விண்டோஸ் 10 ஜூலை மாதம் 29ந் தேதி வருகிறது என்று உலகம் பூராவும் மைக்ரோ சாப்ட்காரன் தண்டோரா போட்டான். இண்ணைக்கு 29 ந் தேதி வந்துட்டுது. விண்டோஸ் 10 ஐத்தான் காணோம். நெறயப் பேருக்கு கொடுக்கோணுமாம். அதனால மெதுவாத்தான் கொடுப்பானாம்.
நான் பல் போன வாயை அகலமாகத் தொறந்து வச்சுட்டுக் காத்திருக்கேன். ஓசியில கொடுக்கான்னா காத்துத்தானே ஆகணும்.
ஓசியா..? அதற்கு வருடாந்திர உபயோகக் கட்டணம் விதிப்பதாக (சற்று நாட்கள் கழித்துத்தான்) ஒரு பதிவில் படித்தேனே..!
பதிலளிநீக்குஇப்படி வருடாந்திர உபயோகக் கட்டணம் விதிக்க முடிவு செய்திருப்பதனால் இனி எந்த அப்டேட் வெர்சனும் மைக்ரோ சாஃப்ட்டில் வராது என்று வேறு சொன்னார்களே..!
நீங்க updated ஐயா...
பதிலளிநீக்கு‘பொறுத்தார் பூமி ஆள்வார்’ என்பது பழமொழி. பொறுத்திருந்தால் பூமியை ஆள முடியாவிடினும் விண்டோஸ் 10 ஐ பெற்றுவிடலாம். நான் கூட அதற்காகத்தான் காத்துக்கொண்டிருக்கிறேன் ஐயா
பதிலளிநீக்குவிண்டோஸ் 8 வாங்கினவங்களுக்கு இலவசமா? சீக்கிரம் வரட்டும் பயன்படுத்திப் பார்த்துவிட்டு சொல்லுங்கள்
பதிலளிநீக்குஏற்கனவே ஏதாவது ஒரு விண்டோஸ் வெர்ஷன் விலை கொடுத்து வாங்கியவர்களுக்குத்தானே இலவசம்?
பதிலளிநீக்குஏதாவது ஒரு வெர்ஷன் இல்லை. விண்டோஸ் 7 அல்லது 8 ஐ விலைக்கு வாங்கியிருந்தால் மட்டுமே 10 இலவசம். இல்லையென்றால் 120 டாலர் கொடுக்க வேண்டுமாம்.
நீக்குநேற்று இரவில் இருந்து டவுன் லோடு ஆகிக் கொண்டுள்ளது ,இன்னும் ஏழே மணி நேரத்தில் முடிந்துவிடும் :)
பதிலளிநீக்குநல்ல வேளை, வயிற்றில பாலை வார்த்தீங்க. நான் வாயிலயும் வயித்தலயும் அடிச்சிட்டுக் கெடந்தேங்க.
நீக்குதங்களின் விருப்பம் நிறைவேறும்.
பதிலளிநீக்குஇன்னும் புலியைக்காணவில்லை ஐயா நீங்கள் கண்டால் நலம் கேட்ட்தாகச்சொல்லுங்க))))
பதிலளிநீக்குஆமா பல் பிடுங்கிய சிங்கத்துக்கு கிட்டே புலி எப்படி வரும். புளி தான் வரும்.
பதிலளிநீக்கு--
Jayakumar
ஏதாச்சும் வந்தா சரி. ஆனா ஒரு சனியனும் வரமாட்டேங்குதே?
நீக்குநானும்தான் பதிஞ்சி வச்சேன்...
பதிலளிநீக்குஅறை நண்பருக்கு வந்திருச்சு... எனக்கு வரவில்லை... இப்போதுதான் உனக்கு விரைவில் அப்கிரேடு ஆகும்னு சொல்லுது பாப்போம் ஐயா...