்கள் அனுபவங்களை வலைத்தளத்தில், உங்களுக்கே உரிய நகைச்சுவையுடன் எழுத வேண்டும்..
நீக்குபல் எல்லாம் எடுத்து “கம்” பகுதி கெட்டியானபின்தான் செயற்கைப் பல்செட் பொறுத்துவார்கள்செட் பொருத்தியபின் அவை நன்றாக செட் ஆக சில நாட்கள் பிடிக்கும் பொறுமையாய் இருங்கள் பல்செட் பொறுத்தியபின் புதுப் பொலிவுடன் காட்சி தருவீர்கள்.
பதிலளிநீக்குஆக மொத்தம் ஆறு மாதம் கொலைப் பட்டினிதானா?
நீக்குஉடல் நலம் முக முக்கியம். முதலில் அதை கவனியுங்கள்.
பதிலளிநீக்குஎல்லாம் சரியாகிவிடும். கவலை கொள்ள வேண்டாம்.
God Bless You
Get well soon. Take care...
பதிலளிநீக்குவிரைவில் பூரண நலம் பெற வாழ்த்துக்கள். உங்களது மனத்திண்மை உங்களுக்குத் துணையிருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.
பதிலளிநீக்குஆக நீங்கள் தற்போது பல் பிடுங்கப்பட்ட சிங்கம்!
பதிலளிநீக்கு--
Jayakumar
பல் போனாலும் கர்ஜிப்பதை விடமாட்டேன்.
பதிலளிநீக்குபல் சிகிச்சை கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான்! பொறுமை நிரம்ப தேவை! உடல்நலம் கவனித்துக்கொள்ளுங்கள் ஐயா!
பதிலளிநீக்கு//சொல்ல வேண்டியவை நிறைய இருக்கின்றன. அவைகளைச் சொல்கிறேன்.//
பதிலளிநீக்குநீங்க எதுவ்வ்வ்வும் சொல்ல வேண்டாம்...
.............. ஆனால், பிளாக்கில் டைப் பண்ணிடுங்க, நாங்க படிச்சிக்கிறோம்?!
நலம் பெற்று வாருங்கள் ஐயா...
பதிலளிநீக்கு